Google Driveவில் பொதுவான சிக்கல்களைச் சரிசெய்தல்

Google Driveவில் ஃபைலைப் பார்ப்பதில் சிக்கல் இருந்தால் அதை எப்படிச் சரிசெய்யலாம் என்பது இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. 

1. சிறிது நேரம் கழித்து உங்கள் ஃபைல்களை மீண்டும் திறக்க முயலவும்

  • சிறிது நேரம் காத்திருக்கவும்: Driveவில் கோப்புகளைத் திறக்க முயலும்போது “தற்காலிகப் பிழை (502)” என்ற மெசேஜ் தோன்றினால் உங்கள் ஆவணங்கள் தற்காலிகமாகக் கிடைக்கவில்லை என்று பொருள். இந்தச் சிக்கல் தற்காலிகமானது என்பதால் சிறிது நேரம் காத்திருந்து, கோப்புகளை மீண்டும் திறக்க முயலவும்.
  • Google Workspace நிலை டாஷ்போர்டைப் பார்க்கவும்: Drive/Google சேவையகங்களில், அறியப்பட்ட செயலிழப்பு இருந்தால் Google Workspace நிலை டாஷ்போர்டில் தயாரிப்பிற்கு அடுத்து ஒரு சிவப்பு நிறப் புள்ளி தோன்றும். என்ன தவறு ஏற்பட்டது என்பது குறித்த விவரத்தை அறிய, புள்ளியின் மீது கிளிக் செய்யவும்.

2. அடிப்படையான பிழையறிந்து திருத்துதல் முறைகளைப் பயன்படுத்திப் பார்க்கவும்

படி 1: இணைய இணைப்பைச் சரிபார்க்கவும்
"இணைக்க முயல்கிறது" என்ற பிழைச் செய்தியைப் பார்த்தாலோ இணையத்திற்கான Driveவில் ஆவணங்கள் மிகவும் மெதுவாக ஏற்றப்பட்டாலோ இணைய இணைப்பைச் சரிபார்க்கவும். இணைப்பு தொடர்பான பல பிழைகளுக்கு வேகம் குறைவான இணைய இணைப்பு பொதுவான காரணமாக உள்ளது. 
உங்கள் ஃபைல்கள் சரியாக ஏற்றப்படுகின்றனவா என்று பார்க்க வேறொரு நெட்வொர்க்கில் இணைக்கவும்.
இணைய இணைப்பின் வேகம் குறைவாக இருக்கும்போதோ இணைப்பு கிடைக்காதபோதோ ஆஃப்லைன் பயன்முறையைப் பயன்படுத்தலாம். ஆஃப்லைன் பயன்முறை குறித்தும் அதை எப்படி அமைப்பது என்பது குறித்தும் மேலும் படித்துப் பாருங்கள்.
படி 2: உலாவியின் பதிப்பைச் சரிபார்க்கவும்
  1. ஆதரிக்கப்படும் உலாவியையும் ஆப்ரேட்டிங் சிஸ்டத்தையும் நீங்கள் பயன்படுத்துவதை உறுதிசெய்ய சிஸ்டம் தேவைகளையும் ஆதரிக்கப்படும் உலாவிகளையும் பார்க்கவும்.

    அனைத்து முக்கிய உலாவிகளின் சமீபத்திய இரண்டு பதிப்புகள் மூலமாகவும் Driveவைப் பயன்படுத்தலாம்.

  2. உங்கள் உலாவியில் குக்கீகள், JavaScript® ஆகியவை இயக்கப்பட்டிருப்பதை உறுதிசெய்துகொள்ளவும்.
  3. Driveவிற்கு Chrome உலாவியைப் பயன்படுத்துமாறு பரிந்துரைக்கிறோம். எனினும், Mozilla® Firefox®, Microsoft® Internet Explorer®, Apple® Safari® போன்ற பிற உலாவிகள் மூலமாகவும் Driveவைத் திறக்க முயலலாம்.
படி 4: ஃபைலின் அளவைக் குறைக்கவும்
Driveவில் பெரிய ஃபைல்களைச் சேமித்து வைக்கலாம் என்றாலும் அளவு வரம்புகளை மீறினால் அவை சரியாக ஏற்றப்படாமல் போகலாம். ஃபைல் மிகவும் பெரிய அளவில் இருந்தாலோ அதிகபட்ச வரம்பிற்கு அருகில் இருந்தாலோ அதை ஒன்றுக்கும் மேற்பட்ட ஃபைல்களாகப் பிரிக்கவும். 
படி 5: ஆஃப்லைன் அணுகலை இயக்கவும் அல்லது முடக்கவும்
தற்போதைய இணைய இணைப்பின் வேகம் குறைவாக இருந்தால், ஆஃப்லைன் அணுகலை அமைக்கவும். ஆஃப்லைன் அணுகல் மூலம் இணைய இணைப்பு இல்லாமலே உங்கள் ஆவணங்களைப் பார்க்கலாம் திருத்தலாம். நீங்கள் மீண்டும் இணைய இணைப்பைப் பெறும்போது ஆவணங்கள் சமீபத்திய மாற்றங்களை ஒத்திசைக்கும். 

ஆஃப்லைன் அணுகலை இயக்கிய பிறகும் ஃபைல்களைத் திறப்பதில் சிக்கல் இருந்தால் அதைத் தீர்க்க இந்த அம்சத்தை முடக்கிவிட்டு மீண்டும் இயக்கவும். இந்த அம்சத்தை இயக்க அல்லது முடக்க, அமைப்புகளுக்குச் சென்று ஆஃப்லைன் என்பதற்கு அடுத்துள்ள ஆஃப்லைனில் திருத்த ஒத்திசை எனும் பெட்டியைத் தேர்வுநீக்கவும் அல்லது தேர்வுசெய்யவும். 

3. மிகவும் மேம்பட்ட பிழையறிந்து திருத்துதல் முறைகளைப் பயன்படுத்திப் பார்க்கவும் 

படி 6: வைரஸ் ஸ்கேனிங் மென்பொருளைச் சரிபார்க்கவும்
உங்கள் சாதனத்திலுள்ள வைரஸ் ஸ்கேனர் மென்பொருளும் விளம்பரத் தடுப்பான்களும் சில நேரங்களில் Google Docs, Sheets, Slides போன்ற Drive கோப்புகளின் செயல்பாடுகளில் குறுக்கிடலாம். இந்த மென்பொருள் Google Workspaceடைத் தடுக்காமல் இருப்பதை உறுதிப்படுத்திக்கொள்ளவும். 
படி 7: ஃபயர்வால் மற்றும் ப்ராக்ஸி அமைப்புகளைச் சரிபார்க்கவும் (மேம்பட்டது)
பிரத்தியேகமாக்கப்பட்ட ஃபயர்வால் மற்றும் ப்ராக்ஸி அமைப்புகள் சில நேரங்களில் Driveவிற்கான அணுகலைத் தடுக்கலாம். Drive உடனான இணைப்பை அனுமதிக்கும் வகையில் ஃபயர்வால் மற்றும் ப்ராக்ஸி அமைப்புகள்உள்ளமைக்கப்பட்டுள்ளனவா என்பதைச் சரிபார்க்கவும்.
படி 8: Firefoxஸில் மேம்பட்ட கண்காணிப்புப் பாதுகாப்பு அம்சங்களைச் சரிபாருங்கள்
கம்ப்யூட்டர் உலாவிகளில் Firefoxஸின் மேம்பட்ட கண்காணிப்புப் பாதுகாப்பு அம்சம் ஃபைல்களைத் தவறாகக் காட்டலாம். இந்தச் சிக்கலைச் சரிசெய்ய, மேம்பட்ட கண்காணிப்புப் பாதுகாப்பு அம்சத்தை முடக்கவும்.
  1. "ஒரு தளம் செயலிழந்துவிட்டால் என்ன செய்வது" என்பதற்குக் கீழ் பட்டியலிடப்பட்டுள்ள படிகளைப் பின்பற்றவும்.
  2. தளம் மீண்டும் வேலைசெய்யத் தொடங்கிய பிறகு தளத்தைப் புகாரளிப்பதைத் தொடரலாம்.

இந்தப் படிகள் எனது சிக்கலைச் சரிசெய்யவில்லை 

 

 

Google Driveவில் உள்ள பிற சிக்கல்களைச் சரிசெய்தல்

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
10072449656279630844
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
99950
false
false