Drive for desktop மூலம் ஃபைல்களை ஸ்ட்ரீமிங் மற்றும் மிரரிங் செய்தல்

Drive for desktop ஆப்ஸில் உங்கள் ஃபைல்களை ஒத்திசைக்க மிரரிங்கையும் ஸ்ட்ரீமிங்கையும் பயன்படுத்தலாம்.

  • நம்பகமான இணைய இணைப்பு இருக்கும்பட்சத்தில், பெரும்பாலான பயனர்கள் தங்கள் கம்ப்யூட்டரில் உள்ள Google Drive ஃபைல்களில் பணியாற்ற ஸ்ட்ரீமிங் முறையையே தேர்வுசெய்கிறார்கள். ஃபைல்கள் முதன்மையாகக் கிளவுடில் சேமிக்கப்பட்டிருக்கும். எனினும் அவை ஆஃப்லைனிலும் அணுகக் கிடைக்கும்.
  • மிரரிங் மூலம் சாதனத்தில் உங்கள் 'எனது Drive' ஃபைல்கள் எங்கே காட்டப்பட வேண்டும் என்பதைத் தேர்வுசெய்யலாம் அல்லது சாதனத்தில் உள்ள ஃபைல்களைக் கிளவுடிற்குக் காப்புப் பிரதி எடுக்கலாம். மிரரிங் செய்யப்படும் ஃபைல்கள் எப்போதும் கம்ப்யூட்டர் மற்றும் கிளவுடு என இரண்டு இடங்களிலும் சேமிக்கப்படும். மேலும் அவை எப்போதும் ஆஃப்லைனிலும் அணுகக் கிடைக்கும்.

ஸ்ட்ரீமிங் அல்லது மிரரிங் செய்யப்படும் உங்கள் ஃபைல்களில் ஏதேனும் ஒரு சாதனத்தில் நீங்கள் செய்யும் மாற்றங்கள் மற்ற அனைத்து இடங்களிலும் பிரதிபலிக்கும். இரண்டு முறைகளிலும், Google Driveவில் உள்ள உங்கள் அனைத்து ஃபைல்களையும் ஃபோல்டர்களையும் Drive for desktop ஆப்ஸ் மூலம் டெஸ்க்டாப்பிலிருந்தே அணுகலாம். 

ஸ்ட்ரீமிங் அல்லது மிரரிங் இடையே நீங்கள் பயன்படுத்த ஏற்ற முறையைத் தீர்மானிக்க, பின்வரும் அட்டவணையைப் பயன்படுத்துங்கள்: 

  ஸ்ட்ரீமிங் மிரரிங்
உயர் நிலைப் பயன்பாட்டின்போது இணைய இணைப்பு தேவை. ஹார்டு டிரைவ் பயன்பாட்டைக் குறைக்கும். உள்ளடக்கத்தைக் கிளவுடில் பாதுகாப்பாகச் சேமிக்கும். இணைய இணைப்பு இல்லாதபோதும் Drive for desktop ஆப்ஸ் இயங்காதபோதும் கூட உங்கள் கிளவுடு ஃபைல்களை அணுகலாம்.
சேமிப்பகம் ஃபைல்களும் ஃபோல்டர்களும் கிளவுடில் சேமிக்கப்படும். கம்ப்யூட்டரில் நீங்கள் வேலை செய்யும் ஃபைல்களுக்கும், சமீபத்திய மற்றும் அடிக்கடி பயன்படுத்தும் ஃபைல்களுக்கும் மட்டுமே சாதனச் சேமிப்பகம் பயன்படுத்தப்படும். ஃபைல்களும் ஃபோல்டர்களும் கிளவுடு, சாதனத்தின் ஹார்டு டிரைவ் என இரண்டிலும் சேமிக்கப்படும்.
கிடைக்கும் நிலை மற்றும் அணுகல்
  • Drive for desktop மூலம் குறிப்பாக ஆஃப்லைனில் கிடைக்கும்படி செய்யப்படாத வரை ஃபைல்கள் ஆன்லைனில் மட்டுமே கிடைக்கும்.
  • macOSஸில் Finder மூலமும் Windowsஸில் File Explorer மூலமும் ஃபைல்களை அணுகலாம்.
  • Drive for desktop ஆப்ஸ் இயங்கும்போது மட்டுமே ஃபைல்களை அணுக முடியும்.
  • ஃபைல்கள் ஆஃப்லைனிலும் ஆன்லைனிலும் கிடைக்கும்.
  • macOSஸில் Finder மூலமும் Windowsஸில் File Explorer மூலமும் ஃபைல்களை அணுகலாம்.
ஆதரிக்கப்படும் இயக்கக வகைகள் பகிர்ந்த இயக்ககங்கள், பிற கம்ப்யூட்டர்கள், காப்புப் பிரதி எடுக்கப்பட்ட USB சாதனங்கள் ஆகியவற்றில் உள்ள ஃபைல்களை ஸ்ட்ரீமிங் மட்டுமே செய்ய முடியும். 'எனது Driveவை' ஸ்ட்ரீமிங் அல்லது மிரரிங் செய்யலாம். சாதனத்தில் உள்ள ஃபோல்டர்களையும் டெஸ்க்டாப்பில் உள்ளவற்றையும் மிரரிங் மட்டுமே செய்ய முடியும். 'எனது Driveவை' ஸ்ட்ரீமிங் அல்லது மிரரிங் செய்யலாம்.
ஆப்ஸ் மீதான தாக்கம் சில ஆப்ஸ் பல APIகளை இணைத்துப் பயன்படுத்துவதால் ஃபைல்களை ஸ்ட்ரீமிங் செய்வது கடினமாகலாம். அதிகளவில் எழுதுவது, வீடியோ எடிட்டிங் அல்லது உயர் தெளிவுத்திறன் கொண்ட பட எடிட்டிங் ஆகியவற்றைச் செய்யும் ஆப்ஸ், மிரர் செய்யப்படும் ஃபைல்களில் வேகமாக இயங்கும்.
 

கவனத்திற்கு: 

  • 'எனது Drive' பிரிவில் உள்ள ஃபைல்களை மிரரிங் செய்ய வேண்டுமா ஸ்ட்ரீமிங் செய்ய வேண்டுமா என்பதை நீங்கள் தேர்வுசெய்யலாம்.
  • உங்கள் சாதனத்தில் உள்ள மற்ற ஃபோல்டர்களை மிரரிங் மட்டுமே செய்ய முடியும் மேலும் அறிக.
  • பகிர்ந்த இயக்ககங்களை ஸ்ட்ரீமிங் மட்டுமே செய்ய முடியும். 
  • macOSஸின் சமீபத்திய பதிப்புகளில் ஸ்ட்ரீமிங் மாறுபடலாம். macOSஸில் ஃபைல் ஸ்ட்ரீமிங் குறித்துத் தெரிந்துகொள்ளுங்கள்.

எனது Driveவை ஸ்ட்ரீமிங் அல்லது மிரரிங் செய்தல்

  1. Drive for desktop ஆப்ஸைத் திறக்கவும்.
  2. அமைப்புகள் அமைப்புகள் அதன் பிறகு விருப்பத்தேர்வுகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. இடதுபுறத்தில் உள்ள 'Drive ஃபோல்டர்கள்' என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. "எனது Driveவின் ஒத்திசைவு விருப்பங்கள்" என்பதற்குக் கீழேயுள்ள ஃபைல்களை ஸ்ட்ரீம் செய் என்பதையோஃபைல்களை மிரர் செய் என்பதையோ தேர்ந்தெடுக்கவும்.
மிரரிங்கில் இருந்து ஸ்ட்ரீமிங்கிற்கு மாற்றும்போது
  • கம்ப்யூட்டரில் உங்கள் ஃபைல் இருப்பிடம் மாறும். 
    • ஸ்ட்ரீமிங் செய்யும்போது ஃபைல்கள் உங்கள் கம்ப்யூட்டரில் ஒரு விர்ச்சுவல் Driveவில் இருக்கும்.
    • மிரரிங் செய்யும்போது ஃபைல்கள் உங்கள் கம்ப்யூட்டரில் ஒரு ஃபோல்டரில் இருக்கும். 
  • மிரரிங் செய்யப்பட்ட 'எனது Drive' ஃபைல்கள் இருக்கும் ஃபோல்டர் இனி ஒத்திசைக்கப்படாது.

மிரரிங்கில் இருந்து ஸ்ட்ரீமிங்கிற்கு மாற்ற:

  1. Drive for desktop ஆப்ஸைத் திறக்கவும்.
  2. உங்கள் சாதனத்தில் உள்ள ஃபைல்கள் கிளவுடில் முழுமையாக ஒத்திசைக்கப்பட்டுள்ளதை உறுதிசெய்துகொள்ளவும்.
  3. அமைப்புகள் அமைப்புகள் அதன் பிறகு விருப்பத்தேர்வுகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. இடதுபுறத்தில் உள்ள 'Drive ஃபோல்டர்கள்' என்பதைக் கிளிக் செய்யவும்.
  5. "எனது Driveவின் ஒத்திசைவு விருப்பங்கள்" என்பதற்குக் கீழேயுள்ள ஃபைல்களை ஸ்ட்ரீம் செய் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  6. Drive for desktop ஆப்ஸை மூடவும்.
  7. மிரரிங் செய்யப்பட்ட ஃபோல்டரை நீக்கவும்.

கவனத்திற்கு:

  • தரவு இழப்பைத் தவிர்க்க, ஃபோல்டர்களை நீக்குவதற்கு அல்லது நகர்த்துவதற்கு முன்பு உங்கள் ஃபைல்கள் முழுமையாக ஒத்திசைக்கப்பட்டிருப்பதை உறுதிசெய்துகொள்ளவும்.
  • Windowsஸில் ஏற்கெனவே மிரரிங் செய்யப்பட்ட 'எனது Drive' ஃபைல்கள் உள்ள ஃபோல்டரை கம்ப்யூட்டரில் இருந்து அகற்றும் முன், Drive for desktop ஆப்ஸில் இருந்து நீங்கள் வெளியேற வேண்டும்.
ஸ்ட்ரீமிங்கில் இருந்து மிரரிங்கிற்கு மாற்றும்போது
 
  • நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஃபோல்டரில் 'எனது Drive' ஃபைல்கள் பதிவிறக்கப்படும். 
  • தேர்ந்தெடுக்கப்படும் ஃபோல்டரில் ஏற்கெனவே ஃபைல்கள் இருந்தால் கிளவுடில் ஏற்கெனவே இருக்கும் ஃபைல்களை நகலெடுக்காமல் இருக்க Drive for desktop முயலும். 
    • கிளவுடில் இருப்பவற்றுடன் ஃபைலில் உள்ள உள்ளடக்கம் வேறுபட்டால் இரண்டு பதிப்புகளையும் Drive for desktop சேமிக்கும்.
  • கிளவுடில் ஏற்கெனவே இல்லாத ஃபைல்கள் பதிவேற்றப்படும்.
  • Google Drive ஸ்ட்ரீம் ஆகும் ஃபைல் இருக்குமிடம் புதுப்பிக்கப்பட்டு, அதில் 'எனது Drive' ஃபோல்டருக்கான புதிய ஷார்ட்கட் காட்டப்படும். 
  • பகிர்ந்த இயக்ககங்கள், பிற கம்ப்யூட்டர்கள், காப்புப் பிரதி எடுக்கப்பட்ட USB சாதனங்கள் ஆகியவை தொடர்ந்து காட்டப்படும். அவற்றை இப்போதும் ஸ்ட்ரீமிங் செய்யலாம்.

ஸ்ட்ரீமிங்கில் இருந்து மிரரிங்கிற்கு மாற்ற:

  1. Drive for desktop ஆப்ஸைத் திறக்கவும்.
  2. அமைப்புகள் அமைப்புகள் அதன் பிறகு விருப்பத்தேர்வுகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. இடதுபுறத்தில் உள்ள 'Drive ஃபோல்டர்கள்' என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. "எனது Driveவின் ஒத்திசைவு விருப்பங்கள்" என்பதற்குக் கீழேயுள்ள ஃபைல்களை மிரர் செய் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  5. Drive for desktop ஆப்ஸை மூடவும்.
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
15798549928843629105
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
99950
false
false