Google Drive ஆப்ஸைப் பயன்படுத்துதல்

உங்கள் பிசினஸிற்கு மேம்பட்ட Google Workspace அம்சங்கள் வேண்டுமா?

இன்றே Google Workspaceஸைப் பயன்படுத்திப் பாருங்கள்!

Google Driveவில் படங்களிலும் வீடியோவிலும் மாற்றங்களைச் செய்ய, ஆவணங்களை ஃபேக்ஸ் செய்ய மற்றும் கையொப்பமிட, செயல்வரிசைப் படங்களை உருவாக்க மற்றும் பலவற்றைச் செய்ய Google Workspace Marketplaceஸில் இருந்து ஆப்ஸைப் பதிவிறக்கவும். 

Google Workspace Marketplaceஸில் இருந்து ஆப்ஸைச் சேர்ப்பது எப்படி என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்

Google Workspace Marketplaceஸில் இருந்து Google Drive ஆப்ஸைச் சேர்த்த பிறகு உங்களால் அவற்றை இணையத்தில் உள்ள Google Driveவில் பயன்படுத்த முடியும். ஆதரிக்கப்படும் உலாவிகள் அனைத்திலும் ஆப்ஸைப் பயன்படுத்தலாம்.

ஆப்ஸைப் பயன்படுத்துதலும் நிர்வகித்தலும்

ஃபைல்களை உருவாக்குதல்
  1. உங்கள் கம்ப்யூட்டரில் drive.google.comமிற்குச் செல்லவும்.
  2. இடதுபுறத்தில் உள்ள புதிது என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. ஆப்ஸைத் தேர்வுசெய்யவும்.
  4. ஃபைலைச் சேமித்த பிறகு "எனது Driveவில்" அதை நீங்கள் பார்க்க முடியும்.

கவனத்தில் கொள்க: எல்லா Google Drive ஆப்ஸாலும் Driveவில் ஃபைல்களை உருவாக்க முடியாது.

ஃபைல்களைத் திறத்தல்
  1. உங்கள் கம்ப்யூட்டரில் drive.google.comமிற்குச் செல்லவும்.
  2. ஃபைல் மீது வலது கிளிக் செய்யவும்.
  3. "இதன்மூலம் திற" என்பதன் மேல் கர்சரை நகர்த்தவும்
  4. ஆப்ஸைத் தேர்ந்தெடுக்கவும்.

சிலவகை ஃபைல்களைத் திறக்க இயல்புநிலை ஆப்ஸாக அமைக்கலாம்.

  1. உங்கள் கம்ப்யூட்டரில் drive.google.comமிற்குச் செல்லவும்.
  2. அமைப்புகள் அமைப்புகள் அதன் பிறகு அமைப்புகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. ஆப்ஸை நிர்வகி என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. பயன்படுத்த வேண்டிய ஆப்ஸைக் கண்டறியவும்.
  5. ஆப்ஸுக்கு அடுத்துள்ள "இயல்பாகப் பயன்படுத்து" என்பதற்கு இடதுபுறத்தில் உள்ள பாக்ஸை டிக் செய்யவும்.
ஃபைல்களைச் சேமித்தல்

இவற்றைச் செய்தபிறகு உங்கள் Google Drive ஆப்ஸ் ஃபைல்கள் தானாகச் சேமிக்கப்படும்:

  • ஃபைலைத் திருத்துவது.
  • "Google Driveவில் பதிவிறக்கு" என்பதைத் தேர்வுசெய்வது.
  • "நகலைச் சேமி" என்பதைத் தேர்வுசெய்வது.
  • "Driveவில் சேமி" என்பதைத் தேர்வுசெய்வது.

Google Drive ஆப்ஸ் தொடர்பான உதவி

Google Drive ஆப்ஸ் தொடர்பான உதவியைப் பெறுதல்

Google Drive ஆப்ஸ் பலவற்றை உருவாக்கும் நிறுவனங்கள் தங்களுக்கென தனியாகப் பயன்பாட்டு விதிமுறைகளையும் தனியுரிமைக் கொள்கைகளையும் கொண்டுள்ளன. ஆப்ஸை உருவாக்கும் நிறுவனத்தைத் தொடர்புகொள்ள:

  1. உங்கள் கம்ப்யூட்டரில் drive.google.comமிற்குச் செல்லவும்.
  2. அமைப்புகள் அமைப்புகள் அதன் பிறகு அமைப்புகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. ஆப்ஸை நிர்வகி என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. ஆப்ஸுக்கு அடுத்துள்ள விருப்பங்கள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  5. தயாரிப்புப் பக்கத்தைக் காட்டு என்பதைக் கிளிக் செய்யவும்.  Google Workspace Marketplace பக்கத்தில் தொடர்புத் தகவல் காட்டப்படும்.
Google Drive ஆப்ஸை அகற்றுதல்

Google Drive ஆப்ஸைப் பயன்படுத்தி ஃபைலைத் திறக்கும்போது Google Driveவில் உள்ள உங்கள் ஃபைல்களில் சிலவற்றையோ அனைத்தையுமோ பார்க்க சில ஆப்ஸ் உங்களிடம் அனுமதி கேட்கலாம்.

எப்போது வேண்டுமானலும் நீங்கள் அனுமதியை ரத்துசெய்ய முடியும்.

  1. உங்கள் கம்ப்யூட்டரில் drive.google.comமிற்குச் செல்லவும்.
  2. அமைப்புகள் அமைப்புகள் அதன் பிறகு அமைப்புகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. ஆப்ஸை நிர்வகி என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. ஆப்ஸுக்கு அடுத்துள்ள விருப்பங்கள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  5. Driveவில் இணைப்பை நீக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
10240616156951872390
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
99950
false
false