Google Drive ஷார்ட்கட்கள் மூலம் கோப்புகளையும் கோப்புறைகளையும் கண்டறிதல்

ஷார்ட்கட்கள் மூலம் ஒன்றுக்கும் மேற்பட்ட Google Driveகளில் உள்ள கோப்புகளையும் கோப்புறைகளையும் நீங்களோ உங்கள் குழுவோ எளிதாகக் கண்டறிந்து ஒழுங்கமைக்கலாம்.

ஷார்ட்கட்கள் குறித்து அறிக

  • ஷார்ட்கட் என்பது மற்றொரு கோப்பினையோ கோப்புறையையோ குறிக்கும் ஓர் இணைப்பாகும். 
  • ஷார்ட்கட்களை உங்கள் Driveவிலோ ஒரு பகிர்ந்த இயக்ககத்திலோ பயன்படுத்தலாம்.
  • கோப்புறை/ Driveவுக்கான அணுகலைக் கொண்ட எவரும் ஷார்ட்கட்களைப் பார்க்கலாம். 
  • ஷார்ட்கட்கள் அசல் கோப்பினைச் சுட்டுவதால் எப்போதும் சமீபத்திய தகவல்களைத் தெரிந்துகொள்ளலாம். 
  • தலா ஒவ்வொரு கோப்பு/கோப்புறைக்கும் 500 ஷார்ட்கட்கள் வரை நீங்கள் உருவாக்கலாம். ஒவ்வொரு ஆவணத்திலும் அதிகபட்சம் 5,000 ஷார்ட்கட்கள் இருக்கலாம், அவற்றில் பிறர் உருவாக்குபவையும் அடங்கும்.

முக்கியம்:

  • ஷார்ட்கட்கள் இருக்கும் ஃபோல்டர் அல்லது இயக்ககத்திற்கான அணுகல் உள்ள அனைவருக்கும் ஷார்ட்கட் தலைப்புகள் காட்டப்படும்.
  • ஃபைல் அல்லது இயக்ககத்திற்கான அணுகல் இருப்பது மட்டும் ஷார்ட்கட்டைத் திறக்கப் போதுமானது இல்லை.
  • ஷார்ட்கட்டை உருவாக்கும்போது அசல் ஃபைலுக்கான அனுமதிகள் தானாக மாற்றப்படாது.
  • ஃபைல் அல்லது ஃபோல்டருக்கான அணுகலைப் பெற, ஷார்ட்கட் மூலம் அசல் ஃபைலுக்கான அனுமதிகளைக் கோரவும். அனுமதிகளை வழங்குவதற்கான கோரிக்கை அடங்கிய மின்னஞ்சல் அசல் ஃபைலின் உரிமையாளருக்கு அனுப்பப்படும்.

Google Driveவின் முக்கியமான குறியீடுகளின் பட்டியலைத் தெரிந்துகொள்ள கீபோர்ட் ஷார்ட்கட்கள் என்பதற்குச் செல்லவும்.

ஷார்ட்கட்டை உருவாக்குதல்

  1. உங்கள் Android மொபைலில் Google Drive ஆப்ஸைத் Google Drive திறக்கவும்.
  2. ஷார்ட்கட்டை உருவாக்க வேண்டிய கோப்பினையோ கோப்புறையையோ கண்டறியவும்.
  3. மேலும் மேலும் என்பதைத் தட்டி அதன் பிறகு Driveவில் ஷார்ட்கட்டைச் சேர் என்பதைத் தட்டவும்.
  4. ஷார்ட்கட்டை வைக்க விரும்பும் இடத்தைத் தேர்ந்தெடுக்கவும். 
  5. ஷார்ட்கட்டைச் சேர் என்பதைத் தட்டவும்.

முக்கியமானது:

  • வேறு ஒருவருக்குச் சொந்தமான Drive கோப்புறைக்குள் ஷார்ட்கட்டை உருவாக்கினால் அதை உங்களால் நீக்க முடியாது.
  • ஒரு ஷார்ட்கட் கோப்பிற்கு ஷார்ட்கட்டை உருவாக்க முடியாது, ஆனால் அதை நகலெடுக்கலாம்.
  • கோப்புறை ஷார்ட்கட்டையும் நகலெடுக்கலாம்.

ஷார்ட்கட்டை நீக்குதல்

முக்கியமானது: 

  • ஷார்ட்கட்டை நீக்கலாம், ஆனால் அசல் கோப்பினையோ உங்களுக்குச் சொந்தமில்லாத கோப்பினையோ உங்களால் நீக்க முடியாது. ஷார்ட்கட்டின் உரிமையாளர் ஷார்ட்கட்டை நீக்கலாம், ஆனால் இலக்குக் கோப்பினை கோப்பின் உரிமையாளர் மட்டுமே நீக்கலாம்.
  • உங்களுக்கு அனுமதி இல்லையெனில் கோப்பினையோ கோப்புறையையோ உங்களால் நீக்க முடியாது.
  1. உங்கள் Android மொபைலில் Google Drive ஆப்ஸைத் Google Drive திறக்கவும்.
  2. அகற்ற வேண்டிய ஷார்ட்கட்டைக் கண்டறியவும்.
  3. மேலும் அதன் பிறகு அகற்று என்பதைத் தட்டவும்.
  4. ஷார்ட்கட்டை நிரந்தரமாக அகற்ற அதை நீக்கியவையிலிருந்து நீக்கவும்.
    1. இடதுபுறத்தில் உள்ள மெனு மெனு என்பதைத் தட்டி அதன் பிறகு நீக்கியவை என்பதைத் தட்டவும்.​
    2. நீக்க விரும்பும் ஷார்ட்கட்டைக் கண்டறிந்து அதன் பிறகு மேலும் மேலும் என்பதைத் தட்டி அதன் பிறகு நிரந்தரமாக நீக்கு என்பதைத் தட்டவும்.

உடைந்த ஷார்ட்கட்டைச் சரிசெய்தல்

ஒரு ஷார்ட்கட் பின்வரும் சூழல்களில் சிதையும்:

  • அசல் கோப்பினைத் திறக்க உங்களுக்கு அனுமதியில்லாமல் இருப்பது.
  • அசல் கோப்பு நீக்கியவையில் இருப்பது.
  • அசல் கோப்பு நீக்கப்பட்டிருப்பது.

உடைந்த ஷார்ட்கட்டைச் சரிசெய்ய, அசல் கோப்பினை மீட்டெடுக்க முயலவும் அல்லது கோப்பின் உரிமையாளரிடம் அதைத் திறப்பதற்கு அனுமதி கோரவும்.

true
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
10222855809049681205
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
99950
false
false