Google Driveவில் ஃபைல்களை நீக்குதல் மற்றும் மீட்டெடுத்தல்

உங்கள் Google Drive கோப்புகளை நீக்க, அவற்றை ’நீக்கியவை’க்கு நகர்த்தவும். ’நீக்கியவை’யில் உள்ள கோப்புகள் 30 நாட்களுக்குப் பிறகு தானாக நீக்கப்படும். ’நீக்கியவை’யிலிருந்து 30 நாட்களுக்குள் அந்தக் கோப்புகளை மீட்டெடுக்கலாம். ’நீக்கியவை’யைக் காலியாக்க, அவற்றை நிரந்தரமாகவும் நீக்கலாம். ஒரே நேரத்தில் பல கோப்புகள்/கோப்புறைகளை நீக்கினாலோ மீட்டெடுத்தாலோ நிரந்தரமாக நீக்கினாலோ மாற்றங்களைப் பார்ப்பதற்குச் சிறிது நேரம் ஆகலாம். 

‘நீக்கியவை’ ஃபோல்டருக்கு ஃபைலை நகர்த்துதல்

Driveவில் இருந்து ஃபைலை அகற்ற, அதை 'நீக்கியவை' ஃபோல்டருக்கு நகர்த்தவும். ஃபைல் 30 நாட்களுக்கு ‘நீக்கியவை’ ஃபோல்டரில் இருக்கும், பிறகு தானாக நீக்கப்படும். ஃபைலை 'நீக்கியவை' ஃபோல்டருக்கு நகர்த்தும்போது:

  • நீங்கள் ஃபைலின் உரிமையாளராக இருந்தால் அதை யாருடன் பகிர்ந்துள்ளீர்களோ அவர்களால் நகலெடுக்க முடியும். கோப்பை நிரந்தரமாக நீக்குவது எவ்வாறு என்பதை அறிக.
  • நீங்கள் ஃபைலின் உரிமையாளர் இல்லையெனில் உங்கள் Driveவில் இருந்து ஃபைலை அகற்றினால் அது உங்களிடமிருந்து மட்டுமே அகற்றப்படும்.

 

இணையத்தில்
  1. கம்ப்யூட்டரில் drive.google.com தளத்திற்குச் செல்லவும்.
  2. ஃபைலைக் கிளிக் செய்யவும்.
  3. அகற்று அகற்றுவதற்கான ஐகான் என்பதைக் கிளிக் செய்யவும்.
Drive for desktop
Google Driveவிற்கும் உங்கள் கம்ப்யூட்டருக்கும் இடையே ஃபைல்களை மிரர் அல்லது ஸ்ட்ரீம் செய்தால், ஃபைல்களை ‘நீக்கியவை’ ஃபோல்டருக்கு நகர்த்தும்போது அவை எல்லா இடங்களிலும் உள்ள ‘நீக்கியவை’ ஃபோல்டரிலும் காட்டப்படும்.
முக்கியம்: Google Photosஸுக்குக் காப்புப் பிரதி எடுத்தால் படங்களும் வீடியோக்களும் மட்டுமே பதிவேற்றப்படும். நீங்கள் செய்யும் மாற்றங்கள் (படங்களை நீக்குவது உட்பட) உங்கள் கம்ப்யூட்டருக்கும் Google Photosஸுக்கும் இடையே ஒத்திசைக்கப்படாது.

‘நீக்கியவை’ ஃபோல்டரைக் காலியாக்குதல்

தனிப்பட்ட ஃபைலை மட்டும் நிரந்தரமாக நீக்கலாம் அல்லது நீக்கியவை ஃபோல்டரை முழுவதுமாகக் காலியாக்கலாம்.

  • கோப்பை நிரந்தரமாக நீக்கிய பிறகு அதை யாருடன் பகிர்ந்தீர்களோ அவர் அதற்கான அணுகலை இழப்பார்.
  • மற்றவர்களும் ஃபைலைப் பார்க்க வேண்டுமென விரும்பினால் அதற்கான உரிமையை பிறருக்குப் பகிர முடியும்.

நீக்கியவையை ஒட்டுமொத்தமாகக் காலியாக்குதல்

  1. கம்ப்யூட்டரில் drive.google.com தளத்திற்குச் செல்லவும்.
  2. இடதுபுறத்தில் உள்ள நீக்கியவை என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. நீங்கள் வைத்திருக்க விரும்பும் கோப்புகள் எதுவும் அதில் இல்லை என்பதை உறுதிசெய்து கொள்ளவும்.
  4. மேல் வலதுபுறத்தில் நீக்கியவையைக் காலியாக்கு என்பதைக் கிளிக் செய்யவும். 

உதவிக்குறிப்பு: "நீக்கியவை ஃபோல்டரைக் காலியாக்கு" என்பது காட்டப்படவில்லை எனில் மேலே ‘நீக்கியவை’ என்பதற்கு அடுத்துள்ள கீழ்நோக்கிய அம்புக்குறி கீழே அதன் பிறகு நீக்கியவை ஃபோல்டரைக் காலியாக்கு என்பதைக் கிளிக் செய்யவும். 

தனிப்பட்ட ஃபைலை நிரந்தரமாக நீக்குதல்

  1. கம்ப்யூட்டரில் drive.google.com தளத்திற்குச் செல்லவும்.
  2. இடதுபுறத்தில் உள்ள நீக்கியவை என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. ஃபைலைக் கிளிக் செய்யவும்.
  4. மேலே உள்ள ‘நிரந்தரமாக நீக்கு’ அகற்றுவதற்கான ஐகான் என்பதைக் கிளிக் செய்யவும்.
 

‘நீக்கியவை’ ஃபோல்டரில் இருந்து ஃபைலை மீட்டெடுத்தல்

நீங்கள் தக்கவைத்துக்கொள்ள விரும்பும் ஃபைல் ஏதேனும் ‘நீக்கியவையில்’ இருந்தால் அதை மீண்டும் "எனது Drive" என்பதில் சேர்க்கலாம். நீங்கள் ஃபைலின் உரிமையாளராக இல்லாமலிருந்து அதைப் பயன்படுத்த விரும்பினால்:

  • கோப்பை நகலெடுக்கவும்.
  • அதை மீட்டெடுக்க உரிமையாளரைத் தொடர்புகொள்ளவும்.
இணையத்தில்
  1. கம்ப்யூட்டரில் drive.google.com தளத்திற்குச் செல்லவும்.
  2. இடதுபுறத்தில் உள்ள நீக்கியவை என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. மீட்டெடுக்க விரும்பும் ஃபைலைக் கிளிக் செய்யவும்.
  4. மேலே உள்ள மீட்டெடு Restore from trash என்பதைக் கிளிக் செய்யவும்.
    • உதவிக்குறிப்பு: நீக்கிய தேதியின்படி ஃபைல்களை வரிசைப்படுத்துவதன் மூலம் முன்பு/சமீபத்தில் நீக்கிய ஃபைல்களைக் கண்டறியலாம். 
  5. மீட்டெடுக்கப்பட்ட ஃபைல்களை அவற்றின் அசல் இருப்பிடத்தில் பார்க்கலாம். அசல் இருப்பிடம் இல்லையெனில் "எனது Drive" என்பதில் பார்க்கவும்.

Google Driveவில் நீக்கியவையில் இருந்து ஃபைல்/ஃபோல்டரை மீட்டெடுப்பதற்கான வழிமுறைகள்.

Drive for desktop

நீங்கள் நீக்கிய ஃபைல் உங்கள் Driveவில் உள்ள ‘நீக்கியவை’ ஃபோல்டரில் இன்னும் காட்டப்பட்டால் பாதுகாக்கப்பட்ட முந்தைய மீள்திருத்தங்கள் போன்ற ஏதேனும் தரவுத்தகவலை உறுதிசெய்ய, அவற்றை Driveவில் இருந்து மீட்டெடுக்கலாம். உங்கள் Driveவில் உள்ள ‘நீக்கியவை’ ஃபோல்டரில் ஃபைல் இல்லாமல் கம்ப்யூட்டரின் Recycle Bin (Windows) அல்லது Trash (MacOS) இல் இருந்தால் பின்வரும் வழிமுறைகள் மூலம் அவற்றை மீட்டெடுக்கலாம்.  

நீங்கள் ஃபைலின் உரிமையாளர் இல்லையெனில் அதை மீட்டெடுக்க உரிமையாளரைத் தொடர்புகொள்ளவும்.

உதவிக்குறிப்பு: ஃபைலில் முக்கியமான தகவல் இருந்தால் அதை நகலெடுத்துக்கொள்ள முடியும். ஃபைலைத் திறந்து ஃபைல் அதன் பிறகு நகலெடு என்பதைக் கிளிக் செய்யவும்.

நீக்கிய கோப்பை மீட்டெடுக்க முடியவில்லை என்றால்

கோப்பை நீக்கியிருந்து அதை மீண்டும் பெற வேண்டியிருந்தால் Drive வல்லுநரைத் தொடர்பு கொள்ளவும். கோப்பைக் கண்டறிவதற்கு அழைப்பின் மூலமாகவோ அரட்டையின் மூலமாகவோ எங்களைத் தொடர்பு கொள்ளவும்.

நீங்கள் நீக்கிய ஃபைல்களை மீட்டெடுத்தல்

Google Drive அல்லது Google Drive டெஸ்க்டாப் ஆப்ஸைப் பயன்படுத்தி சமீபத்தில் ஏதேனும் ஃபைலை நீங்கள் நீக்கியிருந்தால் அதை நீங்களே மீட்டெடுக்க முடியலாம்.

நீக்கியவையில் இருந்து மீட்டெடுத்தல்

  1. கம்ப்யூட்டரில் drive.google.com/drive/trash தளத்திற்குச் செல்லவும்.
    • உதவிக்குறிப்பு: நீக்கிய தேதியின்படி ஃபைல்களை வரிசைப்படுத்துவதன் மூலம் முன்பு/சமீபத்தில் நீக்கிய ஃபைல்களைக் கண்டறியலாம்.
  2. மீட்டெடுக்க விரும்பும் ஃபைலை வலது கிளிக் செய்யவும்.
  3. மீட்டெடு என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. மீட்டெடுக்கப்பட்ட ஃபைல்களை அவற்றின் அசல் இருப்பிடத்தில் பார்க்கலாம்.
    • அசல் இருப்பிடம் இல்லையென்றால் "எனது Drive" என்பதில் பார்க்கவும்.
நீங்கள் நீக்கவில்லை என்று நினைக்கும் ஃபைலைக் கண்டறிதல்

Google Driveவில் ஃபைலைக் கண்டறிவது அல்லது மீட்டெடுப்பதற்கான வழிமுறைகள்

இந்தப் படிகளைப் பின்பற்றுங்கள்

செயல்பாட்டுப் பேனலில் பார்க்கவும்

  1. கம்ப்யூட்டரில் drive.google.com தளத்திற்குச் செல்லவும்.
  2. மேல் வலதுபுறத்தில் உள்ள தகவல் தகவல் என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. "செயல்பாடு" என்பதைக் கிளிக் செய்து, செயல்பாட்டுப் பேனலுக்குச் செல்லவும்.
  4. கீழே சென்று உங்கள் ஃபைலைத் தேடவும்.

மேம்பட்ட தேடலைப் பயன்படுத்துதல்

  1. கம்ப்யூட்டரில் drive.google.com தளத்திற்குச் செல்லவும்.
  2. தேடல் பட்டியின் வலதுபுற இறுதியில் உள்ள ஐகானைக் கிளிக் செய்யவும்.
  3. உங்கள் ஃபைலைக் கண்டறிய, மேம்பட்ட தேடல் விருப்பங்களைப் பயன்படுத்தவும். உதாரணமாக, விரிதாள்களைக் கண்டறிய, 'வகை' என்பதற்கு அடுத்துள்ள கீழ்நோக்கிய அம்புக்குறியைக் கிளிக் செய்து 'விரிதாள்கள்' என்பதைக் கிளிக் செய்யவும்.

தேடும் ஆப்பரேட்டர்களுடன் தேடல் புலத்தை Google Driveவில் பயன்படுத்துதல்.

ஃபைல்கள் கிடைக்காமல் போவதற்கான காரணம்

நீங்கள் ஃபைலை உருவாக்கியிருந்தால்

Driveவில் நீங்கள் உருவாக்கிய ஃபைலைக் கண்டறிய முடியவில்லை எனில் ஃபைல் அதன் போல்டரை இழந்திருக்கக்கூடும். இருப்பினும் கோப்பு Driveவிலேயே இருக்கும். ஆனால் அதைக் கண்டறிவது கடினமாக இருக்கும்.

ஃபைல்கள் அவற்றின் ஃபோல்டரை எப்படி இழக்கின்றன?

  • வேறொருவரின் ஃபோல்டரில் ஃபைலை உருவாக்குகிறீர்கள் அவர், அவர் அந்த ஃபோல்டரை நீக்கிவிடுகிறார். ஃபைல் நீக்கப்படவில்லை. அது தானாக 'எனது Driveவிற்கு' நகர்த்தப்படும்.
    கவனத்திற்கு: உங்கள் ஃபைல்களை நீங்கள் மட்டுமே நீக்க முடியும்.
  • வேறொருவருடன் ஃபோல்டரைப் பகிர்கிறீர்கள், அவர் அதில் இருந்து உங்கள் ஃபைலை அகற்றுகிறார். அந்த ஃபைல் நீக்கப்படாது, அது தானாக 'எனது Driveவிற்கு' நகர்த்தப்படும்.

ஒழுங்கமைக்கப்படாத கோப்புகளைக் கண்டறிதல்

  1. கம்ப்யூட்டரில் drive.google.com தளத்திற்குச் செல்லவும்.
  2. தேடல் பட்டியில், is:unorganized owner:me என்பதை உள்ளிடவும்
  3. ஃபைலைக் கண்டறிந்ததும் ‘எனது Driveவில்’ உள்ள ஒரு ஃபோல்டருக்கு அதை நகர்த்தவும். இதனால் அடுத்த முறை அதை எளிதாகக் கண்டறியலாம்.

இப்போது தேடு

வேறொருவர் ஃபைலை உருவாக்கியிருந்தால்

வேறொருவர் ஃபைலை உருவாக்கியிருந்தால் அதை அவர்கள் நீக்கலாம் மறுபெயரிடலாம் மீட்டெடுக்கலாம். ஃபைலை உருவாக்கியவரைத் தொடர்புகொண்டு அதை மீட்டெடுக்கவோ உங்களுடன் மீண்டும் பகிரவோ கூறலாம்.

அது வேறொருவர் உருவாக்கிய ஃபோல்டரில் இருந்தால்

வேறொருவர் அந்த ஃபோல்டரை நீக்கிவிட்டால் உங்கள் Driveவில் அந்த ஃபோல்டரைப் பார்க்க முடியாது.

நீங்கள் உருவாக்கிய ஃபைல்களை நீக்கப்பட்ட ஃபோல்டர்களில் கண்டறிதல்

நீக்கப்பட்ட கோப்புறைகளில் உள்ள அனைத்துக் கோப்புகளையும் கண்டறிதல்

எதிர்காலத்தில் அந்த ஃபைலை எளிதாகக் கண்டறியும் வகையில் "எனது Driveவில்" உள்ள ஃபோல்டருக்கு அதை நகர்த்தவும்.

கோப்புகளைக் கண்டறியும் முறை பற்றிய கூடுதல் தகவல்கள்

மேம்பட்ட தேடலைப் பயன்படுத்துங்கள்

Driveவில் துல்லியமாகத் தேட, கம்ப்யூட்டரில் இந்த விருப்பங்களில் ஒன்றைத் தேடல் சொற்றொடரில் பயன்படுத்தவும்:

இதைத் தேடு எடுத்துக்காட்டு
சரியான சொற்றொடர்

"சரியான சொற்றொடரை மேற்கோள் குறிகளுக்குள் வழங்கவும்"

ஒரு வார்த்தையை விலக்குதல்

ஏரிகள் அல்ல நீர்நிலை:

நீர்நிலை -ஏரிகள்

ஃபைல் உரிமையாளர்

அப்பா உரிமையாளராக உள்ள ஃபைல்கள்:

உரிமையாளர்:dad@gmail.com

பிறர் பகிர்ந்த கோப்புகள்

அம்மா உங்களுடன் பகிர்ந்த ஃபைல்கள்:

from:mom@gmail.com

நீங்கள் பகிர்ந்த ஃபைல்கள்

அம்மாவுடன் நீங்கள் பகிர்ந்த ஃபைல்கள்:

to:mom@gmail.com

நட்சத்திரமிட்டவை

is:starred

நீக்கப்பட்டவை

is:trashed

ஃபைல் வகை

விரிதாள் ஃபைல் வகை:

type:spreadsheet

கால வரையறை

ஜனவரி 18, 2015க்கு முன்னர்/பின்னர்.

before:2015-01-18

after:2015-01-18

தலைப்பு

title:"தலைப்பை இங்கே வழங்க வேண்டும்"

ஆப்ஸ்

Google Driveவில் திறக்கப்பட்ட ஃபைல்கள்:

app:"Drive"

மீட்டெடுக்கக்கூடிய ஃபைல் வகைகள்

தனிப்பட்ட கணக்குகளுக்கு, சமீபத்தில் நீக்கிய ஃபைல்களை அவை நீக்கப்பட்டதில் இருந்து ஒரு குறிப்பிட்ட கால வரையறைக்குள் மீட்டெடுக்கலாம். அதற்கு நீங்கள்:

  • நுகர்வோர் கணக்கு மூலம் Google Drive பயன்படுத்த வேண்டும்.
  • பணி, பள்ளி, பிற குழு போன்றவற்றின் மூலம் பெற்ற கணக்கைப் பயன்படுத்தக்கூடாது

இந்தச் சூழல்களில் ஒன்று பொருந்த வேண்டும்:

  • நீங்கள் ஃபைலை உருவாக்கியுள்ளீர்கள்.
  • Google Driveவிற்கு ஃபைலைப் பதிவேற்றியுள்ளீர்கள்.
  • வேறொருவரிடம் இருந்து ஃபைலுக்கான உரிமையை ஏற்றுள்ளீர்கள்.

உங்கள் Google கணக்கு நீக்கப்பட்டிருந்தால் கோப்புகளை மீட்டெடுக்க முடியாமல் போகக்கூடும்.

தேடல் சிப்களைப் பயன்படுத்துதல்

Driveவில் உள்ள ஃபைல்களைச் சுருக்க நீங்கள் தேடல் சிப்களைப் பயன்படுத்தலாம். நீங்கள் இவற்றின்படி தேடலாம் வடிகட்டலாம்:

  • வகை
  • நபர்கள் 
  • மாற்றப்பட்டது

இந்தச் சிப்கள் தேடல் பட்டிக்குக் கீழே காட்டப்படும். அத்துடன் இந்தக் காட்சியில் உள்ள ஃபைல்கள், ஃபோல்டர்கள், துணை ஃபோல்டர்கள் ஆகிய அனைத்திலும் தேடும் (எனது Drive, சமீபத்தியவை அல்லது நீக்கியவை போன்றவை).

  • தேடல் சிப்பை அகற்ற: சிப்பின் வலதுபுறத்தில் உள்ள ஐகானைக் கிளிக் செய்யவும்.
  • அனைத்து தேடல் சிப்களையும் அகற்ற: சிப்களின் கடைசியில் உள்ள ஐகானைக் கிளிக் செய்யவும்.

உதவிக்குறிப்பு: தேடல் சிப்கள் இயல்பாகவே காட்டப்படும். அவற்றை மறைக்க, வடிப்பான் பட்டனை கிளிக் செய்யவும்.

Gmailலில் இருந்து மின்னஞ்சல்களை மீட்டெடுத்தல்

Gmailலில் இருந்து மின்னஞ்சல்களை மீட்டெடுப்பது எப்படி என அறிக.

எங்களைத் தொடர்புகொள்ள, உங்கள் Google கணக்கில் உள்நுழையவும்.

Drive ஆதரவு அனைத்து மொழிகளிலும் கிடைப்பதில்லை. ஆங்கிலத்தில் பேசுவீர்கள் எனில் மொழியை மாற்றி Driveவிற்கான வல்லுநரைத் தொடர்புகொள்ள முடியும்.

  1. கம்ப்யூட்டரில் Google Drive உதவி மையத்திற்குச் செல்லவும்.
  2. பக்கத்தின் கீழே உங்கள் மொழியின் மீது கிளிக் செய்யவும்.
  3. ஆங்கிலம் என்பதைத் தேர்வுசெய்யவும்.
  4. மேல் இடதுபுறத்தில் உள்ள மெனு அதன் பிறகு எங்களைத் தொடர்புகொள்க என்பதைக் கிளிக் செய்யவும்.
  5. உங்கள் சிக்கலையும், எங்களை எவ்வாறு தொடர்புகொள்ள விரும்புகிறீர்கள் என்பதையும் தேர்வுசெய்யவும்.

கவனத்திற்கு: இதை முடித்தவுடன் உங்களுக்குப் பிடித்தமான மொழிக்கு மீண்டும் மாற்றிக்கொள்ளலாம்.

 

true
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
14330122805255588490
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
99950
false
false