Google News ஆப்ஸ் தொடர்பான சிக்கல்களைச் சரிசெய்தல்

Google News தொடர்பான சிக்கல்கள் இருந்தால் இந்தத் தீர்வுகளைப் பயன்படுத்திப் பார்க்கவும். Google News குறித்த உதவிக்குறிப்புகளையும் தகவல்களையும் வாசகர்கள் பகிர்ந்துகொள்ளும் Google News உதவி மன்றம் மூலமும் உதவியைப் பெறலாம்.

Google Newsஸைத் திறத்தல்

ஒவ்வொரு வழிமுறையைச் செய்த பிறகும் மீண்டும் Google News ஆப்ஸைத் திறக்கவும்.

  1. கம்ப்யூட்டரை மீண்டும் தொடங்கவும்.
  2. பிற இணையதளங்களைத் திறக்க முடிகிறதா என்று பார்க்கவும்.
  3. Chrome, Safari போன்ற உலாவியிலிருந்து வெளியேறவும். பிறகு அதை மீண்டும் திறக்கவும்.
  4. நீங்கள் உலாவிய தரவை அழிப்பது எப்படி என்பதை அறிக.
    • கவனத்திற்கு: உங்கள் தளத்தின் தரவை நீக்கினால் சேமித்த அனைத்து அமைப்புகளும் நீக்கப்படும்.

Google Newsஸை அணுக முடியவில்லை

Google Workspace கணக்கின் மூலம் உள்நுழைந்திருந்தால்:

  • Google Newsஸுக்கான அணுகலை உங்கள் நிர்வாகி முடக்கியிருக்கக்கூடும். மேலும் தகவல்களுக்கு, உங்கள் கணக்கு நிர்வாகியைத் தொடர்புகொள்ளவும்.
  • கணக்கிலிருந்து வெளியேறினால் மட்டுமே news.google.com தளத்தை அணுக முடியும்.
  • Google Newsஸை அணுக, கணக்கிலிருந்து வெளியேறவும் அல்லது தனிப்பட்ட Gmail கணக்கிற்கு மாறவும்.

உங்களுக்காகப் பிரத்தியேகமாக்கிய உள்ளடக்கத்தைக் கண்டறிதல்

  1. Google கணக்கில் உள்நுழைந்துள்ளீர்கள் என்பதை உறுதிசெய்துகொள்ளவும்.
  2. முரண்படும் கணக்கின் பெயரைச் சமீபத்தில் மாற்றியிருந்தால் புதிய பெயரைப் பயன்படுத்தி உள்நுழைந்து பார்க்கவும்.
  3. Google News தொடர்பான உங்கள் ஆர்வங்களை மீட்டமைக்கவும். நீங்கள் பார்ப்பவற்றை எவ்வாறு மேம்படுத்துவது என்பதை அறிக.

செய்திகளைப் பகிர்பவர்களைத் தடுத்தல்/தடுப்பை நீக்குதல்

கவனத்திற்கு: Google கணக்கில் உள்நுழைந்திருந்தால் மட்டுமே இந்த அம்சத்தைப் பயன்படுத்த முடியும்.

Google Newsஸில் உங்களுடன் நேரடியாகச் செய்திகளைப் பகிரும் ஒருவரைத் தடுக்க விரும்பினால் அவரின் கணக்கைத் தடைசெய்யலாம். பிறரைத் தடுப்பது/தடுப்பு நீக்குவது எப்படி என்பதை அறிக.

ஸ்பேம்/பொருத்தமற்ற உள்ளடக்கம் குறித்துப் புகாரளித்தல்

ஸ்பேம்/பொருத்தமற்ற உள்ளடக்கம்

ஸ்பேம், மனதைப் புண்படுத்தும் அல்லது பொருத்தமற்ற உள்ளடக்கம் தொடர்பான எங்கள் தர வழிகாட்டுதல்களைத் தளங்கள் மீறுவதாக நீங்கள் கருதினால் அது குறித்த கருத்தை எங்களுக்கு அனுப்பலாம்.

ஸ்பேம்/பொருத்தமற்ற உள்ளடக்கம் குறித்துப் புகாரளிக்க: ஆப்ஸின் மேல் வலதுபுறத்தில் உள்ள உங்கள் சுயவிவரப் படம் அல்லது பெயரின் முதலெழுத்து அதன் பிறகு உதவி & கருத்து அதன் பிறகு கருத்தை அனுப்பு என்பதைத் தட்டவும்.

துல்லியமற்ற/காலாவதியான உள்ளடக்கம்

Google Newsஸில் நீங்கள் கண்டறியும் செய்திகளையும் படங்களையும் செய்தி நிறுவனங்கள் வெளியிடுகின்றன. 

  • உள்ளடக்கம் தொடர்பான சிக்கல்களுக்குத் தீர்வு காண்பதற்கு: வெளியீட்டாளரைத் தொடர்புகொள்ளவும்.
  • Google News தொடர்பான பிற கருத்துகளைப் பகிரnews.google.com தளத்திற்குச் சென்று, கீழ் இடதுபுறத்தில் உள்ள கருத்தை அனுப்பு என்பதைக் கிளிக் செய்யவும்.
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
14826844166478259896
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
false
false