Google Driveவில் ஃபைல்களைக் கண்டறிதல்

பரிந்துரைக்கப்படும் ஃபைல்கள், தேடல் சிப்கள், வழக்கமான தேடல் போன்றவற்றைப் பயன்படுத்தி நீங்கள் ஃபைல்களைக் கண்டறியலாம். தேடல் முடிவுகளை வரிசைப்படுத்தலாம் வடிகட்டலாம்.

பரிந்துரைக்கப்படும் ஃபைல்களைத் திறத்தல்

முகப்புப் பக்கம், எனது Drive, பகிர்ந்த இயக்ககங்கள் ஆகியவற்றில் உங்களின் சமீபத்திய மற்றும் தொடர்புடைய ஃபைல்களை அணுகலாம்.

  • உங்களுக்கு வேண்டிய ஃபைலைத் திறக்க அதை இரு கிளிக் செய்யவும்.
  • மேலும் விருப்பங்களுக்கு, ஃபைலின் மீது வலது கிளிக் செய்யவும்.
பரிந்துரையை இயக்குதல் அல்லது முடக்குதல்
  1. கம்ப்யூட்டரில் Google Driveவுக்குச் செல்லவும்.​
  2. மேல் வலதுபுறத்தில், அமைப்புகள் அமைப்புகள் அதன் பிறகு பொது என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. கீழேயுள்ள "பரிந்துரைகள்" என்பதிலிருந்து இவற்றில் ஒன்றைத் தேர்வுசெய்யவும்:
    • பரிந்துரைக்கப்படும் ஃபைல்களை 'எனது Drive' பிரிவிலும் பகிர்ந்த இயக்ககங்களிலும் காட்டு.
    • பரிந்துரைக்கப்படும் ஃபைல்களை "என்னுடன் பகிர்ந்தவை" பிரிவில் காட்டு.
    • "முன்னுரிமை" பிரிவை எனது இயல்பு முகப்புப் பக்கமாக மாற்று.
  4. முடிந்தது என்பதைக் கிளிக் செய்யவும்.

உதவிக்குறிப்பு: பரிந்துரைக்கப்படும் ஃபைல்களை "என்னுடன் பகிர்ந்தவை" பிரிவில் காட்ட பக்கத்தைப் புதுப்பிக்கவும்.

தேடல் சிப்களைப் பயன்படுத்துதல்

Driveவில் உள்ள ஃபைல்களைச் சுருக்க நீங்கள் தேடல் சிப்களைப் பயன்படுத்தலாம். நீங்கள் இவற்றின்படி தேடலாம் வடிகட்டலாம்:

  • வகை
  • நபர்கள் 
  • மாற்றப்பட்டது

இந்தச் சிப்கள் தேடல் பட்டிக்குக் கீழே காட்டப்படும். அத்துடன் இந்தக் காட்சியில் உள்ள ஃபைல்கள், ஃபோல்டர்கள், துணை ஃபோல்டர்கள் ஆகிய அனைத்திலும் தேடும் (எனது Drive, சமீபத்தியவை அல்லது நீக்கியவை போன்றவை).

  • தேடல் சிப்பை அகற்ற: சிப்பின் வலதுபுறத்தில் உள்ள ஐகானைக் கிளிக் செய்யவும்.
  • அனைத்து தேடல் சிப்களையும் அகற்ற: சிப்களின் கடைசியில் உள்ள ஐகானைக் கிளிக் செய்யவும்.

உதவிக்குறிப்பு: தேடல் சிப்கள் இயல்பாகவே காட்டப்படும். அவற்றை மறைக்க, வடிப்பான் பட்டனை கிளிக் செய்யவும்.

ஃபைல்களைக் கண்டறிதல்

  1. கம்ப்யூட்டரில் drive.google.com தளத்தில் உள்நுழையவும்.
  2. மேலே உள்ள தேடல் பெட்டியில் சொல்லையோ சொற்றொடரையோ டைப் செய்யவும்.
  3. கீபோர்டில் Enter பட்டனை அழுத்தவும்.
Drive தேடல் வகைகள்

Driveவில் இவற்றின்படி தேடலாம்:

  • ஃபைலின் தலைப்பு
  • ஃபைல் உள்ளடக்கம்
  • ஃபைல் வகை
  • இவற்றைப் போன்ற பிற தரவுத்தகவல்:
    • விளக்கத்திற்கான புலம்
    • பகிர்ந்த லேபிள்கள்
    • ஃபைல் இருக்குமிடம்
    • உரிமையாளர்
    • உருவாக்குநர்
    • கடைசியாக மாற்றிய தேதி
    • அனுமதிகள்
    • ஃபாலோ-அப்கள்
    • படங்கள், PDF ஃபைல்கள் அல்லது உங்கள் Driveவில் சேமிக்கப்பட்டுள்ள பிற ஃபைல்களில் இடம்பெற்றுள்ள வார்த்தைகள்

தேடல் உதவிக்குறிப்புகள்

  • நீங்கள் டைப் செய்யும்போதே தேடல் முடிவுகள் காட்டப்படும்.
  • நீங்கள் அணுகுவதற்கு அனுமதியுள்ள ஃபைல்கள் அனைத்தின் தலைப்புகளையும் உள்ளடக்கத்தையும் Google Drive தேடும்.
  • அனைத்து முடிவுகளையும் பார்க்க கீபோர்டில் Enter அழுத்தவும்.
Drive முடிவுகளை வடிகட்டுதல்

Driveவில் ஃபைல்களை எளிதாகக் கண்டறிய, தேடல் முடிவுகளை வடிகட்டித் துல்லியமாக்கலாம்.

சிப்கள் மூலம் வடிகட்டுதல்:

  1. கம்ப்யூட்டரில் drive.google.com தளத்திற்குச் செல்லவும்.
  2. மேலே உள்ள தேடல் பெட்டியில் சொல்லையோ சொற்றொடரையோ டைப் செய்யவும்.
  3. உங்கள் தேடல் முடிவுகளைத் துல்லியமாக்க, தேடல் பெட்டிக்குக் கீழே உள்ள வடிப்பான் சிப்களைப் பயன்படுத்தி இவற்றின்படி வடிகட்டலாம்:
    • இருப்பிடம்: குறிப்பிட்ட ஃபோல்டரில் தேடும். உதாரணம்: “எனது Drive”, "நீக்கியவை" அல்லது "நட்சத்திரமிட்டவை".
    • வகை: ஆவணங்கள், படங்கள், PDFகள் போன்ற ஃபைல் வகைகள்.
    • நபர்கள்: ஃபைலுடன் தொடர்புடைய நபர்களைத் தேடும். உதாரணம்: அனைவரும், உரிமையாளர் அல்லது பகிர்ந்தவர்.
    • மாற்றிய நேரம்: கடைசியாக ஃபைலில் மாற்றம் செய்த தேதியைப் பயன்படுத்தித் தேடும்.
    • தலைப்பு மட்டும்: ஃபைலின் பெயரையோ தலைப்பையோ மட்டும் பயன்படுத்தித் தேடும்.
    • லேபிள்கள்: உங்கள் ஃபைலில் பயன்படுத்திய லேபிள்களின் அடிப்படையில் இது தேடும்.
    • செய்ய வேண்டியவை: அனுமதிகள், ஃபாலோ-அப்கள், உரிமை மாற்றங்கள் உள்ளிட்ட நீங்கள் கவனம் செலுத்த வேண்டியவற்றை இது தேடும்.
  4. வடிகட்டும் சிப்பை அகற்ற: சிப்பின் வலதுபுறத்தில் உள்ள ஐகானைக் கிளிக் செய்யவும்.
  5. வடிகட்டும் சிப்கள் அனைத்தையும் அகற்ற: அனைத்து தேடல் சிப்களின் வலதுபுற இறுதியில் உள்ள எல்லாம் அழி என்பதைக் கிளிக் செய்யவும்.

தேடல் விருப்பங்களைப் பயன்படுத்தி வடிகட்டுதல்:

  1. கம்ப்யூட்டரில் drive.google.com தளத்திற்குச் செல்லவும்.
  2. மேலே உள்ள தேடல் பெட்டியில் சொல்லையோ சொற்றொடரையோ டைப் செய்யவும்.
  3. உங்கள் தேடலைத் துல்லியமாக்க, தேடல் விருப்பங்கள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. அதன்பிறகு தேவையான பிரிவுகளை நிரப்பவும்:
    • வகை: ஆவணங்கள், படங்கள், PDFகள் போன்ற ஃபைல் வகைகள்.
    • உரிமையாளர்: உரிமையாளர் அல்லது ஃபைலை உருவாக்கியவரின் அடிப்படையில் தேடும்.
    • இச்சொற்களைக் கொண்டவை: ஆவணங்களில் உள்ள சொற்கள் மற்றும் சொற்றொடர்களைப் பயன்படுத்தித் தேடும்.
    • ஃபைலின் பெயர்: ஃபைலின் பெயரையோ தலைப்பையோ மட்டும் பயன்படுத்தித் தேடும்.
    • இருப்பிடம்: குறிப்பிட்ட ஃபோல்டரில் தேடும். உதாரணம்: "நீக்கியவை", "நட்சத்திரமிட்டவை" அல்லது “என்க்ரிப்ட் செய்யப்பட்டவை”.
    • மாற்றிய தேதி: கடைசியாக ஃபைலில் மாற்றம் செய்த தேதியைப் பயன்படுத்தித் தேடும்.
    • லேபிள்கள்: உங்கள் ஃபைலில் பயன்படுத்திய லேபிள்களின் அடிப்படையில் தேடும்.
    • அனுமதிகள்: ஃபைலின் ஒப்புதல் நிலையின் அடிப்படையில் தேடும். அதாவது உங்களின் ஒப்புதலுக்காக அல்லது மற்றொருவரின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கும் ஃபைல்.
    • இவர்களுடன் பகிர்ந்தது: ஃபைலை நீங்கள் பகிர்ந்திருப்பவர்களின் பெயர்களின் மூலம் தேடும்.
    • ஃபாலோ-அப்: ஃபைலின் ஃபாலோ-அப் நிலையின் மூலம் தேடும். அதாவது உங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகள் உள்ள ஃபைல்கள் அல்லது பரிந்துரைகள் உள்ள உங்களது ஃபைல்கள்.
  5. கீழே உள்ள தேடு என்பதைக் கிளிக் செய்யவும்.

உதவிக்குறிப்பு: ‘தேடு’ என்பதைக் கிளிக் செய்த பிறகு, பொருத்தத்தின்படி வரிசைப்படுத்த உங்கள் தேடல் முடிவுகளுக்கு மேல் வலதுபுறத்தில் உள்ள மூன்று புள்ளி மெனு ஐகானை கிளிக் செய்யவும்.

அளவின்படி ஃபைல்களைக் கண்டறிதல்
  1. கம்ப்யூட்டரில் drive.google.com தளத்திற்குச் செல்லவும்.
  2. இடதுபுறத்தில் உள்ள சேமிப்பகம் என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. சேமிப்பகக் காட்சியில், ஃபைல் அளவின்படி வரிசைப்படுத்த வலதுபுறத்தில் உள்ள பயன்படுத்திய சேமிப்பகம் என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. தலைகீழாக வரிசைப்படுத்த மேல் வலதுபுறத்தில் உள்ள பயன்படுத்திய சேமிப்பகம் என்பதை மீண்டும் கிளிக் செய்யவும்.
Google Driveவில் மேம்பட்ட தேடல்

இந்த மேம்பட்ட தேடல்களைப் பயன்படுத்தி Driveவில் தேடல்களைத் துல்லியமாக்கலாம்.

உதவிக்குறிப்பு: எல்லா எடுத்துக்காட்டுகளும் எல்லாச் சாதனங்களுக்கும் பொருந்தாது.

மேற்கோள்கள்

  • துல்லியமான சொல்லையோ சொற்றொடரையோ கொண்டுள்ள ஆவணங்களைக் கண்டறியலாம்.
  • எடுத்துக்காட்டு: "இந்தச் சொற்றொடருடன் துல்லியமாகப் பொருந்துபவை"

கழித்தல் குறி

  • குறிப்பிட்ட சொல் இல்லாத ஆவணங்களைக் கண்டறியலாம். "கதகளி" என்ற சொல் இருக்க வேண்டும் ஆனால் "நடனமாடுதல்" என்ற சொல் இருக்கக்கூடாது...
  • எடுத்துக்காட்டு: கதகளி -நடனமாடுதல்

owner:

  • ஒரு குறிப்பிட்ட நபருக்குச் சொந்தமான ஆவணங்களைக் கண்டறியலாம்.
  • எடுத்துக்காட்டுகள்:
    • owner:bob@gmail.com

pendingowner:

  • உரிமையாளர் பொறுப்பை இன்னும் நீங்கள் ஏற்காத ஃபைல்களைக் கண்டறியலாம்.
  • முக்கியம்: உரிமையாளர் பொறுப்பை இன்னும் நீங்கள் ஏற்காத ஃபைல்களை மட்டுமே தேட முடியும்.
  • எடுத்துக்காட்டு: pendingowner:me

creator:

  • பகிர்ந்த இயக்ககங்களில் ஒரு குறிப்பிட்ட நபர் உருவாக்கிய ஆவணங்களைக் கண்டறியலாம்.
    • எடுத்துக்காட்டு: creator:jane@yourdomain.com

to:

  • ஒரு குறிப்பிட்ட நபர் அல்லது குழுவுடன் நீங்கள் பகிர்ந்த ஆவணங்களையோ உங்களுடன் பகிரப்பட்ட ஆவணங்களையோ கண்டறியலாம்.
  • எடுத்துக்காட்டுகள்:
    • to:me
    • to:bob@gmail.com
    • to:bobsgroup@googlegroups.com

from:

  • குறிப்பிட்ட நபர் உங்களுடன் பகிர்ந்த ஆவணங்களையோ நீங்கள் பகிர்ந்த ஆவணங்களையோ கண்டறியலாம்.
  • எடுத்துக்காட்டுகள்:
    • from:me
    • from:bob@gmail.com

app:

  • ஆப்ஸ் பெயரின் மூலம் தேடலாம். உங்கள் Google Drive கணக்குடன் இணைக்கப்பட்டிருக்கும் அனைத்து ஆப்ஸும் இதில் அடங்கும். உதாரணமாக:
    • app:"Google Apps Script"
    • app:"Google Jamboard"
    • app:"Google Meet"

sharedwith:

  • குறிப்பிட்ட Workspace கணக்கு அல்லது குழுவிற்கு அணுகல் உள்ள ஆவணங்களைக் கண்டறியலாம். கணக்கிற்குச் சொந்தமான ஃபைல்கள் இதில் அடங்காது.
  • எடுத்துக்காட்டுகள்:
    • sharedwith:me
    • sharedwith:bob@gmail.com
    • sharedwith:external
    • sharedwith:public
  • உங்கள் Google Workspace நிறுவனத்தைச் சாராத ஒன்று அல்லது மேற்பட்ட உறுப்பினர்கள் அடங்கிய குழுக்களும் நிறுவனத்தைச் சாராதவையில் அடங்கும்.

is:starred

  • நீங்கள் நட்சத்திரமிட்டவற்றைக் கண்டறியலாம்.

is:trashed

  • 'நீக்கியவைக்கு' நகர்த்தியவற்றைக் கண்டறியலாம்.

வகை:

  • ஆவண வகையின்படி தேடலாம்: ஃபோல்டர், ஆவணம், விரிதாள், விளக்கக்காட்சி, PDF, படம், வீடியோ, வரைபடம், படிவம், தளம், ஸ்கிரிப்ட், அட்டவணை, மின்னஞ்சல் லேயவுட், அல்லது Jam ஃபைல்.
  • எடுத்துக்காட்டுகள்:
    • type:document
    • type:forms
    • வகை:விரிதாள்
    • வகை:மின்னஞ்சல் லேயவுட்

முன்னர் & பின்னர்

  • குறிப்பிட்ட நாளுக்கு முன்னரோ பின்னரோ திருத்தப்பட்ட ஆவணங்களைக் கண்டறியலாம். YYYY-MM-DD என்ற வடிவத்தில் தேதியை வழங்கவும்.
  • எடுத்துக்காட்டுகள்:
    • before:2021-05-02
    • after:2021-05-01

createdbefore & createdafter

  • குறிப்பிட்ட நாளுக்கு முன்னரோ பின்னரோ உருவாக்கப்பட்ட ஆவணங்களைக் கண்டறியலாம். YYYY-MM-DD என்ற வடிவத்தில் தேதியை வழங்கவும்.
  • எடுத்துக்காட்டுகள்:
    • createdbefore:2022-05-02
    • createdafter:2022-05-01

title:

  • தலைப்பின்படி ஆவணங்களைத் தேடலாம்
  • எடுத்துக்காட்டு: title:Conference 2021

followup:

  • உங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளோ பரிந்துரையோ உள்ள ஃபைல்களைக் கண்டறியலாம்.
  • எடுத்துக்காட்டுகள்:
    • followup:any
    • followup:suggestions
    • followup:actionitems

தொடர்புடைய தகவல்கள்

true
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
1175453950430466548
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
99950
false
false