Google Drive சேமிப்பிடத்தில் ஃபைல்களை நிர்வகித்தல்

2 ஆண்டுகளுக்கும் மேலாக நீங்கள் சேமிப்பக வரம்பைத் தாண்டியிருந்தால் Gmail, Drive, Photos ஆகியவற்றில் இருந்து உங்கள் உள்ளடக்கத்தை நாங்கள் நீக்கக்கூடும். Google சேமிப்பகக் கொள்கைகள் குறித்து மேலும் தெரிந்துகொள்ளுங்கள்.

சேமிப்பகத்தை அதிகளவில் பயன்படுத்துபவற்றைக் குறித்தும் அது நிரம்பிவிட்டால் என்னவாகும் என்பது குறித்தும் தெரிந்துகொள்ளுதல்

Gmail, Google Photos, Google Drive ஆகிய அனைத்திலும் பயன்படுத்தும் வகையில் உங்கள் சேமிப்பகம் பகிரப்பட்டுள்ளது. உங்கள் கணக்கின் சேமிப்பக வரம்பை அடைந்ததும் நீங்கள்:

  • Gmailலில் மின்னஞ்சல்களை அனுப்பவோ பெறவோ முடியாது.
  • Google Photosஸில் படங்களையோ வீடியோக்களையோ பதிவேற்ற முடியாது.
  • Driveவில் ஃபைல்களைப் பதிவேற்றவோ Google Docs, Sheets, Slides, Drawings, Forms, Jamboard ஆகியவற்றில் புதிய ஃபைல்களை உருவாக்கவோ முடியாது.
Gmail

Gmailலில் சேமிப்பிடத்தைப் பயன்படுத்துபவை எவை என்று தெரிந்துகொள்ளுதல்

ஸ்பேம் மற்றும் நீக்கியவை ஃபோல்டர்களில் உள்ள மின்னஞ்சல்கள், இணைப்புகள் போன்றவை சேமிப்பிடத்தைப் பயன்படுத்தும்.

Gmailலில் சேமிப்பகம் நிரம்பிவிட்டால் என்ன நடக்கும் என்று தெரிந்துகொள்ளுதல்

உங்கள் கணக்கு சேமிப்பக வரம்பை அடைந்துவிட்டால்:

  • உங்களால் மெசேஜ்களை அனுப்பவோ பெறவோ முடியாது.
  • உங்களுக்கு அனுப்பப்படுகிற மெசேஜ்கள் அனுப்பியவருக்கே திருப்பி அனுப்பப்படும்.
Google Photos

Google Photosஸில் சேமிப்பிடத்தைப் பயன்படுத்துபவை எவை என்று தெரிந்துகொள்ளுதல்

  • அசல் தரத்தில் காப்புப் பிரதி எடுக்கப்பட்டுள்ள படங்களும் வீடியோக்களும் சேமிப்பிடத்தைப் பயன்படுத்தும்.
  • ஜூன் 1, 2021க்குப் பிறகு உயர்தரத்தில் (இப்போது “ஸ்டோரேஜ் சேவர்” அல்லது ”அடிப்படைத் தரம்” என்று பெயரிடப்பட்டுள்ளது) காப்புப் பிரதி எடுக்கப்பட்ட படங்களும் வீடியோக்களும் சேமிப்பிடத்தைப் பயன்படுத்தும். Photos காப்புப் பிரதி விருப்பங்கள் குறித்து மேலும் தெரிந்துகொள்ளுங்கள்.

Google Photosஸில் சேமிப்பிடத்தைப் பயன்படுத்தாதவை எவை என்று தெரிந்துகொள்ளுதல்

ஜூன் 1, 2021க்கு முன்பு ஸ்டோரேஜ் சேவர் தரத்திலோ அடிப்படைத் தரத்திலோ காப்புப் பிரதி எடுக்கப்பட்ட படங்களும் வீடியோக்களும் சேமிப்பிடத்தைப் பயன்படுத்தாது.

Google Photosஸில் சேமிப்பிடம் நிரம்பிவிட்டால் என்ன நடக்கும் என்று தெரிந்துகொள்ளுதல்

  • உங்கள் கணக்கின் சேமிப்பக வரம்பை அடைந்ததும் உங்களால் படங்களையோ வீடியோக்களையோ காப்புப் பிரதி எடுக்க முடியாது.
  • ஜூன் 1, 2021க்கு முன்பு ஸ்டோரேஜ் சேவர் தரம் அல்லது அடிப்படைத் தரத்தில் காப்புப் பிரதி எடுக்கப்பட்ட படங்களும் வீடியோக்களும் சேமிப்பிடத்தைப் பயன்படுத்தாது.
Google Drive

Google Driveவில் சேமிப்பிடத்தைப் பயன்படுத்துபவை எவை என்று தெரிந்துகொள்ளுதல்

  • PDF ஃபைல்கள், படங்கள், வீடியோக்கள் போன்றவை நீங்கள் பதிவேற்றும் அல்லது ஒத்திசைக்கும் ஃபைல்களிலும் ஃபோல்டர்களிலும் இருக்கும் என்பதால் எனது Driveவில் இருக்கும் பெரும்பாலான ஃபைல்கள் சேமிப்பிடத்தைப் பயன்படுத்தும்.
  • Google Docs, Sheets, Slides, Forms போன்றவற்றில் நீங்கள் உருவாக்கும் ஃபைல்களும் எனது Driveவில் உள்ள உங்கள் சேமிப்பிடத்தில் இருக்கும்.
  • 'நீக்கியவை' ஃபோல்டரில் உள்ளவையும் சேமிப்பிடத்தைப் பயன்படுத்துகின்றன. 'நீக்கியவை' ஃபோல்டரை எப்படிக் காலியாக்குவது என்று அறிக.
  • பணி அல்லது பள்ளிக் கணக்கின் மூலம் Driveவைப் பயன்படுத்தினால், பகிர்ந்த இயக்ககத்தின் நீக்கியவை ஃபோல்டரில் உள்ளவையும் நிறுவனத்தின் சேமிப்பகத்தில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

முக்கியம்: Google Docs, Sheets, Slides, Drawings, Forms, Jamboard ஆகியவற்றில் நீங்கள் உருவாக்கும் புதிய ஃபைல்கள் உங்கள் Google சேமிப்பிடத்தைப் பயன்படுத்தும். ஏற்கெனவே உள்ள ஃபைல்களில் ஜூன் 1, 2021 அன்றோ அதற்குப் பிறகோ மாற்றங்கள் செய்யப்படாதவை சேமிப்பக வரம்பில் கணக்கிடப்படாது.

Google Driveவில் சேமிப்பிடத்தைப் பயன்படுத்தாதவை எவை என்று தெரிந்துகொள்ளுதல்

  • "என்னுடன் பகிர்ந்தவை" பிரிவிலும் பகிர்ந்த இயக்ககங்களிலும் உள்ள ஃபைல்கள் சேமிப்பிடத்தைப் பயன்படுத்தாது. உரிமையாளரின் Google Driveவில் உள்ள சேமிப்பிடத்தை மட்டுமே இந்த ஃபைல்கள் பயன்படுத்தும்.
  • Google Sites.
  • ஜூன் 1, 2021க்கு முன்பு நீங்கள் உருவாக்கிய ஃபைல்களில் அந்தத் தேதிக்குப் பின்னர் நீங்கள் மாற்றங்கள் எதுவும் செய்யாவிட்டால் சேமிப்பக வரம்பில் அவை கணக்கிடப்படாது.

Google Driveவில் சேமிப்பகம் நிரம்பிவிட்டால் என்ன நடக்கும் என்று தெரிந்துகொள்ளுதல்

உங்கள் கணக்கு சேமிப்பக வரம்பை அடைந்துவிட்டால்:

  • உங்களால் புதிய ஃபைல்களை ஒத்திசைக்கவோ பதிவேற்றவோ முடியாது.
  • Google Docs, Sheets, Slides, Drawings, Forms, Jamboard ஆகியவற்றில் புதிய ஃபைல்களை உருவாக்க முடியாது.
  • சேமிப்பகத்தைப் பயன்படுத்தும் அளவை நீங்கள் குறைக்கும் வரை பாதிக்கப்பட்ட இந்த ஃபைல்களை நீங்களும் பிறரும் திருத்தவோ நகலெடுக்கவோ முடியாது.
  • உங்கள் கம்ப்யூட்டரின் Google Drive ஃபோல்டருக்கும் 'எனது Driveவிற்கும்' இடையே ஒத்திசைவு நிறுத்தப்படும்.
Google Drive for Desktop ஆப்ஸிற்கான சேமிப்பக வேறுபாடுகள் குறித்து மேலும் தெரிந்துகொள்ளுதல்

drive.google.com தளத்தில் உள்ள ஃபைல்கள் Google Drive for desktop ஆப்ஸில் உள்ள அதே ஃபைல்களை விட மாறுபட்ட அளவுள்ள சேமிப்பிடத்தைப் பயன்படுத்தும்.

  • நீக்கியவை ஃபோல்டரிலுள்ள ஃபைல்கள் Google Driveவில் சேமிப்பிடத்தைப் பயன்படுத்தும். இருப்பினும், அவை உங்கள் கம்ப்யூட்டரில் ஒத்திசைக்கப்படாது. நீக்கியவை ஃபோல்டரைக் காலியாக்குவது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.
  • பகிரப்படும் ஃபைல்கள் உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள சேமிப்பிடத்தைப் பயன்படுத்தும், ஆனால் Google Drive சேமிப்பிடத்தைப் பயன்படுத்தாது.
  • ஒன்றுக்கும் மேற்பட்ட ஃபோல்டர்களில் உள்ள ஃபைல்கள் உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள அனைத்து ஃபோல்டர்களிலும் ஒத்திசைக்கப்பட்டு அதிகச் சேமிப்பிடத்தை எடுத்துக்கொள்ளும்.
  • உங்கள் கம்ப்யூட்டருடன் சில ஃபோல்டர்களை மட்டும் ஒத்திசைத்தால் drive.google.com தளத்தில் காட்டப்படுவதைவிட உங்கள் கம்ப்யூட்டரிலுள்ள சேமிப்பகம் குறைவாக இருக்கும்.
  • Mac அல்லது PCக்கான தேவைகள் காரணமாக drive.google.com தளத்தில் காட்டப்படுவதைவிட உங்கள் கம்ப்யூட்டரில் காட்டப்படும் ஃபைல்களின் அளவு வேறுபடலாம்.

சேமிப்பிடத்தைப் பயன்படுத்தும் பிற ஃபைல்கள் குறித்துத் தெரிந்துகொள்ளுதல்

Gmail, Drive, Photos அல்லாத ஃபைல்களும் உங்கள் Google சேமிப்பிடத்தைத் தொடர்ந்து பயன்படுத்தலாம். உதாரணத்திற்கு, உங்கள் WhatsApp மெசேஜ்கள் மற்றும் மீடியாவின் காப்புப் பிரதிகள்.

உங்கள் WhatsApp மெசேஜ்களின் காப்புப் பிரதிகளை முடக்க:

  1. உங்கள் சாதனத்தில் WhatsApp ஆப்ஸைத் திறக்கவும்.
  2. அமைப்புகள் அதன் பிறகு உரையாடல்கள் அதன் பிறகு உரையாடல் காப்புப் பிரதி அதன் பிறகு Google Drive அமைப்புகள் என்பதற்குச் செல்லவும்.
  3. எப்போதும் வேண்டாம் என்பதைத் தட்டவும்.

Google Drive ஆப்ஸின் மூலமும் உங்கள் WhatsApp காப்புப் பிரதிகளை நீங்கள் நீக்கலாம்.

முக்கியம்: ஒருமுறை நீக்கிவிட்டால் Driveவில் இருந்து WhatsApp காப்புப் பிரதிகளை மீட்டெடுக்க முடியாது.

  1. உங்கள் சாதனத்தில் Google Drive ஆப்ஸைத் திறக்கவும்.
  2. சரியான Google கணக்கில் உள்நுழைந்திருப்பதை உறுதிசெய்துகொள்ளவும்.
  3. மேல் இடதுபுறத்தில் உள்ள மூன்று கோடு மெனு மெனு அதன் பிறகு காப்புப் பிரதிகள் என்பதைத் தட்டவும்.
  4. WhatsApp காப்புப் பிரதி ஃபைல்களைக் கண்டறியவும்.
  5. மெனு மேலும் அதன் பிறகு காப்புப் பிரதியை நீக்கு என்பதைத் தட்டவும்.

Google கணக்கில் நீங்கள் உள்நுழையவில்லை. உங்களிடம் எவ்வளவு சேமிப்பகம் உள்ளது என்பதைக் கண்டறியவும் அதை எப்படி நிர்வகிப்பது என்பதைத் தெரிந்துகொள்ளவும் உங்கள் Google கணக்கில் உள்நுழைந்து இந்தக் கட்டுரையை ரெஃப்ரெஷ் செய்யவும்.

உங்கள் Google கணக்கில் உள்நுழையுங்கள்

திட்டத்தைப் பொறுத்து சேமிப்பகக் கொள்கைகள் எப்படி மாறுபடுகின்றன என்று தெரிந்துகொள்ளுதல்

Google Workspace சேமிப்பகம் குறித்துத் தெரிந்துகொள்ளுங்கள்

Google Drive, Gmail, Google Photos ஆகிய அனைத்திலும் பயன்படுத்தும் வகையில் Google Workspace சேமிப்பகம் பகிரப்பட்டுள்ளது. சேமிப்பக உபயோகம் எப்படி கணக்கிடப்படுகிறது என அறிக.

Google Workspace பதிப்பைப் பொறுத்து ஒவ்வொரு பயனருக்கான சேமிப்பக அளவு இருக்கும். பெரும்பாலான Google Workspace பதிப்புகளில் பகிரப்பட்ட சேமிப்பகம் உள்ளது. பகிரப்பட்ட சேமிப்பகம் பின்வரும் அட்டவணைகளில் மொத்தச் சேமிப்பகமாகவோ இறுதிப் பயனர் உரிமங்களின் எண்ணிக்கையைச் சேமிப்பக அளவால் பெருக்கி வரும் மொத்தச் சேமிப்பக அளவாகவோ குறிப்பிடப்பட்டிருக்கும்.

Pooled storage is granted in stages:

  • At the time of purchase, you get part of your storage. 
  • As you make timely payments for your subscription, your storage increases up to your total storage limit.
Google Workspace பதிப்பு அல்லது சந்தா சேமிப்பக வரம்புகள்

G Suite Basic

புதிய வாடிக்கையாளர்களுக்கு இனி கிடைக்காது

ஒவ்வொரு இறுதிப் பயனருக்கும் 30 ஜி.பை. கிடைக்கும்

G Suite Business

G Suite Business - காப்பிடப்பட்ட பயனர்கள்

புதிய வாடிக்கையாளர்களுக்கு இனி கிடைக்காது

வரம்பற்ற சேமிப்பகம்

ஒவ்வொரு காப்பிடப்பட்ட பயனருக்கும் 1 டெ.பை. கிடைக்கும்

Google Workspace Business Starter காப்பிடப்பட்ட பயனர்கள் உட்பட இறுதிப் பயனர்களின் எண்ணிக்கையை 30 ஜி.பை. என்ற அளவால் பெருக்குவதால் கிடைக்கும் சேமிப்பகம்
Google Workspace Business Standard காப்பிடப்பட்ட பயனர்கள் உட்பட இறுதிப் பயனர்களின் எண்ணிக்கையை 2 டெ.பை. என்ற அளவால் பெருக்குவதால் கிடைக்கும் சேமிப்பகம்
Google Workspace Business Plus காப்பிடப்பட்ட பயனர்கள் உட்பட இறுதிப் பயனர்களின் எண்ணிக்கையை 5 டெ.பை. என்ற அளவால் பெருக்குவதால் கிடைக்கும் சேமிப்பகம்
Google Workspace Enterprise Starter இறுதிப் பயனர்களின் எண்ணிக்கையை 1 டெ.பை. என்ற அளவால் பெருக்குவதால் கிடைக்கும் சேமிப்பகம்

Google Workspace Enterprise Standard

Google Workspace Enterprise Plus

காப்பிடப்பட்ட பயனர்கள் உட்பட இறுதிப் பயனர்களின் எண்ணிக்கையை 5 டெ.பை. என்ற அளவால் பெருக்குவதால் கிடைக்கும் சேமிப்பகம்

நியாயமான கோரிக்கையின் அடிப்படையில் Googleளின் விருப்புரிமையின்படி 5 அல்லது அதற்கு மேற்பட்ட இறுதிப் பயனர்களைக் கொண்ட வாடிக்கையாளர்களுக்குக் கூடுதல் சேமிப்பகம் கிடைக்கக்கூடும்.சேமிப்பகத்தைக் கோருவது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

Google Workspace for Education

Google Workspace பதிப்பு அல்லது சந்தா சேமிப்பக வரம்புகள்

Google Workspace for Education Fundamentals

Google Workspace for Education Standard

இறுதிப் பயனர்கள் அனைவருக்கும் சேர்த்து மொத்தம் 100 டெ.பை. கிடைக்கும்
Google Workspace for Education Teaching and Learning Upgrade கூடுதலாக, இறுதிப் பயனர் உரிமங்களின் எண்ணிக்கையை 100 ஜி.பை. என்ற அளவால் பெருக்குவதால் கிடைக்கும் சேமிப்பகம்
Google Workspace for Education Plus கூடுதலாக, இறுதிப் பயனர் உரிமங்களின் எண்ணிக்கையை 20 ஜி.பை. என்ற அளவால் பெருக்குவதால் கிடைக்கும் சேமிப்பகம்

Google Workspace for Education சேமிப்பகம் குறித்த கூடுதல் தகவல்களுக்கு சேமிப்பகம் கிடைக்கும் நிலையையும் பயன்பாட்டையும் புரிந்துகொள்ளுதல் என்பதற்குச் செல்லவும்.

Google Workspace Essentials

Google Workspace Essentials பதிப்புகளில் Gmail இருக்காது.

Google Workspace பதிப்பு அல்லது சந்தா சேமிப்பக வரம்புகள்

Google Workspace Essentials Starter

ஒவ்வொரு இறுதிப் பயனருக்கும் 15 ஜி.பை. கிடைக்கும்

Google Workspace Essentials

புதிய வாடிக்கையாளர்களுக்கு இனி கிடைக்காது

இறுதிப் பயனர்களின் எண்ணிக்கையை 100 ஜி.பை. என்ற அளவால் பெருக்குவதால் கிடைக்கும் சேமிப்பகம், அதிகபட்சம் 2 டெ.பை. வரை
Google Workspace Enterprise Essentials இறுதிப் பயனர்களின் எண்ணிக்கையை 1 டெ.பை. என்ற அளவால் பெருக்குவதால் கிடைக்கும் சேமிப்பகம்
Google Workspace Enterprise Essentials Plus இறுதிப் பயனர்களின் எண்ணிக்கையை 5 டெ.பை. என்ற அளவால் பெருக்குவதால் கிடைக்கும் சேமிப்பகம்

Google Workspace Frontline

Google Workspace பதிப்பு அல்லது சந்தா சேமிப்பக வரம்புகள்

Google Workspace Frontline Starter

Google Workspace Frontline Standard

ஒவ்வொரு இறுதிப் பயனருக்கும் 5 ஜி.பை. கிடைக்கும்*

*இந்தச் சேமிப்பக வரம்பு Google Workspace Frontline பதிப்பைப் பயன்படுத்தும் இறுதிப் பயனர்கள் அனைவருக்கும் பொருந்தும் (வெவ்வேறு சேமிப்பக வரம்புகளை வழங்கும் வேறொரு Google Workspaceஸை வாடிக்கையாளர் வாங்கியிருந்தாலும் கூட).

Google Workspace for Nonprofits

Google Workspace பதிப்பு அல்லது சந்தா சேமிப்பக வரம்புகள்

Google Workspace for Nonprofits

இறுதிப் பயனர்கள் அனைவருக்கும் சேர்த்து 100 டெ.பை. கிடைக்கும்
Google One சேமிப்பகம் குறித்துத் தெரிந்துகொள்ளுங்கள்

Drive, Gmail, Photos மற்றும் குடும்பக் கணக்குகள் முழுவதிலும் (பொருந்தக்கூடிய இடங்களில்) பயன்படுத்தும் வகையில் Google One சேமிப்பகம் பகிரப்பட்டுள்ளது. Google Workspace பதிப்பைப் பொறுத்து ஒவ்வொரு பயனருக்கான சேமிப்பக அளவும் இருக்கும்.

Google One Plan

Payment

Availability

100 GB

Monthly or yearly

Everyone

200 GB

Monthly or yearly

Everyone

2 TB

Monthly or yearly

Everyone

5 TB

Monthly or yearly

Upgrade for existing members

10 TB

Monthly

Upgrade for existing members

20 TB

Monthly

Upgrade for existing members

30 TB

Monthly

Upgrade for existing members

Google One உறுப்பினர்கள் தங்கள் திட்ட அம்சங்களை அதிகபட்சம் 5 குடும்ப உறுப்பினர்கள் வரை பகிர்ந்துகொள்ளலாம்.

Google கணக்குடன் அனைவருக்கும் கட்டணம் இல்லாமல் 15 ஜி.பை. கிளவுடு சேமிப்பகம் கிடைக்கிறது. Google Oneனில் மீதமுள்ள கட்டணச் சேமிப்பகம் குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே பகிரப்படும். உங்கள் குடும்பத்தினருடன் எப்படிப் பகிர்வது அல்லது பகிர்வதை நிறுத்துவது என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.

சேமிப்பக நிர்வாகியைப் பயன்படுத்தியும் Google சேமிப்பகத்தைக் காலியாக்கலாம், சிக்கலைப் பிழையறிந்து திருத்தலாம்.
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
16166462297859176603
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
99950
false
false