Google Driveவில் ஃபைல்களைக் கண்டறிதல்

பரிந்துரைக்கப்படும் ஃபைல்கள், தேடல் சிப்கள், வழக்கமான தேடல் போன்றவற்றைப் பயன்படுத்தி நீங்கள் ஃபைல்களைக் கண்டறியலாம். தேடல் முடிவுகளை வரிசைப்படுத்தலாம் வடிகட்டலாம்.

பரிந்துரைக்கப்படும் ஃபைல்களைத் திறத்தல்

  1. Android சாதனத்தில் Google Drive ஆப்ஸைத் திறக்கவும்.
  2. பரிந்துரைக்கப்படும் காட்சியில் எனது Drive, பகிர்ந்த இயக்ககங்கள் ஆகியவற்றில் உள்ள உங்களின் சமீபத்திய மற்றும் தொடர்புடைய ஃபைல்கள் காட்டப்படும்.

தேடல் சிப்களைப் பயன்படுத்துதல்

Driveவில் ஃபைல்களின் பட்டியலைச் சுருக்குவதற்கு நீங்கள் தேடல் சிப்களைப் பயன்படுத்தலாம்:

  1. Android சாதனத்தில் Google Drive ஆப்ஸைத் திறக்கவும்.
  2. மேலே உள்ள Driveவில் தேடுக என்பதைத் தட்டவும்.
  3. தேடல் சிப்பைத் தேர்ந்தெடுக்க தட்டவும், நீங்கள் இவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம்:
    • வகை
    • ஃபோல்டர்கள்
    • மாற்றிய தேதி: இன்று, நேற்று, கடந்த 7 நாட்கள்
  4. சிப் மீது தட்டிய பிறகு தேடல் பட்டியில் டைப் செய்தும் உங்கள் தேடல் முடிவுகளைத் துல்லியமாக்கலாம்.
  5. தேடு என்பதைத் தட்டவும்.

இந்தச் சிப்கள் தேடல் பட்டிக்குக் கீழே காட்டப்படும். இவை ஃபைல்கள், ஃபோல்டர்கள், துணை ஃபோல்டர்கள் ஆகிய அனைத்திலும் தேடும். தேடல் சிப்பை அகற்ற, சிப்பிற்கு வலதுபுறத்தில் உள்ள ஐகானைத் தட்டவும்.

தேடலை நீங்கள் டைப் செய்யும்போதே டைப் செய்வதைக் குறைத்து தொடர்புடைய சிப்களைத் தேர்ந்தெடுப்பதற்கான பரிந்துரைகள் உங்களுக்குக் காட்டப்படும்.

ஃபைல்களைக் கண்டறிதல்

  1. Android மொபைல் அல்லது டேப்லெட்டில் Google Drive ஆப்ஸைத் திறக்கவும்.
  2. மேலே உள்ள Driveவில் தேடுக என்பதைத் தட்டவும்.
  3. தேடல் பெட்டியில் சொல்லையோ சொற்றொடரையோ டைப் செய்யவும்.
  4. கீபோர்டில் 'தேடு' ஐகானை தேடல் தட்டவும்.

தேடல் உதவிக்குறிப்புகள்

  • நீங்கள் அணுகுவதற்கு அனுமதியுள்ள ஃபைல்கள் அனைத்தின் தலைப்புகளையும் உள்ளடக்கத்தையும் Google Drive தேடும்.
  • அனைத்து முடிவுகளையும் பார்க்க, கீபோர்டில் உள்ள தேடுவதற்கான ஐகானை தேடல் தட்டவும்.
  • உங்கள் Drive தேடல்களைச் சேமிக்க, இணையம் மற்றும் ஆப்ஸ் செயல்பாடு என்பதை இயக்கவும்.
  • ஃபோல்டர் இருக்குமிடத்தில் இருந்து நீங்கள் தேடினால், அந்த ஃபில்டரை மேற்பகுதியில் தானாகவே அது சேர்க்கும்.
  • நீங்கள் டைப் செய்யும்போது உங்களுக்கு ஃபில்டர் பரிந்துரைகள் காட்டப்படும்.
Drive தேடல் வகைகள்

Driveவில் இவற்றின்படி தேடலாம்:

  • ஃபைலின் தலைப்பு
  • ஃபைல் உள்ளடக்கம்
  • வகை
  • இவை உட்பட பிற தரவுத்தகவல்:
    • விளக்கத்திற்கான புலம்
    • பகிர்ந்த லேபிள்கள்
    • ஃபைல் இருக்குமிடம்
    • உரிமையாளர்
    • உருவாக்கியவர்
    • மாற்றிய தேதி
    • அனுமதிகள்
    • ஃபாலோ-அப்கள்
  • படங்கள், PDF ஃபைல்கள் அல்லது உங்கள் Driveவில் சேமிக்கப்பட்டுள்ள பிற ஃபைல்களில் இடம்பெற்றுள்ள வார்த்தைகள்

கூடுதல் தேடல் விருப்பங்கள்

உங்கள் ஊட்டத்தின் மூலம் Driveவில் தேடுதல்

உங்கள் Android மொபைலிலோ டேப்லெட்டிலோ Drive ஆப்ஸ் இருந்தால் உங்கள் ஊட்டத்தில் இருந்து Driveவில் ஃபைல்களைத் தேடலாம்.

  1. உங்கள் ஊட்டத்தைத் திறக்கவும்.
  2. "Driveவில் தேடுக" என்பதைத் தொடர்ந்து Driveவில் நீங்கள் தேட விரும்பும் சொற்றொடரை டைப் செய்யவும் அல்லது கூறவும்.
    • உங்கள் தேடலை உள்ளிட மேலேயுள்ள தேடல் பெட்டியைத் தட்டவும்.
    • உங்கள் தேடலைக் கூற தேடல் பெட்டியில் உள்ள மைக்ரோஃபோனைத் தட்டவும்.
  3. முடிந்தது முடிந்தது என்பதைத் தட்டவும்.
  4. Drive ஆப்ஸ் திறக்கப்படுவதுடன் நீங்கள் கோரிய சொற்றொடரை அது தேடும்.

தேடலுக்குப் பிறகு "எனது Drive" என்பதற்குச் செல்ல, பின்செல்வதற்கான ஐகானை பின்செல் தட்டவும்.

தொடர்புடைய தகவல்கள்

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
6902079834594493395
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
99950
false
false