macOSஸில் Drive for desktop ஆப்ஸைப் பயன்படுத்துதல்

macOSஸில் Drive for desktop ஆப்ஸ் மூலம் நீங்கள் இவற்றைச் செய்யலாம்:

  • Finderரில் இருந்து Driveவை அணுகலாம்
  • சாதனத்திலும் கிளவுடிலும் இருக்கும் ஃபைல்களை ஒத்திசைக்கலாம்

முக்கியம்:

ஃபைல்களை ஒத்திசைக்க macOSஸுக்கு அனுமதி வழங்குதல்

சில ஃபைல்களை ஒத்திசைக்கும்போது ஃபோல்டர்களையும் சாதனங்களையும் அணுக macOSஸுக்கு நீங்கள் அனுமதி வழங்க வேண்டியிருக்கலாம். அத்தகைய ஃபோல்டர்களிலும் சாதனங்களிலும் இவை அடங்கும்: 

  • டெஸ்க்டாப், ஆவணங்கள், பதிவிறக்கங்கள் ஆகிய ஃபோல்டர்கள்
  • அகற்றக்கூடிய மற்றும் நெட்வொர்க் சேமிப்பகங்கள்
  • உங்கள் Photos லைப்ரரி

Drive for desktop ஆப்ஸுக்கு இவற்றுக்கான அனுமதி தேவை: 

  • Google Driveவில் ஒத்திசைக்கும் அல்லது Google Photosஸுக்குக் காப்புப் பிரதி எடுக்கும் ஃபோல்டர்கள் அல்லது சாதனங்களை அணுகுதல்
  • உள்நுழைய நிகழ்நேரப் பங்கேற்பு அல்லது புளூடூத் விசையைப் பயன்படுத்துதல்

தொடக்கத்தில் அனுமதி வழங்காமல் பின்னர் ஒரு ஃபோல்டரையோ சாதனத்தையோ ஒத்திசைக்கத் தேர்வுசெய்தால் "சிஸ்டம் விருப்பத்தேர்வுகள்" என்பதற்குச் சென்று தனியுரிமை அமைப்புகளை மாற்றவும். 

  1. கம்ப்யூட்டரில், மேல் இடது மூலையில் உள்ள Apple Apple மெனு அதன் பிறகு சிஸ்டம் அமைப்புகள் அதன் பிறகு தனியுரிமை மற்றும் பாதுகாப்பு என்பதைக் கிளிக் செய்யவும்.
  2. ஃபைல்களும் ஃபோல்டர்களும் அல்லது Photos என்பதைத் திறக்கவும்.
  3. அனுமதியை வழங்கவும். 

உதவிக்குறிப்பு: மாற்றங்கள் செயல்படுத்தப்பட Drive for desktop ஆப்ஸையோ கம்ப்யூட்டரையோ மீண்டும் தொடங்க வேண்டியிருக்கலாம். 

Drive ஃபைல்களை ஸ்ட்ரீம் செய்ய File Providerரைப் பயன்படுத்துதல்

Drive for desktop ஆப்ஸ் மூலம் ஃபைல்களை ஸ்ட்ரீம் செய்ய macOS 12.1 அல்லது அதற்குப் பிந்தைய பதிப்புகளைப் பயன்படுத்தினால், Drive போன்ற கிளவுடு ஃபைல் சிஸ்டங்களுக்கு உள்ளமைக்கப்பட்ட ஆதரவை வழங்க macOSஸின் File Provider தொழில்நுட்பத்தை Drive for desktop ஆப்ஸ் பயன்படுத்தும்.

File Providerரை நீங்கள் பயன்படுத்துவதை உறுதிப்படுத்துதல்

நீங்கள் File Providerரைப் பயன்படுத்துவதை உறுதிசெய்ய:

  1. Drive for desktop ஆப்ஸைத் திறக்கவும்.
  2. அமைப்புகள் அமைப்புகள் அதன் பிறகு விருப்பத்தேர்வுகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. மேல் வலதுபுறத்தில் அமைப்புகள் அமைப்புகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. "ஃபைல்களை Google Drive ஸ்ட்ரீம் செய்யும் இடம்" என்பதன் கீழ் "ஃபோல்டரின் இருப்பிடத்தை macOS கட்டுப்படுத்துகிறது" என்ற அறிவிப்பு இருப்பதை உறுதிசெய்துகொள்ளவும்.

உதவிக்குறிப்பு: Drive for desktop ஆப்ஸில் காட்டப்பட்ட அறிவிப்பில் “மேலும் அறிக” இணைப்பைக் கிளிக் செய்து இந்தப் பக்கத்திற்கு வந்திருந்தால், File Providerரைப் பயன்படுத்துகிறீர்கள் என அர்த்தம்.

Google Driveவை இயக்குமாறு ஏன் கேட்கப்படுகிறது என்பதைப் பற்றித் தெரிந்துகொள்ளுதல்

Google Driveவை இயக்க வெளிப்படையான ஒப்புதலை அளிக்க வேண்டும். ஒப்புதல் அளிக்க:

  1. Finderரைத் திறக்கவும்.
  2. இடதுபுறத்தில் "இருப்பிடங்கள்" என்பதன் கீழ் உள்ள Google Drive என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. மேல் வலதுபுறத்தில் உள்ள இயக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.

பாப்-அப் சாளரத்தில் சரி என்பதைக் கிளிக் செய்தும் அனுமதிகளை வழங்கலாம். 

நீங்கள் Google Driveவை இயக்கவில்லை என்றால் Google Drive for desktop ஆப்ஸ் மூலம் உங்கள் ஃபைல்களை ஸ்ட்ரீம் செய்ய முடியாது. 

ஸ்ட்ரீம் செய்யப்படும் ஃபைல்களை File Providerரில் எங்கே கண்டறியலாம்?

ஸ்ட்ரீம் செய்யப்படும் ஃபைல்களைக் கண்டறிய:

  1. Finderரைத் திறக்கவும்.
  2. இடதுபுறத்தில் "இருப்பிடங்கள்" என்பதன் கீழ் உள்ள Google Drive என்பதைக் கிளிக் செய்யவும்.

நீங்கள் பயன்படுத்தும் வரை ஃபைல்கள் பதிவிறக்கப்படாது. பதிவிறக்கப்படாத ஃபைல்கள் கிளவுடு ஐகானுடன் குறிக்கப்பட்டிருக்கும்.

உதவிக்குறிப்புகள்: 

  • மேம்பட்ட பயன்பாட்டு நிகழ்வுகளில் (எ.கா. டெர்மினல்), உங்கள் ஃபைல்களை ~/Library/CloudStorage என்பதில் பார்க்கலாம். 
  • ஆப்ஸின் சமீபத்திய ஃபைல் பட்டியலில் இருப்பவற்றை ஸ்பாட்லைட் தேடல் அல்லது Finder மூலம் புதிய இடங்களில் இருந்து அணுகும் வரை அவை திறக்கப்படாது. Drive for desktop ஆப்ஸின், ஸ்ட்ரீம் செய்வதற்கான டிரைவை குறிக்கும் ஃபைல் தடங்களை வெளிப்படையாகப் பயன்படுத்தும் வகையில் ஆப்ஸை உள்ளமைத்திருந்தால் அவற்றை முன்பு போலவே தொடர்ந்து பயன்படுத்த அந்தத் தடங்களை நீங்களே நேரடியாக மாற்ற வேண்டும். 
  • உள்ளடக்கம் தற்காலிகமாகச் சேமிக்கப்படும் இடமாக இரண்டாம் நிலைச் சேமிப்பகத்தை முன்பு உள்ளமைத்திருந்தால் முகப்புத் தகவலகம் இருக்கும் அதே சேமிப்பகத்திற்கு உங்கள் உள்ளடக்கம் நகர்த்தப்படும்.

என்னிடம் ஏற்கெனவே உள்ள செயல்பாடுகளிலிருந்து இந்தச் செயல்பாடு எவ்வாறு வேறுபடுகிறது?

  • ஃபைல்கள் வேறொரு இருப்பிடத்திலிருந்து அணுகப்படுகின்றன, இதை macOS கட்டுப்படுத்துகிறது (மேலே காண்க).
  • Finder பக்கப்பட்டியில் இருக்கும் இணைப்பு ‘பிடித்தவை’ என்பதில் இருந்து ‘இருப்பிடங்கள்’ என்பதற்கு நகர்த்தப்படும். நீங்கள் இணைப்பை அகற்றினால் Finder விருப்பத்தேர்வுகளில் அதை மீண்டும் சேர்க்கலாம்.
  • இயல்பாகவே, Google Drive ஃபோல்டரில் இருப்பவற்றை அங்கிருந்து உள்ளேயும் வெளியேயும் இழுத்தால் அவை நகலெடுப்பதற்குப் பதிலாக நகர்த்தப்படும். 
  • பதிவிறக்கம் செய்த ஃபைல்கள் உட்பட Driveவில் சில பகுதிகளில் உள்ளவற்றை மட்டுமே ஸ்பாட்லைட் தேடலில் கண்டறிய முடியும். உங்கள் Driveவில் உள்ள அனைத்திலும் தேட, Drive for desktop தேடல் கருவி அல்லது Driveவின் இணையதளத்தைப் பயன்படுத்தவும்.
  • ஒத்திசைவு இடைநிறுத்தப்பட்டால் ஃபைல்களைப் பதிவிறக்க முடியாது.
  • பதிவிறக்கம் செய்தவற்றையும் சாதனத்தில் உள்ள ஃபைல்களையும் Drive for desktop ஆப்ஸ் இயங்காதபோதும் அணுகலாம்.
  • டிஸ்க் சேமிப்பிடத்தின் அளவைப் பொறுத்து தற்காலிகமாகச் சேமிப்பது வரையறுக்கப்படுகிறது. சேமிப்பிடத்தைக் காலியாக்க, அகற்றப்பட்ட பைல்களை OS தானாகவே அகற்றிவிடும். ஸ்ட்ரீம் செய்யப்படும் ஃபைல்களுக்கான தற்காலிக உள்ளடக்கச் சேமிப்பு குறித்துத் தெரிந்துகொள்ளுங்கள்.
  • பதிவிறக்கம் செய்த ஃபைல்களுக்கு மட்டுமே QuickLook மாதிரிக்காட்சிகள் காட்டப்படும், அதாவது கிளவுடு ஐகான் இல்லாத ஃபைல்கள்.
File Providerரைப் பயன்படுத்தும்போது இழுத்துவிடும் செயல்பாடு குறித்து அறிந்துகொள்ளுதல்

இரண்டு இடங்களும் ஒரே டிஸ்க் சேமிப்பகத்தில் இருக்கும்பட்சத்தில், ஃபோல்டரையோ ஃபைலையோ Finderருக்குள் இழுத்து விட்டால் அந்த ஃபோல்டர்/ஃபைல் அதன் அசல் இடத்திலிருந்து புதிய இடத்திற்கு நகரும். அதை Drive for desktop ஃபைல் ஸ்ட்ரீம் ஆகும் இடத்திற்கு உள்ளே அல்லது வெளியே இழுத்தாலும் இதில் எந்த மாற்றமும் இருக்காது.

உதவிக்குறிப்பு: ஃபைலையோ ஃபோல்டரையோ நகலெடுக்க, Option பட்டனை  அழுத்திப் பிடித்துக்கொண்டே அந்த ஃபைல்/ஃபோல்டரை வேறொரு இடத்திற்கு இழுத்து விடவும்.

File Providerரைத் தொடங்கும்போது ஏற்படும் சிக்கலைப் பிழையறிந்து திருத்துதல்

File Providerரைத் திறக்கும்போது பிழை ஏற்பட்டால் Google Drive வேலை செய்யாது. இந்தப் பிழை macOS காரணமாக ஏற்பட்டுள்ளது. இந்தப் பிழை ஏற்பட்டால்:

  1. உங்கள் macOS ஆப்ரேட்டிங் சிஸ்டத்தைச் சமீபத்திய பதிப்பிற்குப் புதுப்பிக்கவும்
  2. கம்ப்யூட்டரை மீண்டும் தொடங்கவும்

தொடர்புடைய தகவல்கள்:

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
10057917151456768771
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
99950
false
false