மின்னஞ்சலை Gmailலுக்கு முன்னனுப்புவதற்கான சிறந்த நடைமுறைகள்

பிற கணக்குகள் அல்லது சேவைகளில் இருந்து Gmailலுக்கு மெசேஜ்களை முன்னனுப்பும் மின்னஞ்சல் நிர்வாகிகளுக்கும் Gmail பயனர்களுக்கும் தேவையான பரிந்துரைகள் இந்தக் கட்டுரையில் உள்ளன. மின்னஞ்சல் மெசேஜ்களை முன்னனுப்புவது மின்னஞ்சல் அங்கீகரிப்பைப் பாதிக்கலாம். முன்னனுப்பும் மெசேஜ்கள் அங்கீகரிப்பில் தேர்ச்சிபெற்று, நீங்கள் எதிர்பார்த்தபடி டெலிவரி செய்யப்படும் வாய்ப்பை அதிகரிக்க இந்தக் கட்டுரையில் உள்ள பரிந்துரைகளைப் பின்பற்றவும்.

மின்னஞ்சல் நிர்வாகிகள்: நீங்கள் பிற சேவையகங்கள் அல்லது சேவைகளில் இருந்து Gmailலுக்கு மின்னஞ்சல்களை முன்னனுப்பும் மின்னஞ்சல் நிர்வாகியாக இருந்தால், முன்னனுப்பும் மெசேஜ்களை நம்பகமானது அல்லது ஸ்பேம் என்று Gmail சரியாகக் குறிப்பதை உறுதிசெய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும். மின்னஞ்சல்களை முன்னனுப்புதல் - நிர்வாகிகளுக்கான பரிந்துரைகள் பிரிவில் உள்ள எங்கள் பரிந்துரைகளைப் பின்பற்றவும்.

மின்னஞ்சல் அனுப்புநர்கள்: அனுப்புநர்கள் எப்போதும் SPF மற்றும் DKIM அங்கீகரிப்பை அமைத்துக்கொள்ளுமாறு பரிந்துரைக்கிறோம். எதிர்பார்த்தபடி உங்கள் மின்னஞ்சல் டெலிவரி செய்யப்படுவதை உறுதிசெய்துகொள்ள, முன்னனுப்படும் மெசேஜ்களுக்கு DKIM அங்கீகரிப்பு முக்கியமாகத் தேவைப்படுகிறது. மேலும் அறிக

Gmail பயனர்கள்: Gmail அல்லாத கணக்கில் இருந்து உங்கள் Gmail கணக்கிற்கு மெசேஜ்களை நீங்கள் முன்னனுப்பினால், மின்னஞ்சல்களை முன்னனுப்புதல் - Gmail பயனர்களுக்கான பரிந்துரைகள் பிரிவில் உள்ள எங்கள் பரிந்துரைகளைப் பின்பற்றவும்.

மின்னஞ்சல்களை முன்னனுப்புதல் - நிர்வாகிகள் மற்றும் அனுப்புநர்களுக்கான பரிந்துரைகள்

நீங்கள் உங்கள் நிறுவனத்தின் மின்னஞ்சல்களை நிர்வகிப்பவராக இருந்து பிற சேவையகங்கள் அல்லது சேவைகளில் இருந்து Gmailலுக்கு மின்னஞ்சலை முன்னனுப்பினால், எதிர்பார்த்தபடி உங்கள் மின்னஞ்சல் டெலிவரி செய்யப்படுவதை உறுதிசெய்துகொள்ள இந்தப் பிரிவில் உள்ள பரிந்துரைகளைப் பின்பற்றவும்.

முன்னனுப்படும் மெசேஜ்கள் ஸ்பேம் என்று குறிக்கப்படுவதைத் தவிர்ப்பதற்கான உதவி

Gmailலுக்கு முன்னனுப்படும் மெசேஜ்கள் SPF அங்கீகரிப்பில் தேர்ச்சிபெறுவதையும், மெசேஜ்களை ஸ்பேம் என்று Gmail குறிக்கும் வாய்ப்பைக் குறைப்பதையும் இந்த நடவடிக்கைகள் உறுதிசெய்கின்றன:

  • உங்களின் முன்னனுப்புதல் டொமைனைக் குறிப்பிட அனுப்புநர் முகவரியை மாற்றவும்.
  • உங்கள் டொமைனுக்காக மின்னஞ்சலை முன்னனுப்பும் அனைத்து சேவையகங்கள் அல்லது சேவைகளின் IP முகவரிகள், டொமைன்கள் போன்றவை உங்கள் டொமைனின் SPF பதிவில் சேர்க்கப்பட்டிருப்பதை உறுதிசெய்துகொள்ளவும்.
  • ஸ்பேம் மெசேஜ்களைக் கண்டறியவும், அவை முன்னனுப்பப்படுவதைத் தவிர்க்கவும் மூன்றாம் தரப்புத் தயாரிப்புகளைப் பயன்படுத்தவும். உங்கள் டொமைனில் இருந்து முன்னனுப்பட்ட மெசேஜ்கள் பெறுநரால் ஸ்பேம் என்று குறிக்கப்பட்டால், உங்கள் டொமைனில் இருந்து இனி அனுப்பப்படும் மெசேஜ்களும் ஸ்பேம் என்று குறிக்கப்பட வாய்ப்புகள் அதிகம்.
  • மெசேஜ்களை முன்னனுப்ப பிரத்தியேக டொமைனையோ IP முகவரியையோ பயன்படுத்தவும். Gmail பயனர்களுக்கு அனுப்பப்படும் மின்னஞ்சல்கள் தடுக்கப்படுவதையோ ஸ்பேமுக்கு அனுப்பப்படுவதையோ தவிர்ப்பதற்கான எங்கள் பரிந்துரைகளில் இதுவும் ஒன்று.

முன்னனுப்பப்படும் மெசேஜ்கள் அங்கீகரிப்பில் தேர்ச்சிபெறுவதற்கான உதவி

  • SPF மற்றும் DKIM மின்னஞ்சல் அங்கீகரிப்பை அமைத்தல்: மின்னஞ்சல் நிர்வாகிகள் தங்களின் டொமைன்களுக்கு எப்போதும் SPF மற்றும் DKIM மின்னஞ்சல் அங்கீகரிப்பை அமைப்பதைப் பரிந்துரைக்கிறோம். மின்னஞ்சலை முன்னப்புவதால் மெசேஜ் அங்கீகரிப்பு பாதிக்கப்படலாம். மேலும், முன்னனுப்படும் மெசேஜ்கள் SPF அங்கீகரிப்பில் அடிக்கடி தோல்வியடையலாம். எனவேதான், உங்கள் மெசேஜ்கள் அங்கீகரிக்கப்படுவதையும் எதிர்பார்த்தபடி டெலிவரி செய்யப்படுவதையும் உறுதிசெய்ய, எப்போதும் SPF உடன் DKIM அங்கீகரிப்பை அமைக்கும்படி பரிந்துரைக்கிறோம்.
  • DKIM அங்கீகரிப்பை மீறுவதைத் தவிர்த்தல்: DKIM அங்கீகரிப்பில் தேர்ச்சிபெறாத மெசேஜ்கள் ஸ்பேமுக்கு அனுப்பப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். மெசேஜ் உள்ளடக்கத்தில் மாற்றங்கள் செய்தால் DKIM அங்கீகரிப்பில் மெசேஜ்கள் தோல்வியடையலாம். DKIM அங்கீகரிப்பால் பாதுகாக்கப்படும் மெசேஜின் உள்ளடக்கத்தையும் தலைப்புகளையும் மாற்றுவதைத் தவிர்க்கவும். அடிக்கடி ஏமாற்றும் டொமைன்களில் இருந்து அனுப்பப்படும் மெசேஜ்களுக்கு, கடுமையான அங்கீகரிப்புத் தேவைகளை Gmail அமல்படுத்தும். இவற்றைச் செய்வதால் DKIM அங்கீகரிப்பில் மெசேஜ்கள் தோல்வியடையலாம்: 
    • MIME வரம்புகளை மாற்றுதல்
    • மெசேஜ் தலைப்பை மாற்றுதல்
    • மெசேஜ் உள்ளடக்கத்தை மூன்றாம் தரப்பு மென்பொருள் மாற்றுதல் (மெசேஜை ரீ-என்கோடிங் செய்வது உட்பட)
    • மெசேஜ் பெறுநர்களை LDAP மூலம் விரிவாக்குதல்
    • DKIM உள்நுழைதல் டொமைன் மூலம் பாதுகாக்கப்படும் தலைப்பையும் பிற தலைப்புகளையும் மாற்றுதல் (பெறுநர், Cc, தேதி, மெசேஜ் ஐடி ஆகியவை உட்பட)
  • ARC தலைப்புகளைச் சேர்த்தல்: முன்னனுப்பப்படும் மெசேஜ்கள் நிராகரிக்கப்படுவதற்கான அல்லது ஸ்பேம் என்று குறிக்கப்படுவதற்கான வாய்ப்பைக் குறைக்க, முன்னனுப்பும் மெசேஜ்களில் ARC தலைப்புகளைச் சேர்ப்பதைப் பரிந்துரைக்கிறோம். முன்னனுப்பப்படும் மெசேஜ்களின் முந்தைய அங்கீகரிப்புச் சரிபார்ப்புகளை ARC சரிபார்த்து, அந்த மெசேஜ்கள் இறுதிப் பெறுநர்களைச் சென்றடைய உதவும். ARC குறித்து மேலும் தெரிந்துகொள்ளுங்கள்.
  • முன்னனுப்புதல் தலைப்புகளைச் சேர்த்தல்: முன்னனுப்பப்பட்ட மெசேஜ் என்பதை மின்னஞ்சல் சேவையகங்கள் தெரிந்துகொள்வதற்காக X-Forwarded-For: அல்லது X-Forwarded-To: என்ற மெசேஜ் தலைப்பைச் சேர்க்கவும். மெசேஜ்களைப் பெறும் சேவையகங்கள் முன்னனுப்பட்ட மெசேஜ்களை நேரடி மெசேஜ்கள் மற்றும் வரும் மெசேஜ்களைப் போல் இல்லாமல் வேறுவிதமாக நிர்வகிக்கின்றன.

மின்னஞ்சல்களை முன்னனுப்புதல் - Gmail பயனர்களுக்கான பரிந்துரைகள்

பிற மின்னஞ்சல் கணக்குகளில் இருந்து உங்களின் தனிப்பட்ட Gmail கணக்கிற்கு மெசேஜ்களை நீங்கள் முன்னனுப்பினால், அந்த மெசேஜ்கள் சரியாக டெலிவரி செய்யப்படுவதை உறுதிசெய்வதற்கு இந்தப் பிரிவில் உள்ள பரிந்துரைகளைப் பின்பற்றுங்கள்:

  • உங்கள் Gmail கணக்கில் IMAP அல்லது POPயைச் சேர்த்தல்: பல்வேறு சாதனங்களில் மெசேஜ்களைப் படிக்க IMAP அனுமதிக்கிறது. மேலும், நிகழ்நேரத்தில் மெசேஜ்கள் ஒத்திசைக்கப்படுகின்றன. ஒரேயொரு சாதனத்தில் மெசேஜ்களைப் பெற POP அனுமதிக்கிறது. ஆனால், மெசேஜ்கள் நிகழ்நேரத்தில் ஒத்திசைக்கப்படுவதில்லை. அதற்குப் பதிலாக, அவை பதிவிறக்கப்படுகின்றன. புதிய மின்னஞ்சல்களை எவ்வளவு நேரத்திற்கு ஒருமுறை பதிவிறக்க வேண்டும் என்பதை நீங்கள் தீர்மானிக்கலாம். உங்கள் Gmail கணக்கில் IMAP அல்லது POPயை அமைப்பதற்கான விரிவான வழிமுறையைப் பார்க்க பிற கணக்குகளில் உள்ள மின்னஞ்சல்களைப் பார்த்தல் என்பதற்குச் செல்லவும்.
  • மெசேஜ்களை ஸ்பேம் என்று குறித்தல் அல்லது ஸ்பேம் லேபிளை அகற்றுதல்: மெசேஜைத் தவறுதலாக ஸ்பேம் அல்லது ஃபிஷிங் என்று Gmail குறித்தால், அதைச் சரிசெய்ய மெசேஜ்களை ஸ்பேம் என்று குறித்தல் அல்லது ஸ்பேம் லேபிளை அகற்றுதல் என்பதில் உள்ள வழிமுறையைப் பின்பற்றவும். இனி ஸ்பேம் மற்றும் நம்பகமான மெசேஜ்களைக் கண்டறிய Gmailலுக்கு இது உதவும். 
  • Gmail அமைப்புகளை மாற்றுதல்: வேறொரு மின்னஞ்சல் கணக்கில் இருந்து உங்கள் Gmail கணக்கிற்கு நீங்கள் மெசேஜ்களை முன்னனுப்பினால், சில மெசேஜ்களை ஸ்பேம் அல்லது ஃபிஷிங் என்று Gmail தவறுதலாகக் குறிக்கலாம். இதைத் தவிர்க்க, Gmailலின் அனுப்புவது: அமைப்பில் உங்களின் Gmail அல்லாத மின்னஞ்சல் முகவரியைச் சேர்க்கவும். விரிவான வழிமுறைக்கு, வேறொரு முகவரியில் இருந்தோ மாற்று மின்னஞ்சல் முகவரியில் இருந்தோ மின்னஞ்சல்களை அனுப்புதல் என்ற பக்கத்திற்குச் செல்லவும்.

தொடர்புடைய தலைப்புகள்

Gmail பயனர்களுக்கு அனுப்பப்படும் மின்னஞ்சல்கள் தடுக்கப்படுவதையோ ஸ்பேமுக்கு அனுப்பப்படுவதையோ தவிர்த்தல்

Gmail அங்கீகரிப்பு மூலம் ஸ்பேம், ஏமாற்றுதல் மற்றும் ஃபிஷிங்கைத் தவிர்த்தல்

Google Workspaceஸில் மின்னஞ்சலை முன்னனுப்புதல், திசைதிருப்புதல் மற்றும் ரூட்டிங் செய்தல்

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
166943486550740224
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
17
false
false