Google Driveவில் படங்களையும் வீடியோவையும் திருத்த, ஆவணங்களை ஃபேக்ஸ் செய்து கையொப்பமிட, பாய்வு விளக்கப்படங்களை உருவாக்க மற்றும் பலவற்றைச் செய்ய G Suite Marketplaceஸில் இருந்து ஆப்ஸைப் பதிவிறக்கவும்.
Google Workspace Marketplaceஸில் இருந்து ஆப்ஸை எப்படிச் சேர்ப்பது என அறிக.
Google Workspace Marketplaceஸில் இருந்து Google Drive ஆப்ஸைச் சேர்த்த பிறகு உங்களால் அவற்றை இணையத்தில் உள்ள Google Driveவில் பயன்படுத்த முடியும். ஆதரிக்கப்படும் உலாவிகள் அனைத்திலும் ஆப்ஸ் இணக்கமானதாக இருக்கும்.
ஆப்ஸைப் பயன்படுத்துதலும் நிர்வகித்தலும்
- உங்கள் கம்ப்யூட்டரில் drive.google.comமிற்குச் செல்லவும்.
- இடதுபுறத்தில் உள்ள புதிது என்பதைக் கிளிக் செய்யவும்.
- ஆப்ஸைத் தேர்வுசெய்யவும்.
- கோப்பைச் சேமித்த பிறகு "எனது இயக்ககத்தில்" அதை நீங்கள் பார்க்க முடியும்.
கவனத்தில் கொள்க: எல்லா Google Drive ஆப்ஸாலும் Driveவில் கோப்புகளை உருவாக்க முடியாது.
- உங்கள் கம்ப்யூட்டரில் drive.google.comமிற்குச் செல்லவும்.
- கோப்பின்மீது வலது கிளிக் செய்யவும்.
- "இதன்மூலம் திற" என்பதன் மேல் உங்கள் கர்சரை நகர்த்தவும்.
- ஆப்ஸைத் தேர்ந்தெடுக்கவும்.
சிலவகைக் கோப்புகளைத் திறக்க இயல்புநிலை ஆப்ஸாக அமைக்கலாம்.
- உங்கள் கம்ப்யூட்டரில் drive.google.comமிற்குச் செல்லவும்.
- அமைப்புகள்
அமைப்புகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
- ஆப்ஸை நிர்வகி என்பதைக் கிளிக் செய்யவும்.
- பயன்படுத்த வேண்டிய ஆப்ஸைக் கண்டறியவும்.
- ஆப்ஸுக்கு அடுத்துள்ள "இயல்பாகப் பயன்படுத்து" என்பதற்கு இடதுபுறத்தில் உள்ள பாக்ஸை டிக் செய்யவும்.
பின்வருவனவற்றைச் செய்தபிறகு உங்கள் Google Drive ஆப்ஸ் கோப்புகள் தானாகச் சேமிக்கப்படும்:
- கோப்பைத் திருத்துவது.
- "Google Driveவில் பதிவிறக்கு" என்பதைத் தேர்வுசெய்வது.
- "நகலைச் சேமி" என்பதைத் தேர்வுசெய்வது.
- "Driveவில் சேமி" என்பதைத் தேர்வுசெய்வது.
Google Drive ஆப்ஸ் தொடர்பான உதவி
Google Drive ஆப்ஸ் பலவற்றை உருவாக்கும் நிறுவனங்கள் தங்களுக்கென தனியாகப் பயன்பாட்டு விதிமுறைகளையும் தனியுரிமைக் கொள்கைகளையும் கொண்டுள்ளன. ஆப்ஸை உருவாக்கும் நிறுவனத்தைத் தொடர்புகொள்ள:
- உங்கள் கம்ப்யூட்டரில் drive.google.comமிற்குச் செல்லவும்.
- அமைப்புகள்
அமைப்புகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
- ஆப்ஸை நிர்வகி என்பதைக் கிளிக் செய்யவும்.
- ஆப்ஸுக்கு அடுத்துள்ள விருப்பங்கள் என்பதைக் கிளிக் செய்யவும்.
- தயாரிப்புப் பக்கத்தைக் காட்டு என்பதைக் கிளிக் செய்யவும். Google Workspace Marketplace பக்கத்தில் தொடர்புத் தகவல் இருக்கும்.
Google Drive ஆப்ஸைப் பயன்படுத்தி கோப்பைத் திறக்கும்போது Google Driveவில் உள்ள உங்கள் கோப்புகளில் சிலவற்றை அல்லது அனைத்தையும் பார்க்க சில ஆப்ஸ் அனுமதி கேட்கக்கூடும்.
எப்போது வேண்டுமானலும் நீங்கள் அனுமதியை ரத்துசெய்ய முடியும்.
- உங்கள் கம்ப்யூட்டரில் drive.google.comமிற்குச் செல்லவும்.
- அமைப்புகள்
அமைப்புகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
- ஆப்ஸை நிர்வகி என்பதைக் கிளிக் செய்யவும்.
- ஆப்ஸுக்கு அடுத்துள்ள விருப்பங்கள் என்பதைக் கிளிக் செய்யவும்.
- Driveவில் இருந்து இணைப்பை நீக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.