Google Drive for desktop ஆப்ஸைப் பயன்படுத்துதல்

உங்கள் சாதனங்கள் அனைத்திலும் கிளவுடிலும் ஃபைல்கள் மற்றும் ஃபோல்டர்களை எளிதாக நிர்வகிப்பதற்கும் பகிர்வதற்கும் Googleளின் டெஸ்க்டாப் சிங்க் கிளையன்ட்டான Drive for desktopபைப் பயன்படுத்தவும்.

உங்கள் கம்ப்யூட்டரில் Drive ஃபைல்களையும் ஃபோல்டர்களையும் Windowsஸில் File Explorer மூலமும் macOSஸில் Finder மூலமும் கண்டறிய Drive for desktop ஆப்ஸைப் பயன்படுத்தவும்.

Cloudல் ஒரு ஃபைலைத் திருத்தினாலோ நீக்கினாலோ நகர்த்தினாலோ அந்த மாற்றங்கள் உங்கள் கம்ப்யூட்டரிலும் சாதனங்களிலும் பிரதிபலிக்கும். இதேபோல் கம்ப்யூட்டரிலும் சாதனங்களிலும் ஒரு ஃபைலைத் திருத்தினாலோ நீக்கினாலோ நகர்த்தினாலோ அந்த மாற்றங்கள் Cloudல் பிரதிபலிக்கும். எனவே ஃபைல்கள் எப்போதும் புதுப்பித்த நிலையிலேயே இருக்கும், அத்துடன் அவற்றை எந்தச் சாதனத்தில் இருந்தும் அணுகலாம்.

Drive for desktop ஆப்ஸை இவற்றிற்காக நீங்கள் பயன்படுத்தலாம்:

  • Cloudல் சேமிக்கப்பட்டுள்ள ஃபைல்களை நேரடியாக உங்கள் கம்ப்யூட்டரில் திறத்தல்.
  • சேமிப்பிடத்தைப் பயன்படுத்தாமல் கம்ப்யூட்டரின் ஃபைல் அமைப்பில் உள்ள ஃபைல்களைப் பார்த்தல், ஒழுங்கமைத்தல்.
  • கம்ப்யூட்டரில் உள்ள ஃபோல்டர்களை Google Drive உடன் ஒத்திசைத்தல்.
    • ஒத்திசைக்கும்போது கிளவுடில் இருந்து உங்கள் ஃபைல்கள் பதிவிறக்கப்பட்டு உங்கள் கம்ப்யூட்டரின் ஹார்டு டிரைவில் இருந்து பதிவேற்றப்படும்.
    • ஒத்திசைத்த பிறகு உங்கள் கம்ப்யூட்டரின் ஃபைல்கள் கிளவுடில் உள்ளவற்றுடன் பொருந்தும்.
    • உங்கள் ஃபைல்கள் புதுப்பிக்கப்பட்ட நிலையிலும் அணுகக்கூடியதாகவும் இருக்கும், நீங்கள் எந்த மாற்றம் செய்தாலும் உங்களின் அனைத்து சாதனங்களுக்கும் அது பொருந்தும்.
  • ஆஃப்லைனில் பயன்படுத்துவதற்காக ஃபைல்களையும் ஃபோல்டர்களையும் சேமித்தல். பகிர்ந்த இயக்ககங்களில் உள்ள ஃபைல்களும் இதில் அடங்கும்.
  • நிகழ்நேரத்தில் Microsoft Office ஃபைல்களில் கூட்டுப்பணி செய்தல்.
  • பணி அல்லது பள்ளிக் கணக்கின் மூலம் Windowsஸில் நீங்கள் Outlookகைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால் Microsoft Outlook மூலம் ஃபைல்களை அனுப்பலாம் சேமிக்கலாம்.

Drive for desktop ஆப்ஸை நிறுவி அமைத்தல்

Drive for desktop ஆப்ஸைப் பதிவிறக்குதல்

முக்கியம்: தொடங்குவதற்கு முன் உங்கள் ஆப்ரேட்டிங் சிஸ்டம் Drive for desktop ஆப்ஸுடன் இணக்கமாக உள்ளதா என்று பார்க்கவும்.

  1. Drive for desktop ஆப்ஸைப் பதிவிறக்குதல்:

    WINDOWSஸுக்குப் பதிவிறக்கு MACகுக்குப் பதிவிறக்கு

  2. கம்ப்யூட்டரில் இதைத் திறக்கவும்:
    • Windows: GoogleDriveSetup.exe
    • Mac: GoogleDrive.dmg
  3. திரையில் தோன்றும் அறிவிப்புகளைப் பின்பற்றவும்.

உதவிக்குறிப்பு: பணி அல்லது பள்ளிக் கணக்கைப் பயன்படுத்தினால் Drive for desktop ஆப்ஸை நீங்கள் பயன்படுத்த முடியாமல் போகக்கூடும் அல்லது உங்கள் நிறுவனம் அதை உங்களுக்காக நிறுவ வேண்டியிருக்கும். கேள்விகள் இருப்பின் உங்கள் நிர்வாகியிடம் கேட்கவும்.

Drive for desktop ஆப்ஸைத் திறத்தல்
Drive for desktop ஆப்ஸைப் பயன்படுத்தும்போது, Drive for desktop மெனுவை Drive நேரடி ஒத்திசைவு நீங்கள் பார்க்கலாம்:
  • Windows: சிஸ்டம் டிரேயில் கீழ் வலதுபுறத்தில் அமைந்திருக்கும்.
    • உதவிக்குறிப்பு: மறைக்கப்பட்ட ஐகான்கள் காட்டப்பட அம்புக்குறியைக் கிளிக் செய்ய வேண்டியிருக்கும்.
  • Mac: மெனு பட்டியில் மேல் வலதுபுறத்தில் அமைந்திருக்கும்.

மூடப்பட்டுள்ளபோது Drive for desktop ஆப்ஸைச் சுலபமாகக் கண்டறிய அதைப் பின் செய்யலாம்:

  • Windows:
    • Driveவைத் தொடக்க மெனுவில் சேர்க்க: தொடக்க மெனுவில் வலது கிளிக் செய்து Drive அதன் பிறகு தொடக்கத்திற்குப் பின் செய் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
    • Driveவைச் செயல் பட்டியில் சேர்க்க: தொடக்க மெனுவில் வலது கிளிக் செய்து Drive அதன் பிறகு செயல் பட்டிக்குப் பின் செய் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  • Mac:
    • உங்கள் டாக்கில் Driveவைச் சேர்க்க: “ஆப்ஸ்” ஃபோல்டரில், சமீபத்தில் பயன்படுத்திய ஆப்ஸைப் பிரிக்கும் கோட்டிற்கு இடது புறம் Drive ஆப்ஸை இழுத்து விடவும்.

Google Drive for desktop ஆப்ஸைப் பயன்படுத்தத் தொடங்குதல்

Drive for desktop ஆப்ஸில் உள்நுழைதல்
முதல் முறையாக Drive for desktop ஆப்ஸைத் திறக்கும்போது அல்லது உங்கள் கணக்கிலிருந்து வெளியேறியபிறகு, உள்நுழைய:
  1. கம்ப்யூட்டரில் Drive for desktop ஆப்ஸை Drive நேரடி ஒத்திசைவு திறக்கவும்.
  2. உலாவி மூலம் உள்நுழைக என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. Drive for desktop ஆப்ஸில் நீங்கள் பயன்படுத்த விரும்பும் Google கணக்கில் உள்நுழையவும்.

உதவிக்குறிப்பு: Drive for desktop ஆப்ஸில் ஒரே நேரத்தில் 4 கணக்குகள் வரை நீங்கள் பயன்படுத்தலாம். ஒரே நேரத்தில் பல கணக்குகளை எப்படிப் பயன்படுத்துவது என்று தெரிந்துகொள்ளுங்கள்.

Drive for desktop ஆப்ஸில் உங்கள் Google Drive ஃபைல்களைப் பயன்படுத்துதல்

Drive for desktop ஆப்ஸை நிறுவும்போது, Windows File Explorer அல்லது macOS Finderரில் “Google Drive'' ஃபோல்டர் இருக்குமிடத்தில் உங்கள் ஃபைல்கள் காட்டப்படும். கம்ப்யூட்டரில் Drive for desktop ஆப்ஸை Drive நேரடி ஒத்திசைவு திறக்கவும்.

  1. உங்கள் பெயர் அதன் பிறகு Google Drive என்பதைக் கிளிக் செய்யவும்.
    • உங்களின் அல்லது உங்கள் நிறுவனத்தின் முந்தைய Drive உபயோகத்தின் அடிப்படையில், பின்வருவனவற்றையும் நீங்கள் திறக்கலாம்:
      • எனது Drive
      • பகிர்ந்த இயக்ககம்
      • பிற கம்ப்யூட்டர்கள்
  2. ஃபோல்டரில், உங்கள் ஃபைலின் மீது இரு கிளிக் செய்யவும்.
    • Google Docs, Sheets, Slides, அல்லது Formsஸால் உருவாக்கப்பட்ட ஃபைல்கள் உங்கள் உலாவியில் திறக்கும்.
    • மற்ற ஃபைல்கள் அதன் வழக்கமான ஆப்ஸில் உங்கள் கம்ப்யூட்டரில் திறக்கும்.

உதவிக்குறிப்பு: உங்கள் Driveவில் உள்ளடக்கம் எதுவும் இல்லை என்றால்:

  • “எனது Drive” ஃபோல்டர் காலியாக இருக்கும்.
  • “பகிர்ந்த இயக்ககங்கள்” அல்லது “பிற கம்ப்யூட்டர்கள்” காட்சிகள் காட்டப்படாது.

ஃபைல்களை Google Driveவுடன் ஒத்திசைத்தல் அல்லது Google Photosஸூக்குக் காப்புப் பிரதி எடுத்தல்

Google Drive அல்லது Google Photos மூலம் ஃபோல்டரை ஒத்திசைத்தல்

கம்ப்யூட்டரில் உள்ள ஃபைல்களை Google Driveவுடன் ஒத்திசைக்கலாம், Google Photosஸிற்குக் காப்புப் பிரதி எடுக்கலாம்.

  1. கம்ப்யூட்டரில் Drive for desktop ஆப்ஸை Drive நேரடி ஒத்திசைவு திறக்கவும்.
  2. அமைப்புகள் அமைப்புகள் அதன் பிறகு விருப்பத்தேர்வுகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. இடதுபுறத்தில் கம்ப்யூட்டரில் உள்ள ஃபோல்டர்கள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. இந்த மெனுவிலிருந்து, இவற்றைச் செய்யலாம்:
    • Driveவுடன் ஒத்திசைக்க ஃபோல்டர்களைச் சேர்த்தல்.
    • Photosஸிற்குக் காப்புப் பிரதி எடுக்க ஃபோல்டர்களைச் சேர்த்தல்.
    • ஏற்கெனவே உள்ளமைக்கப்பட்ட ஃபோல்டர்களின் விருப்பத்தேர்வுகளை மாற்றுதல்.

Google Driveவுடன் ஒத்திசைக்கும்போது:

  • ஃபோல்டரில் உள்ள அனைத்தும் மிரர் செய்யப்படும். செய்யப்படும் மாற்றங்கள் உங்கள் கம்ப்யூட்டர் மற்றும் Google Driveவுக்கு இடையே ஒத்திசைக்கப்படும்.
  • ஆன்லைனில் உள்ள எந்தச் சாதனத்தில் இருந்தும் அல்லது Google Drive மொபைல் ஆப்ஸில் இருந்தும் உங்கள் ஃபைல்களை நீங்கள் பயன்படுத்தலாம். ஒத்திசைக்கப்பட்ட ஃபோல்டர்கள் "கம்ப்யூட்டர்கள்" என்பதற்குக் கீழ் காட்டப்படும்.
  • இந்த ஃபோல்டர்களில் இருந்து ஆவணங்களைச் சேர்த்தாலோ திருத்தினாலோ நகர்த்தினாலோ நீக்கினாலோ அந்த மாற்றங்கள் உங்கள் கம்ப்யூட்டரிலும் செயல்படுத்தப்படும்.

Google Photosஸுக்குக் காப்புப் பிரதி எடுத்தால்:

  • படங்களும் வீடியோக்களும் மட்டுமே பதிவேற்றப்படும்.
  • உங்கள் கம்ப்யூட்டரில் இருந்து நீக்கப்பட்ட படங்களும் வீடியோக்களும் Google Photosஸில் இருக்கும், Google Photosஸில் இருந்து நீக்கப்பட்டவை உங்கள் கம்ப்யூட்டரில் இருக்கும்.
  • மாற்றங்கள் புதிய படங்களாகப் பதிவேற்றப்படும். பழைய படம் Google Photosஸில் இருக்கும்.
  • ஆன்லைனில் எந்தச் சாதனத்தில் இருந்தும் அல்லது Google Photos மொபைல் ஆப்ஸ் மூலமும் உங்கள் படங்களையும் வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

உதவிக்குறிப்பு: படங்களையும் வீடியோக்களையும் மட்டுமே சேமிப்பதாக இருந்தால் Google Photosஸிற்குக் காப்புப் பிரதி எடுத்துக்கொள்ளுமாறு பரிந்துரைக்கிறோம். இரண்டு இடங்களிலும் ஃபைல்களைச் சேமித்தால் படங்களும் வீடியோக்களும் இரண்டுமுறை பதிவேற்றப்படும். இது Google சேமிப்பகத்தில் அதிகச் சேமிப்பிடத்தைப் பயன்படுத்தும்.

macOSஸிற்கான சிஸ்டம் பட லைப்ரரியைக் காப்புப் பிரதி எடுத்தல்

முக்கியம்: சிஸ்டம் பட லைப்ரரி மட்டுமே Google Photosஸுடன் ஒத்திசைக்கக்கூடிய Apple Photos லைப்ரரி ஆகும். மாறாக, அனைத்து Apple Photos லைப்ரரிகளையும் Driveவுடன் ஒத்திசைக்கலாம்.

Driveவுடன் Apple Photos லைப்ரரியை ஒத்திசைத்தால் சிறுபடங்கள், பிற தரவுத்தகவல் உள்ளிட்ட அனைத்தும் ஒத்திசைக்கப்படும். இந்த ஃபைல்களில் வேறு கம்ப்யூட்டரில் இருந்தோ கிளவுடிலோ மாற்றங்கள் செய்வதைப் பரிந்துரைப்பதில்லை, இது உங்கள் லைப்ரரியைச் சிதைக்கலாம்.

சிஸ்டம் பட லைப்ரரியை மட்டுமே iCloud Photos, பகிர்ந்த ஆல்பங்கள், எனது பட ஸ்ட்ரீம் ஆகியவற்றுக்காகப் பயன்படுத்தலாம். உங்களிடம் ஒரே ஒரு பட லைப்ரரி மட்டுமே இருந்தால் அது சிஸ்டம் பட லைப்ரரியாகக் கருதப்படும். இல்லையெனில் Photosஸில் முதன் முதலில் நீங்கள் உருவாக்கும் அல்லது திறக்கும் பட லைப்ரரியே சிஸ்டம் பட லைப்ரரியாகக் கருதப்படும்.

படங்களையும் வீடியோக்களையும் iCloudல் இருந்து பதிவிறக்கவும் அவற்றை Google Photosஸில் பதிவேற்றவும் ஹார்டு டிரைவ் சேமிப்பிடம் தற்காலிகமாகப் பயன்படுத்தப்படும். படங்களையும் வீடியோக்களையும் காப்புப் பிரதி எடுத்தல் குறித்து மேலும் அறிக.

Drive for desktop ஆப்ஸில் உள்ள அம்சங்கள் குறித்துத் தெரிந்துகொள்ளுங்கள்

Drive for desktop ஆப்ஸின் அமைப்புகளைப் பிரத்தியேகமாக்குதல்
மேம்பட்ட அமைப்புகள் மூலம் Drive for desktop ஆப்ஸைப் பயன்படுத்தும் அனுபவத்தை மேம்படுத்தலாம். நீங்கள்:
  • ஒத்திசைவு விருப்பத்தேர்வுகளைப் பிரத்தியேகமாக்கலாம்.
  • Microsoft Officeஸில் நிகழ்நேரப் பங்கேற்பை இயக்கலாம், முடக்கலாம்.
  • Google Photos அமைப்புகளைப் பிரத்தியேகமாக்கலாம்.
  • தானாகத் தொடங்குதல், ஷார்ட்கட் பட்டன்கள், ப்ராக்ஸி அமைப்புகள் போன்ற பொதுவான அமைப்புகளைப் பிரத்தியேகமாக்கலாம்.
Drive for desktop ஆப்ஸ் அமைப்புகளைப் பிரத்தியேகமாக்குவது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.
ஆஃப்லைனில் உள்ள ஃபைல்களையும் ஃபோல்டர்களையும் திறத்தல்

Drive for desktop ஆப்ஸ் மூலம் ஃபைல்களையும் ஃபோல்டர்களையும் ஆஃப்லைனில் பயன்படுத்தச் சேமிக்கலாம். Drive for desktop ஆப்ஸ் மூலம் ஃபைல்களை ஆஃப்லைனில் பயன்படுத்துவது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

Drive ஃபைல்களைத் தேடுதல்

Driveவில் உங்கள் ஃபைல்களைக் கண்டறிய, Drive for desktop ஆப்ஸில் தேடவும். Windows Search அல்லது macOS Spotlightடில் இல்லாமல் Drive for desktop ஆப்ஸில் நீங்கள் தேடும்போது, ஃபைல்களை Drive ஸ்ட்ரீம் செய்யும் இடத்தில் உள்ள அனைத்து ஃபைல்களும் உங்கள் தேடலில் உள்ளடக்கப்பட்டுள்ளதை இது உறுதிப்படுத்தும்.

  1. கம்ப்யூட்டரில் Drive for desktop ஆப்ஸை Drive நேரடி ஒத்திசைவு திறக்கவும்.
  2. தேடுவதற்கான ஐகானை Search கிளிக் செய்யவும்.
  3. தேடல் வார்த்தைகளை டைப் செய்யவும்.
  4. ஃபைலைத் திறக்கவும். ஃபைல் உங்கள் கம்ப்யூட்டரில் இருந்தால், தொடர்புடைய ஆப்ஸ் மூலம் அது திறக்கப்படும். இல்லையென்றால், Drive இணையத்தில் திறக்கப்படும்.

உதவிக்குறிப்பு: தேடல் சாளரத்தைத் திறக்க, தேடல் ஷார்ட்கட் பட்டன் சேர்க்கையையும் நீங்கள் பயன்படுத்தலாம்.

MS Outlook & Office ஃபைல்களைப் பயன்படுத்துதல்

Drive for desktop ஆப்ஸைப் பயன்படுத்தி, Office ஃபைல்களில் நிகழ்நேரப் பங்கேற்பு அம்சத்தின் மூலம் பணியாற்றலாம். பணி அல்லது பள்ளிக் கணக்கை வைத்திருக்கும் Windows பயனர்கள் Microsoft Outlook மூலமாகவும் ஃபைல்களை அனுப்பலாம் சேமிக்கலாம். Drive for desktop ஆப்ஸ் மூலம் Microsoft Office ஃபைல்களை எப்படிப் பயன்படுத்துவது என்று தெரிந்துகொள்ளுங்கள்.

macOSஸில் Drive for desktop ஆப்ஸைப் பயன்படுத்துதல்
எனது Driveவை மிரர் செய்தல்

மிரர் செய்தல், ஸ்ட்ரீம் செய்தல் ஆகிய இரண்டும் உங்கள் ஃபைல்களை ஒத்திசைப்பதற்கான இரண்டு வழிகளாகும்.

  • உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள ஃபோல்டர்களை மிரரிங் மட்டுமே செய்ய முடியும்.
  • பகிர்ந்த இயக்ககங்கள் மற்றும் பிற கம்ப்யூட்டர்களை ஸ்ட்ரீம் மட்டுமே செய்ய முடியும்.
  • எனது Driveவை மிரரிங் அல்லது ஸ்ட்ரீம் செய்யலாம்.
  • Drive for desktop ஆப்ஸ் நிறுவப்பட்டிருந்தால் “எனது Drive” ஃபோல்டரை ஸ்ட்ரீம் செய்யலாம். நிறுவப்பட்ட பிறகு, உங்கள் விருப்பத்தேர்வுகளை மாற்றி 'எனது Driveவை' மிரரிங் அல்லது ஸ்ட்ரீம் செய்யத் தேர்வுசெய்யலாம்.

Drive for desktop ஆப்ஸ் மூலம் ஸ்ட்ரீமிங் அல்லது மிரரிங் செய்வதற்கான விருப்பங்கள் குறித்துத் தெரிந்துகொள்ளுங்கள்.

பிழையறிந்து திருத்துதல்
Drive for desktop ஆப்ஸில், “செயல்பாடு” என்பதற்குக் கீழ் “சில பிழைகள் ஏற்பட்டுள்ளன” என்ற பேனர் காட்டப்படும். பிழைகளின் பட்டியலைப் பார்க்க, இவற்றில் எதையேனும் செய்யலாம்:
  • பேனரில் உள்ள இணைப்பைக் கிளிக் செய்தல்.
  • அமைப்புகள் அதன் பிறகு பிழைப் பட்டியல் என்பதைக் கிளிக் செய்தல்.

பிழைகளைச் சரிசெய்வது எப்படி என்பது குறித்து மேலும் அறிக.

தொடர்புடைய தகவல்கள்

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
6388304203828506082
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
99950
false
false