Android சாதனத்தில் தரவை நீங்கள் பார்ப்பதற்கு முன்பு iPhoneனில் உள்ள Google Drive ஆப்ஸைப் பயன்படுத்தி iPhone தரவைக் காப்புப் பிரதி எடுக்க வேண்டும்.
காப்புப் பிரதி எடுத்த பிறகு
பின்வருவனவற்றைச் செய்தபிறகு Android சாதனத்தில் உங்கள் உள்ளடக்கத்தை நீங்கள் பார்க்கவும் பயன்படுத்தவும் முடியும்:
- உங்கள் iPhoneனிலோ iPadலோ காப்புப் பிரதி எடுப்பது
- உங்கள் Android சாதனத்தில் உள்நுழைவது
படங்கள்
- Google Photos ஆப்ஸில் படங்களை நீங்கள் பார்க்கவும் திருத்தவும் முடியும்.
- படங்களை ஆல்பங்களாக ஒழுங்கமைத்தால் அந்த ஆல்பங்கள் Google Photosஸுக்குக் காப்புப் பிரதி எடுக்கப்படாது.
தொடர்புகள்
- Android சாதனத்தில் உள்ள தொடர்புகள் ஆப்ஸில் உங்கள் தொடர்புகளைப் பார்க்க முடியும்.
- உங்கள் சாதனத்தின் பெயரிலான புதிய குழுவில் iPhone மற்றும் iCloudல் உள்ள உங்கள் தொடர்புகள் இருக்கும்.
Calendar
- Google Calendar ஆப்ஸில் உங்கள் கேலெண்டர் நிகழ்வுகளைப் பார்க்க முடியும்.
- உங்கள் சாதனத்தின் பெயரிலான புதிய கேலெண்டரில் உங்கள் நிகழ்வுகள் சேர்க்கப்படும்.