Google Driveவை எவ்வாறு பயன்படுத்துவது?


               

உங்கள் பிசினஸிற்கு மேம்பட்ட Google Workspace அம்சங்கள் வேண்டுமா?

இன்றே Google Workspaceஸைப் பயன்படுத்திப் பாருங்கள்!

Google Driveவைப் பயன்படுத்தி உங்கள் கோப்புகளைப் பாதுகாப்பாகச் சேமித்து வைக்கலாம் மற்றும் எந்தச் சாதனத்தில் இருந்தும் கோப்புகளைத் திறக்கலாம், திருத்தலாம்.

Google Driveவைப் பயன்படுத்தத் தொடங்குதல்

Driveவில் 15 ஜி.பை. சேமிப்பிடத்தைக் கட்டணம் இல்லாமல் பெறுவீர்கள். Google Driveவில் எவையெல்லாம் அதிக இடத்தைப் பயன்படுத்துகின்றன என்பது குறித்தும் கூடுதல் சேமிப்பிடத்தை எங்கு வாங்குவது என்பது குறித்தும் அறிக.

படி 1: ஆப்ஸைப் பதிவிறக்கித் திறக்கவும்

iPhone அல்லது iPadல் Google Drive ஆப்ஸைத் திறக்கவும். முகப்புப் பக்கத்தில் இவை காட்டப்படும்:

  • நீங்கள் பதிவேற்றும் அல்லது ஒத்திசைக்கும் ஃபைல்களும் ஃபோல்டர்களும்.
  • நீங்கள் உருவாக்கும் Google Docs, Sheets, Slides மற்றும் Forms.

படி 2: ஃபைல்களைப் பதிவேற்றவும் அல்லது உருவாக்கவும்

உங்கள் iPhone அல்லது iPadல் இருந்து ஃபைல்களைப் பதிவேற்றலாம் அல்லது Google Driveவில் ஃபைல்களை உருவாக்கலாம்.

படி 3: ஃபைல்களைப் பகிர்ந்து ஒழுங்கமைக்கவும்

உங்கள் ஃபைல்களையும் ஃபோல்டர்களையும் பிறர் அணுக, திருத்த அல்லது அவற்றில் கருத்து தெரிவிக்க அவற்றை நீங்கள் பகிரலாம்.

உங்களுடன் பிறர் பகிர்ந்த ஃபைல்களைப் பார்க்க, "என்னுடன் பகிர்ந்தவை" பிரிவிற்குச் செல்லவும்.

Google Driveவில் இருந்து வெளியேறுதல்

Drive ஆப்ஸில் இருந்து வெளியேற இவற்றில் ஒன்றைச் செய்யவும்: 

  • உங்கள் மொபைல் அல்லது டேப்லெட்டில் இருந்து முழுக் கணக்கையும் அகற்றவும்.
  • சாதனத்திலிருந்து உங்கள் Google கணக்கை அகற்றவும்.
  • வேறொரு கணக்கின் மூலம் உள்நுழையவும்.
  • கணக்குகளைத் தற்காலிகமாக முடக்கவும்.
சாதனத்திலிருந்து உங்கள் Google கணக்கை அகற்றுதல்

உதவிக்குறிப்பு: உங்கள் மொபைல் அல்லது டேப்லெட்டில் இருந்து உங்கள் கணக்கை அகற்றுவதால் உங்கள் கணக்கு நீக்கப்படாது. கம்ப்யூட்டரிலோ பிற சாதனங்களிலோ அந்தக் கணக்கைத் தொடர்ந்து பயன்படுத்தலாம்.

  1. iPhone அல்லது iPadல் Drive ஆப்ஸை Drive திறக்கவும்.
  2. மேல் வலதுபுறத்தில் உள்ள உங்கள் சுயவிவரப் படத்தைத் தட்டவும்.
  3. இந்தச் சாதனத்தில் உள்ள கணக்குகளை நிர்வகியுங்கள் அதன் பிறகு இந்தச் சாதனத்திலிருந்து அகற்று என்பதைத் தட்டவும்.

உதவிக்குறிப்பு: ஒரு கணக்கை அகற்றினால் சாதனத்திலுள்ள அனைத்து ஆப்ஸில் இருந்தும் அந்தக் கணக்கு அகற்றப்படும். உங்கள் சாதனத்தை வேறு ஒருவருக்குக் கொடுப்பதற்கு முன் அதிலுள்ள தனிப்பட்ட தகவலை அகற்ற விரும்பினால் இந்த விருப்பம் சிறந்தது.
மற்றொரு கணக்கின் மூலம் உள்நுழைதல்

முக்கியம்: 

  • Drive ஆப்ஸில் பல கணக்குகளைச் சேர்த்தால் அவற்றுக்கு இடையே நீங்கள் மாறலாம். 
  • ஒவ்வொரு கணக்கிற்குமான ஃபைல்கள் Drive ஆப்ஸில் தனித்தனியாகச் சேமிக்கப்பட்டிருக்கும்.
  1. iPhone அல்லது iPadல் Drive ஆப்ஸை Drive திறக்கவும்.
  2. மேல் வலதுபுறத்தில் உள்ள உங்கள் சுயவிவரப் படத்தைத் தட்டவும்.
  3. நீங்கள் பயன்படுத்த விரும்பும் கணக்கைத் தேர்ந்தெடுக்கவும்.
கணக்குகளைத் தற்காலிகமாக முடக்குதல்

Drive ஆப்ஸில் நீங்கள் பல கணக்குகளைச் சேர்த்திருந்தால் அவற்றில் ஒன்றையோ அதற்கு மேற்பட்டவற்றையோ தற்காலிகமாக முடக்கலாம்.

  1. iPhone அல்லது iPadல் Drive ஆப்ஸை Drive திறக்கவும்.
  2. மேல் வலதுபுறத்தில் உள்ள உங்கள் சுயவிவரப் படத்தைத் தட்டவும்.
  3. இந்தச் சாதனத்தில் கணக்குகளை நிர்வகியுங்கள் என்பதைத் தட்டவும். 
  4. நீங்கள் தற்காலிகமாக முடக்க விரும்பும் கணக்கிற்கு அடுத்துள்ள பட்டனைத் தட்டி முடக்கவும்  அல்லது இயக்கவும் .
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
13252919753699968593
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
99950
false
false