Google Driveவில் ஒரு ஃபைலைத் தேடிக் கண்டறிதல்

Google Driveவில் ஃபைல்களைக் கண்டறிய முடியவில்லை என்றால் தேடல் சிப்களைப் பயன்படுத்தியோ வழக்கமான தேடல் மூலமோ கண்டறியலாம். தேடல் முடிவுகளை வரிசைப்படுத்தலாம் ஃபில்டர் செய்யலாம்.

உங்கள் அனுமதியின்றி உங்கள் Google Driveவை வேறொருவர் அணுகியிருக்கலாம் என்று நீங்கள் நினைத்தால் உங்கள் கணக்கின் பாதுகாப்பை மேம்படுத்த தேவையானவற்றைச் செய்யும்படி பரிந்துரைக்கிறோம்.

ஃபைலை வேறொருவர் உருவாக்கியிருந்தால் அதை அவர் நீக்கலாம் பெயர் மாற்றலாம் மீட்டெடுக்கலாம். ஃபைலை உருவாக்கியவரைத் தொடர்புகொண்டு அதை மீட்டெடுக்கவோ உங்களுடன் மீண்டும் பகிரவோ சொல்லலாம்.

தேடல் சிப்களைப் பயன்படுத்துதல்

Driveவில் உள்ள ஃபைல்களைச் சுருக்க நீங்கள் தேடல் சிப்களைப் பயன்படுத்தலாம். நீங்கள் இவற்றின்படி தேடலாம் வடிகட்டலாம்:

  • வகை
  • நபர்கள்
  • மாற்றியது

இந்தச் சிப்கள் தேடல் பட்டிக்குக் கீழே காட்டப்படும். அத்துடன் இந்தக் காட்சியில் உள்ள ஃபைல்கள், ஃபோல்டர்கள், துணை ஃபோல்டர்கள் ஆகிய அனைத்திலும் தேடும் (எனது Drive, சமீபத்தியவை அல்லது நீக்கியவை போன்றவை).

  • தேடல் சிப்பை அகற்ற: சிப்பின் வலதுபுறத்தில் உள்ள ஐகானைக் கிளிக் செய்யவும்.
  • அனைத்து தேடல் சிப்களையும் அகற்ற: சிப்களின் கடைசியில் உள்ள வடிப்பான்களை அழி என்பதைக் கிளிக் செய்யவும்.

ஃபைல்களைக் கண்டறிதல்

ஃபைல்களைக் கண்டறிய:

  1. கம்ப்யூட்டரில் drive.google.com தளத்திற்குச் செல்லவும்.
  2. மேலே உள்ள தேடல் பெட்டியில் சொல்லையோ சொற்றொடரையோ டைப் செய்யவும்.
  3. கீபோர்டில் Enter பட்டனை அழுத்தவும்.

தேடும் ஆப்பரேட்டர்களுடன் தேடல் புலத்தை Google Driveவில் பயன்படுத்துதல்.

Drive தேடல் வகைகள்

Driveவில் இவற்றின்படி தேடலாம்:

  • ஃபைலின் தலைப்பு
  • ஃபைல் உள்ளடக்கம்
  • ஃபைல் வகை
  • இவற்றைப் போன்ற பிற தரவுத்தகவல்:
    • விளக்கத்திற்கான புலம்
    • பகிர்ந்த லேபிள்கள்
    • ஃபைல் இருக்குமிடம்
    • உரிமையாளர்
    • உருவாக்குநர்
    • கடைசியாக மாற்றிய தேதி
    • அனுமதிகள்
    • ஃபாலோ-அப்கள்
    • படங்கள், PDF ஃபைல்கள் அல்லது உங்கள் Driveவில் சேமிக்கப்பட்டுள்ள பிற ஃபைல்களில் இடம்பெற்றுள்ள வார்த்தைகள்

Drive முடிவுகளை ஃபில்டர் செய்தல்

Driveவில் ஃபைல்களை எளிதாகக் கண்டறிய, தேடல் முடிவுகளை ஃபில்டர் செய்து துல்லியமாக்கலாம்.

சிப்கள் மூலம் ஃபில்டர் செய்ய:

  1. கம்ப்யூட்டரில் drive.google.com தளத்திற்குச் செல்லவும்.
  2. மேலே உள்ள தேடல் பெட்டியில் சொல்லையோ சொற்றொடரையோ டைப் செய்யவும்.
  3. Enter அழுத்தவும்.
  4. உங்கள் தேடல் முடிவுகளைத் துல்லியமாக்க, தேடல் பெட்டிக்குக் கீழே உள்ள ஃபில்டர் சிப்களைப் பயன்படுத்தி இவற்றின்படி ஃபில்டர் செய்யலாம்:
    • இருப்பிடம்: குறிப்பிட்ட ஃபோல்டரில் தேடும். உதாரணம்: “எனது Drive”, "நீக்கியவை" அல்லது "நட்சத்திரமிட்டவை".
    • வகை: ஆவணங்கள், படங்கள், PDFகள் போன்ற ஃபைல் வகைகள்.
    • நபர்கள்: ஃபைலுடன் தொடர்புடைய நபர்களைத் தேடும். உதாரணம்: அனைவரும், உரிமையாளர் அல்லது பகிர்ந்தவர்.
    • மாற்றிய தேதி: கடைசியாக ஃபைலில் மாற்றம் செய்த தேதியைப் பயன்படுத்தித் தேடும்.
    • தலைப்பு மட்டும்: ஃபைலின் பெயரையோ தலைப்பையோ மட்டும் பயன்படுத்தித் தேடும்.
    • லேபிள்கள்: உங்கள் ஃபைலில் பயன்படுத்திய லேபிள்களின் அடிப்படையில் தேடும்.
    • செய்ய வேண்டியவை: அனுமதிகள், ஃபாலோ-அப்கள், உரிமை மாற்றங்கள் உள்ளிட்ட நீங்கள் கவனம் செலுத்த வேண்டியவற்றைத் தேடும்.
  5. தேடல் சிப்பை அகற்ற: சிப்பின் வலதுபுறத்தில் உள்ள ஐகானைக் கிளிக் செய்யவும்.
  6. அனைத்து தேடல் சிப்களையும் அகற்ற: சிப்களின் கடைசியில் உள்ள வடிப்பான்களை அழி என்பதைக் கிளிக் செய்யவும்.

தேடல் விருப்பங்களைப் பயன்படுத்தி ஃபில்டர் செய்ய:

  1. கம்ப்யூட்டரில் drive.google.com தளத்திற்குச் செல்லவும்.
  2. மேலே உள்ள தேடல் பெட்டியில் சொல்லையோ சொற்றொடரையோ டைப் செய்யவும்.
  3. Enter அழுத்தவும்.
  4. உங்கள் தேடலைத் துல்லியமாக்க, தேடல் விருப்பங்களுக்கான ஐகானை கிளிக் செய்யவும்.
  5. அதன்பிறகு தேவையான பிரிவுகளை நிரப்பவும்:
    • வகை: ஆவணங்கள், படங்கள், PDFகள் போன்ற ஃபைல் வகைகள்.
    • உரிமையாளர்: ஃபைல் உரிமையாளர் அல்லது உருவாக்கியவரின் அடிப்படையில் தேடும்.
    • இச்சொற்களைக் கொண்டவை: ஆவணங்களில் உள்ள சொற்கள் மற்றும் சொற்றொடர்களைப் பயன்படுத்தித் தேடும்.
    • ஃபைலின் பெயர்: ஃபைலின் பெயரையோ தலைப்பையோ மட்டும் பயன்படுத்தித் தேடும்.
    • இருப்பிடம்: குறிப்பிட்ட ஃபோல்டரில் தேடும். உதாரணம்: "நீக்கியவை", "நட்சத்திரமிட்டவை" அல்லது “என்க்ரிப்ஷன் செய்யப்பட்டவை”.
    • மாற்றிய தேதி: கடைசியாக ஃபைலில் மாற்றம் செய்த தேதியைப் பயன்படுத்தித் தேடும்.
    • லேபிள்கள்: உங்கள் ஃபைலில் பயன்படுத்திய லேபிள்களின் அடிப்படையில் தேடும்.
    • அனுமதிகள்: ஃபைலின் ஒப்புதல் நிலையின் அடிப்படையில் தேடும். அதாவது, உங்களின் ஒப்புதலுக்காக அல்லது மற்றொருவரின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கும் ஃபைல்.
    • இவர்களுடன் பகிர்ந்தது: ஃபைலை நீங்கள் பகிர்ந்திருப்பவர்களின் பெயர்களின் மூலம் தேடும்.
    • ஃபாலோ-அப்கள்: ஃபாலோ-அப் நிலையின்படி அடிப்படையில் தேடும், அதாவது உங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகள் உள்ள ஃபைல்கள் அல்லது பரிந்துரைகளைக் கொண்ட உங்களுடைய ஃபைல்கள்.
  6. கீழே உள்ள தேடு என்பதைக் கிளிக் செய்யவும்.
உதவிக்குறிப்பு: “தேடு” என்பதைக் கிளிக் செய்தபிறகு பொருத்தத்தின்படி வரிசைப்படுத்த, வரிசைப்படுத்துவதற்கான கூடுதல் விருப்பங்களுக்கான ஐகானை மேலும் கிளிக் செய்யவும்.

மேம்பட்ட தேடலைப் பயன்படுத்துதல்

உதவிக்குறிப்பு: சில சாதனங்களில் சில எடுத்துக்காட்டுகளை மட்டுமே பயன்படுத்த முடியும்.

மேம்பட்ட தேடல் வகை

விளக்கம்

உதாரணம்

மேற்கோள்கள்

துல்லியமான சொல்லையோ சொற்றொடரையோ கொண்டுள்ள ஆவணங்களைக் கண்டறியலாம்.

உதாரணம் :

"இந்தச் சொற்றொடருடன் துல்லியமாகப் பொருந்துபவை"

கழித்தல் குறி

குறிப்பிட்ட சொல் இல்லாத ஆவணங்களைக் கண்டறியலாம். "கதகளி" என்ற சொல் இருக்க வேண்டும் ஆனால் "நடனமாடுதல்" என்ற சொல் இருக்கக்கூடாது.

உதாரணம்:

கதகளி -நடனமாடுதல்

owner

ஒரு குறிப்பிட்ட நபருக்குச் சொந்தமான ஆவணங்களைக் கண்டறியலாம்.

உதாரணம்:

owner:bob@gmail.com

pendingowner

உரிமையாளர் பொறுப்பை இன்னும் நீங்கள் ஏற்காத ஃபைல்களைக் கண்டறியலாம்.

முக்கியம்: உரிமையாளர் பொறுப்பை இன்னும் நீங்கள் ஏற்காத ஃபைல்களை மட்டுமே தேடலாம்.

உதாரணம்:

pendingowner:me

creator

பகிர்ந்த இயக்ககங்களில் ஒரு குறிப்பிட்ட நபர் உருவாக்கிய ஆவணங்களைக் கண்டறியலாம்.

உதாரணம்:

creator:jane@yourdomain.com

to

ஒரு குறிப்பிட்ட நபர் அல்லது குழுவுடன் நீங்கள் பகிர்ந்த ஆவணங்களையோ உங்களுடன் பகிரப்பட்ட ஆவணங்களையோ கண்டறியலாம்.

உதாரணங்கள்:

  • to:me
  • to:bob@gmail.com
  • to:bobsgroup@googlegroups.com

from

குறிப்பிட்ட நபர் உங்களுடன் பகிர்ந்த அல்லது நீங்கள் பகிர்ந்த ஆவணங்களைக் கண்டறியலாம்

உதாரணங்கள்:

  • from:me
  • from:bob@gmail.com

app

ஆப்ஸ் பெயரின் மூலம் தேடலாம். உங்கள் Google Drive கணக்குடன் இணைக்கப்பட்டிருக்கும் அனைத்து ஆப்ஸும் இதில் அடங்கும்

உதாரணங்கள்:

  • app:"Google Apps Script"
  • app:"Google Jamboard"
  • app:"Google Meet"

sharedwith

குறிப்பிட்ட Workspace கணக்கு அல்லது குழுவிற்கு அணுகல் உள்ள ஆவணங்களைக் கண்டறியலாம். கணக்கிற்குச் சொந்தமான ஃபைல்கள் இதில் அடங்காது. 

உதாரணங்கள்:

  • sharedwith:me
  • sharedwith:bob@gmail.com

  • sharedwith:external

    • உங்கள் Google Workspace நிறுவனத்தைச் சாராத ஒன்று அல்லது மேற்பட்ட உறுப்பினர்கள் அடங்கிய குழுக்களும் நிறுவனத்தைச் சாராதவையில் அடங்கும்

  • sharedwith:public

is:starred

நீங்கள் நட்சத்திரமிட்டவற்றைக் கண்டறியலாம்.

is:starred

is:trashed

நீக்கியவைக்கு நகர்த்தியவற்றைக் கண்டறியலாம்.

is:trashed

type

ஆவண வகையின்படி தேடலாம்: 

  • ஃபோல்டர்

  • ஆவணம்

  • விரிதாள்

  • விளக்கக்காட்சி

  • PDF

  • படம்

  • வீடியோ

  • வரைபடம்

  • படிவம்

  • தளம்

  • ஸ்கிரிப்ட்

  • அட்டவணை

  • மின்னஞ்சல் லேயவுட்

  • Jam ஃபைல்

உதாரணங்கள்:

  • type:document
  • type:forms
  • type:spreadsheet
  • type:email-layout

before & after

குறிப்பிட்ட தேதிக்கு முன்போ பின்போ திருத்தப்பட்ட ஆவணங்களைக் கண்டறியலாம். YYYY-MM-DD என்ற வடிவத்தில் தேதியை வழங்கவும்.

உதாரணங்கள்:

  • before:2021-05-02
  • after:2021-05-01

createdbefore & createdafter

குறிப்பிட்ட தேதிக்கு முன்போ பின்போ உருவாக்கப்பட்ட ஆவணங்களைக் கண்டறியலாம். YYYY-MM-DD என்ற வடிவத்தில் தேதியை வழங்கவும்.

உதாரணங்கள்:

  • createdbefore:2022-05-02

  • createdafter:2022-05-01

title

தலைப்பின்படி ஆவணங்களைத் தேடலாம்.

உதாரணம்:

title:Conference 2021

followup

உங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளோ பரிந்துரைகளோ உள்ள ஃபைல்களைக் கண்டறியலாம்.

உதாரணங்கள்:

  • followup:any
  • followup:suggestions
  • followup:actionitems

unorganized

வேறு ஒருவரின் ஃபோல்டரில் நீங்கள் உருவாக்கிய ஃபைலை (அவர் அந்த ஃபோல்டரை நீக்கினால்) கண்டறியலாம். உங்கள் ஃபைல் நீக்கப்படாது. அது தானாக 'எனது Driveவிற்கு' நகர்த்தப்படும்.

முக்கியம்: உங்களுக்குச் சொந்தமான ஃபைல்களை நீங்கள் மட்டுமே நீக்க முடியும்.

உதாரணம்:

is:unorganized owner:me

அளவின்படி ஃபைல்களைக் கண்டறிதல்

அளவின்படி ஃபைல்களைக் கண்டறிய:

  1. கம்ப்யூட்டரில் drive.google.com தளத்திற்குச் செல்லவும்.
  2. இடதுபுறத்தில் உள்ள சேமிப்பகம் என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. ஃபைல் அளவின்படி வரிசைப்படுத்த: வலதுபுறத்தில் உள்ள பயன்படுத்திய சேமிப்பகம் என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. தலைகீழாக வரிசைப்படுத்த: வலதுபுறத்தில் உள்ள பயன்படுத்திய சேமிப்பகம் என்பதைக் கிளிக் செய்யவும்.

தொடர்புடைய தகவல்கள்

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
6502040385869731720
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
99950
false
false