Google செய்திகள் தொடர்பான அமைப்புகளைப் பார்த்தல் அல்லது மாற்றுதல்

கவனத்திற்கு: Google கணக்கில் உள்நுழைந்திருந்தால் மட்டுமே இந்த அம்சத்தைப் பயன்படுத்த முடியும்.

இவற்றுக்கான Google News அமைப்புகளை மாற்றலாம்: 

  • மொழி மற்றும் பிராந்தியம்
  • உரையின் அளவு
  • வண்ணத் திட்டம்
  • வீடியோவைப் பிளே செய்வதற்கான விருப்பங்கள்

இணையத்தில் சில அமைப்புகளை மாற்றலாம். Google News ஆப்ஸில் அறிவிப்புகள் உள்ளிட்ட பல அமைப்புகளை மாற்றலாம்.

உங்கள் மொழியையும் பிராந்தியத்தையும் மாற்றுதல்

  1. Google Newsஸிற்குச் செல்லவும்.
  2. அமைப்புகள்  அதன் பிறகு மொழி & பிராந்தியம் என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. மொழியைத் தேர்ந்தெடுக்கவும்.

வண்ணத் திட்டத்தை மாற்றுதல்

உங்கள் திரையின் கிளேரைக் குறைக்கவும் Google Newsஸை டார்க் பின்னணியில் பயன்படுத்தவும் டார்க் தீம் உதவும்.

  1. Google Newsஸிற்குச் செல்லவும்.
  2. மேல் வலதுபுறத்தில் உள்ள அமைப்புகள்  அதன் பிறகு அமைப்புகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. "டார்க் தீம்" என்பதற்கு அருகில் உள்ள இவற்றில் ஒன்றைத் தேர்வுசெய்யவும்:
    • சிஸ்டத்தின் இயல்பு (கிடைக்கும்போது): உங்கள் சாதனத்தின் சிஸ்டம் தீமினைப் பொறுத்து Google Newsஸின் வண்ணத் திட்டம் லைட் அல்லது டார்க்காக இருக்கும். நீங்கள் பயன்படுத்தும் உலாவியைப் பொறுத்தே இந்த அம்சம் கிடைக்கும்.
    • எப்போதும்: Google Newsஸின் வண்ணத் திட்டம் எப்போதும் டார்க்காக இருக்கும்.
    • எப்போதும் வேண்டாம்: Google Newsஸின் வண்ணத் திட்டம் எப்போதும் டார்க் ஆகவே இருக்காது.

Google News உள்ளடக்கத்தைப் பிரத்தியேகமாக்குதல்

நீங்கள் விரும்பும் செய்திகளை அதிகமாகவும் விரும்பாத செய்திகளைக் குறைவாகவும் காட்டும்படி Google Newsஸை அமைக்கலாம்.

நீங்கள் பார்ப்பவற்றை எவ்வாறு மேம்படுத்துவது என அறிக.

உங்கள் Google செயல்பாடுகளைப் பார்த்து அவற்றில் எவையெல்லாம் சேமிக்கப்பட வேண்டும் என்பதை மாற்றுதல்

உங்கள் Google கணக்கில் சேமிக்கப்படும் தேடல்களின் விவரங்களையும் பிற செயல்பாடுகளையும் எனது செயல்பாடு என்பதில் பார்க்கலாம். அவற்றில் சில செயல்பாடுகளின் அடிப்படையில் Google Newsஸைப் பிரத்தியேகமாக்கலாம்.

செயல்பாட்டை உங்கள் கணக்கில் பார்ப்பது மற்றும் கட்டுப்படுத்துவது குறித்து மேலும் அறிக.
 

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
10005143803305547234
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
false
false