Google செய்திகளில் உங்களுக்குக் காட்டப்படும் செய்திகளை மேம்படுத்துதல்

நீங்கள் விரும்பும் செய்திகளை அதிகமாகவும் விரும்பாதவற்றைக் குறைவாகவும் காட்டுமாறு Google செய்திகளை அமைக்கலாம். இதைப் பிரத்தியேகமாக்குவதன் மூலம் உங்களுக்கு ஆர்வமூட்டும் உள்ளடக்கத்தை இன்னும் எளிதாகவும் விரைவாகவும் பார்க்கலாம்.

இதைப் பயன்படுத்தி, நீங்கள் எவற்றைப் படிக்க விரும்புகிறீர்கள் என்பதை Google செய்திகளுக்குக் கற்றுக்கொடுக்கலாம். இதை அதிகம் பயன்படுத்துவதால், “உங்களுக்கானவை” மேம்படும். உங்களுக்கு விருப்பமானவற்றை Google செய்திகளிடம் நேரடியாகவும் தெரியப்படுத்தலாம்.

கவனத்திற்கு: Google கணக்கில் உள்நுழைந்திருந்தால் மட்டுமே இந்த அம்சத்தைப் பயன்படுத்த முடியும்.

 

என்னென்ன செய்திகளைப் பெற வேண்டும் என்பதைத் தேர்வுசெய்தல்

ஆர்வத்தைப் பின்தொடர்தல்

  1. மேலே, நீங்கள் பின்தொடர விரும்பும் தலைப்பு, இடம் அல்லது வெளியீட்டைத் தேடவும்.
    • மேலே உள்ள மெனுவிலிருந்து ஒரு தலைப்பையும் தேர்ந்தெடுக்கலாம்.
  2. மேல் வலதுபுறத்தில் பின்தொடர் என்பதைக் கிளிக் செய்யவும்.

 உதவிக்குறிப்பு: நீங்கள் பின்தொடரும் அனைத்து ஆர்வங்களையும் கண்டறிய, மேலே உள்ள மெனுவிலிருந்து பின்தொடர் என்பதைக் கிளிக் செய்யவும்.

ஓர் ஆர்வத்தைப் பின்தொடர்வதை நிறுத்துதல்

தலைப்புகள், இடங்கள் அல்லது செய்தி நிறுவனங்கள் தொடர்பான அறிவிப்புகளையோ செய்திகளையோ பெற விரும்பவில்லை எனில்:

  1. நீங்கள் பின்தொடர்வதை நிறுத்த விரும்பும் ஆர்வங்களைக் கண்டறிய மேலே உள்ள தேடல் பெட்டியைப் பயன்படுத்தவும்.
  2. மேலே உள்ள பின்தொடர்பவை என்பதைக் கிளிக் செய்யவும்.

அல்லது

  1. இடதுபுறத்தில் உள்ள மெனுவில் பின்தொடர்பவை என்பதைக் கிளிக் செய்யவும்.
  2. நீங்கள் பின்தொடர்வதை நிறுத்த விரும்பும் ஆர்வத்திற்கு அருகில் உள்ள மேலும் அதன் பிறகு லைப்ரரியில் இருந்து அகற்று என்பதைக் கிளிக் செய்யவும்.

செய்திக்கு விருப்பம் தெரிவித்தல் அல்லது விருப்பத்தை அகற்றுதல்

ஒரு குறிப்பிட்ட தலைப்பு அல்லது செய்தி நிறுவனம் குறித்து அதிகமான அல்லது குறைவான பரிந்துரைகளைப் பெற விரும்பினால்:

  1. தலைப்பின் மீது கர்சரை வைக்கவும்.
  2. தலைப்பின் கீழே, செய்தி நிறுவனத்தின் பெயருக்கு அருகில் உள்ள மேலும் மேலும் என்பதைக் கிளிக் செய்யவும்.
    • இதுபோன்ற செய்திகளை அதிகமாகப் பார்க்க: இதுபோன்றவற்றை அதிகமாகக் காட்டு என்பதைக் கிளிக் செய்யவும்.
    • இதுபோன்ற செய்திகளைக் குறைவாகப் பார்க்க: இதுபோன்றவற்றைக் குறைவாகக் காட்டு என்பதைக் கிளிக் செய்யவும்.

செய்தி நிறுவனத்தின் செய்திகளை மறைத்தல்

  1. நீங்கள் இனி அறிவிப்புகளைப் பெற விரும்பாத செய்தி நிறுவனத்தின் செய்தி ஒன்றைக் கண்டறியவும்.
  2. செய்தியின் தலைப்பின் மீது கர்சரை வைத்து, மூன்று புள்ளி மெனு மேலும் அதன் பிறகு [source] செய்திகள் அனைத்தையும் மறை இந்த வெளியீட்டை மறை என்பதைக் கிளிக் செய்யவும்.

Google செய்திகளில் விருப்பமானவற்றைத் தேடுதல்

பின்வருவன உட்பட Google செய்திகளில் வெவ்வேறு வகையான கவரேஜ்கள் உள்ளன:

  • வாசகர்களுக்கான ஒரே கவரேஜைக் கொண்ட தலைப்புகள்
  • உங்கள் அமைப்புகள் மற்றும் செயல்பாட்டின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும் செய்திகள்

நீங்கள் விரும்புபவற்றை Google செய்திகளில் எப்படித் தேடுவது என அறிக

தொடர்புடைய கட்டுரைகள்

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
11260669762666517565
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
false
false