Google Driveவில் உள்ள ஃபைல்களை நீக்குதல்

முக்கியம்: ஒரே நேரத்தில் பல ஃபைல்களையோ ஃபோல்டர்களையோ நீக்கினால் அல்லது நிரந்தரமாக நீக்கினால் அந்த மாற்றங்கள் காட்டப்படுவதற்குச் சிறிது நேரம் ஆகலாம்.

உங்கள் Google Drive ஃபைல்களை நீக்க, அவற்றை ‘நீக்கியவை’ ஃபோல்டருக்கு நகர்த்தவும். ‘நீக்கியவை’ ஃபோல்டரில் உள்ள ஃபைல்கள் 30 நாட்களுக்குப் பிறகு நிரந்தரமாக நீக்கப்படும்.

உங்கள் ஃபைல்களை நிரந்தரமாக நீக்க, நீக்கியவையை காலிசெய் என்பதைக் கிளிக் செய்யவும்.

ஃபைலை நீக்கினால் என்ன நடக்கும் என்று தெரிந்துகொள்ளுங்கள்

நீக்கிய ஃபைலை எப்படி மீட்டெடுப்பது என்று தெரிந்துகொள்ளுங்கள்

‘நீக்கியவை’ ஃபோல்டருக்கு ஃபைலை நகர்த்துதல்

உங்கள் Driveவில் இருந்து ஃபைலை அகற்ற, அதை ‘நீக்கியவை’ ஃபோல்டருக்கு நகர்த்தலாம். ஃபைல் 30 நாட்களுக்கு ‘நீக்கியவை’ ஃபோல்டரில் இருக்கும், அதன்பிறகு தானாக நீக்கப்படும்.

ஃபைலின் உரிமையாளர் நீங்கள் என்றால் ஃபைலை நிரந்தரமாக நீக்கும் வரை அதைப் பிறர் அணுக முடியும். உரிமையாளர் நீங்கள் இல்லை என்றால் நீங்கள் ‘நீக்கியவை’ ஃபோல்டரைக் காலியாக்கினாலும்கூட ஃபைலைப் பிறர் அணுக முடியும்.

  1. Android மொபைல் அல்லது டேப்லெட்டில் Google Drive ஆப்ஸைத் திறக்கவும்.
  2. கீழ் வலது பக்கத்தில் ஃபைல்கள் கோப்புகள் என்பதைத் தட்டவும்.
  3. நீக்க விரும்பும் ஃபைலுக்கு அடுத்துள்ள மூன்று புள்ளி மெனுவை மேலும் தட்டி அதன் பிறகு அகற்று என்பதைத் தட்டவும்.

ஃபைல்களை நிரந்தரமாக நீக்குதல்

ஒரு தனிப்பட்ட ஃபைலை நிரந்தரமாக நீக்குதல்

ஒரு தனிப்பட்ட ஃபைலை மட்டும் நிரந்தரமாக நீக்கலாம் அல்லது ‘நீக்கியவை’ ஃபோல்டரைக் காலியாக்கலாம். நீங்கள் ஃபைலை நீக்கிவிட்டால் அதை யாருடன் பகிர்ந்தீர்களோ அவருக்கும் அதற்கான அணுகல் இருக்காது. பிறர் அந்த ஃபைலைத் தொடர்ந்து அணுக வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அதற்கான உரிமையை வேறொருவருக்கு வழங்கலாம்.

  1. மேல் இடதுபுறத்தில் உள்ள மூன்று கோடு மெனுவை மெனு தட்டவும்.
  2. நீக்கியவை என்பதைத் தட்டவும்.
  3. நீக்க விரும்பும் ஃபைலுக்கு அடுத்துள்ள மூன்று புள்ளி மெனுவை மேலும் தட்டவும்.
  4. நிரந்தரமாக நீக்கு என்பதைத் தட்டவும்.

‘நீக்கியவை’ ஃபோல்டரில் உள்ள ஃபைல்களை நிரந்தரமாக நீக்குதல்

  1. மேல் இடதுபுறத்தில் உள்ள மூன்று கோடு மெனுவை மெனு தட்டவும்.
  2. நீக்கியவை என்பதைத் தட்டவும்.
  3. பின்னர் உங்களுக்குத் தேவைப்படும் ஃபைல்கள் எதுவும் அதில் இல்லாமலிருப்பதை உறுதிசெய்து கொள்ளவும்.
  4. மேல் வலதுபக்கத்தில் மூன்று புள்ளி மெனுவை மேலும் தட்டவும்.
  5. நீக்கியவையை காலிசெய் என்பதைத் தட்டவும்.
 
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
16003138487402317836
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
99950
false
false