Google News செய்திகள் தேர்ந்தெடுக்கப்படும் முறை

முக்கியம்:

  • நீங்கள் Google கணக்கில் உள்நுழைந்திருந்தால் மட்டுமே சில அம்சங்களைப் பயன்படுத்த முடியும்.
  • நீங்கள் ஒரு கட்டணச் செய்தியைப் பகிர்ந்தால், பிறர் அதைப் பார்க்க கட்டணம் செலுத்த வேண்டும்.

Google Newsஸில் என்னவெல்லாம் காட்டப்படலாம் என்பதைக் கம்ப்யூட்டர் அல்காரிதங்கள் தீர்மானிக்கின்றன. எந்தெந்தச் செய்திகள், படங்கள் & வீடியோக்கள் காட்டப்படலாம் என்பதையும் அவை எந்த வரிசையில் காட்டப்படலாம் என்பதையும் இவை தீர்மானிக்கின்றன. வெளியிடுபவர்கள், Google News குழுக்கள் போன்றோர் சில சமயங்களில் செய்திகளைத் தேர்வுசெய்கின்றனர்.

Google News சில உள்ளடக்கத்தைப் பிரத்தியேகமான முறையில் காட்டுகிறது. பிரத்தியேகப்படுத்துதல் நீங்கள் விரும்பக்கூடிய செய்திகளை விரைவாகவும் சுலபமாகவும் காட்ட Google Newsஸுக்கு உதவுகிறது.

கம்ப்யூட்டர்கள் தேர்வுசெய்பவை

உங்கள் மொழி, பிராந்தியம் ஆகியவற்றின் அடிப்படையில் பின்வரும் பிரிவுகளுக்கான தலைப்புகளை அல்காரிதங்கள் தேர்ந்தெடுக்கின்றன:

  • முழு கவரேஜ் முழு கவரேஜ்
  • நியூஸ்டாண்டில் இருக்கும் செய்தி நிறுவனங்கள்
  • தேடல் முடிவுகள்
  • உங்கள் தலைப்புகள்
  • உள்ளூர் செய்திகள்
  • முக்கியச் செய்திகள் குறித்த அறிவிப்புகள்
  • பின்வருமாறு காட்டப்படும் தலைப்புச் செய்திகள்:
    • ஆப்ஸில்: தலைப்புகள் ஹெட்லைன்ஸ் அல்லது செய்திச் சுருக்கத்தில் உள்ள "தலைப்புகள்".
    • டெஸ்க்டாப்பில் Google News தளத்தில்: உங்கள் செய்திச் சுருக்கத்தில் உள்ள “தலைப்புச் செய்திகள்”.
    • மொபைலில் Google News தளத்தில்: முக்கியச் செய்திகளில் ஹெட்லைன்ஸ் உள்ள “தலைப்புச் செய்திகள்”.

இந்தப் பிரிவுகளில் ஒரே மொழியையும் பிராந்தியத்தையும் பயன்படுத்தும் வாசகர்களுக்கு ஒரேவிதமான தலைப்புகளில் செய்திகள் காட்டப்படும்.

எனது பதிப்பு

பின்வருபவற்றின் அடிப்படையில் உங்களுக்கான செய்திகளை அல்காரிதங்கள் பிரத்தியேகப்படுத்துகின்றன:

  • Google News அமைப்புகள்:: உங்கள் ஆர்வங்கள் மற்றும் செய்தி நிறுவனங்கள்
  • கடந்தகாலச் செயல்பாடுகள்: Google சேவைகள் மற்றும் YouTubeல் மேற்கொண்ட உங்கள் செயல்பாடுகள்

பின்வரும் பிரிவுகளுக்கான செய்திகளை அல்காரிதங்கள் பிரத்தியேகமாக்குகின்றன:

  • உங்களுக்கானவை எனக்கு
  • 'பின்தொடர்பவை' பின்தொடர்பவை பிரிவில் தலைப்புகள், செய்தி நிறுவனங்கள், இடங்கள்
  • உங்கள் செய்திச் சுருக்கத்திலுள்ள “உங்களுக்கானவை”
  • உங்கள் தலைப்புகள்
  • உள்ளூர் செய்திகள்
  • அறிவிப்புகள்

இந்தப் பிரிவுகளில், வெவ்வேறு தலைப்புகளைப் பற்றிய செய்திகள் வாசகர்களுக்குக் காட்டப்படும். அமைப்புகளை எப்படி மாற்றுவது எனவும் கடந்தகாலச் செயல்பாட்டை எப்படிக் கண்டறிவது எனவும் அறிக.

Google News ஷோகேஸ்

முக்கியம்: இந்த அம்சம் சில மொழிகளிலும் நாடுகளிலும் மட்டுமே கிடைக்கிறது.

Google Newsஸில் செய்திகளைப் படிக்கும்போது Google News ஷோகேஸ் வெளியீட்டாளர்கள் வழங்கும் உள்ளடக்கத்தை நீங்கள் பார்க்கலாம். ஷோகேஸ் பேனலில் உள்ள செய்திகள் ஆழ்ந்த புரிதலையும் பின்னணியையும் வழங்கும் வகையில் வெளியீட்டாளர்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. இந்தச் செய்திகளை 'உங்களுக்கானவை' எனக்கு பிரிவில் பார்க்கலாம். நீங்கள் பின்தொடராத வெளியீட்டாளர்களின் செய்திகளையும் இதில் பார்க்கக்கூடும். Google News ஷோகேஸ் அம்சத்தைப் பற்றி மேலும் அறிக.

  • பரிந்துரைக்கப்படும் வெளியீட்டாளர்களைப் பின்தொடர: பின்தொடர் பின்தொடர்பவை என்பதைக் கிளிக் செய்யவும் அல்லது தட்டவும். 
  • வெளியீட்டாளர்களைப் பின்தொடர்வதை நிறுத்த: பின்தொடர்வதை நிறுத்து பின்தொடர்பவை என்பதைக் கிளிக் செய்யவும் அல்லது தட்டவும். பின்தொடர்பவை பின்தொடர்பவை பிரிவிற்குச் சென்று நிர்வகி என்பதைக் கிளிக் செய்வதன்/தட்டுவதன் மூலமும் இதைச் செய்யலாம்.
உதவிக்குறிப்பு: வெளியீட்டாளர்கள் அவர்களது வெளியீடுகளில் காட்டுவதற்கான செய்திகளைத் தேர்ந்தெடுக்கலாம்.
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
6497095264442837469
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
false
false