Chromebookகை ஆஃப்லைனில் பயன்படுத்துதல்

இணைய இணைப்பு இல்லாவிட்டாலும் Chromebookகின் மூலம் பல விஷயங்களைச் செய்யலாம்.

முக்கியம்:

  • மறைநிலை அல்லது கெஸ்ட் பயன்முறையில் சில ஆஃப்லைன் ஆப்ஸும் சேவைகளும் வேலை செய்யாது.
  • பணி அல்லது பள்ளிக் கணக்கின் மூலம் Gmailலைப் பயன்படுத்தினால் Gmailலின் ஆஃப்லைன் அமைப்புகளை மாற்ற உதவுமாறு நிர்வாகியிடம் கேட்கலாம்.

மின்னஞ்சலைப் பார்த்தல்

இணைய இணைப்பு இல்லாவிட்டாலும் mail.google.com தளத்திற்குச் சென்று Gmail மெசேஜ்களைப் படிக்கலாம், அவற்றுக்குப் பதிலளிக்கலாம், அவற்றைத் தேடலாம். இதை அமைக்க:

  1. Chrome உலாவியை Chrome திறக்கவும். முக்கியம்: மறைநிலை பயன்முறையில் Gmail ஆஃப்லைன் வேலை செய்யாது.
  2. Gmail ஆஃப்லைன் அமைப்புகளுக்குச் செல்லவும்.
  3. "ஆஃப்லைன் அஞ்சலை இயக்கு" என்பதைத் தேர்வுசெய்யவும்.
  4. எத்தனை நாட்களுக்கான மெசேஜ்களை ஒத்திசைக்க விரும்புகிறீர்கள் என்பதைப் போன்ற அமைப்புகளைத் தேர்வுசெய்யவும்.
  5. மாற்றங்களைச் சேமி என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  6. இணைய இணைப்பு இல்லாவிட்டாலும் Gmailலைப் பயன்படுத்த mail.google.com தளத்திற்குச் செல்லவும்.

முக்கியம்: ஆஃப்லைனில் மின்னஞ்சல்களை அனுப்பும்போது அவை புதிய "அவுட்பாக்ஸ்" ஃபோல்டருக்குச் செல்லும், நீங்கள் ஆன்லைனுக்கு வந்ததும் அங்கிருந்து அனுப்பப்படும். Gmailலை ஆஃப்லைனில் பயன்படுத்துவது குறித்து மேலும் அறிக.

திரைப்படங்கள், மியூசிக், கேம்கள் ஆகியவற்றைப் பிளே செய்தல்

திரைப்படங்களையும் டிவி ஷோக்களையும் ஆஃப்லைனில் பார்த்தல்

முதலில் Google Play மூவிஸில் இருந்து திரைப்படத்தையோ டிவி ஷோவையோ வாங்கவும்.

ஷோவைப் பதிவிறக்குதல்

அடுத்து Chromebookகில் திரைப்படத்தையோ டிவி ஷோவையோ பதிவிறக்கவும்:

  1. திரையின் மூலையில் இருக்கும் தொடக்கி என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  2. Google Play மூவீஸ் ஆப்ஸை Play Movies தேர்ந்தெடுக்கவும்.
  3. எனது திரைப்படங்கள் அல்லது எனது டிவி ஷோக்கள் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  4. நீங்கள் பதிவிறக்க விரும்பும் திரைப்படம் அல்லது டிவி ஷோவுக்கு அடுத்துள்ள பதிவிறக்கு Download என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

பதிவிறக்கத்தின் நிலையைக் காட்ட பதிவிறக்க ஐகான் படிப்படியாகச் சிவப்பு வண்ணத்திற்கு மாறும். பதிவிறக்க ஐகான் தேர்வுக்குறியாக மாறியதும் வீடியோவை நீங்கள் ஆஃப்லைனில் பார்க்கலாம்.

பதிவிறக்க முடியவில்லை எனில் வீடியோக்களைப் பதிவிறக்குவதில் உள்ள சிக்கல்களைப் பிழையறிந்து திருத்துவது எப்படி என அறிக.

ஆஃப்லைனில் பார்த்தல்

இணைய இணைப்பு இல்லாதபோது திரைப்படத்தையோ டிவி ஷோவையோ பார்க்க Google Play மூவீஸ் ஆப்ஸை Play Movies திறக்கவும்.

வீடியோவை அகற்ற பதிவிறக்கியவை Downloaded என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

ஆஃப்லைனில் மியூசிக் கேட்டல்
ஆஃப்லைன் பிளேபேக்கை Chromebookகிற்கான YouTube Music ஆப்ஸ் ஆதரிப்பதில்லை. ஆஃப்லைனில் மியூசிக் கேட்க உங்களுக்குத் தேவையானவை:
ஆஃப்லைனில் கேம்களை விளையாடுதல்

முதலில், ஆஃப்லைனில் விளையாடக்கூடிய கேம்களைக் கண்டறிந்து பதிவிறக்கவும்:

  1. Chrome ஆன்லைன் ஸ்டோருக்குச் செல்லவும்.
  2. இடதுபுறத்தில் உள்ள கேம்கள் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. ஆஃப்லைனில் இயங்கும் என்ற பெட்டியைத் தேர்வுசெய்யவும்.

Cut the Rope, Cube Slam போன்ற பல கேம்களை ஆஃப்லைனில் விளையாடலாம். Chromebookகில் Android ஆப்ஸைப் பயன்படுத்த முடியுமெனில் Google Play Store ஆப்ஸிலும் ஆஃப்லைன் கேம்களைத் தேடலாம்.

நீங்கள் நிறுவியுள்ள கேமைத் தேட: 

  1. திரையின் மூலையில் இருக்கும் தொடக்கி என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  2. கேமைத் திறக்கவும். 

குறிப்புகள் எடுத்தல்

Google Keepபைப் பயன்படுத்தி ஆஃப்லைனில் குறிப்புகளை எடுக்கலாம். ஏற்கெனவே குறிப்புகளை எடுத்திருந்தால் அவற்றை ஆஃப்லைனில் படிக்கவும் திருத்தவும் முதலில் அவற்றைச் சேமிக்க வேண்டும்:

  1. Chromebook இணையத்துடன் இணைக்கப்பட்டிருப்பதை உறுதிப்படுத்திக்கொள்ளவும்.
  2. திரையின் மூலையில் இருக்கும் தொடக்கி என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. Google Keep ஆப்ஸை Keep திறக்கவும்.
  4. சில நிமிடங்கள் காத்திருக்கவும். குறிப்புகளை ஆஃப்லைனில் பார்க்கும்வகையில் Chromebook அவற்றைத் தானாகவே சேமிக்கும்.

குறிப்புகளை Chromebook சேமித்ததும் அவற்றை நீங்கள் ஆஃப்லைனில் திருத்தலாம் புதிய குறிப்புகளை எழுதலாம். அடுத்த முறை நீங்கள் ஆன்லைனுக்கு வரும்போது Google Keepபில் நீங்கள் செய்யும் மாற்றங்கள் அனைத்தும் காட்டப்படும்.

ஆஃப்லைனில் நீங்கள் செய்யக்கூடிய பிற பணிகள்

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
8265248405021333055
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
99950
false
false