கவனத்திற்கு: Google கணக்கில் உள்நுழைந்திருந்தால் மட்டுமே இந்த அம்சத்தைப் பயன்படுத்த முடியும்.
குறிப்பிட்ட நகரங்களைப் பற்றிய உள்ளூர் செய்திகளைப் பெறும் வகையில் Google News அமைப்புகளை மாற்றலாம்.
- Google செய்திகள் ஆப்ஸைத் திறக்கவும்.
- கீழேயுள்ள 'பின்தொடர்பவை' என்பதைத் தட்டவும்.
- “உள்ளூர்" என்பதற்குக் கீழ் இருப்பிடத்தைச் சேர் அல்லது அனைத்தையும் காட்டு & நிர்வகி என்பதைத் தட்டவும்.
- இங்கே இவற்றைச் செய்யலாம்:
- நகரத்தைச் சேர்க்கலாம்: நகரத்தைத் தேடவும். அதற்கு அருகே உள்ள 'பின்தொடர்' என்பதைத் தட்டவும்.
- உங்களுக்கு விருப்பமான நகரம் குறித்து கூடுதல் செய்திகளைப் பார்க்கலாம்: நகரத்துக்கு அருகே உள்ள 'மேலும் முதன்மையானதாக அமை' என்பதைத் தட்டவும்.
பரிந்துரைகள் எங்கிருந்து கிடைக்கின்றன?
நீங்கள் விரும்பும் இடங்களின் உள்ளூர் செய்திகளை எளிதாக அணுகும் வகையில், இடங்களை Google News பரிந்துரைக்கக்கூடும். இடங்களுக்கான பரிந்துரைகள் இவற்றின் மூலம் கிடைக்கின்றன:
- Google Mapsஸில் நீங்கள் அமைத்திருக்கும் வீடு மற்றும் பணியிட முகவரிகள். வீடு மற்றும் பணியிட முகவரியை அமைப்பது அல்லது மாற்றுவது எப்படி என அறிக.
- IP முகவரி அல்லது சாதன அமைப்புகளிலிருந்து பெறப்படும் சாதன இருப்பிடம். Googleளில் இருப்பிட விவரத்தை மாற்றுவது எப்படி என்பது குறித்தும் Android சாதனத்தில் Google News & பிற ஆப்ஸில் இருப்பிட அமைப்புகளை நிர்வகிப்பது எப்படி என்பது குறித்தும் அறிக.