நீங்கள் வைத்திருக்கும் மற்ற கணக்குகளில் உள்ள மின்னஞ்சல்களைப் பார்த்தல்

உங்களிடம் பல மின்னஞ்சல் கணக்குகள் இருந்தால் Gmailலில் அவற்றைப் பார்க்கலாம். Gmail ஆப்ஸில் வேறொரு மின்னஞ்சல் கணக்கைச் சேர்ப்பது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

உங்கள் Gmail கணக்கில் 5 மின்னஞ்சல் முகவரிகள் வரை சேர்க்கலாம்.

மின்னஞ்சல் கணக்கைச் சேர்த்தல் அல்லது அகற்றுதல்

Androidக்கான Gmail ஆப்ஸில் Gmail மற்றும் Gmail அல்லாத கணக்குகளைச் சேர்க்க முடியும்.

கணக்கைச் சேர்த்தல்
  1. Android மொபைல் அல்லது டேப்லெட்டில் Gmail ஆப்ஸை திறக்கவும்.
  2. மேலே வலதுபுறத்தில் உங்கள் சுயவிவரப் படத்தைத் தட்டவும்.
  3. மற்றொரு கணக்கைச் சேர் என்பதைத் தட்டவும்.
  4. சேர்க்க விரும்பும் கணக்கின் வகையைத் தேர்வுசெய்யவும்.
    • Gmailலுக்கு, Google என்பதைத் தட்டவும்.
    • iCloud Mail, @me.com, @mac.com போன்ற கணக்குகளைப் பயன்படுத்த iCloud என்பதைத் தட்டவும்.
    • Windowsஸிற்கான Outlook மூலம் பணி அல்லது பள்ளி மின்னஞ்சல்களைப் பார்த்தால் Outlook, Hotmail, Live ஆகியவற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
    • உங்களின் மின்னஞ்சல் வழங்குநர் காட்டப்படவில்லை எனில் பிற என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  5. உங்கள் கணக்கைச் சேர்க்க, திரையில் காட்டப்படும் வழிமுறைகளைப் பின்பற்றவும்.

உதவிக்குறிப்பு: ஸ்பேம் பாதுகாப்பு, மின்னஞ்சல் வகைகள் போன்ற அம்சங்களை Gmail அல்லாத பிற கணக்குகளில் பெற, Gmailifyயைப் பயன்படுத்திப் பார்க்கவும் என்பதைத் தட்டவும். உங்களின் பிற மின்னஞ்சல் கணக்குகளுக்கும் Gmail அம்சங்களைப் பெறலாம்.

கணக்கை அகற்றுதல்
  1. Android மொபைலிலோ டேப்லெட்டிலோ Gmail ஆப்ஸை  திறக்கவும்.
  2. மேலே வலதுபுறத்தில் உள்ள உங்கள் சுயவிவரப் படத்தைத் தட்டவும்.
  3. இந்தச் சாதனத்தில் கணக்குகளை நிர்வகி என்பதைத் தட்டவும்.
  4. அகற்ற விரும்பும் மின்னஞ்சல் கணக்கைத் தட்டவும்.
  5. கணக்கை அகற்று என்பதைத் தட்டவும்.

மின்னஞ்சல் கணக்குகளுக்கு இடையே மாறுதல் அல்லது அவற்றின் அனைத்து மெசேஜ்களையும் பார்த்தல்

மின்னஞ்சல் கணக்குகளுக்கு இடையே மாறுதல்

முக்கியம்: Gmail ஆப்ஸில் மெசேஜ்கள் ஒவ்வொரு கணக்கிற்கும் தனித்தனியாக இருக்கும்.

  1. Android மொபைல் அல்லது டேப்லெட்டில் Gmail ஆப்ஸை திறக்கவும்.
  2. மேலே வலதுபுறத்தில் உள்ள உங்கள் சுயவிவரப் படத்தைத் தட்டவும்.
  3. பயன்படுத்த விரும்பும் கணக்கைத் தட்டவும்.
மின்னஞ்சல் கணக்குகள் அனைத்திலும் உள்ள மெசேஜ்களைப் பார்த்தல்
  1. Android மொபைல் அல்லது டேப்லெட்டில் Gmail ஆப்ஸை திறக்கவும்.
  2. மேலே இடதுபுறத்தில் உள்ள மெனு ஐகானை மெனு தட்டி அதன் பிறகு எல்லா இன்பாக்ஸ் என்பதைத் தட்டவும்.
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
12825442050995179786
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
17
false
false