Drive for desktop ஆப்ஸ் அமைப்புகளைப் பிரத்தியேகமாக்குதல்

மேம்பட்ட அமைப்புகள் மூலம் Drive for desktop ஆப்ஸைப் பயன்படுத்தும் அனுபவத்தை நீங்கள் மேம்படுத்தலாம்.

ஒத்திசைவு விருப்பத்தேர்வுகளைப் பிரத்தியேகமாக்குதல்

ஒரே நேரத்தில் பல கணக்குகளைப் பயன்படுத்துதல்
Drive for desktop ஆப்ஸில் ஒரே நேரத்தில் 4 கணக்குகள் வரை நீங்கள் பயன்படுத்தலாம்.
ஒரு கணக்கைச் சேர்க்க:
  1. கம்ப்யூட்டரில் Drive for desktop மெனு ஐகானை Drive நேரடி ஒத்திசைவு கிளிக் செய்யவும்.
  2. மேல் வலது ஓரத்தில் உள்ள உங்கள் சுயவிவரப் படத்தைக் கிளிக் செய்து அதன் பிறகு வேறொரு கணக்கைச் சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. உங்கள் உலாவி மூலம் உள்நுழையவும்.
  4. Drive for desktop ஆப்ஸை மீண்டும் தொடங்கவும்.
கணக்கின் இணைப்பை நீக்க:
  1. கம்ப்யூட்டரில் Drive for desktop மெனு ஐகானை Drive நேரடி ஒத்திசைவு கிளிக் செய்து அதன் பிறகு அமைப்புகள் அதன் பிறகு விருப்பத்தேர்வுகள் அதன் பிறகு மேம்பட்ட அமைப்புகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  2. இணைப்பை நீக்க வேண்டிய கணக்கிற்குச் செல்லவும்.
  3. கணக்கின் இணைப்பை நீக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. காட்டப்படும் பாப்-அப் சாளரத்தில் சரி என்பதைக் கிளிக் செய்யவும்.
முக்கியம்: ஸ்ட்ரீமிங் செய்யப்படும் கணக்கின் இணைப்பை நீக்கினால் அதில் இருக்கும் ஆஃப்லைன் ஃபைல்களும் அகற்றப்படும்.
கணக்கை அகற்றுதல்

முக்கியம்: உங்கள் கணக்கின் இணைப்பை நீங்கள் நீக்கும்போது, ஆஃப்லைன் ஃபைல்கள் அகற்றப்படும்.

  1. கம்ப்யூட்டரில் மெனு ஐகானை Drive நேரடி ஒத்திசைவு கிளிக் செய்து அதன் பிறகு அமைப்புகள் அதன் பிறகு விருப்பத்தேர்வுகள் அதன் பிறகு மேம்பட்ட அமைப்புகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  2. இணைப்பை நீக்க விரும்பும் கணக்கைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. கணக்கின் இணைப்பை நீக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. காட்டப்படும் பாப்-அப் சாளரத்தில் சரி என்பதைக் கிளிக் செய்யவும்.
ஃபைல்களை Drive ஸ்ட்ரீம் செய்யும் இடத்தை மாற்றுதல்
ஃபைல்களை Drive for desktop ஸ்ட்ரீம் செய்யும் இடத்தை நீங்கள் மாற்றலாம்:
  1. கம்ப்யூட்டரில் Drive for desktop மெனு ஐகானை Drive நேரடி ஒத்திசைவு கிளிக் செய்து அதன் பிறகு அமைப்புகள் அதன் பிறகு விருப்பத்தேர்வுகள் அதன் பிறகு மேம்பட்ட அமைப்புகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  2. "ஃபைல்களை Google Drive ஸ்ட்ரீம் செய்யும் இடம்" என்பதன் கீழ் உள்ள மாற்று என்பதைக் கிளிக் செய்யவும்.
    • Windowsஸில்: கம்ப்யூட்டரில் உள்ள ஃபோல்டருக்கு Google Drive ஃபைல்களை ஸ்ட்ரீம் செய்ய “ஃபைல்களை Google Drive ஸ்ட்ரீம் செய்யும் இடம்” என்பதன் கீழ் உள்ள ஃபோல்டர் என்பதைத் தேர்ந்தெடுக்கவும். Drive எழுத்தை மாற்ற "Drive எழுத்து" என்பதன் கீழ் உள்ள, கீழ் தோன்றும் அம்புக்குறியைக் கிளிக் செய்யவும்.
    • macOSஸில்: ஃபைல்களை ஸ்ட்ரீம் செய்யும் இடத்தை மாற்ற, "ஃபைல்களை Google Drive ஸ்ட்ரீம் செய்யும் இடம்" என்பதன் கீழ் உள்ள மாற்று என்பதைக் கிளிக் செய்யவும்.

      முக்கியம்: "ஃபைல்களை Google Drive ஸ்ட்ரீம் செய்யும் இடம்" என்பதன் கீழ் "ஃபோல்டரின் இருப்பிடத்தை macOS கட்டுப்படுத்துகிறது" என்ற அறிவிப்பு காட்டப்படலாம். அப்படிக் காட்டப்பட்டால் மவுண்ட் பாயிண்ட்டை உங்களால் மாற்ற முடியாது. macOSஸில் Drive for desktop ஆப்ஸ் குறித்து மேலும் அறிக.
  3. உங்கள் ஃபைல்கள் எங்கே இருக்க வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  4. சரி என்பதைக் கிளிக் செய்யவும்.
ஒத்திசைவை இடைநிறுத்துதல்
ஒத்திசைவு இடைநிறுத்தப்பட்டால் இந்தப் பின்னணி ஒத்திசைவுச் செயல்பாடுகளை Drive for desktop ஆப்ஸ் நிறுத்திவிடும்:
  • விர்ச்சுவல் Driveவில் உள்ள ஸ்ட்ரீம் செய்யப்படும் ஃபைல்களில் செய்யப்படும் மாற்றங்கள்.
  • மிரர் செய்யப்பட்ட ஃபோல்டர்களின் ஃபைல்களை Driveவிற்கும் சாதனத்திற்கும் ஒத்திசைத்தல்.
  • Google Photosஸிற்குக் காப்புப் பிரதி எடுத்தல்.
  • macOS File Providerரில், பதிவிறக்காத ஃபைல்களை அணுக முடியாது. macOSஸில் Drive for desktop ஆப்ஸ் குறித்து மேலும் அறிக.
ஒத்திசைவை இடைநிறுத்த:
  1. கம்ப்யூட்டரில் Drive for desktop மெனு ஐகானை Drive நேரடி ஒத்திசைவு கிளிக் செய்யவும்.
  2. அமைப்புகள் அதன் பிறகு ஒத்திசைவை இடைநிறுத்து என்பதைக் கிளிக் செய்யவும்.
ஒத்திசைவை மீண்டும் தொடங்க:
  1. கம்ப்யூட்டரில் Drive for desktop மெனு ஐகானை Drive நேரடி ஒத்திசைவு கிளிக் செய்யவும்.
  2. அமைப்புகள் அதன் பிறகு ஒத்திசைவை மீண்டும் தொடங்கு என்பதைக் கிளிக் செய்யவும்.
ஸ்ட்ரீம் அல்லது மிரர் செய்யப்பட்ட ஃபைல்களுக்கான அமைப்புகள் குறித்துத் தெரிந்துகொள்ளுங்கள்
மிரர் அல்லது ஸ்ட்ரீம் செய்வதன் மூலம் 'எனது Driveவில்' உள்ள ஃபைல்களை Drive for desktop ஆப்ஸ் உடன் ஒத்திசைக்கலாம்.

ஸ்ட்ரீமிங்கில் இருந்து மிரரிங்கிற்கு மாற்ற:

  1. Drive for desktop ஆப்ஸைத் திறக்கவும்.
  2. அமைப்புகள் அமைப்புகள் அதன் பிறகு விருப்பத்தேர்வுகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. இடதுபுறத்தில் உள்ள 'Drive ஃபோல்டர்கள்' என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. "எனது Driveவின் ஒத்திசைவு விருப்பங்கள்" என்பதற்குக் கீழேயுள்ள ஃபைல்களை மிரர் செய் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  5. Drive for desktop ஆப்ஸை மூடவும்.

உதவிக்குறிப்புகள்:
  • நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஃபோல்டரில் 'எனது Drive' ஃபைல்கள் பதிவிறக்கப்படும். 
  • தேர்ந்தெடுக்கப்படும் ஃபோல்டரில் ஏற்கெனவே ஃபைல்கள் இருந்தால் கிளவுடில் ஏற்கெனவே இருக்கும் ஃபைல்களை நகலெடுக்காமல் இருக்க Drive for desktop முயலும். 
    • கிளவுடில் இருப்பவற்றுடன் ஃபைலில் உள்ள உள்ளடக்கம் வேறுபட்டால் இரண்டு பதிப்புகளையும் Drive for desktop சேமிக்கும்.
  • கிளவுடில் ஏற்கெனவே இல்லாத ஃபைல்கள் பதிவேற்றப்படும்.
  • Google Drive ஸ்ட்ரீம் ஆகும் ஃபைல் இருக்குமிடம் புதுப்பிக்கப்பட்டு, அதில் 'எனது Drive' ஃபோல்டருக்கான புதிய ஷார்ட்கட் காட்டப்படும். 
  • பகிர்ந்த இயக்ககங்கள், பிற கம்ப்யூட்டர்கள், காப்புப் பிரதி எடுக்கப்பட்ட USB சாதனங்கள் ஆகியவை தொடர்ந்து காட்டப்படும். அவற்றை இப்போதும் ஸ்ட்ரீமிங் செய்யலாம்.

Drive for desktop ஆப்ஸ் மூலம் மிரர் மற்றும் ஸ்ட்ரீம் செய்வது குறித்து மேலும் அறிக.
ஸ்ட்ரீம் செய்யப்படும் ஃபைல்களுக்கான தற்காலிக உள்ளடக்கச் சேமிப்பு குறித்துத் தெரிந்துகொள்ளுங்கள்

முக்கியம்: தற்காலிக டைரக்டரியின் தடம் தெரியவில்லை என்றால் Drive for desktop ஆப்ஸைப் பயன்படுத்த முடியாது.

ஃபைல்களை Google Driveவில் இருந்து கம்ப்யூட்டருக்கு ஸ்ட்ரீம் செய்தால் ஹார்டு டிரைவில் உள்ள அகத் தற்காலிக நினைவகத்தில் ஃபைல் தரவு சேமிக்கப்படும்.

Drive for desktop ஆப்ஸில் ஃபைல்களை விரைவாகத் திறக்கவும் அவற்றை ஆஃப்லைனில் கிடைக்கச் செய்யவும் தற்காலிகச் சேமிப்பு உதவுகிறது. ஆஃப்லைனில் மாற்றங்களைச் செய்தால், Cloudல் ஃபைலைப் பதிவேற்றும் வரை தற்காலிகச் சேமிப்பில் அவை சேமிக்கப்படும்.

Windows மற்றும் பழைய macOSஸின் பதிப்புகளில் உள்ளடக்கத்தின் தற்காலிக நினைவகச் சேமிப்பை Drive for desktop ஆப்ஸ் தானாகவே நிர்வகிக்கிறது. பணி/பள்ளிக் கணக்குகளுக்கு, தற்காலிகச் சேமிப்பு எவ்வளவு சேமிப்பிடத்தைப் பயன்படுத்த வேண்டும் என்பதற்கான வரம்பை உங்கள் நிர்வாகியால் அமைக்க முடியும்.

macOSஸின் புதிய பதிப்புகளில், தற்காலிக உள்ளடக்கச் சேமிப்பை macOS நிர்வகிக்கிறது. தற்காலிக உள்ளடக்கச் சேமிப்பை macOS நிர்வகிப்பதால், தற்காலிகச் சேமிப்பு எவ்வளவு சேமிப்பிடத்தைப் பயன்படுத்த வேண்டும் என்பதற்கான வரம்பை உங்களால் அமைக்க முடியாது.

ஆஃப்லைனில் உள்ள ஃபைல்களையும், உங்கள் ஹார்டு டிரைவ் சேமிப்பிடம் எப்படிப் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதையும் பார்க்கலாம். இந்தத் தகவலைப் பார்க்க:
  1. கம்ப்யூட்டரில் Drive for desktop மெனு ஐகானை Drive நேரடி ஒத்திசைவு கிளிக் செய்து அதன் பிறகு அமைப்புகள் அதன் பிறகு ஆஃப்லைன் ஃபைல்கள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  2. உங்கள் கணக்குகளில் உள்ள தற்காலிகச் சேமிப்பு ஃபைல்களைப் பார்க்க ஆஃப்லைன் ஃபைல்கள் என்பதைக் கிளிக் செய்யவும்.

Drive for desktop ஆப்ஸிற்குப் பொருந்துகின்ற தற்காலிகச் சேமிப்பு வரம்புகளின் பட்டியல்:

  • தற்காலிகச் சேமிப்பு ஃபோல்டர் இருக்கும் பார்டிஷனின் சேமிப்பக அளவைவிட பெரிய ஃபோல்டரை உங்களால் பதிவேற்ற முடியாது.
  • தற்காலிகச் சேமிப்பு இருக்கும் சாதன டிரைவில் கிடைக்கின்ற இடத்தின் அடிப்படையில், Drive for desktop ஆப்ஸின் வரம்பிற்குட்பட்ட Drive ஒதுக்கிடத்தை (வரம்பற்ற ஒதுக்கிடம் கொண்ட கணக்குகளும் இதில் அடங்கும்) நீங்கள் பார்க்கலாம்.
மேம்பட்டது: கம்ப்யூட்டரிலுள்ள தற்காலிக ஃபைல் டைரக்டரியின் இடத்தை மாற்றுதல்
கம்ப்யூட்டரிலுள்ள தற்காலிகச் சேமிப்பு ஃபைல் டைரக்டரியின் இடத்தை மாற்றலாம் என்றாலும் அதன் இயல்பான இடத்தையே பயன்படுத்துமாறு பரிந்துரைக்கிறோம். இடத்தைக் கட்டாயம் மாற்ற வேண்டும் என்றால்:
  1. கம்ப்யூட்டரில் Drive for desktop மெனு ஐகானை Drive நேரடி ஒத்திசைவு கிளிக் செய்து அதன் பிறகு அமைப்புகள் அதன் பிறகு விருப்பத்தேர்வுகள் அதன் பிறகு மேம்பட்ட அமைப்புகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  2. “கம்ப்யூட்டரிலுள்ள தற்காலிக ஃபைல் டைரக்டரி” என்பதைக் கண்டறியவும்.
  3. மாற்று என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. தற்காலிக ஃபைல் டைரக்டரிக்கான புதிய இடத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
  5. மாற்று என்பதைக் கிளிக் செய்யவும்.
முக்கியம்:
  • macOSஸிற்கான File Providerரில் இந்த அமைப்பு இயக்கப்படவில்லை.
  • கம்ப்யூட்டரிலுள்ள தற்காலிகச் சேமிப்பு ஃபைல் டைரக்டரியாக இவற்றை அமைக்க முடியாது:
    • மிரர் செய்யப்பட்ட ஃபோல்டரின் துணை ஃபோல்டர்.
    • ஸ்ட்ரீம் ஆகும் ஃபைல் இருக்குமிடத்தின் முதல்நிலை அல்லது துணை ஃபோல்டர்.

Microsoft Officeஸில் நிகழ்நேரப் பங்கேற்பை இயக்குதல் அல்லது முடக்குதல்

Microsoft Officeஸில் நிகழ்நேரப் பங்கேற்பு குறித்துத் தெரிந்துகொள்ளுங்கள்
நிகழ்நேரப் பங்கேற்பு மூலம் Drive for desktop ஆப்ஸில் சேமித்துள்ள Microsoft Word, Excel அல்லது PowerPoint ஃபைலில் ஒருவர் மாற்றங்களைச் செய்யும்போது அதை நீங்கள் தெரிந்துகொள்ள முடியும். Drive for desktop ஆப்ஸில் நிகழ்நேரப் பங்கேற்பு தானாகவே இயக்கப்பட்டிருக்கும். இதை ஒருவர் முடக்கினால், அந்த ஃபைலில் அவர் இருப்பதை உங்களால் பார்க்க முடியாது.

macOSஸில் நிகழ்நேரப் பங்கேற்பு அம்சத்தைப் பயன்படுத்துவதற்கு முன்பு உங்கள் சிஸ்டம் அனுமதிகளை மாற்ற வேண்டும்.

  1. Macகில் சிஸ்டம் விருப்பத்தேர்வுகள் என்பதைத் திறந்து அதன் பிறகு பாதுகாப்பு & தனியுரிமை அதன் பிறகு தனியுரிமை அதன் பிறகு அணுகலம்சங்கள் என்பதைத் திறக்கவும்.
  2. மாற்றங்களைச் செய்ய, கீழே உள்ள பூட்டைக் கிளிக் செய்யவும்.
  3. Google Drive பெட்டியைத் தேர்வுசெய்யவும்.
முக்கியம்: Microsoft Officeஸில் நிகழ்நேரப் பங்கேற்பு அம்சத்தைப் பயன்படுத்தித் திருத்த Office 2010 அல்லது அதற்குப் பிந்தைய பதிப்புகளைப் பயன்படுத்த வேண்டும்.

Microsoft Officeஸில் Drive for desktop ஆப்ஸைப் பயன்படுத்துவது குறித்து மேலும் அறிக.
நிகழ்நேரப் பங்கேற்பை முடக்குதல்
Drive for desktop ஆப்ஸில் நிகழ்நேரப் பங்கேற்பை நீங்கள் முடக்கலாம்.

முக்கியம்: ஒருவர் தனது நிகழ்நேரப் பங்கேற்பை முடக்கினால், அந்த ஃபைலில் அவர் வேலை செய்துகொண்டிருப்பது உங்களுக்குக் காட்டப்படாது.

  1. கம்ப்யூட்டரில் Drive for desktop மெனு ஐகானை Drive நேரடி ஒத்திசைவு கிளிக் செய்து அதன் பிறகு அமைப்புகள் அதன் பிறகு விருப்பத்தேர்வுகள் அதன் பிறகு மேம்பட்ட அமைப்புகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  2. “பகிரப்பட்ட Microsoft Office ஃபைலை யாரேனும் திருத்துகிறார்களா எனக் காட்டு” பெட்டியைத் தேர்வுநீக்கவும்.
  3. சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.

Google Photos அமைப்புகளைப் பிரத்தியேகமாக்குதல்

பதிவேற்ற அளவு குறித்துத் தெரிந்துகொள்ளுங்கள்
Google Photosஸில் படங்கள் மற்றும் வீடியோக்களுக்கான சேமிப்பகத் தரத்தை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். பின்வரும் இரண்டு சூழ்நிலையிலும் கம்ப்யூட்டரில் உள்ள படங்களிலும் வீடியோக்களிலும் எந்த மாற்றமும் செய்யப்படாது:
  • ‘ஸ்டோரேஜ் சேவர்’ உங்கள் படங்களின் தரத்தைச் சிறிதளவு குறைக்கும், ஆனால் குறைந்த சேமிப்பிடத்தைப் பயன்படுத்தும்.
  • ‘அசல் தரம்’ உங்கள் படங்கள் மற்றும் வீடியோக்களின் தரத்தையும் அளவையும் மாற்றாது.
  1. கம்ப்யூட்டரில் Drive for desktop மெனு ஐகானை Drive நேரடி ஒத்திசைவு கிளிக் செய்து அதன் பிறகு அமைப்புகள் அதன் பிறகு விருப்பத்தேர்வுகள் அதன் பிறகு மேம்பட்ட அமைப்புகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  2. “பதிவேற்ற அளவு” என்று குறிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளைக் கண்டறியவும்.
  3. உங்கள் விருப்பத்தேர்வைத் தேர்ந்தெடுக்கவும்:
    • ஸ்டோரேஜ் சேவர்
    • அசல் தரம்
macOSஸிற்கான சிஸ்டம் பட லைப்ரரி குறித்துத் தெரிந்துகொள்ளுங்கள்
  1. macOSஸில் Drive for desktop மெனு ஐகானை Drive நேரடி ஒத்திசைவு கிளிக் செய்து அதன் பிறகு அமைப்புகள் அதன் பிறகு விருப்பத்தேர்வுகள் அதன் பிறகு மேம்பட்ட அமைப்புகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  2. உங்கள் படங்களையும் வீடியோக்களையும் Google Photosஸில் தானாகப் பதிவேற்ற, “சிஸ்டம் பட லைப்ரரி” என்பதைத் தேர்வுசெய்யவும் அல்லது தேர்வுநீக்கவும்.
    • பெரிய அளவிலான தரவைப் பதிவேற்றவும் இடமாற்றவும் பெரிய லைப்ரரிகள் அதிக நேரம் எடுத்துக்கொள்ளும்.
ஃபைல் வகைகள் குறித்துத் தெரிந்துகொள்ளுங்கள்
  1. கம்ப்யூட்டரில் Drive for desktop மெனு ஐகானை Drive நேரடி ஒத்திசைவு கிளிக் செய்து அதன் பிறகு அமைப்புகள் அதன் பிறகு விருப்பத்தேர்வுகள் அதன் பிறகு மேம்பட்ட அமைப்புகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  2. RAW ஃபைல்களையும் ஸ்கிரீன்ஷாட்களையும் ஒத்திசைக்க அல்லது தவிர்க்க ஃபைல் வகைப் பெட்டிகளைத் தேர்வுசெய்யவும் அல்லது தேர்வுநீக்கவும்.

பொது அமைப்புகளைப் பிரத்தியேகமாக்குதல்

Google Drive தானாகத் தொடங்குவதை முடக்குதல்
இயல்பாகவே, கம்ப்யூட்டரில் நீங்கள் உள்நுழைந்த பிறகு Google Drive திறக்கும். அதை முடக்க:
  1. கம்ப்யூட்டரில் Drive for desktop மெனு ஐகானை Drive நேரடி ஒத்திசைவு கிளிக் செய்து அதன் பிறகு அமைப்புகள் அதன் பிறகு விருப்பத்தேர்வுகள் அதன் பிறகு மேம்பட்ட அமைப்புகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  2. “கம்ப்யூட்டரில் உள்நுழையும்போது Google Driveவைத் தொடங்கு” என்பதற்கு அடுத்துள்ள பெட்டியைத் தேர்வுநீக்கவும்.
ப்ராக்ஸி அமைப்புகள் குறித்துத் தெரிந்துகொள்ளுங்கள்
உங்கள் ஆப்ரேட்டிங் சிஸ்டத்தால் குறிப்பிடப்பட்டுள்ள ப்ராக்ஸி அமைப்புகளைப் பயன்படுத்த Google Drive “தானாகக் கண்டறி” பயன்முறையில் இயல்பாக இருக்கும். ப்ராக்ஸி அமைப்புகளைத் தவிர்க்க “நேரடி இணைப்பு” பயன்முறையையும் நீங்கள் பயன்படுத்தலாம்:
  1. கம்ப்யூட்டரில் Drive for desktop மெனு ஐகானை Drive நேரடி ஒத்திசைவு கிளிக் செய்து அதன் பிறகு அமைப்புகள் அதன் பிறகு விருப்பத்தேர்வுகள் அதன் பிறகு மேம்பட்ட அமைப்புகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  2. உங்கள் விருப்பத்தேர்வின் அடிப்படையில் தானாகக் கண்டறி அல்லது நேரடி இணைப்புப் பயன்முறையைத் தேர்ந்தெடுக்கவும்.
இணைய வேக அமைப்புகள் குறித்துத் தெரிந்துகொள்ளுங்கள்
Google Driveவின் பதிவிறக்க மற்றும் பதிவேற்ற விகிதத்திற்கு, அதிகபட்ச இணைய வேக வரம்பை நீங்கள் அமைக்கலாம்.
  1. கம்ப்யூட்டரில் Drive for desktop மெனு ஐகானை Drive நேரடி ஒத்திசைவு கிளிக் செய்து அதன் பிறகு அமைப்புகள் அதன் பிறகு விருப்பத்தேர்வுகள் அதன் பிறகு மேம்பட்ட அமைப்புகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  2. “பதிவிறக்க விகிதம்” அல்லது “பதிவேற்ற விகிதம்” என்பதற்கு அடுத்துள்ள பெட்டியைக் கிளிக் செய்யவும்.
  3. மதிப்புகளை டைப் செய்யவும்:
    • மதிப்புகள் 1 முதல் 1,00,000,000 என்ற வரம்பிற்கு இடையில் இருக்கலாம்.
    • அலகு, வினாடிக்கு இத்தனை கிலோபைட் என்பதாக இருக்கும்.
ஷார்ட்கட் பட்டனை அமைத்தல்
  1. கம்ப்யூட்டரில் Drive for desktop மெனு ஐகானை Drive நேரடி ஒத்திசைவு கிளிக் செய்து அதன் பிறகு அமைப்புகள் அதன் பிறகு விருப்பத்தேர்வுகள் அதன் பிறகு மேம்பட்ட அமைப்புகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  2. “ஷார்ட்கட் பட்டனை உள்ளமை” என்பதன் கீழே பட்டன்களின் சேர்க்கை வார்த்தையைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. பட்டன்களின் சேர்க்கையை டைப் செய்யவும்.
அறிவிப்பு விருப்பத்தேர்வுகள் குறித்துத் தெரிந்துகொள்ளுங்கள்
  1. கம்ப்யூட்டரில் Drive for desktop மெனு ஐகானை Drive நேரடி ஒத்திசைவு கிளிக் செய்து அதன் பிறகு அமைப்புகள் அதன் பிறகு விருப்பத்தேர்வுகள் அதன் பிறகு மேம்பட்ட அமைப்புகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  2. அறிவிப்பு அமைப்புகள் என்பதன் கீழ் “சாதனங்களின் தரவைக் காப்புப் பிரதி எடுக்க எனக்கு நினைவூட்டு” என்பதைத் தேர்வுசெய்யவும் அல்லது தேர்வுநீக்கவும்:
    • இது இயக்கப்பட்டிருந்தால் காப்புப் பிரதி எடுப்பதற்கான ஃபிளாஷ் டிரைவ், கேமரா போன்ற USB சாதனத்தைக் கண்டறியும்போது அறிவிப்புகளை Google Drive காட்டும். அறிவிப்பில் இதுபோன்ற அகற்றத்தக்க சாதனத்தைத் தவிர்க்குமாறு தேர்வுசெய்தால் உங்கள் விருப்பத்தேர்வை Drive நினைவில் வைத்துக்கொண்டு இவற்றை "புறக்கணிக்கப்பட்ட USB சாதனங்கள்" என்பதில் பட்டியலிடும்.
Drive for desktop ஆப்ஸை நிறுவல் நீக்குதல்
  1. கம்ப்யூட்டரில் Drive for desktop ஆப்ஸில் இருந்து வெளியேறவும்.
  2. Drive for desktop மெனு ஐகானை Drive நேரடி ஒத்திசைவு கிளிக் செய்து அதன் பிறகு அமைப்புகள் அதன் பிறகு விருப்பத்தேர்வுகள் அதன் பிறகு மேம்பட்ட அமைப்புகள் அதன் பிறகு கணக்கின் இணைப்பை நீக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. காட்டப்படும் பாப்-அப் சாளரத்தில் சரி என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. Drive for desktop மெனு ஐகானை Drive நேரடி ஒத்திசைவு கிளிக் செய்து அதன் பிறகு அமைப்புகள் அதன் பிறகு வெளியேறு என்பதைக் கிளிக் செய்யவும்.
  5. கம்ப்யூட்டரில் இருந்து Drive for desktop ஆப்ஸை நிறுவல் நீக்க வழக்கமான நடைமுறைகளைப் பின்பற்றவும்.
    • உதவி தேவைப்பட்டால் உங்கள் கம்ப்யூட்டருக்கான OS வழிமுறைகளைப் பார்க்கவும்.
உதவிக்குறிப்பு: Drive for desktop ஆப்ஸை நிறுவல் நீக்கினாலும் Driveவின் இணையப் பதிப்பில் தொடர்ந்து உங்கள் ஃபைல்களைத் திறக்கலாம்.

உதவிக்குறிப்பு: பணி, பள்ளி போன்ற நிறுவனக் கணக்குகளின் மூலம் Drive for Desktop ஆப்ஸைப் பயன்படுத்தினால் சில அமைப்புகளை உங்கள் நிர்வாகி நிர்வகிக்கலாம் அல்லது கட்டுப்படுத்தலாம். நிர்வாகி நிர்வகிக்கும் அமைப்புகள் குறித்து மேலும் அறிக.

தொடர்புடைய தகவல்கள்

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
5786272925561936278
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
99950
false
false