உங்கள் Gmail மெசேஜ் அங்கீகரிக்கப்பட்டதா எனச் சரிபாருங்கள்

அனுப்புநரின் பெயருக்கு அருகில் கேள்விக் குறி இருந்தால் அந்த மெசேஜ் அங்கீகரிக்கப்படவில்லை என்று பொருள். மின்னஞ்சல் அங்கீகரிக்கப்படாததாக இருக்கும்போது, மெசேஜை அனுப்பும் நபராகக் காட்டப்படுபவரிடம் இருந்து தான் அந்த மெசேஜ் வருகிறதா என Gmailலுக்குத் தெரியாது. எனவே, பதிலளிக்கும்போதும் ஏதேனும் இணைப்புகளைப் பதிவிறக்கும்போதும் கவனமாக இருங்கள்.

பணி/பள்ளியில் Google ஆப்ஸிலிருந்து அதிகப் பலன்களைப் பெற விரும்புகிறீர்களா?  Google Workspace கட்டணமற்ற உபயோகத்திற்குப் பதிவு செய்யுங்கள்.

மெசேஜ் அங்கீகரிக்கப்பட்டதா எனச் சரிபார்த்தல்

முக்கியம்: அங்கீகரிக்கப்படாத மெசேஜ்கள் அனைத்துமே ஸ்பேம் அல்ல. சிலநேரங்களில், பெரிய குழுக்களுக்கு மின்னஞ்சல் அனுப்பும் உண்மையான நிறுவனங்களுக்கு அங்கீகரிப்புச் செயல்முறையைக் கடைப்பிடிக்க முடியாமல் போகலாம். உதாரணத்திற்கு, மின்னஞ்சல் பட்டியல்களுக்கு அனுப்பப்படும் மெசேஜ்கள்.

Gmail மெசேஜ்களைப் பார்த்தல்
  1. Android மொபைலிலோ டேப்லெட்டிலோ Gmail ஆப்ஸை  திறக்கவும்.
  2. மின்னஞ்சலைத் திறக்கவும்.
  3. விவரங்களைக் காட்டு அதன் பிறகு பாதுகாப்பு விவரங்களைக் காட்டு என்பதைத் தட்டவும்.
  4. இவ்வாறு இருந்தால், மெசேஜ் அங்கீகரிக்கப்பட்டதாகும்:
  • google.com என்ற டொமைன் போல் "அஞ்சல் செய்தவர்" என்ற தலைப்புடன் இருப்பவை.
  • அனுப்புநர் டொமைனில் "கையொப்பமிட்டவர்" என்ற தலைப்புடன் இருப்பவை.

அனுப்புநரின் பெயருக்கு அருகில் கேள்விக்குறி இருந்தால் அந்த மெசேஜ் அங்கீகரிக்கப்பட்டதல்ல. எனவே, பதிலளிக்கும்போதும் ஏதேனும் இணைப்புகளைப் பதிவிறக்கும்போதும் கவனமாக இருங்கள்.

Outlook போன்ற வேறு மின்னஞ்சல் கிளையண்ட்டுகளில் மெசேஜ்களைப் பார்த்தல்
வேறொரு மின்னஞ்சல் கிளையண்ட்டில் மின்னஞ்சலைப் பார்க்கிறீர்கள் எனில் மெசேஜ் தலைப்புகளைப் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்.
அங்கீகரிப்பு எப்படிச் செயல்படுகிறது என மேலும் அறிக (SPF & DKIM)

SPF அல்லது DKIM மூலம் மின்னஞ்சல்கள் அங்கீகரிக்கப்படலாம்.

ஒரு SPF பதிவை உருவாக்குவதன் மூலம் குறிப்பிட்ட டொமைனில் இருந்து மெசேஜ்களை அனுப்ப எந்தெந்த ஹோஸ்ட்டுகள் அனுமதிக்கப்பட்டுள்ளன என்பதை SPF குறிப்பிடுகிறது.

பெறுநர்கள் பொதுக் குறியீட்டைப் பயன்படுத்திச் சரிபார்த்துக்கொள்வதற்காக ஸ்பேம் அல்லாத மின்னஞ்சல்களில் அனுப்புநர்கள் மின்னணு முறையில் கையொப்பமிட DKIM உதவுகிறது.

முன்னனுப்பும் மெசேஜ்களின் முந்தைய அங்கீகரிப்பு நிலையை ARC சரிபார்க்கிறது. முன்னனுப்பும் மெசேஜ் SPF அல்லது DKIM அங்கீகரிப்பில் தேர்ச்சிபெற்றாலும் முன்பு அது அங்கீகரிக்கப்படவில்லை என ARC காட்டினால் Gmail அதை அங்கீகரிக்கப்படாத மெசேஜாகவே கருதும்.

மின்னஞ்சல் அங்கீகரிப்பு பற்றி மேலும் அறிக.

அங்கீகரிக்கப்படாத மெசேஜ்களைச் சரிசெய்தல்

எனக்கு வந்திருக்கும் மெசேஜ் அங்கீகரிக்கப்படவில்லை
நம்பகமான இடத்தில் இருந்து வந்துள்ள மெசேஜ் அங்கீகரிக்கப்படாததாக இருந்தால் மின்னஞ்சலை அனுப்பிய நபரையோ நிறுவனத்தையோ தொடர்புகொள்ளவும். அவ்வாறு தொடர்புகொள்ளும்போது இந்த உதவிப் பக்கத்திற்கான இணைப்பை அவர்களுக்கு அனுப்புங்கள். தங்களுடைய மெசேஜ்களை எவ்வாறு அங்கீகரிக்கச் செய்வது என்பதை அவர்கள் அதன் மூலம் அறிந்துகொள்ளலாம்.
எனது டொமைனில் இருந்து நான் அனுப்பிய மெசேஜ் அங்கீகரிக்கப்படவில்லை

நீங்கள் அனுப்பிய மெசேஜில் உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு அடுத்து கேள்விக்குறி "?" இருந்தால் அந்த மெசேஜ் அங்கீகரிக்கப்படவில்லை என்று பொருள்.

மெசேஜ்கள் சரியாக வகைப்படுத்தப்பட்டிருப்பதை உறுதிப்படுத்த அவை அங்கீகரிக்கப்பட்டிருக்க வேண்டும். மேலும் அங்கீகரிக்கப்படாத மெசேஜ்கள் பெரும்பாலும் நிராகரிக்கப்படக்கூடும். ஸ்பேமர்களும் மின்னஞ்சல்களை அங்கீகரிக்கக்கூடும் என்பதால் அங்கீகாரம் மட்டுமே மெசேஜ்களை டெலிவரி செய்யப் போதுமான உத்தரவாதமாக இருக்க முடியாது.

அங்கீகரிக்கப்படாத மெசேஜ்களைச் சரிசெய்தல்

நீங்கள் அனுப்பும் மெசேஜ்கள் DKIM (பரிந்துரைக்கப்படுவது) அல்லது SPF மூலம் அங்கீகரிக்கப்படுகிறதா என்பதை உறுதிசெய்துகொள்ளவும்.

இந்தப் படிகளைப் பயன்படுத்தி Gmail உங்கள் மின்னஞ்சல்களைத் தடைசெய்வதைத் தடுக்கலாம்:

  • குறைந்தபட்சம் 1024 பிட்கள் நீளம் உள்ள RSA குறியீடுகளைப் பயன்படுத்தவும். 1024 பிட்களுக்கும் குறைவான விசைகளால் கையொப்பமிடப்பட்ட மின்னஞ்சல்கள் எளிதாக ஏமாற்றக்கூடியவையாக இருக்கலாம் என்பதால், அவை கையொப்பமிடாதவையாகக் கருதப்படும்.
  • மெசேஜ்களை வகைப்படுத்தும்போது பயனர் அறிக்கைகளையும் பிற அறிகுறிகளையும், அங்கீகரிக்கப்பட்ட தகவலுடன் Gmail ஒருங்கிணைக்கிறது. உங்கள் மெசேஜ்கள் சரியாக வகைப்படுத்தப்படுவதை உறுதிப்படுத்த ஒவ்வொரு அஞ்சல் அனுப்புநரும் அங்கீகரிக்கப்படுவது அவசியம். 
  • உங்கள் டொமைனில் இருந்து அங்கீகரிக்கப்படாத மின்னஞ்சல் அனுப்பப்படுவதைக் கட்டுப்படுத்துவதற்கான கொள்கையை எப்படி உருவாக்குவது என அறிக.
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
15630617996942110946
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
17
false
false