Google Driveவில் ஸ்கிரீன் ரீடரைப் பயன்படுத்துதல்

Google Drive மூலம் மொபைல், டேப்லெட், கம்ப்யூட்டர் ஆகியவற்றில் ஃபைல்களையும் ஃபோல்டர்களையும் சேமிக்கலாம், பகிரலாம், அவற்றில் கூட்டுப்பணி செய்யலாம்.

இந்தக் கட்டுரையில் பல பிரிவுகள் உள்ளன. குறிப்பிட்ட பிரிவுக்கு உடனடியாகச் செல்ல அதற்கான விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்:

  • தொடங்குதல்
  • ஸ்கிரீன் ரீடரைப் பயன்படுத்தி Google Driveவில் பொதுவான பணிகளைச் செய்தல்
    • ஃபைலைத் திறத்தல்
    • பட்டியல் காட்சியின் தளவமைப்பை மாற்றுதல்
    • மீடியாவைப் பிளே செய்தல்
    • பரிந்துரைக்கப்படும் ஃபைல்களைப் பயன்படுத்துதல்
    • பட்டியல் காட்சியில் இருப்பவற்றை மாற்றுதல்
    • ஃபைல்களைத் தேடுதல்
    • ஃபைல்களைக் கண்டறிவதற்கான விரைவான வழிகள்
    • ஃபோல்டர்களையும் ஃபைல்களையும் உருவாக்குதல்
    • ஃபைல்களையும் ஃபோல்டர்களையும் ஒழுங்கமைத்தல்
    • ஃபைல்களையும் ஃபோல்டர்களையும் பகிர்தல்
    • அமைப்புகளை நிர்வகித்தல்
    • உதவி பெறுதல்

தொடங்குதல்

பரிந்துரைக்கப்படும் உலாவிகளும் ஸ்கிரீன் ரீடர்களும்

கம்ப்யூட்டரில் பின்வரும் உலாவிகளிலும் ஸ்கிரீன் ரீடர்களிலும் Google Drive சிறப்பாக இயங்கும்:

பிளாட்ஃபார்ம்

உலாவி

ஸ்கிரீன் ரீடர்

Chrome OS

Chrome

ChromeVox

Windows

Chrome (பரிந்துரைக்கப்படுகிறது)

Firefox

JAWS அல்லது NVDA

Mac

Chrome (பரிந்துரைக்கப்படுகிறது)

Safari

VoiceOver

Getting started with Google Drive using a screen reader

 

Firefoxஸில் NVDA மூலம் Google Driveவை எப்படிப் பயன்படுத்தத் தொடங்குவது என்று இந்த வீடியோ விளக்குகிறது.

Drive for desktop ஆப்ஸைத் தானாக ஒத்திசைத்தல்

கம்ப்யூட்டரில் உள்ள Drive ஃபைல்களை இணையத்தில் உள்ள Drive ஃபைல்களுடன் தானாக ஒத்திசைக்கலாம்.

Drive for desktop ஆப்ஸை நிறுவியதும் உங்கள் கம்ப்யூட்டரில் Google Drive ஃபோல்டருக்குச் செல்லவும். வழக்கமான ஸ்கிரீன் ரீடர் விசைஎழுத்துக்குறிகளைப் பயன்படுத்தவும்.

ஃபைல் அல்லது ஃபோல்டருக்குச் செல்ல:

  1. ஃபைல் அல்லது ஃபோல்டர் பெயரின் முதல் எழுத்தை டைப் செய்யவும்.
  2. ஃபைல்களை வெட்டி வெவ்வேறு ஃபோல்டர்களில் ஒட்டவும்.

Drive for desktop ஆப்ஸை நிறுவுவது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

Google Docs, Sheets மற்றும் Slides

Docs, Sheets, Slides, Forms ஆகியவற்றைப் பயன்படுத்தத் தொடங்க, ஸ்கிரீன் ரீடர் மூலம் டாக்ஸ் எடிட்டரைப் பயன்படுத்துவது எப்படி என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.

Android சாதனங்களில் Google Driveவில் பயன்படுத்தக்கூடிய ஸ்கிரீன் ரீடர்கள்

TalkBack, BrailleBack, Switch Access போன்ற அணுகல்தன்மை அம்சங்களின் மூலம் உங்கள் Android சாதனத்தில் Driveவைப் பயன்படுத்தலாம்.

உங்கள் Android சாதனத்துடன் USB அல்லது புளூடூத் கீபோர்டைப் பயன்படுத்தினால் கீபோர்ட் ஷார்ட்கட்களை நீங்கள் பயன்படுத்தலாம். Driveவிற்கான கீபோர்டு ஷார்ட்கட்களைப் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்.

TalkBackகைப் பயன்படுத்தினால்:

  • Driveவில் ஒரு ஃபைலைத் திறக்க:
  1. ஃபைலை ஃபோகஸ் செய்யும் வகையில் தட்டவும் அல்லது ஸ்வைப் செய்யவும்.
  2. அதைத் திறக்க இருமுறை தட்டவும்.
  • ஃபைல்களைப் பெயர் மாற்றுவது, நகர்த்துவது போன்ற பிற செயல்களைச் செய்ய:
  1. ஃபைலை ஃபோகஸ் செய்யும் வகையில் தட்டவும் அல்லது ஸ்வைப் செய்யவும்.
  2. அதைத் தேர்ந்தெடுக்க இருமுறை தட்டிப் பிடிக்கவும்.
  3. கருவிப்பட்டியில் கூடுதல் செயல்கள் என்பதைத் திறக்கவும்.
  4. ஒரு விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

Androidக்கான அணுகல்தன்மை உதவி மையத்தில் மேலும் தெரிந்துகொள்ளுங்கள்.

iOSஸில் உள்ள Google Driveவில் பயன்படுத்தக்கூடிய ஸ்கிரீன் ரீடர்கள்

VoiceOver ஸ்கிரீன் ரீடர் மூலம் உங்கள் iPhone அல்லது iPadல் Driveவைப் பயன்படுத்தலாம்.

VoiceOverரை இயக்க:

  1. iPhone அல்லது iPadல் அமைப்புகளைத் திறக்கவும்.
  2. பொது அதன் பிறகு அணுகல்தன்மை அதன் பிறகு VoiceOver என்பதைத் தட்டவும்.
  3. அதன்பிறகு VoiceOver ஸ்கிரீன் ரீடரை இயக்கவும்.

மேலும் தெரிந்துகொள்ள iPhoneனில் Apple அணுகல்தன்மை என்பதைப் பார்க்கவும்.

Google Driveவை வெப் ஆப்ஸாகப் பயன்படுத்துதல்

ஸ்கிரீன் ரீடர் மூலம் Google Driveவில் உலாவ அமைக்கும்போதுஇணையப் பக்கம்” என்பதற்குப் பதிலாகவெப் ஆப்ஸ்” ஆக அமைக்கும்படி பரிந்துரைக்கிறோம்.

Google Driveவை வெப் ஆப்ஸாகப் பயன்படுத்தும்போது Google Drive கீபோர்டு ஷார்ட்கட்கள் மூலம் Google Driveவில் மிகவும் எளிதாக உலாவலாம். உதாரணத்திற்கு நீங்கள்:

  • புதியவற்றை உருவாக்குவதற்காக ‘புதிது’ மெனுவைத் திறக்க c பட்டனை அழுத்தலாம்.
  • Driveவில் தேடத் தொடங்க / பட்டனை அழுத்தலாம்.
  • ஃபைல் உள்ள பகுதிக்குச் செல்ல g அழுத்திவிட்டு n பட்டனை அழுத்தலாம்.

Google Driveவில் பயன்படுத்துவதற்கு ஸ்கிரீன் ரீடரை அமைத்தல்

ஸ்கிரீன் ரீடரை அமைக்க, கீழே உள்ள வழிமுறைகளைப் பின்பற்றவும்:

  • JAWS: விர்ச்சுவல் கர்சரை முடக்க, அது ஆஃப் ஆகும் வரை Insert + z அழுத்தவும்.
  • NVDA: ஃபோகஸ் பயன்முறைக்கு மாற Insert + Space அழுத்தவும்.
  • ChromeVox: ஒற்றை விசைப் பயன்முறை முடக்கப்பட்டுள்ளதை உறுதிசெய்யவும். அதை முடக்க தேடல் விசையை இருமுறை அழுத்தவும்.
  • VoiceOver: QuickNav முடக்கப்பட்டுள்ளதை உறுதிசெய்யவும். “QuickNav முடக்கப்பட்டது” என்று VoiceOver சொல்லும் வரை இடது மற்றும் வலது அம்புக்குறி பட்டன்களை அழுத்தவும்.

Google Driveவைத் திறத்தல்

உலாவியில் drive.google.com தளத்திற்குச் செல்லவும்.

Google Drive இடைமுகத்தின் விளக்கம்

Google Driveவில் 7 முக்கியப் பகுதிகள் உள்ளன:

  • திரையின் மேற்பகுதி: இந்தப் பகுதியில் இவற்றுக்கான கட்டுப்பாடுகள் உள்ளன:
    • ஃபோல்டர்கள் அல்லது ஃபைல்களை Driveவில் தேடுதல்
    • உதவி பெறுதல்
    • பிற ஆப்ஸைத் திறத்தல்
    • செயலில் உள்ள கணக்கை மாற்றுதல்
    • ஃபோல்டர்களையும் ஃபைல்களையும் உருவாக்குதல்
  • இவற்றுடன் இருக்கும் அணுகல்தன்மை மெனு:
    • முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்லும் பட்டன்
    • கீபோர்டு ஷார்ட்கட்கள் பட்டன்
    • அணுகல்தன்மை தொடர்பான கருத்து தெரிவிப்பதற்கான பட்டன்
  • இடதுபுற வழிசெலுத்தும் பகுதி: இந்தப் பகுதி முதன்மைக் காட்சியில் இவற்றைக் காட்டும்:
    • முன்னுரிமை: முன்னுரிமைப்படுத்தப்பட்டவை, சமீபத்தில் மாற்றப்பட்டவை அனைத்தும்.
    • எனது Drive: நீங்கள் உருவாக்கிய அல்லது பிறரிடமிருந்து பெற்ற ஆப்ஜெக்ட்டுகள் (ஃபைல்கள், ஃபோல்டர்கள், ஷார்ட்கட்கள் ஆகியவை) இருக்கும் உங்கள் Drive.
    • பகிர்ந்த இயக்ககங்கள்: நிறுவனத்திற்குச் சொந்தமான மற்றும் குழு டிரைவில் சேமிக்கப்பட்டுள்ள ஃபைல்களும் ஃபோல்டர்களும் இங்கே காட்டப்படும்.
    • கம்ப்யூட்டர்கள்: உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள ஃபோல்டர்களை ஒத்திசைத்திருந்தால் சாதனத்தில் உள்ள ஃபைல்களும் ஃபோல்டர்களும் இங்கே காட்டப்படும்.
    • என்னுடன் பகிர்ந்தவை: உங்களுடன் பகிரப்பட்ட ஃபைல்களையும் ஃபோல்டர்களையும் காட்டும் பட்டியல்.
    • சமீபத்தியவை: சமீபத்தில் நீங்கள் அணுகிய ஃபைல்களைக் காட்டும் பட்டியல்.
    • நட்சத்திரமிட்டவை: நீங்கள் நட்சத்திரமிட்ட ஃபைல்களையும் ஃபோல்டர்களையும் காட்டும் பட்டியல்.
    • நீக்கியவை: நீங்கள் நீக்கிய ஃபைல்களையும் ஃபோல்டர்களையும் காட்டும் பட்டியல்.
    • சேமிப்பகம்: ஃபைல்களையும் அவற்றின் அளவுகளையும் காட்டும் பட்டியல். காப்புப் பிரதிகளையும் இங்கிருந்து அணுகலாம்.
  • ஃபைல் மற்றும் ஃபோல்டர் பட்டியல்: ஃபைல் மற்றும் ஃபோல்டர்களின் பட்டியல் இருக்கும் முதன்மைப் பகுதி. பட்டியலின் உள்ளடக்கம் இடதுபுறம் உள்ள பகுதியின் மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது.
    • முக்கியமானவை: ஃபைல்களும் ஃபோல்டர்களும் கட்டம் அல்லது பட்டியல் காட்சியில் காட்டப்படலாம். 'எனது Drive' காட்சியில் இருக்கும்போது பரிந்துரைக்கப்படும் ஃபைல்களுக்காக ஒரு தனி பிரிவு காட்டப்படும்.
  • பட்டன்களைக் கொண்ட கருவிப்பட்டி: காட்சியையும் பிற அமைப்புகளையும் மாற்றுவதற்கான பகுதி.
  • விவரங்களைக் காட்டு: தற்போது தேர்ந்தெடுத்துள்ள ஃபோல்டர் அல்லது ஃபைல் குறித்த தகவல்கள் இந்தப் பகுதியில் காட்டப்படும். விவரங்களுக்கும் செயல்பாடுகளுக்கும் தனித்தனியாகப் பிரிவுகள் இருக்கும்.
  • வலது பக்கப்பட்டி: இதை விரிவாக்கினால் Keep, Tasks, Contacts போன்ற பிற Google ஆப்ஸை விரைவாக அணுகலாம்.

Google Driveவில் ஷார்ட்கட்களைப் பயன்படுத்துதல்

Google Driveவில் உலாவுவதற்கும் பணிகளைச் செய்வதற்கும் உதவும் பல ஷார்ட்கட்கள் உள்ளன.

அவற்றில் சில:

இதற்கு

அழுத்தவும்

ஷார்ட்கட்களின் முழுப் பட்டியலையும் அணுக

Ctrl + / அல்லது CMD + /

மெனுக்கள்

இதற்கு

அழுத்தவும்

‘உருவாக்கு’ மெனுவைத் திறக்க

c

‘செயல்கள்’ மெனுவைத் திறக்க

A அல்லது Shift + F10

‘அமைப்புகள்’ மெனுவைத் திறக்க

t

எனது Drive ஃபைல் மற்றும் ஃபோல்டர் ‘செயல்’ மெனுவைத் திறக்க

f

உலாவுதல்

இதற்கு

அழுத்தவும்

ஃபைல் பட்டியலுக்குச் செல்ல

g அழுத்திவிட்டு l

இடதுபக்கத்தில் உள்ள ஃபோல்டர்கள் அல்லது காட்சிகளுக்குச் செல்ல

g அழுத்திவிட்டு n பட்டனை அழுத்தவும் அல்லது g அழுத்திவிட்டு f பட்டனை அழுத்தவும்

விவரங்களைப் பார்க்க/மறைக்க

d

செயல்பாட்டைப் பார்க்க/மறைக்க

i

பட்டியல் காட்சிக்கும் கட்டக் காட்சிக்கும் இடையே மாற

v

ஃபைல்/ஃபோல்டர்களை உருவாக்குதல்

இதற்கு

அழுத்தவும்

Google ஆவணத்தை உருவாக்க

Shift + t

Google விரிதாளை உருவாக்க

Shift + s

Google விளக்கக்காட்சியை உருவாக்க

Shift + p

ஃபோல்டரை உருவாக்க

Shift + f

ஃபோல்டரைப் பதிவேற்ற

Shift + i

ஃபைலைப் பதிவேற்ற

Shift + u

ஷார்ட்கட் அடிப்படைகள்

  • மெனுவை அதன் ஆங்கிலப் பெயருடன் தொடர்புடைய எழுத்தின் மூலம் திறத்தல்:
    • செயல்களுக்கு a (actions).
    • உருவாக்க c (create).
    • அமைப்புகளுக்கு t (settings).
  • g அழுத்திவிட்டு வேறொரு எழுத்தை அழுத்தி ஒரு பகுதிக்குச் செல்லலாம். உதாரணத்திற்கு, g அழுத்திவிட்டு l அழுத்தினால் தற்போதைய ஃபைல்கள் அல்லது ஃபோல்டர்களின் பட்டியலுக்குச் செல்லும்.
  • உருவாக்குவதற்கு உதவும் ஷார்ட்கட்கள் மூலம் ஓர் ஆப்ஜெக்ட்டை விரைவாக உருவாக்க இதை அழுத்தவும்:
    • ஃபோல்டருக்கு Shift + f.
    • Google Docsஸில் வார்த்தைகளுக்கு Shift + t.
  • ஆப்ரேட்டிங் சிஸ்டம் ஷார்ட்கட்களைக் கொண்டு செயல்கள் மெனுவைத் திறக்க இதை அழுத்தவும்:
    • Windowsஸில் Shift + F10 அல்லது application பட்டன்.
    • ChromeOSஸில் Search + m.
    • Macகில் a.

ஸ்கிரீன் ரீடர் மூலம் Google Driveவில் பணிகளைச் செய்தல்

ஃபைலைத் திறத்தல்

  1. உலாவியில் drive.google.com என டைப் செய்து Driveவைத் திறக்கவும்.
  2. அம்புக்குறியைப் பயன்படுத்தி தேவைப்படும் ஃபைலைக் கண்டறியவும்.
    • பட்டியல் காட்சியாக இருந்தால் மேல் மற்றும் கீழ்நோக்கிய அம்புக்குறிகளைப் பயன்படுத்தவும்.
    • கட்டக் காட்சியாக இருந்தால் மேல் மற்றும் கீழ்நோக்கிய அம்புக்குறிகளையும் இடது மற்றும் வலது அம்புக்குறிகளையும் பயன்படுத்தவும்.
  3. தேர்ந்தெடுத்ததைத் திறக்க Enter பட்டனை அழுத்தவும்.
    • ஃபோல்டர்கள்: ஃபோல்டரில் உள்ள ஃபைல்களின் பட்டியலைத் திறக்கும்.
    • ஃபைல்கள்:
      • Docs, Sheets, Slides போன்ற Workspace ஃபைல்கள் புதிய உலாவிப் பக்கத்தில் திறக்கும்.
      • பிற ஃபைல்கள் சிஸ்டத்திலோ நீங்கள் தேர்ந்தெடுத்துள்ள மூன்றாம் தரப்பு ஆப்ஸிலோ திறக்கும்.
    • மீடியா: அதே உலாவிப் பக்கத்தில் பாப்-அப் பிளேயரில் திறக்கும்.

உதவிக்குறிப்பு: முதல்நிலை ஃபோல்டருக்குத் திரும்ப இவற்றில் ஏதேனும் ஒரு முறையைப் பயன்படுத்தவும்:

  • Windows மற்றும் ChromeOS: Alt + இடது அம்புக்குறியை அழுத்தவும்.
  • அனைத்து பிளாட்ஃபார்ம்களிலும்: g அழுத்திவிட்டு p பட்டனை அழுத்தவும்.

பட்டியல் காட்சியின் தளவமைப்பை மாற்றுதல்

ஃபைல் பட்டியலில் இருக்கும் ஃபைல்களையும் ஃபோல்டர்களையும் பட்டியல் அல்லது கட்டக் காட்சியில் பார்க்கலாம்.

  • பட்டியல் காட்சி: ஒரு வரிசைக்கு ஒரு ஃபைல் காட்டப்படும். கடைசியாக மாற்றியது, தேதி போன்ற கூடுதல் விவரங்கள் இருக்கும்.
  • கட்டக் காட்சி: ஒவ்வொரு வரிசையிலும் பல ஃபைல்கள் இருக்கும். பெயரும் வகையும் மட்டுமே இருக்கும்.

இவற்றில் ஏதேனும் ஒரு முறையைப் பயன்படுத்தி 2 காட்சிகளுக்கும் இடையே மாறலாம்:

  • v பட்டனை அழுத்தவும்.
  • Tab பட்டனை அழுத்தி பட்டியல் காட்சி அல்லது கட்டக் காட்சி பட்டனுக்குச் சென்று Enter பட்டனை அழுத்தவும்.

வரிசைப்படுத்தும் முறை:

  1. "வரிசைப்படுத்தல் முறையை மாற்று" பட்டனுக்குச் செல்ல Shift + Tab அழுத்தவும்.
  2. Enter அழுத்தவும். கவனத்திற்கு: ஃபைல்கள் அல்லது ஃபோல்டர்களின் பட்டியல் மீண்டும் தானாகவே மையப்படுத்தப்படும்.

புலத்தின் மூலம் வரிசைப்படுத்துதல்:

  1. “பெயரின்படி வரிசைப்படுத்து பட்டன் மெனுவிற்கு” செல்ல Shift + Tab பட்டன்களை இருமுறை அழுத்திவிட்டு Enter பட்டனை அழுத்தவும்.
  2. தேவைப்படும் வரிசைப்படுத்தல் முறையைத் தேர்ந்தெடுக்க, மேல் மற்றும் கீழ்நோக்கிய அம்புக்குறிகளைப் பயன்படுத்தவும்.
  3. Enter அழுத்தவும். கவனத்திற்கு: ஃபைல்கள் அல்லது ஃபோல்டர்களின் பட்டியல் மீண்டும் தானாகவே மையப்படுத்தப்படும்.

உதவிக்குறிப்பு: புலத்தின் மூலம் வரிசைப்படுத்துதல் மெனுவை விரைவாக மையப்படுத்த r பட்டனை அழுத்தவும்.

மீடியாவைப் பிளே செய்தல்

  1. பிளே செய்ய விரும்பும் மீடியாவைத் தேர்ந்தெடுக்கவும்.
  2. Enter அழுத்தவும்.
  3. மீடியா திறக்கப்பட்டதும் பின்வரும் விருப்பங்கள் கிடைக்கும்:

அம்சம்

செயல்

இடைநிறுத்துதல் அல்லது பிளே செய்தல்

பிளேயர் சாளரத்தை மையப்படுத்தி k அழுத்தவும் அல்லது பிளே பட்டனுக்குச் சென்று Enter பட்டன் அல்லது Space bar அழுத்தவும்.

ஒலியடக்குதல்

Tab பட்டனை அழுத்தி ஒலியளவு பட்டனுக்குச் சென்று Space bar அல்லது Enter பட்டனை அழுத்தவும்.

ஒலியளவு

Tab அழுத்தி ஒலியளவு பட்டனுக்குச் செல்லவும். இதற்கு:

  • ஒலியை அதிகரிக்க மேல்நோக்கிய அம்புக்குறியை அழுத்தவும்.
  • ஒலியைக் குறைக்க கீழ்நோக்கிய அம்புக்குறியை அழுத்தவும்.

விவரிப்பு சப்டைட்டில்

Tab பட்டனை அழுத்தி விவரிப்பு சப்டைட்டில் பட்டனுக்குச் செல்லவும். இயக்குவதற்கு Space bar அல்லது Enter பட்டனை அழுத்தவும்.

முழுத்திரை

f பட்டனை அழுத்தவும் அல்லது Tab அழுத்தி முழுத்திரை பட்டனுக்குச் செல்லவும்.

மீடியா அமைப்புகளுக்கு, Tab பட்டனை அழுத்தி அமைப்புகள் பட்டனுக்குச் செல்லவும். பின்வரும் அமைப்புகளைச் செயல்படுத்த Enter அல்லது Space அழுத்தவும்:

அம்சம்

செயல்

பிளேபேக் வேகம்

0.25 முதல் 2 வரை வேக வரம்பு மாறுபடும்.

அம்புக்குறி பட்டன்கள் அல்லது Shift + Tab அழுத்தி பிரத்தியேக பட்டனுக்குச் சென்று மேல் மற்றும் கீழ்நோக்கிய அம்புக்குறிகளைப் பயன்படுத்தி பிரத்தியேக வேகத்தை அமைக்கலாம். வேகத்தை மாற்ற இடது மற்றும் வலது அம்புக்குறி பட்டன்களைப் பயன்படுத்தவும்.

சப்டைட்டில்கள் அல்லது விவரிப்பு சப்டைட்டில்

கீழ்நோக்கிய அம்புக்குறி பட்டனைப் பயன்படுத்தி சப்டைட்டில்களைத் தேர்ந்தெடுக்கலாம்.

இவை போன்ற கூடுதல் சப்டைட்டில் அமைப்புகளுக்கான விருப்பங்களுக்கு Shift + Tab அழுத்தவும்:

  • எழுத்துருக் குடும்பம்
  • எழுத்து வடிவ வண்ணம்
  • எழுத்து வடிவ அளவு
  • பின்புல வண்ணம்
  • பின்புல அடர்த்தி
  • சாளரத்தின் வண்ணம்
  • சாளரத்தின் அடர்த்தி
  • சாளர முனையின் தோற்றம்
  • எழுத்து வடிவத்தின் அடர்த்தி
  • மீட்டமை பட்டன்

தரம்

வீடியோவின் தரத்தை 720p, 360p அல்லது தானியங்கு எனத் தேர்வுசெய்ய, கீழ்நோக்கிய அம்புக்குறியை அழுத்திஅதன் பிறகுEnter பட்டனை அழுத்தவும்.

பிக்ச்சர்-இன்-பிக்ச்சர் பயன்முறை

Tab பட்டனை அழுத்தி பிக்ச்சர்-இன்-பிக்ச்சர் பட்டனுக்குச் சென்று அதைச் செயல்படுத்த Space அல்லது Enter பட்டனை அழுத்தவும்.

பரிந்துரைக்கப்படும் ஃபைல்களைப் பயன்படுத்துதல்

ஃபைல்கள் மற்றும் ஃபோல்டர்கள் பட்டியலின் காட்சி 'எனது Driveவில்' இருக்கும்போது, Googleளின் உதவிகரமான நுண்ணறிவுத் தொழில்நுட்பம் உங்களுக்கான ஃபைல்களைப் பரிந்துரைக்கும்.

  1. இவற்றில் ஏதேனும் ஒரு முறையைப் பயன்படுத்தி, பரிந்துரைக்கப்படும் ஃபைல்களின் பகுதியை ஃபோகஸ் செய்யவும்:
    • g அழுத்திவிட்டு q அழுத்தவும்.
    • 'பரிந்துரைக்கப்படுபவை பட்டியல் பகுதி' என்று கேட்கும்வரை ஃபைல்களின் பட்டியலில் Shift + Tab அழுத்தவும்.
    • இடது மற்றும் வலது அம்புக்குறிகளைப் பயன்படுத்தி ஃபைல்களின் பட்டியலில் தேவையானதைத் தேர்ந்தெடுக்கலாம்.
  1. தேர்ந்தெடுத்த ஃபைலைத் திறக்க Enter அழுத்தவும்.

முக்கியம்: காட்சியானது முன்னுரிமை அல்லது எனது Driveவில் இருந்தால் மட்டுமே பரிந்துரைக்கப்படும் ஃபைல்கள் காட்டப்படும்.

பட்டியல் காட்சியில் இருப்பவற்றை மாற்றுதல்

  1. இவற்றில் ஏதேனும் ஒரு முறையைப் பயன்படுத்தி இடதுபுற வழிச்செலுத்தல் பகுதிக்குச் செல்லவும்:
    • g அழுத்திவிட்டு n அழுத்தவும் அல்லது g அழுத்திவிட்டு f அழுத்தவும்.
    • “ஃபோல்டர்கள் மற்றும் காட்சிகளின் ட்ரீ காட்சி” என்று கேட்கும்வரை Shift + Tab பட்டன்களைப் பலமுறை அழுத்தவும்.
  1. பின்வரும் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுக்க மேல் மற்றும் கீழ்நோக்கிய அம்புக்குறிகளைப் பயன்படுத்தவும்:
    • முன்னுரிமை
    • எனது Drive
    • பகிர்ந்த இயக்ககங்கள்
    • என்னுடன் பகிர்ந்தவை
    • சமீபத்தியவை
    • நட்சத்திரமிட்டவை
    • நீக்கியவை
    • சேமிப்பகம்
  2. Enter அழுத்தவும்.

தேர்ந்தெடுத்த காட்சி ஏற்கெனவே செயலிலுள்ள காட்சியாக இருந்தால் மட்டுமே ஃபைல் பட்டியல் மாறுவதுடன் அது ஃபோகஸ் செய்யப்படும்.

உதவிக்குறிப்பு: எனது Drive மற்றும் பகிர்ந்த இயக்ககத்தில் இருப்பவை ஃபோல்டர் படிநிலையில் இருக்கும்.

  1. இதைப் பயன்படுத்தவும்:
    • ஃபோல்டர் படிநிலையை விரிவாக்க வலது அம்புக்குறி.
    • ஃபோல்டர் படிநிலையைச் சுருக்க இடது அம்புக்குறி .
  2. ஃபோல்டர் படிநிலையில் உலாவ மேல் மற்றும் கீழ்நோக்கிய அம்புக்குறிகளைப் பயன்படுத்தவும்.

ஃபைல்களைத் தேடுதல்

Google Driveவில் ஃபைல்களைத் தேட 3 வழிகள் உள்ளன.

  • தேடல் புலத்தில் தேடல் நிபந்தனையை டைப் செய்து Enter பட்டனை அழுத்தவும். தேடல் நிபந்தனையுடன் பொருந்தும் ஃபைல்கள் இருக்கும் வகையில் ஃபைல் பட்டியல் மாற்றப்படும்.
  • தேடல் புலங்களில் தேடல் நிபந்தனையை டைப் செய்து கீழ்நோக்கிய அம்புக்குறி மூலம் முடிவுகளை அணுகவும்.
  • தேடல் நிபந்தனையை டைப் செய்ய தேடல் உரையாடலைப் பயன்படுத்தவும். Search பட்டனுக்குச் சென்று Enter அழுத்தவும். தேடல் நிபந்தனையுடன் பொருந்தும் ஃபைல்கள் இருக்கும் வகையில் ஃபைல் பட்டியல் மாற்றப்படும்.

“தேடல் புலத்தைப்” பயன்படுத்துதல்

  1. தேடல் புலத்திற்கு ஃபோகஸை நகர்த்த, / அல்லது Tab பட்டனைப் பலமுறை அழுத்தவும்.
  2. ஒரு விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்:
    • தேடல் புலத்தில் நிபந்தனையை டைப் செய்யவும்.
      • ஃபைல்களின் பட்டியலில் இருந்து முடிவுகளை அணுக:
        • Enter அழுத்தவும். ஃபைல்களின் பட்டியல் தானாகவே மையப்படுத்தப்படும்.
        • தேடல் முடிவுகளைச் சரிபார்க்க அம்புக்குறிகளைப் பயன்படுத்தவும்.
      • கீழ்நோக்கிய அம்புக்குறி மூலம் முடிவுகளை அணுக:
        • கீழ்நோக்கிய அம்புக்குறியை அழுத்தவும்.
        • தேர்ந்தெடுப்பதைப் பயன்படுத்த Enter அழுத்தவும்.

முக்கியம்: தேடல் நிபந்தனை மாறக்கூடியது மற்றும் ஃபைல்களையோ ஃபோல்டர்களையோ வடிகட்ட எந்த வகையான தேடலுக்கும் குறிப்பிட்டதாக இருக்கக்கூடும்.

இதுபோன்ற வார்த்தைகளைச் சேர்க்கவும்:

  • அனுப்புநர்:
    • குறிப்பிட்ட பயனர் அல்லது நிறுவனம் அனுப்பியவை.
  • பெறுநர்:
    • குறிப்பிட்ட பயனர் அல்லது நிறுவனத்திற்கு அனுப்பியவை.
  • உரிமையாளர்:
    • குறிப்பிட்ட பயனர் அல்லது நிறுவனத்திற்குச் சொந்தமானவை.
  • பகிர்ந்தவை:
    • குறிப்பிட்ட பயனர் அல்லது நிறுவனத்திற்குப் பகிர்ந்தவை.

தேடல் வார்த்தைகள் மூலம் வடிகட்டுவதற்கான வழிகள் குறித்து மேலும் தெரிந்துகொள்ள Google Driveவில் ஃபைல்களைக் கண்டறிதல் என்பதற்குச் செல்லவும்.

“தேடல் உரையாடலைப்” பயன்படுத்துதல்

  1. தேடல் புலத்தை மையப்படுத்த / பட்டனை அழுத்தவும்.
  2. Tab பட்டனை அழுத்தி தேடல் விருப்பங்கள் பட்டனுக்குச் சென்று Enter அழுத்தவும்.
  3. Tab பட்டனை அழுத்தி உரையாடலில் அடுத்தடுத்த புலங்களுக்குச் சென்று தேடலுக்குப் பயன்படுத்த வேண்டிய புலங்களை நிரப்பவும்.
  4. உரையாடலில் ஒரு செயலைச் செய்ய ஒரு விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்:
    1. Windows மற்றும் Chrome OSஸில் Ctrl + Enter அழுத்தவும்.
    2. Macகில் Cmd + Enter அழுத்தவும்.
    3. Tab பட்டனை அழுத்தி Search பட்டனுக்குச் சென்று Enter பட்டனை அழுத்தவும்.
  5. தேடல் முடிவுகளுடன் ஃபைல்களின் பட்டியலில் காட்டப்படும்.

ஃபைல் விவரங்கள் மற்றும் செயல்பாடு

ஃபைல், ஃபைல் செயல்பாடு ஆகியவை குறித்த விவரங்கள் தனியாக ஒரு காட்சியில் காட்டப்படும். அதை இயக்கலாம் முடக்கலாம்.

  1. ஃபைல்களின் பட்டியலில் இருந்து ஒரு ஃபைலைத் தேர்வுசெய்யவும்.
  2. விவரங்களை ஃபோகஸ் செய்ய g அழுத்திவிட்டு d அழுத்தவும்.
  3. விவரங்களும் செயல்பாடுகளும் உள்ள ஒரு பிரிவுப் பட்டியல் ஃபோகஸ் செய்யப்படும். இடது மற்றும் வலது அம்புக்குறிகள் மூலம் பிரிவுகளைத் தேர்வுசெய்யவும். தகவல்களை அணுக Tab பட்டனை அழுத்தவும்.
    1. விவரங்கள்:
      • ஆவணத்தின் சிறுபடத்தைக் காட்டும் ஒரு சிறிய சாளரம்.
      • ஆவணத்திற்கான அணுகல் உள்ளவர்கள்.
      • ஆவண வகை, அளவு, இருக்குமிடம், உரிமையாளர் ஆகியவற்றைக் காட்டும் சிஸ்டம் விவரங்கள்.
    2. செயல்பாடு:
      • ஆவணத்தில் இதுவரை செய்யப்பட்ட திருத்தங்களைக் காட்டும்.

உதவிக்குறிப்பு: விவரங்கள், செயல்பாடுகள் ஆகியவற்றை எளிதாக அணுக விர்ச்சுவல் கர்சரை இயக்கவும்.

  • JAWS: Insert + z அழுத்தவும்.
  • NVDA: ஒரு விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்:
    • உலாவிப் பயன்முறைக்கு மாற Insert + Space அழுத்தவும்.
  • ChromeVox: ஒற்றை விசைப் பயன்முறையை முடக்க Search பட்டனை இருமுறை அழுத்தவும்.
  • VoiceOver: QuickNavவை முடக்க “QuickNav முடக்கப்பட்டது” என்று VoiceOver சொல்லும் வரை இடது மற்றும் வலது அம்புக்குறிகளை அழுத்தவும்.

இந்தப் பகுதிக்குள் நீங்கள் வந்ததும் உங்கள் ஸ்கிரீன் ரீடர் விர்ச்சுவல் கர்சராக மாறக்கூடும்.

ஃபைல்களைக் கண்டறிவதற்கான விரைவான வழிகள்

“சமீபத்தியவை” பிரிவைப் பயன்படுத்துதல்

நீங்கள் சமீபத்தில் அணுகிய ஃபைல்கள் 'சமீபத்தியவை' காட்சியில் இருக்கும்.

  1. இவற்றில் ஏதேனும் ஒரு முறையைப் பயன்படுத்தி இடது பக்கப்பட்டிக்குச் செல்லவும்:
    • g அழுத்திவிட்டு n அழுத்தவும் அல்லது g அழுத்திவிட்டு f அழுத்தவும்.
    • “ஃபோல்டர்கள் மற்றும் காட்சிகள்” என்று கேட்கும்வரை Shift + Tab பட்டன்களைப் பலமுறை அழுத்தவும்.
  1. அம்புக்குறியைப் பயன்படுத்தி "சமீபத்திய ஃபைல்கள்" என்பதற்குச் செல்லவும்.
  2. Enter அழுத்தவும். குறிப்பு: முதன்மைப் பகுதி மையப்படுத்தப்படும்.

"நட்சத்திரமிட்டவை" பிரிவைப் பயன்படுத்துதல்

ஒரு ஃபைலை “நட்சத்திரமிட்டு” விரைவாகக் கண்டறிய:

  1. தேவைப்படும் ஃபைலுக்குச் செல்லவும்.
  2. ஒரு விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்:
    • ஃபைல் அல்லது ஃபோல்டரை நட்சத்திரமிடவோ நட்சத்திரத்தை நீக்கவோ s அழுத்தவும்.
    • செயல் மெனுவைப் பயன்படுத்த a அழுத்திவிட்டு அம்புக்குறியை அழுத்தி நட்சத்திரத்தைச் சேர்க்கவும்.

நீங்கள் நட்சத்திரமிட்ட ஃபைல்களை அணுக:

  1. இவற்றில் ஏதேனும் ஒரு முறையைப் பயன்படுத்தி இடது பக்கப்பட்டிக்குச் செல்லவும்:
    • g அழுத்திவிட்டு n அழுத்தவும் அல்லது g அழுத்திவிட்டு f அழுத்தவும்.
    • “ஃபோல்டர்கள் மற்றும் காட்சிகள்” என்று கேட்கும்வரை Shift + Tab பட்டன்களைப் பலமுறை அழுத்தவும்.
  2. அம்புக்குறி மூலம் "நட்சத்திரமிட்டவை" பிரிவுக்குச் செல்லவும்.
  3. Enter அழுத்தவும். நீங்கள் முன்னர் நட்சத்திரமிட்ட ஃபைல்களையும் ஃபோல்டர்களையும் ஃபைல்களின் பட்டியல் காட்டும்.

“முன்னுரிமை” பிரிவைப் பயன்படுத்துதல்

Drive முன்னுரிமைக் காட்சியில் சமீபத்தில் திருத்திய, நகர்த்திய, கருத்து வழங்கிய ஆவணங்கள் இருக்கும்.

  1. இடதுபுற வழிசெலுத்தல் பட்டியில் "முன்னுரிமை" பிரிவுக்குச் செல்ல மேல்நோக்கிய அம்புக்குறியை அழுத்தவும்.
  2. Enter அழுத்தவும்.
  3. வலது அம்புக்குறியை அழுத்தி ஒரு ஃபைலுக்குச் செல்லவும்.
  4. செயல்கள் மெனுவைத் திறக்க Tab பட்டனை அழுத்தவும். இதுபோன்ற கூடுதல் விருப்பங்கள் காட்டப்படும்:
    • மாதிரிக்காட்சி
    • இதன்மூலம் திற
    • பகிர்
    • இணைப்பைப் பெறு
    • பணியிடத்தில் சேர்
    • Driveவில் ஷார்ட்கட்டைச் சேர்
    • நட்சத்திரமிட்டவையில் சேர்
    • நகலெடு
    • தவறான ஆவணம் எனப் புகாரளி
    • பதிவிறக்கு

ஃபோல்டர்களையும் ஃபைல்களையும் உருவாக்குதல்

ஃபோல்டர்களை உருவாக்குதல்

  1. இவற்றில் ஏதேனும் ஒரு முறையைப் பயன்படுத்தி புதிய மெனுவைத் திறக்கவும்:
    • c அழுத்தவும்.
    • "புதிய பட்டன் மெனு" என்று கேட்கும்வரை Shift + Tab அழுத்திவிட்டு Enter அழுத்தவும்.
  2. அம்புக்குறியைப் பயன்படுத்தி ஃபோல்டர் மெனு விருப்பத்திற்குச் செல்லவும்.
  3. Enter அழுத்தவும். ஃபோல்டருக்குப் பெயரிட ஓர் உரையாடல் பெட்டி காட்டப்படும்.
  4. ஃபோல்டரின் பெயரை டைப் செய்யவும்.
  5. Enter அழுத்தவும்.

உதவிக்குறிப்பு: ஃபோல்டரை விரைவாக உருவாக்க Shift + f அழுத்தவும்.

ஃபைல்களை உருவாக்குதல்

  1. இவற்றில் ஏதேனும் ஒரு முறையைப் பயன்படுத்தி புதிய பட்டன் மெனுவிற்குச் செல்லவும்:
    • c ஷார்ட்கட்டை அழுத்தவும்.
    • "புதிய பட்டன் மெனு" என்று கேட்கும்வரை Shift + Tab அழுத்திவிட்டு Enter அழுத்தவும்.
  2. நீங்கள் உருவாக்க விரும்பும் ஃபைல் வகையைத் தேர்வுசெய்ய கீழ்நோக்கிய அம்புக்குறி பட்டனை அழுத்தவும்.
  3. துணை மெனுவைத் திறக்க Enter அல்லது அம்புக்குறி பட்டனை அழுத்தவும்.
  4. அம்புக்குறி பட்டன்களைப் பயன்படுத்தி வகையைத் தேர்வுசெய்யவும்.
  5. Enter அழுத்தவும். கவனத்திற்கு: புதிய உலாவிப் பக்கத்தில் ஃபைல் உருவாக்கப்படும்.

உதவிக்குறிப்பு: ஒரு ஃபைலை விரைவாக உருவாக்க கீழேயுள்ள ஷார்ட்கட்களைப் பயன்படுத்தவும்:

வகை

அழுத்தவும்

ஃபைல் பதிவேற்றம்

Shift + u

ஃபோல்டர் பதிவேற்றம்

Shift + i

Google ஆவணம்

Shift + t

Google விரிதாள்

Shift + s

விளக்கக்காட்சி

Shift + p

வரைபடம்

Shift + d

Google படிவம்

Shift + o

ஃபைல்களைப் பதிவேற்றுதல்

  1. புதிய பட்டனுக்குச் செல்ல "புதிய பட்டன் மெனு" எனக் கேட்கும்வரை c அல்லது Shift + Tab அழுத்தவும்.
  2. ஃபைலைப் பதிவேற்றுவதற்கான பட்டனுக்குச் செல்ல கீழ்நோக்கிய அம்புக்குறி பட்டனைப் பயன்படுத்தவும்.
  3. Enter அழுத்தவும்.
  4. ஃபைலைப் பதிவேற்ற கம்ப்யூட்டரில் இருந்து அதைத் தேர்வுசெய்தபின் Enter அழுத்தவும்.

ஃபோல்டர்களைப் பதிவேற்றுதல்

  1. புதிய பட்டனுக்குச் செல்ல "புதிய பட்டன் மெனு" எனக் கேட்கும்வரை c அல்லது Shift + Tab அழுத்தவும்.
  2. ஃபோல்டரைப் பதிவேற்றுவதற்கான பட்டனுக்குச் செல்ல கீழ்நோக்கிய அம்புக்குறியைப் பயன்படுத்தவும்.
  3. Enter அழுத்தவும்.
  4. ஃபோல்டரைப் பதிவேற்ற கம்ப்யூட்டரில் இருந்து அதைத் தேர்வுசெய்தபின் Enter அழுத்தவும்.

ஃபோல்டர்களையும் ஃபைல்களையும் ஒழுங்கமைத்தல்

வேறொரு ஃபோல்டருக்கு ஃபைலை நகர்த்துதல்

  1. ஃபைலைத் தேர்ந்தெடுக்கவும்.
  2. செயல்கள் மெனுவைத் திறக்க a அல்லது Shift + F10 அழுத்தவும்.
  3. கீழ்நோக்கிய அம்புக்குறியை அழுத்தி “இதற்கு நகர்த்து” என்பதற்குச் செல்லவும்.
  4. Enter அழுத்தவும்.
    உதவிக்குறிப்பு: நகர்த்தப்படும்போது எப்போது வேண்டுமானாலும் Escape பட்டனை அழுத்தி நகர்வை ரத்துசெய்யலாம்.
  5. (விருப்பத்தேர்வு) வேறொரு Driveவுக்கு நகர்த்த:
    1. இடது அம்புக்குறியைப் பயன்படுத்தி ஃபைல் தற்போது சேமிக்கப்பட்டிருக்கும் Driveவில் இருந்து வெளியேறவும்.
    2. மேல் அல்லது கீழ்நோக்கிய அம்புக்குறியைப் பயன்படுத்தி பின்வரும் விருப்பங்கள் ஏதேனும் ஒன்றுக்குச் செல்லவும்.
      • எனது Drive
      • பகிர்ந்த இயக்ககங்கள்
      • என்னுடன் பகிர்ந்தவை
      • நட்சத்திரமிட்டவை
    3. வலது அம்புக்குறி பட்டனைப் பயன்படுத்தி, தேர்ந்தெடுத்த Driveவுக்குச் செல்லவும்.
  6. மேல் அல்லது கீழ்நோக்கிய அம்புக்குறி பட்டனைப் பயன்படுத்தி ஃபைலை நகர்த்த வேண்டிய ஃபோல்டரைத் தேர்ந்தெடுக்கவும்.
  7. Enter அழுத்தவும்.
  8. (விருப்பத்தேர்வு) புதிய ஃபோல்டரை உருவாக்க:
    1. Tab பட்டனை அழுத்தி "புதிய ஃபோல்டர்" பட்டனுக்குச் செல்லவும்.
    2. Enter அழுத்தவும்.
    3. புதிய ஃபோல்டருக்குப் பெயரிடவும்.
    4. Enter அழுத்தவும்.
  9. தேர்ந்தெடுத்த ஃபோல்டருக்கு உங்கள் ஃபைலை நகர்த்த, Tab பட்டனை அழுத்தி "இங்கே நகர்த்து" பட்டனுக்குச் செல்லவும்.
  10. Enter அழுத்தவும்.

கிளிப்போர்டைப் பயன்படுத்துதல்

கிளிப்போர்டைப் பயன்படுத்தி ஃபைல்களையும் ஃபோல்டர்களையும் இப்போது நகலெடுக்கலாம் நகர்த்தலாம்:

  1. ஃபைல் அல்லது ஃபோல்டரைத் தேர்ந்தெடுக்கவும்.
  2. (விருப்பத்தேர்வு) ஒன்றுக்கு மேற்பட்டவற்றைத் தேர்ந்தெடுக்க Shift + மேல் அல்லது கீழ்நோக்கிய அம்புக்குறிகளை அழுத்தவும்.
  3. தேர்ந்தெடுத்த ஃபைல்கள் அல்லது ஃபோல்டர்களை நகலெடுக்க Ctrl + C அழுத்தவும். அவற்றை நகர்த்த Ctrl + X அழுத்தவும்.
  4. அவற்றை ஒட்ட வேண்டிய இடத்திற்குச் செல்லவும்.
  5. நகலெடுப்பதை அல்லது நகர்வை நிறைவுசெய்ய Ctrl + V அழுத்தவும்.
  6. ஃபைல் அல்லது ஃபோல்டரின் பெயர் ஏற்கெனவே அங்கு பயன்படுத்தப்பட்டிருந்தால் புதிய ஃபைல் அல்லது ஃபோல்டரின் பெயர் “இதன் நகல்:…” என்று தொடங்கும்

ஷார்ட்கட்டை உருவாக்குதல்

ஷார்ட்கட் என்பது மற்றொரு ஃபைலையோ ஃபோல்டரையோ குறிக்கும் ஓர் இணைப்பாகும். ஷார்ட்கட்களை உங்கள் Driveவிலோ பகிர்ந்த இயக்ககத்திலோ பயன்படுத்தலாம். ஒவ்வொரு ஆப்ஜெக்ட்டிற்கும்:

  • நீங்கள் உருவாக்கும் ஃபைல் அல்லது ஃபோல்டர் ஒவ்வொன்றுக்கும் தலா 500 ஷார்ட்கட்கள் வரை இருக்கலாம்.
  • பிறர் உருவாக்கும் ஃபைல் அல்லது ஃபோல்டர்களுக்கு மொத்தமாக 5000 ஷார்ட்கட்கள் வரை இருக்கலாம்.
  1. ஃபைலைத் தேர்ந்தெடுக்கவும்.
  2. செயல்கள் மெனுவைத் திறக்க a அல்லது Shift + F10 அழுத்தவும்.
  3. கீழ்நோக்கிய அம்புக்குறியை அழுத்தி “Driveவில் ஷார்ட்கட்டைச் சேர்” என்பதற்குச் செல்லவும்.
  4. Enter அழுத்தவும்.
  5. ஷார்ட்கட் இருக்க வேண்டிய டிரைவைத் தேர்ந்தெடுக்கவும். இந்த வழிமுறைகளைப் பின்பற்றவும்:
    1. தற்சமயம் உங்கள் ஷார்ட்கட் சேமிக்கப்பட்டுள்ள டிரைவில் இருந்து வெளியேற, இடது அம்புக்குறியை அழுத்தவும் அல்லது "பின்செல்" பட்டனுக்குச் செல்லவும்.
    2. ஷார்ட்கட்டை நகர்த்த பின்வரும் டிரைவ்களுக்குச் செல்லவும்:
      • எனது Drive
      • பகிர்ந்த இயக்ககங்கள்
    3. ஷார்ட்கட்டை நகர்த்த வேண்டிய டிரைவை விரிவாக்க வலது அம்புக்குறி பட்டனைப் பயன்படுத்தவும்.
    4. Tab அழுத்தி "உருவாக்கு" பட்டனுக்குச் செல்லவும்.
    5. Enter அழுத்தவும்.

அமைப்புகளை நிர்வகித்தல்

  1. அமைப்புகளுக்குச் செல்ல ஒரு விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்:
    • "அமைப்புகள்" பட்டனை அழுத்திவிட்டு Enter அழுத்தவும்.
    • t அழுத்திவிட்டு Enter அழுத்தவும்.
  2. ஒரு விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்:
    • அமைப்புகள்
      i. அமைப்புகளில் இருந்து பின்வருபவற்றை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்:
      • பொது அமைப்புகளில் இவற்றில் மாற்றங்களைச் செய்யலாம்:
        • பதிவேற்ற அமைப்புகள்
        • மொழி அமைப்புகள்
        • ஆஃப்லைன் அமைப்புகள்
        • அடர்த்தி
        • பரிந்துரைகளுக்கான அமைப்புகள்
      • அறிவிப்பு அமைப்புகள்
      • ஆப்ஸை நிர்வகித்தல்
    • Drive for desktop ஆப்ஸைப் பதிவிறக்குதல் (Windows மற்றும் Mac மட்டும்)
    • கீபோர்டு ஷார்ட்கட்கள்

அமைப்புகளுக்குச் செல்லுதல்: பொது

  1. அமைப்புகளுக்குச் செல்ல ஒரு விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்:
    • Tab அழுத்தி "அமைப்புகள்" பட்டனுக்குச் சென்று Enter அழுத்தவும்.
    • t அழுத்திவிட்டு Enter அழுத்தவும்.
  2. கீழ்நோக்கிய அம்புக்குறி பட்டனைப் பயன்படுத்தி 'பொது' பிரிவைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. Tab பட்டனை அழுத்தவும்.
  4. பின்வரும் விருப்பங்களுக்குச் செல்ல Tab பட்டனைப் பயன்படுத்தவும்.
    • சேமிப்பகம்: பயன்படுத்தியுள்ள மொத்தச் சேமிப்பகத்தைப் பார்க்கலாம், Google Driveவுக்கான சேமிப்பகத்தை நிர்வகிக்கலாம்.
      • Tab அழுத்தி "சேமிப்பகத்தை நிர்வகியுங்கள்" என்பதற்குச் செல்லவும்.
      • ஃபைல்களுடன் Drive சேமிப்பகத் தரவு காட்டப்பட Enter பட்டனை அழுத்தவும்.
    • பதிவேற்றங்களை மாற்றுதல்
      • Tab பட்டனை அழுத்தி “பதிவேற்றங்களை மாற்று” செக்பாக்ஸுக்குச் செல்லவும்.
      • பதிவேற்றிய ஃபைல்களை Google Docs எடிட்டர் வடிவமைப்பிற்கு மாற்ற Space பட்டனை அழுத்தி செக்பாக்ஸைத் தேர்வுசெய்யவும் அல்லது தேர்வுநீக்கவும்.
    • மொழி
      • Tab பட்டனை அழுத்தி “மொழி அமைப்புகளை மாற்று” இணைப்பிற்குச் செல்லவும்.
      • “மொழி அமைப்புகளை மாற்று” பட்டனைத் தேர்ந்தெடுக்க Enter அழுத்தவும். Google கணக்குகளுக்கான மொழி அமைப்புகளை இது திறக்கும். இங்கே Google ஆப்ஸ் கணக்கில் பயன்படுத்தும் மொழியை மாற்றலாம்.
    • ஆஃப்லைன்
      • Tab பட்டனை அழுத்தி "ஆஃப்லைன்" செக்பாக்ஸிற்குச் செல்லவும்.
      • உங்களின் சமீபத்திய Google Docs, Sheets, Slides, சாதனத்தில் உள்ள ஃபைல்கள் ஆகியவற்றை ஆஃப்லைனில் உருவாக்குவதற்கும் திறப்பதற்கும் மாற்றுவதற்கும், Space பட்டனை அழுத்தி செக்பாக்ஸைத் தேர்வுசெய்யவும் அல்லது தேர்வுநீக்கவும்.
    • அடர்த்தி
      • Tab பட்டனை அழுத்தி "அடர்த்திப் பட்டியல்" என்பதன் சுருக்கப்பட்ட துணை மெனுவுக்குச் செல்லவும்.
      • Enter அழுத்தவும்.
      • மேல் மற்றும் கீழ்நோக்கிய அம்புக்குறிகளைப் பயன்படுத்தி அடர்த்தி அமைப்புகளை இவற்றுக்கு மாற்றுவதற்கான மெனு விருப்பங்களைத் தேர்ந்தெடுக்கவும்:
        • வசதியான: ஐகான்களுக்கு இடையே அதிக இடைவெளி.
        • அடக்கமான: சுருக்கமான விருப்பத்தைவிட ஐகான்களுக்கு இடையே அதிக இடைவெளி. ஆனால் வசதியான விருப்பத்தைவிடக் குறைவான இடைவெளி.
        • சுருக்கமான: ஐகான்களுக்கு இடையே குறைவான இடைவெளி.
      • அமைப்பைத் தேர்வுசெய்ய Enter பட்டனை அழுத்தவும்.
    • பரிந்துரைகள்:
      • Tab பட்டனை அழுத்தி “பரிந்துரைகள்” செக்பாக்ஸ்களுக்குச் செல்லவும்.
        • பரிந்துரைக்கப்படும் ஃபைல்களை 'எனது Drive' பிரிவிலும் பகிர்ந்த இயக்ககங்களிலும் காட்டு.
        • பரிந்துரைக்கப்படும் ஃபைல்களை ‘என்னுடன் பகிர்ந்தவை’ பிரிவில் காட்டு.
        • எனது முகப்புப்பக்கத்தை முன்னுரிமை பெற்ற இயல்பான பக்கமாக மாற்று.
      • Space பட்டனை அழுத்தி செக்பாக்ஸைத் தேர்வுசெய்யவும் அல்லது தேர்வுநீக்கவும்.

அமைப்புகளுக்குச் செல்லுதல்: அறிவிப்புகள்

  1. அமைப்புகளுக்குச் செல்ல ஒரு விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்:
    • Tab அழுத்தி "அமைப்புகள்" பட்டனுக்குச் சென்று Enter அழுத்தவும்.
    • t அழுத்திவிட்டு Enter அழுத்தவும்.
  2. கீழ்நோக்கிய அம்புக்குறியைப் பயன்படுத்தி அறிவிப்புகள் பிரிவைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. Tab பட்டனை அழுத்தவும்.
  4. Tab பட்டனை அழுத்தி மெனு விருப்பங்களுக்குச் செல்லவும்.
    • உலாவி
      1. Tab பட்டனை அழுத்தி “உலாவி” செக்பாக்ஸுக்குச் செல்லவும்.
      2. உங்கள் உலாவியில் Google Driveவில் இருப்பவை குறித்த அறிவிப்புகளைப் பெறுவதற்கான செக்பாக்ஸைத் தேர்வுசெய்ய அல்லது தேர்வுநீக்க Space பட்டனை அழுத்தவும்.
    • மின்னஞ்சல்
      1. Tab பட்டனை அழுத்தி “மின்னஞ்சல்” செக்பாக்ஸுக்குச் செல்லவும்.
      2. உங்கள் உலாவியில் Google Driveவில் இருப்பவை குறித்த அறிவிப்புகளை மின்னஞ்சலில் பெறுவதற்கான செக்பாக்ஸைத் தேர்வுசெய்ய அல்லது தேர்வுநீக்க Space பட்டனை அழுத்தவும்.

அமைப்புகளுக்குச் செல்லுதல்: ஆப்ஸை நிர்வகி

  1. அமைப்புகளுக்குச் செல்ல ஒரு விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்:
    • Tab அழுத்தி "அமைப்புகள்" பட்டனுக்குச் சென்று Enter அழுத்தவும்.
    • t அழுத்திவிட்டு Enter அழுத்தவும்.
  2. கீழ்நோக்கிய அம்புக்குறி பட்டனைப் பயன்படுத்தி ஆப்ஸை நிர்வகித்தல் பிரிவைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. Tab பட்டனை அழுத்தவும்.
  4. Tab பட்டனை அழுத்தி மெனு விருப்பங்களுக்குச் செல்லவும்.
    • Tab அழுத்தி ஒவ்வொரு ஆப்ஸிற்கும் “இயல்பாகப் பயன்படுத்து” செக்பாக்ஸுக்குச் செல்லவும்.
    • ஆப்ஸுக்கு ஆப்ஸ் உபயோகத்தை அகற்ற அல்லது அமைக்க, Space பட்டனை அழுத்தி செக்பாக்ஸைத் தேர்வுசெய்யவும் அல்லது தேர்வுநீக்கவும்.

உதவி பெறுதல்

  1. "அமைப்புகள்" என்பதற்குச் சென்று Shift + Tab அழுத்தி "உதவி மெனு" பட்டனுக்குச் செல்லவும்.
  2. "உதவி" உரையாடலைத் திறக்க, Enter அழுத்திவிட்டு மீண்டும் Enter அழுத்தவும்.
  3. ஓர் உரையாடல் காட்டப்படும். செயல்படுத்த, இவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுத்துவிட்டு Enter அழுத்தவும்:
    1. தேடல் புலம்: உங்களின் கேள்விகளைத் தேடுவதற்கான புலம்.
    2. பொதுவான உதவித் தகவல்கள்: Tab பட்டனைப் பயன்படுத்தி உலாவக்கூடிய இந்தப் புலத்தில், நீங்கள் ஒரு பதிலைத் தேர்ந்தெடுத்து வேறொரு பக்கத்தில் அதைத் திறந்து வாசிக்கலாம்.
    3. எல்லாக் கட்டுரைகளையும் உலாவுக
    4. உதவி மன்றத்திற்குச் செல்
    5. கருத்தை அனுப்பு

தொடர்புடைய தகவல்கள்

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
11884071718681877824
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
99950
false
false