Google Driveவில் ஃபைல்களைக் கண்டறிதல்

பரிந்துரைக்கப்படும் ஃபைல்கள், தேடல் சிப்கள், வழக்கமான தேடல் போன்றவற்றைப் பயன்படுத்தி நீங்கள் ஃபைல்களைக் கண்டறியலாம். தேடல் முடிவுகளை வரிசைப்படுத்தலாம் வடிகட்டலாம்.

பரிந்துரைக்கப்படும் ஃபைல்களைத் திறத்தல்

  1. iPhone அல்லது iPadல் Google Drive ஆப்ஸைத் திறக்கவும்.
  2. எனது Drive, பகிர்ந்த இயக்ககங்கள் ஆகியவற்றில் உங்களின் சமீபத்திய மற்றும் தொடர்புடைய ஃபைல்களை ஆப்ஸ் காட்டும்.

தேடல் சிப்களைப் பயன்படுத்துதல்

Driveவில் உள்ள ஃபைல்களின் பட்டியலைத் துல்லியமாகத் தேட, "தேடல் பட்டியில்" ஒரு வார்த்தையை உள்ளிடுவதற்கு முன்பாகவே தேடல் சிப்களை நீங்கள் பயன்படுத்தலாம். தேடல் சிப்களைப் பயன்படுத்த:

  1. iPhone அல்லது iPadல் Google Drive ஆப்ஸைத் திறக்கவும்.
  2. மேலே உள்ள Driveவில் தேடுக என்பதைத் தட்டவும்.
  3. தேடல் சிப்பைத் தேர்ந்தெடுக்க தட்டவும், நீங்கள் இவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம்:
    • வகை
    • ஃபோல்டர்கள்
    • மாற்றிய தேதி: இன்று, நேற்று, கடந்த 7 நாட்கள்.
  4. சிப் மீது தட்டிய பிறகு தேடல் பட்டியில் டைப் செய்தும் உங்கள் தேடல் முடிவுகளைத் துல்லியமாக்கலாம்.
  5. தேடு என்பதைத் தட்டவும்.

இந்தச் சிப்கள் தேடல் பட்டிக்குக் கீழே காட்டப்படும். இவை ஃபைல்கள், ஃபோல்டர்கள், துணை ஃபோல்டர்கள் ஆகிய அனைத்திலும் தேடும். தேடல் சிப்பை அகற்ற, சிப்பிற்கு வலதுபுறத்தில் உள்ள ஐகானைத் தட்டவும்.

தேடலை நீங்கள் டைப் செய்யும்போதே டைப் செய்வதைக் குறைத்து தொடர்புடைய சிப்களைத் தேர்ந்தெடுப்பதற்கான பரிந்துரைகள் உங்களுக்குக் காட்டப்படும்.

ஃபைல்களைக் கண்டறிதல்

  1. iPhone அல்லது iPadல் Google Drive ஆப்ஸைத் திறக்கவும்.
  2. மேலே உள்ள தேடல் பெட்டியில் சொல்லையோ சொற்றொடரையோ டைப் செய்யவும்.

தேடல் உதவிக்குறிப்புகள்

  • நீங்கள் பார்ப்பதற்கு அனுமதியுள்ள அனைத்து ஃபைல்களின் தலைப்புகளையும் உள்ளடக்கத்தையும் Google Drive தேடும்.
  • எல்லா முடிவுகளையும் பார்க்க, 'தேடு' தேடல்என்பதைத் தட்டவும்.
  • உங்கள் Drive தேடல்களைச் சேமிக்க, இணையம் மற்றும் ஆப்ஸ் செயல்பாடு என்பதை இயக்கவும்.
  • ஃபோல்டரில் உள்ளவற்றைத் தேட, ஃபோல்டருக்குச் சென்று உங்கள் தேடலை டைப் செய்து, பாப்-அப் ஆகும் பரிந்துரையைக் கிளிக் செய்யவும்.
  • ஃபோல்டர் இருக்குமிடத்தில் இருந்து நீங்கள் தேடினால், அந்த ஃபில்டரை மேற்பகுதியில் தானாகவே அது சேர்க்கும்.
  • நீங்கள் டைப் செய்யும்போது உங்களுக்கு ஃபில்டர் பரிந்துரைகள் காட்டப்படும்.
Drive தேடல் வகைகள்

Driveவில் இவற்றின்படி தேடலாம்:

  • ஃபைலின் தலைப்பு
  • ஃபைல் உள்ளடக்கம்
  • வகை
  • இவை உட்பட பிற தரவுத்தகவல்:
    • விளக்கத்திற்கான புலம்
    • பகிர்ந்த லேபிள்கள்
    • ஃபைல் இருக்குமிடம்
    • உரிமையாளர்
    • உருவாக்கியவர்
    • மாற்றிய தேதி
    • அனுமதிகள்
    • ஃபாலோ-அப்கள்
  • படங்கள், PDF ஃபைல்கள் அல்லது உங்கள் Driveவில் சேமிக்கப்பட்டுள்ள பிற ஃபைல்களில் இடம்பெற்றுள்ள வார்த்தைகள்

Docs, Sheets, Slides ஆகியவற்றில் உங்கள் ஃபைல்களைத் தேடுதல்

  1. iPhone அல்லது iPadல் Google Docs, Sheets அல்லது Slidesஸைத் திறக்கவும்.
  2. மேலே உள்ள ‘தேடு’ தேடல் என்பதைத் தட்டவும்.
  3. தேடல் பெட்டியில் சொல்லையோ சொற்றொடரையோ டைப் செய்யவும்.
  4. உங்கள் கீபோர்டில் முடிந்தது என்பதைத் தட்டவும்.

தொடர்புடைய தகவல்கள்

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
2666387260328357474
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
99950
false
false