Google தயாரிப்புகளை அருகருகே பயன்படுத்துதல்

உங்கள் பிசினஸிற்கு மேம்பட்ட Google Workspace அம்சங்கள் தேவையா?

இன்றே Google Workspaceஸைப் பயன்படுத்திப் பாருங்கள்!

Gmail, Calendar போன்ற Google தயாரிப்புகளை ஒரே சாளரத்தில் நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இதன் மூலம் தாவல்களுக்கு இடையில் மாறுவதற்காக நேரத்தை வீணாக்காமல் உங்கள் செயல்திறனை அதிகரித்துக் கொள்ளலாம்.

இரண்டு Google தயாரிப்புகளை ஒரே சாளரத்தில் திறத்தல்

  1. Gmail, Calendar, Chat அல்லது Driveவுக்குச் செல்லவும். இல்லையெனில் Google Docs, Sheets அல்லது Slidesஸில் ஒரு ஃபைலைத் திறக்கவும்.
  2. கீழ் வலதுபுறத்தில், பக்கவாட்டுப் பேனலைக் காட்டு பக்கவாட்டுப் பேனலைக் காட்டு என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. வலதுபுறத்தில், திறக்க விரும்பும் தயாரிப்பைத் தேர்வுசெய்யவும்:
    • Calendar Calendar: உங்கள் திட்ட அட்டவணையைப் பார்க்கலாம் நிகழ்வுகளைச் சேர்க்கலாம்/திருத்தலாம்.
    • Keep Keep: குறிப்பு/பட்டியலை உருவாக்கலாம்.
    • Tasks Tasks: செய்யவேண்டியவற்றையும் காலக்கெடுக்களையும் சேர்க்கலாம்.
    • Contacts contacts: உங்கள் தொடர்புகளை அணுகலாம்.
    • Voice : Google Voice அழைப்பை மேற்கொள்ளலாம்.
    • Maps Maps: Google Mapsஸில் தேடலாம்.
  4. ஆப்ஸ் பேனலை மூட, வலதுபுறத்தில் உள்ள மூடுக ரத்துசெய் என்பதைக் கிளிக் செய்யவும்.

உதவிக்குறிப்பு: பக்கவாட்டுப் பேனலில் கூடுதல் விருப்பங்களைச் சேர்க்க, Google Workspace இல் இருந்து செருகு நிரல்களைப் பெறலாம்.

மேலும் அறிக:

வலதுபுறப் பக்கவாட்டுப் பேனலை மூடுதல்/மறைத்தல்

Google Workspace பக்கவாட்டுப் பேனலை மூடலாம்/மறைக்கலாம்.

  • வலதுபுறப் பக்கவாட்டுப் பேனலை மூட: வலதுபுறத்தில் உள்ள மூடுக ரத்துசெய் என்பதைக் கிளிக் செய்யவும்.
  • வலதுபுறப் பக்கவாட்டுப் பேனலை மறைக்க: பேனல் விரிந்திருந்தால் ஆப்ஸ் பேனலின் மேல் வலதுபுறத்தில் உள்ள மூடுக ரத்துசெய் என்பதைக் கிளிக் செய்யவும். பிறகு கீழ் வலதுபுறத்தில், பக்கவாட்டுப் பேனலை மறை பக்கவாட்டுப் பேனலை மறை என்பதைக் கிளிக் செய்யவும்.
  • வலதுபுறப் பக்கவாட்டுப் பேனலைக் காட்ட: கீழ் வலதுபுறத்தில், பக்கவாட்டுப் பேனலைக் காட்டு பக்கவாட்டுப் பேனலைக் காட்டு என்பதைக் கிளிக் செய்யவும்.

கேலெண்டர் நிகழ்வை உருவாக்குதல்

  1. Gmail, Calendar, Chat அல்லது Driveவுக்குச் செல்லவும். இல்லையெனில் Google Docs, Sheets அல்லது Slidesஸில் ஒரு ஃபைலைத் திறக்கவும்.
  2. பக்கவாட்டுப் பேனல் காட்டப்படவில்லை எனில் கீழ் வலதுபுறத்தில் உள்ள பக்கவாட்டுப் பேனலைக் காட்டு பக்கவாட்டுப் பேனலைக் காட்டு என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. வலதுபுறத்தில் Google Calendarரை Calendar கிளிக் செய்யவும்.
  4. கேலெண்டரில் ஒரு நேரத்தைக் கிளிக் செய்யவும்.
  5. நிகழ்வு விவரங்களை உள்ளிடவும்.
  6. சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.

Google Calendar குறித்து மேலும் அறிக.

கேலெண்டர் நிகழ்வில் ஆவணத்தை இணைத்தல்
  1. Google Driveவுக்குச் செல்லவும் இல்லையெனில் Docs, Sheets, Slides அல்லது Drawingsஸில் ஒரு ஃபைலைத் திறக்கவும்.
  2. பக்கவாட்டுப் பேனல் காட்டப்படவில்லை எனில் கீழ் வலதுபுறத்தில் உள்ள பக்கவாட்டுப் பேனலைக் காட்டு பக்கவாட்டுப் பேனலைக் காட்டு என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. வலதுபுறத்தில் Google Calendarரை Calendar கிளிக் செய்யவும்.
  4. கேலெண்டரில் ஒரு நேரத்தைக் கிளிக் செய்யவும்.
  5. நிகழ்வு விவரங்களை உள்ளிடவும்.
  6. "விளக்கத்தைச் சேர்" என்பதற்குக் கீழ் உள்ள [உங்கள் ஆவணத்தின் பெயர்] கோப்பினை இணை என்பதைக் கிளிக் செய்யவும்.
  7. சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.

Google Calendarரில் இடத்தைக் கண்டறிதல்/வழிகளைப் பெறுதல்

  1. கம்ப்யூட்டரில் Google Calendarருக்குச் Calendar செல்லவும்.
  2. பக்கவாட்டுப் பேனல் காட்டப்படவில்லை எனில் கீழ் வலதுபுறத்தில் உள்ள பக்கவாட்டுப் பேனலைக் காட்டு பக்கவாட்டுப் பேனலைக் காட்டு என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. வலதுபுறத்தில் உள்ள Mapsஸைக் Maps கிளிக் செய்யவும்.
  4. ஓர் இடத்தைத் தேடவும்.
  5. அந்த இடம் குறித்த விவரங்களைப் பார்க்கவும் அல்லது வழிகள் என்பதைக் கிளிக் செய்து வழிகளைப் பெறவும்.

உதவிக்குறிப்புகள்:

  • Google Calendarரில் இருந்தே Google Maps திறக்கப்படுவதைத் தடுக்க: Maps பேனலின் மேல் வலதுபுறத்தில் உள்ள மூடுக ரத்துசெய் என்பதைக் கிளிக் செய்யவும். பிறகு கீழ் வலதுபுறத்தில், பக்கவாட்டுப் பேனலை மறை பக்கவாட்டுப் பேனலை மறை என்பதைக் கிளிக் செய்யவும். அதன்பிறகு Maps என்பதில் கிளிக் செய்யும்போது அது புதிய தாவலில் திறக்கப்படும்.
  • Google Calendarரில் நிகழ்வுக்கு நேரடியாகப் பயண நேரத்தைச் சேர்க்க: பயணிக்கும் முறையையும் பயணத்தையும் தேர்ந்தெடுத்த பிறகு Calendarரில் சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.

நிகழ்வு நடைபெறும் இருப்பிடத்தைப் பார்த்தல்

  1. கம்ப்யூட்டரில் Google Calendarருக்குச் Calendar செல்லவும்.
  2. நிகழ்வை உருவாக்கி அதில் இருப்பிடத் தகவலை உள்ளிடவும் அல்லது ஏற்கெனவே உருவாக்கப்பட்டு இருப்பிடத் தகவல் உள்ளிடப்பட்ட நிகழ்வைக் கிளிக் செய்யவும்.
  3. விருப்பத்திற்குட்பட்டது: நீங்கள் உருவாக்கிக் கொண்டிருக்கும் நிகழ்வின் இருப்பிடத்தின் மாதிரிக்காட்சியைப் பார்க்க, Mapsஸில் மாதிரிக்காட்சியைக் காட்டு maps outline என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. இருப்பிடத்தைக் கிளிக் செய்யவும்.
  5. இருப்பிடத் தகவல் வலதுபுறம் காட்டப்படும்.

உதவிக்குறிப்புகள்:

  • Google Calendarரில் இருந்தே Google Maps திறக்கப்படுவதைத் தடுக்க: Maps பேனலின் மேல் வலதுபுறத்தில் உள்ள மூடுக ரத்துசெய் என்பதைக் கிளிக் செய்யவும். பிறகு கீழ் வலதுபுறத்தில், பக்கவாட்டுப் பேனலை மறை பக்கவாட்டுப் பேனலை மறை என்பதைக் கிளிக் செய்யவும். அதன்பிறகு Maps என்பதில் கிளிக் செய்யும்போது அது புதிய தாவலில் திறக்கப்படும்.
  • Google Calendarரில் நிகழ்வுக்கு நேரடியாகப் பயண நேரத்தைச் சேர்க்க: பயணிக்கும் முறையையும் பயணத்தையும் தேர்ந்தெடுத்த பிறகு Calendarரில் சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.

குறிப்பு அல்லது பட்டியலை உருவாக்குதல்

  1. Gmail, Calendar, Chat அல்லது Driveவுக்குச் செல்லவும். இல்லையெனில் Google Docs, Sheets அல்லது Slidesஸில் ஒரு ஃபைலைத் திறக்கவும்.
  2. பக்கவாட்டுப் பேனல் காட்டப்படவில்லை எனில் கீழ் வலதுபுறத்தில் உள்ள பக்கவாட்டுப் பேனலைக் காட்டு பக்கவாட்டுப் பேனலைக் காட்டு என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. வலதுபுறத்தில் உள்ள Keep Keep என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. ஒரு விருப்பத்தைத் தேர்வுசெய்யவும்:
    • குறிப்பெடுத்தல்
    • புதிய பட்டியல் new note
  5. விரும்பும் வார்த்தைகளைச் சேர்க்கவும்.
  6. முடிந்தது என்பதைக் கிளிக் செய்யவும்.

Google Keep குறித்து மேலும் அறிக.

ஆவணம்/விளக்கக்காட்சியில் Keep குறிப்பைச் சேர்த்தல்
  1. Google Docs அல்லது Slidesஸில் ஆவணம்/விளக்கக்காட்சியைத் திறக்கவும்.
  2. பக்கவாட்டுப் பேனல் காட்டப்படவில்லை எனில் கீழ் வலதுபுறத்தில் உள்ள பக்கவாட்டுப் பேனலைக் காட்டு பக்கவாட்டுப் பேனலைக் காட்டு என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. வலதுபுறத்தில் உள்ள Keep Keep என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. சேர்க்க விரும்பும் குறிப்பு/பட்டியலைக் கண்டறிந்து அதை ஆவணம்/விளக்கக்காட்சிக்கு இழுக்கவும்.
Docs/Slidesஸின் உரையை Keepல் சேமித்தல்
  1. Google Docs அல்லது Slidesஸில் ஆவணத்தையோ விளக்கக்காட்சியையோ திறக்கவும்.
  2. குறிப்பில் சேர்க்க விரும்பும் உரையை ஹைலைட் செய்யவும்.
  3. உரையில் வலது கிளிக் செய்து Keepபில் சேமி என்பதைத் தேர்வுசெய்யவும்.

பணியை உருவாக்குதல்

  1. Gmail, Calendar, Chat அல்லது Driveவுக்குச் செல்லவும். இல்லையெனில் Google Docs, Sheets அல்லது Slidesஸில் ஒரு ஃபைலைத் திறக்கவும்.
  2. பக்கவாட்டுப் பேனல் காட்டப்படவில்லை எனில் கீழ் வலதுபுறத்தில் உள்ள பக்கவாட்டுப் பேனலைக் காட்டு பக்கவாட்டுப் பேனலைக் காட்டு என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. வலதுபுறத்தில் Tasks Tasks என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. பணியைச் சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.
  5. தகவல்களை உள்ளிடவும்.
  6. விருப்பத்திற்குட்பட்டது: விவரங்களையோ முடிக்க வேண்டிய தேதியையோ சேர்க்க, திருத்து மாற்று என்பதைக் கிளிக் செய்யவும்.
  7. திருத்தி முடித்தவுடன் 'Tasksஸை மூடுக' ரத்துசெய் என்பதைக் கிளிக் செய்யவும்.

உதவிக்குறிப்பு: விரும்பும் பணியை இழுத்து நகர்த்தி உங்கள் பணிகளை மறுவரிசைப்படுத்தலாம்.

Google Tasksஸை எப்படிப் பயன்படுத்துவது என்பதை அறிக.

மின்னஞ்சலைப் பணியாகச் சேமித்தல்
  1. Gmailலுக்குச் செல்லவும்.
  2. பக்கவாட்டுப் பேனல் காட்டப்படவில்லை எனில் கீழ் வலதுபுறத்தில் உள்ள பக்கவாட்டுப் பேனலைக் காட்டு பக்கவாட்டுப் பேனலைக் காட்டு என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. வலதுபுறத்தில் Tasks Tasks என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. பணியாகச் சேமிக்க விரும்பும் மின்னஞ்சலை உங்கள் இன்பாக்ஸில் கண்டறியவும்.
  5. அந்த மின்னஞ்சலை வலதுபுறப் பக்கவாட்டுப் பேனலுக்கு இழுக்கவும்.
பணிகளைப் பட்டியல்களாக ஒழுங்கமைத்தல்

பணி தொடர்பானவை, தனிப்பட்டவை எனப் பல்வேறு விதமான பணிகளைத் தனித்தனியாகப் பிரிக்கலாம்.

  1. Gmail, Calendar, Chat அல்லது Driveவுக்குச் செல்லவும். இல்லையெனில் Google Docs, Sheets அல்லது Slidesஸில் ஒரு ஃபைலைத் திறக்கவும்.
  2. பக்கவாட்டுப் பேனல் காட்டப்படவில்லை எனில் கீழ் வலதுபுறத்தில் உள்ள பக்கவாட்டுப் பேனலைக் காட்டு பக்கவாட்டுப் பேனலைக் காட்டு என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. வலதுபுறத்தில் Tasks Tasks என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. மேலே “எனது பணிகள்” அல்லது “குழுப் பணிகள்” என்பதற்கு அடுத்துள்ள கீழ்நோக்கிய அம்புக்குறி கீழ் தோன்றுதல் அம்புக்குறி அதன் பிறகு புதிய பட்டியலை உருவாக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.
  5. பட்டியலுக்கான பெயரை டைப் செய்தபிறகு முடிந்தது என்பதைக் கிளிக் செய்யவும்.
  6. வேறு பட்டியலுக்குச் செல்ல, மேலே உள்ள பட்டியல் தலைப்புக்கு அடுத்துள்ள கீழ்நோக்கிய அம்புக்குறியை கீழ் தோன்றுதல் அம்புக்குறி கிளிக் செய்யவும். வேறொரு பட்டியலைத் தேர்வுசெய்யவும்.

Gmail உடன் பிற ஆப்ஸைப் பயன்படுத்துதல்

Google Workspace தயாரிப்புகளுடன் பயன்படுத்த Asana, Trello, Intuit, Docusign போன்ற பிற ஆப்ஸையும் பிற கருவிகளையும் சேர்க்கலாம்.

Google Workspace செருகு நிரல்களை நிறுவுதல்

  1. Gmail, Calendar, Chat அல்லது Driveவுக்குச் செல்லவும். இல்லையெனில் Google Docs, Sheets அல்லது Slidesஸில் ஒரு ஃபைலைத் திறக்கவும்.
  2. பக்கவாட்டுப் பேனல் காட்டப்படவில்லை எனில் கீழ் வலதுபுறத்தில் உள்ள பக்கவாட்டுப் பேனலைக் காட்டு பக்கவாட்டுப் பேனலைக் காட்டு என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. செருகு நிரல்களைப் பெறு என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. நீங்கள் பயன்படுத்த விரும்பும் கருவிகளைத் தேடித் தேர்ந்தெடுக்கவும். 
  5. நிறுவு அதன் பிறகு தொடர்க என்பதைக் கிளிக் செய்யவும்.
  6. உங்கள் கணக்கைத் தேர்வுசெய்து திரையில் காட்டப்படும் படிகளைப் பின்பற்றவும்.

Google Workspace செருகு நிரல்களை நிறுவல் நீக்குதல்

  1. Gmail, Calendar, Chat அல்லது Driveவுக்குச் செல்லவும். இல்லையெனில் Google Docs, Sheets அல்லது Slidesஸில் ஒரு ஃபைலைத் திறக்கவும்.
  2. பக்கவாட்டுப் பேனல் காட்டப்படவில்லை எனில் கீழ் வலதுபுறத்தில் உள்ள பக்கவாட்டுப் பேனலைக் காட்டு பக்கவாட்டுப் பேனலைக் காட்டு என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. நீங்கள் நிறுவல் நீக்க விரும்பும் செருகு நிரலைக் கிளிக் செய்து மேலும்அதன் பிறகு செருகு நிரலை நிர்வகியுங்கள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. காட்டப்படும் சாளரத்தில் செருகு நிரலைத் தேர்ந்தெடுக்கவும்.
  5. நிறுவல் நீக்கு அதன் பிறகு ஆப்ஸை நிறுவல் நீக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.

Marketplace ஆப்ஸை உங்கள் நிறுவனம் எவ்வாறு கண்டறியலாம்?

Google Drive, Gmail போன்ற முக்கியமான Google Workspace சேவைகளை விரிவுபடுத்துவதற்கான ஆப்ஸையும் Google Workspaceஸின் தற்போதைய திறன்களை மேம்படுத்தக்கூடிய தனித்தியங்கும் ஆப்ஸையும் கண்டறிந்து நிறுவ நீங்களும் உங்கள் பயனர்களும் Google Workspace Marketplaceஸைப் பயன்படுத்தலாம்.

Marketplace ஆப்ஸை Google எவ்வாறு மதிப்பாய்வு செய்கிறது?

டெவெலப்பர் Marketplaceஸில் ஆப்ஸைப் பொதுவில் கிடைக்குமாறு சமர்ப்பிக்கும்போது, எங்களின் வழிகாட்டுதல்களை ஆப்ஸ் பின்பற்றியுள்ளதா என்பதை உறுதிப்படுத்த Google அந்தச் சமர்ப்பிப்பை மதிப்பாய்வு செய்கிறது. ஆப்ஸைத் தொடங்கவோ உதவி தேவையெனில் டெவெலப்பரைத் தொடர்புகொள்ளவோ தேவையான இணைப்புகளைப் பயனர்களுக்கு வழங்குவதோடு ஆப்ஸின் அம்சங்கள், அது செயல்படும் விதம் ஆகியவை குறித்த தகவல்களையும் டெவெலப்பர் வழங்க வேண்டும். மேலும், பிரபலமாக இருக்கும் பெரும்பாலான ஆப்ஸை முறையான இடைவெளிகளில் Google மதிப்பாய்வு செய்யும். மேலும் தகவல்களுக்கு ஆப்ஸ் மதிப்பாய்வு - ஓர் அறிமுகம் என்பதைப் பார்க்கவும்.
அதுமட்டுமல்லாது பயனர் தரவை அணுகுவதற்காக Google APIsஸைப் பயன்படுத்தும் ஆப்ஸானது Marketplaceஸில் கிடைப்பதற்கு முன்பாகச் சரிபார்ப்புச் செயலாக்கத்தை நிறைவுசெய்ய வேண்டியிருக்கலாம். எந்த வகையான பயனர் தரவை ஆப்ஸ் அணுகுகிறது, அதற்கு எந்தளவிற்கு அணுகல் தேவைப்படுகிறது என்பதைப் பொறுத்து சரிபார்ப்புச் செயல்முறை தேவைப்படுகிறது. மேலும் தகவல்களுக்கு சரிபார்ப்பிற்குச் சமர்ப்பிக்கும் வழிமுறைகள் என்பதைப் பார்க்கவும்

ஆப்ஸ் எவ்வாறு ஒருங்கிணைக்கப்பட்டு தரவரிசைப்படுத்தப்படுகிறது?

பயனரின் ஆர்வங்கள், தேவைகள் ஆகியவற்றின் அடிப்படையில் தொடர்புடைய ஆப்ஸை Marketplace காட்டும். இவற்றின் அடிப்படையில் ஆப்ஸ் தரவரிசைப்படுத்தப்படுகின்றன:
  • ஆப்ஸ் வழங்கும் அனுபவத்தின் தரமும் எடிட்டோரியல் மதிப்பும்: எடிட்டர்ஸ் சாய்ஸில் இருக்கும் ஆப்ஸ் Googleளால் தேர்ந்தெடுக்கப்படுபவை ஆகும். மேலும் தகவல்களுக்கு எடிட்டர்ஸ் சாய்ஸ் என்பதைப் பார்க்கவும்.
  • தொடர்புத்தன்மை: தேடல் வார்த்தையுடன் ஆப்ஸின் பெயரும் விளக்கமும் பொருந்தும் விதம், ஆப்ஸின் பிரபலத்தன்மை, பயனர் அனுபவத்தின் ரேட்டிங் ஆகியவற்றைப் பொறுத்தே Search முடிவுகள் இருக்கும். பிரபலத்தன்மையும் பயனர் அனுபவமும் ஒரே அளவு முக்கியத்தும் கொண்டவை.
  • பிரபலத்தன்மை: எத்தனை பயனர்கள் ஆப்ஸை நிறுவியுள்ளார்கள் என்ற அடிப்படையில் ரேங்கிங் வழங்கப்படுகிறது. அதிகமாக நிறுவப்பட்ட ஆப்ஸ் 'மிகப் பிரபலமானவை' என்ற பிரிவில் இருக்கும்.
  • பயனர் அனுபவம்: ரேட்டிங்குகளின் எண்ணிக்கை, சராசரி ரேட்டிங் ஆகியவை ஆப்ஸைச் சிறந்த மதிப்பீடு பெற்றவை பிரிவில் வரிசைப்படுத்தப் பயன்படுத்தப்படுகின்றன. பயனர் கருத்துகளையும் ரேட்டிங்குகளையும் Google சரிபார்ப்பதில்லை. இருப்பினும், எங்கள் கொள்கைகளை மீறும் வகையில் கருத்துகள் இருந்தால் அவை அகற்றப்படும். பயனர்களும் தவறான கருத்துகள் குறித்துப் புகாரளிக்கலாம்.

பல Google கணக்குகளில் உள்நுழைவதால் ஏற்படும் சிக்கல்கள்

ஒரே நேரத்தில் பல Google கணக்குகளில் நீங்கள் உள்நுழைந்திருந்தால் ஆப்ஸ் ஸ்கிரிப்ட் திட்டப்பணிகள், செருகு நிரல்கள், இணைய ஆப்ஸ் ஆகியவற்றை அணுகுவதில் சிக்கல் ஏற்படலாம்.

பல கணக்குகளில் உள்நுழைதல், அதாவது ஒரே நேரத்தில் பல Google கணக்குகளில் உள்நுழைந்திருந்தால் ஆப்ஸ் ஸ்கிரிப்ட் திட்டப்பணிகள், செருகு நிரல்கள், இணைய ஆப்ஸ் ஆகியவற்றைப் பயன்படுத்த முடியாது.

பல கணக்குகளில் உள்நுழைவது தொடர்பான சிக்கல்களைச் சரிசெய்ய, கீழே உள்ள தீர்வுகளில் ஒன்றைச் செய்யவும்:

  • உங்களின் Google கணக்குகள் அனைத்தில் இருந்தும் வெளியேறிவிட்டு, நீங்கள் பயன்படுத்த விரும்பும் ஆப்ஸ் ஸ்கிரிப்ட் திட்டப்பணி, செருகு நிரல் அல்லது இணைய ஆப்ஸ் இருக்கும் கணக்கில் உள்நுழையவும்.
  • Google Chromeமில் மறைநிலைச் சாளரத்தைத் திறக்கவும் அல்லது வேறொரு மறைநிலை உலாவல் சாளரத்தைத் திறக்கவும். அதன்பிறகு, நீங்கள் பயன்படுத்த விரும்பும் ஆப்ஸ் ஸ்கிரிப்ட் திட்டப்பணி, செருகு நிரல் அல்லது இணைய ஆப்ஸ் இருக்கும் Google கணக்கில் உள்நுழையவும்.
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
13938230818346836046
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
99950
false
false