Google Driveவில் ஃபைல்களை ஒழுங்கமைத்தல்

Driveவில் உங்கள் ஃபைல்களை ஒழுங்கமைக்க ஃபோல்டர்களை உருவாக்கலாம். இதன் மூலம் ஃபைல்களை எளிதாகக் கண்டறியவும் பிறருடன் பகிரவும் முடியும்.

கவனத்திற்கு: ஒரே நேரத்தில் பல ஃபைல்களையோ ஃபோல்டர்களையோ ஒழுங்கமைத்தால் மாற்றங்கள் காட்டப்படுவதற்குச் சிறிது நேரம் ஆகலாம்.

ஃபைல்களை உருவாக்குதல், நகர்த்துதல் மற்றும் நகலெடுத்தல்

ஃபோல்டரை உருவாக்குதல்

  1. கம்ப்யூட்டரில் drive.google.com தளத்திற்குச் செல்லவும்.
  2. இடதுபுறத்தில் உள்ள புதிது அதன் பிறகு ஃபோல்டர் என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. ஃபோல்டருக்கான பெயரை டைப் செய்யவும்.
  4. உருவாக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.
ஃபைல் அல்லது ஃபோல்டருக்கு ஆவணங்களை நகர்த்துதல்

முக்கியம்: ஃபைலை ஓர் இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு நகர்த்த அதற்கான அனுமதி உங்களிடம் இருக்க வேண்டும். இல்லையெனில் ஃபைல் நகர்த்தப்படாது. அதற்குப்பதிலாக, ஃபைலை நீங்கள் நகர்த்த முயன்ற ஃபோல்டரில் ஒரு ஷார்ட்கட் உருவாக்கப்படும்.

ஃபைல் அல்லது ஃபோல்டருக்கு ஆவணங்களை நகர்த்த பல்வேறு வழிகள் உள்ளன. பின்வருவனவற்றில் ஆவணத்தை அணுகும்போது இதைச் செய்யலாம்:

  • முதன்மைச் சாளரம்
  • இடதுபுறப் பேனல்
  • Google Drive தேடல் முடிவுகள்

உதவிக்குறிப்பு: ஃபைல்கள் அல்லது துணை ஃபோல்டர்கள் அதிகளவில் இருக்கும் ஃபோல்டர்களை நகர்த்தினால், மாற்றங்கள் காட்டப்பட சிறிது நேரம் ஆகலாம்.

நீங்களாக ஃபோல்டருக்கு நகர்த்துதல்

  1. கம்ப்யூட்டரில் drive.google.com தளத்திற்குச் செல்லவும்.
  2. நகர்த்த வேண்டிய ஆவணத்தின் மீது வலது கிளிக் செய்யவும்.
  3. ஒழுங்கமை நகர்த்து  என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. ஃபோல்டரைத் தேர்ந்தெடுக்கவும் அல்லது உருவாக்கவும்.
  5. நகர்த்து என்பதைக் கிளிக் செய்யவும்.

இழுத்து ஃபோல்டரில் இடுதல்

  1. கம்ப்யூட்டரில் drive.google.com தளத்திற்குச் செல்லவும்.
  2. நகர்த்த வேண்டிய ஆவணத்தை இழுக்கவும்.
  3. ஆவணத்தை ஃபோல்டர் மீது நகர்த்தி அதை விட்டுவிடவும்.

உதவிக்குறிப்பு: Google Driveவில் உள்ள எந்த ஃபோல்டருக்கும் ஆவணத்தை நகர்த்த இடதுபுறப் பேனலுக்குச் செல்லவும்.

ஃபோல்டருக்கு நகர்த்த கீபோர்டு ஷார்ட்கட்களைப் பயன்படுத்துதல்

முக்கியம்: இந்தச் செயல்பாடு Chromeமில் மட்டுமே கிடைக்கும்.

  1. கம்ப்யூட்டரில் drive.google.com தளத்திற்குச் செல்லவும்.
  2. ஒரு ஃபைலைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. ஃபைலை வெட்ட Ctrl + x அழுத்தவும்.
  4. ஃபைலை ஒட்ட விரும்பும் இடத்திற்குச் செல்லவும்.
  5. ஒரு விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்:
    • ஃபைலைப் புதிய இடத்தில் ஒட்ட Ctrl + v அழுத்தவும்.
    • ஃபைலின் ஷார்ட்கட்டை உருவாக்க Ctrl + Shift + v அழுத்தவும்.

உதவிக்குறிப்பு: உலாவிச் சாளரங்களுக்கு இடையிலும் பயனர்கள் நகர்த்தலாம்.

ஃபைல்/ஃபோல்டருக்கான ஷார்ட்கட்டை உருவாக்குதல்

ஷார்ட்கட்களின் உதவியுடன் நீங்களும் உங்கள் குழுவும் Google Driveவில் பல இடங்களில் ஃபைல்களையும் ஃபோல்டர்களையும் எளிதாகக் கண்டறிந்து ஒழுங்கமைக்கலாம். ஷார்ட்கட் என்பது மற்றொரு ஃபைலையோ ஃபோல்டரையோ குறிக்கும் ஓர் இணைப்பாகும். 

ஷார்ட்கட்டை உருவாக்குதல்

  1. கம்ப்யூட்டரில் drive.google.com தளத்திற்குச் செல்லவும்.
  2. நீங்கள் ஷார்ட்கட்டை உருவாக்க விரும்பும் ஃபைல் அல்லது ஃபோல்டர் மீது வலது கிளிக் செய்யவும்.
  3.  ஒழுங்கமை  > ஷார்ட்கட்டைச் சேர்  என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. ஷார்ட்கட்டை எங்கே சேர்க்க வேண்டும் என்பதைத் தேர்வுசெய்யவும்.
  5. ஷார்ட்கட்டைச் சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.

உதவிக்குறிப்பு: Drive ஃபோல்டரில் நீங்கள் ஷார்ட்கட்டின் நகலை உருவாக்கலாம். ஆனால் ஒரு ஷார்ட்கட் ஃபைலுக்கு வேறொரு ஷார்ட்கட்டை உருவாக்க முடியாது.

ஷார்ட்கட்டை உருவாக்க கீபோர்டு ஷார்ட்கட்களைப் பயன்படுத்துதல்

முக்கியம்: இந்தச் செயல்பாடு Chromeமில் மட்டுமே கிடைக்கும்.

  1. கம்ப்யூட்டரில் drive.google.com தளத்திற்குச் செல்லவும்.
  2. ஃபைலைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. கிளிப்போர்டில் ஃபைலை நகலெடுக்க Ctrl + c அழுத்தவும்.
  4. ஃபைலை ஒட்ட விரும்பும் இடத்திற்குச் செல்லவும்.
  5. ஷார்ட்கட்டை ஒட்ட Ctrl + Shift + v அழுத்தவும்.

ஷார்ட்கட்டை நீக்குதல்

  1. கம்ப்யூட்டரில் drive.google.com தளத்திற்குச் செல்லவும்.
  2. அகற்ற வேண்டிய ஷார்ட்கட்டை வலது கிளிக் செய்யவும்.
  3. அகற்று என்பதைக் கிளிக் செய்யவும்.

ஷார்ட்கட்டை நிரந்தரமாக நீக்க நீக்கியவை ஃபோல்டரைக் காலியாக்கவும்.

முக்கியம்: ஷார்ட்கட்டை நீக்கினால் அசல் ஃபைல் நீக்கப்படாது.

ஃபைல் அல்லது ஃபோல்டருக்கு மற்ற ஆப்ஸில் இணைப்பை உருவாக்குதல்

முக்கியம்: இந்தச் செயல்பாடு Chromeமில் மட்டுமே கிடைக்கும்.

Google Drive மூலம் Google Editor ஆவணங்களிலும் மற்ற ஆப்ஸிலும் ஃபைல் மற்றும்/அல்லது ஃபோல்டரின் பெயரை நகலெடுத்து ஒட்டலாம்.

  1. கம்ப்யூட்டரில் drive.google.com தளத்திற்குச் செல்லவும்.
  2. ஒரு ஃபைலைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. ஒரு விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்:
    • ஃபைல் அல்லது ஃபோல்டரின் பெயரைக் கிளிப்போர்டில் இணைப்பாக நகலெடுக்க Ctrl + c அழுத்தவும். 
    • ஃபைல் அல்லது ஃபோல்டரின் URLலைக் கிளிப்போர்டில் இணைப்பாக நகலெடுக்க Ctrl + Shift + c அழுத்தவும்.
  4. Google ஆவணம் அல்லது மற்ற ஆப்ஸில் ஃபைலையோ ஃபோல்டரையோ ஒட்ட Ctrl + v அழுத்தவும்.
ஃபைலை நகலெடுத்தல்

முக்கியம்:

  • இந்தச் செயல்பாடு Chromeமில் மட்டுமே கிடைக்கும்.
  • Drive for desktop ஆப்ஸில் இதைச் செய்ய முடியாது.
  • ஃபோல்டர்களை நகலெடுக்க முடியாது, ஃபைல்களை மட்டுமே நகலெடுக்க முடியும்.
  • ஃபோல்டரைச் சுலபமாகத் தேட ஃபோல்டருக்கு ஷார்ட்கட்டை உருவாக்கலாம்.

நீங்களாக ஃபைலை நகலெடுத்தல்

  1. கம்ப்யூட்டரில் drive.google.com தளத்திற்குச் செல்லவும்.
  2. ஃபைலை வலது கிளிக் செய்யவும்.
  3. நகலெடு Make a copy என்பதைக் கிளிக் செய்யவும்.

ஃபைலை நகலெடுக்க கீபோர்டு ஷார்ட்கட்டைப் பயன்படுத்துதல்

  1. கம்ப்யூட்டரில் drive.google.com தளத்திற்குச் செல்லவும்.
  2. ஒரு ஃபைலைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. கிளிப்போர்டில் ஃபைலை நகலெடுக்க Ctrl + c அழுத்தவும்.
  4. ஃபைலை ஒட்ட விரும்பும் இடத்திற்குச் செல்லவும்.
  5. ஃபைலை வேறொரு இடத்தில் நகலெடுக்க Ctrl + v அழுத்தவும்.

உதவிக்குறிப்பு: உலாவிச் சாளரங்களுக்கு இடையிலும் பயனர்கள் நகர்த்தலாம்.

ஃபைலையோ ஃபோல்டரையோ நீக்குதல்
  1. கம்ப்யூட்டரில் drive.google.com தளத்திற்குச் செல்லவும்.
  2. நீக்க வேண்டிய ஃபைல் அல்லது ஃபோல்டர் மீது வலது கிளிக் செய்யவும்.
  3. அகற்று என்பதைக் கிளிக் செய்யவும்.

நீங்கள் தவறுதலாக ஏதேனும் ஒன்றை நீக்கியவை ஃபோல்டருக்கு நகர்த்திவிட்டால் அதை மீட்டெடுக்கலாம்.

ஃபோல்டரின் வண்ணத்தை மாற்றுதல்

எனது Driveவிலும் பகிர்ந்த இயக்ககங்களிலும் உள்ள ஃபோல்டர்களுக்கும் அவற்றின் ஷார்ட்கட்களுக்கும் வண்ணத்தைப் பிரத்தியேகமாக்கலாம். ஏதேனும் வண்ணத்தை மாற்றினால் அது Driveவில் உங்களுக்கு மட்டுமே காட்டப்படும்.

  1. கம்ப்யூட்டரில் drive.google.com தளத்திற்குச் செல்லவும்.
  2. மாற்ற வேண்டிய ஃபோல்டரில் வலது கிளிக் செய்யவும்.
  3. வண்ணத்தை மாற்று என்பதைக் கிளிக் செய்து நீங்கள் விரும்பும் வண்ணத்தைத் தேர்வுசெய்யவும்.

தொடர்புடைய தகவல்கள்

true
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
1937919922164448190
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
99950
false
false