நிதிசார் நுகர்வோரை நியாயமாக நடத்துதல் தொடர்பான சாசனம்

Bank Negara Malaysia (“BNM”) நவம்பர் 6, 2019ல் வழங்கி, மே 2020 முதல் நடைமுறைக்கு வந்த நிதிசார் நுகர்வோரை நியாயமாக நடத்துதல் தொடர்பான கொள்கை ஆவணத்தில் உள்ளவற்றை நிறைவேற்ற Google Payment Malaysia (“GPMY”) பின்பற்றும் வாடிக்கையாளர் உதவிச் சேவைகள் தொடர்பான செயல்முறைகளின் சுருக்கத்தை இந்தக் கட்டுரை வழங்குகிறது.

எங்கள் வாடிக்கையாளர்களின் நலன்களையும் நிதிசார் நலன்களையும் பாதுகாக்க:

எங்கள் நிறுவனத்தின் கார்ப்பரேட் கலாச்சாரத்திலும் மையக் கொள்கைகளிலும் நியாயமான பயன்பாட்டை ஒருங்கிணைக்கக் கடமைப்பட்டுள்ளோம்

  • பயனர்களுடனான எங்கள் வணிக நடவடிக்கைகள் அனைத்திலும் நியாயமான பிசினஸ் நடைமுறைகளுக்கான குறைந்தபட்சத் தரநிலைகளை அமைப்போம். எங்கள் வாடிக்கையாளர் தகவல்களின் ரகசியத்தைக் காப்பதும் இதிலடங்கும்; மற்றும்
  • வாடிக்கையாளர்களின் கருத்துகளுக்கு மதிப்பளித்து, பயனுள்ள கருத்துகளை உடனடியாக எங்கள் பணியாளர்களுக்கு வழங்குவோம்.

எங்கள் வாடிக்கையாளர்களுக்கு நியாயமான விதிமுறைகள் வழங்கப்படுவதை உறுதிசெய்யக் கடமைப்பட்டுள்ளோம்

  • எங்களின் ஒப்பந்தங்களில் உள்ள விதிமுறைகள் நியாயமானவையாகவும் வெளிப்படையானவையாகவும் பயனர்களுக்கு நன்கு புரியும்படியும் இருப்பதை உறுதிசெய்வோம். 
  • அவரவரின் உரிமைகளும் கடப்பாடுகளும் கடமைகளும் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளில் தெளிவாகவும், முடிந்த அளவுக்கு எளிமையான மொழியிலும் விளக்கப்பட்டிருப்பதை உறுதிசெய்வோம்.
  • விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்/சேவை விதிமுறைகளில் செய்யும் ஏதேனும் மாற்றங்களை அமல்படுத்துவதற்குக் குறைந்தபட்சம் இருபத்து ஒன்று (21) நாட்களுக்கு முன்பாக உங்களுக்கு அறிவிப்பை வழங்கக் கடமைப்பட்டுள்ளோம்.

வாடிக்கையாளர்களுக்கு நிதிசார் சேவைகள் மற்றும் தயாரிப்புகள் தொடர்பான தெளிவான, தொடர்புடைய மற்றும் நேரத்திற்குத் தகுந்த தகவல்களை வழங்கக் கடமைப்பட்டுள்ளோம்

  • Play Balance பயனர்களுக்கு Play Balance தொடர்புடைய மற்றும் நேரத்திற்குத் தகுந்த தகவல்களை வழங்குவோம்;
  • பின்வரும் சூழல்களில் பணத்தைத் திருப்பிக்கேட்டு கோரிக்கைகள் வரும்போது அதிகபட்சம் 1 மாதத்திற்குள் கூடுதல் கட்டணங்கள் எதுவுமின்றி (பணத்தைத் திருப்பியளிப்பதை நிறைவேற்றுவதற்குத் தேவைப்படுவதைத் தவிர) Play Balance கணக்குகளில் பேலன்ஸைத் திருப்பியளிப்போம்:
    • பயனர் அவரின் கணக்கை மூட முடிவுசெய்தல்;
    • இனி Play Balanceஸைப் பயன்படுத்த வேண்டாமென முடிவுசெய்தல்; அல்லது
    • தொழில்நுட்பச் சிக்கல்கள் காரணமாகப் பயனருக்குத் தவறுதலாகக் கட்டணம் விதிக்கப்படுதல்.
  • Play Balance பயனர்களுக்குத் தெளிவான, தொடர்புடைய மற்றும் நேரத்திற்குத் தகுந்த தகவல்களை (புகார்களைக் கையாளும் செயல்முறைகள் உட்பட) வழங்கக் கடமைப்பட்டுள்ளோம். இதன் மூலம் அவர்கள் விற்பனைக்கு முன்னரும் விற்பனை செய்யும்போதும் விற்பனைக்குப் பிறகும் தெளிவான முடிவுகளை எடுக்கலாம். தொடர்புடைய தகவல்கள் எங்களின் உதவி மையக் கட்டுரைகளில் உள்ளன.
  • Play Balance பயனர்களுக்கெனத் தெளிவான விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் (“T&C” - Terms and Conditions) வழங்குகிறோம். அவை பணத்தைத் திரும்பப்பெறுதலுக்கான விதிமுறைகளும் நிபந்தனைகளும் எனும் பெயரில் இணையதளத்தில் உள்ள நிறுவனத்தின் உதவி மையத்தில் உள்ளன.

நிதிசார் வாடிக்கையாளர்களைக் கையாளும்போது GPMYயின் பணியாளர்கள், பிரதிநிதிகள் மற்றும் ஏஜெண்ட்டுகள் (ஒட்டுமொத்தமாக, "GPMY பணியாளர்கள்") உரிய கவனத்துடனும் திறனுடனும் அக்கறையுடனும் செயல்படுவார்கள் என்பதை உறுதிசெய்யக் கடமைப்பட்டுள்ளோம்

  • நிதிசார் வாடிக்கையாளர்களுடன் முழுமைத்தன்மையுடன் வணிக நடவடிக்கைகளை மேற்கொள்வோம். மேலும் போலியான அல்லது மிகைப்படுத்தப்பட்ட வாக்குறுதிகளை அளிக்கமாட்டோம்;
  • Play Balance பயனர்களுடனான எங்களின் உறுதிப்பாடு, Googleளின் நடத்தைக் கோட்பாடுகளில் சேர்க்கப்பட்டுள்ளதுபோல், Googleளின் பயனர்களுடனான அதன் உறுதிப்பாடுகளைப் பிரதிபலிக்கின்றன.

நிதிசார் நுகர்வோரின் புகார்களும் கிளைம்களும் தகுந்த, நியாயமான மற்றும் பயனுள்ள வழியில் கையாளப்படுவதை உறுதிசெய்யக் கடமைப்பட்டுள்ளோம்

  • சிக்கலைப் புரிந்துகொள்வதற்கான நியாயமான முயற்சிகளை மேற்கொள்ளவும், புகார் குறித்து முழுமையாக விசாரிக்கவும், நிதிசார் வாடிக்கையாளருக்குப் பதிலளிக்கும்போது நாங்கள் எடுத்த முடிவின் அடிப்படைக் காரணத்தை விளக்கவும் கடமைப்பட்டுள்ளோம்.
  • பின்வருபவற்றை உறுதிசெய்ய நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்: பாதுகாப்பான செயல்பாடுகள்; நிதிசார் நுகர்வோரின் தகவல்களுக்கான தனியுரிமை; நம்பகமான மற்றும் தரமான சேவைகள்; தயாரிப்பு மற்றும் சேவைகளின் வெளிப்படைத்தன்மை; விசாரிப்புகள், புகார்கள், பணத்தைத் திரும்பப்பெறுதல், வழக்குகள் ஆகியவற்றுக்குத் தகுந்த பதில்களை வழங்குதல்.
  • புகாரைப் பெற்றதும் சிக்கலைச் சரிசெய்ய முயல்வோம். இறுதி முடிவில் வாடிக்கையாளர் திருப்தியடையவில்லை எனில், நிதிசார் சேவைகளுக்கான குறைதீர்ப்பாளருக்கு இருக்கும் நேரத்தைப் பொறுத்து வாடிக்கையாளருக்குத் தெரிவிப்போம்.
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
12446516136116766446
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
84680
false
false