‘காப்புப்பிரதி & ஒத்திசைவு’ அம்சத்தில் இருந்து Google Drive for desktop ஆப்ஸிற்குக் கணக்கை நகர்த்துதல்

வரவிருக்கும் மாதங்களில் ‘காப்புப்பிரதி & ஒத்திசைவு’ திரையில் ‘Drive for desktop’ ஆப்ஸிற்கு மாறுமாறு மெசேஜ் காட்டப்படும். ‘காப்புப்பிரதி & ஒத்திசைவு’ அம்சத்திற்கும் Drive for desktop ஆப்ஸிற்கும் இடையே உள்ள வேறுபாடுகள் குறித்து மேலும் அறிக

உங்கள் கணக்கை நகர்த்த, ‘காப்புப்பிரதி & ஒத்திசைவு’ அம்சத்திற்குப் பயன்படுத்தும் அதே கணக்கில் உள்நுழைவதற்கான உலாவிப் பக்கம் திறக்கப்படும்.

அதில் "இந்த ஆப்ஸை Googleளில் இருந்து பதிவிறக்கியுள்ளீர்கள் என்பதை உறுதிசெய்துகொள்ளவும்" எனும் மெசேஜ் காட்டப்படும். இந்த மாற்றத்தை எளிமைப்படுத்த Drive for desktop ஆப்ஸைக் ‘காப்புப்பிரதி & ஒத்திசைவு’ அம்சம் பதிவிறக்கம் செய்திருக்கும் என்பதால் உள்நுழை என்பதைக் கிளிக் செய்து அடுத்த படிக்குச் செல்லலாம்

உதவிக்குறிப்பு: ‘காப்புப்பிரதி & ஒத்திசைவு’ அம்சம் தானாகவே Drive for desktop ஆப்ஸைப் பதிவிறக்கவில்லை எனில் இங்கிருந்து அதைப் பதிவிறக்கலாம்

உங்கள் கணக்கில் உள்நுழைதல்

Drive for desktop ஆப்ஸைத் தொடங்கியபின் உங்கள் கணக்குகளில் மீண்டும் உள்நுழையவும். ‘காப்புப்பிரதி & ஒத்திசைவு’ அம்சத்திற்கும் Drive for desktop ஆப்ஸிற்கும் நீங்கள் ஒரே கணக்கைப் பயன்படுத்தினால் அந்தக் கணக்கில் உள்நுழைய வேண்டும் அல்லது பிற கணக்குகளில் உள்நுழைந்திடும் வகையில் அந்தக் கணக்கின் இணைப்பை நீக்க வேண்டும். Drive for desktop ஆப்ஸிற்கென ஏற்கெனவே ஒரு கணக்கைப் பயன்படுத்தினாலோ ஏற்கெனவே கணக்கை நகர்த்தத் துவங்கிவிட்டாலோ மீண்டும் உள்நுழைய வேண்டியதில்லை.

முக்கியம்: பள்ளி அல்லது பணிக்கான கணக்கைப் பயன்படுத்தும்பட்சத்தில், உங்கள் நிர்வாகி Drive for desktop ஆப்ஸை அனுமதிக்கவில்லை எனில் கணக்கை நகர்த்த முடியாமல் போகலாம்.

கணக்குகளின் இணைப்பை நீக்குதல் 

‘காப்புப்பிரதி & ஒத்திசைவு’ அம்சத்தில் இருந்து Drive for desktop ஆப்ஸிற்குக் கணக்கை நகர்த்த விரும்பவில்லை எனில் அதன் இணைப்பை நீக்கலாம். Google Driveவில் ஒத்திசைக்கும் ஃபோல்டர்களும் Google Photosஸிற்குக் காப்புப் பிரதி எடுக்கும் ஃபோல்டர்களும் கம்ப்யூட்டரிலும் கிளவுடிலும் அப்படியே இருக்கும். ஆனால் அவற்றில் செய்யும் மாற்றங்கள் இனிமேல் ஒத்திசைக்கப்படாது.

Drive for desktop ஆப்ஸிற்கு நகர்த்தியபிறகு மீண்டும் அந்தக் கணக்கை இணைக்க விரும்பினால் இந்த ஃபோல்டர்களை மீண்டும் அமைக்க வேண்டியிருக்கலாம், சில உள்ளடக்கம் மீண்டும் பதிவேற்றப்படலாம்.

முக்கியம்: உங்கள் கணக்கின் இணைப்பை நீக்குவது ‘காப்புப்பிரதி & ஒத்திசைவு’ அம்சத்தில் இருந்து மட்டுமே கணக்கை நீக்கும். கணக்கு ஏற்கெனவே Drive for desktop ஆப்ஸில் இருந்தால் அதில் இருந்து அகற்றப்படாது.

ஃபோல்டர்களுக்கான அணுகலை வழங்குதல் (macOSஸில் மட்டும்)

MacOSஸில் Desktop, Documents, Downloads போன்ற ஃபோல்டர்களையும் வெளிப்புற டிரைவ்கள், நெட்வொர்க் சேமிப்பகங்கள், பட லைப்ரரிகள் ஆகியவற்றையும் அணுக Drive for desktop போன்ற ஆப்ஸ் அனுமதிகோர வேண்டும். Google Driveவில் ஒத்திசைக்க அல்லது Google Photosஸிற்குக் காப்புப்பிரதி எடுப்பதைத் தொடர, நீங்கள் அணுகல் வழங்க வேண்டும். 

"நிராகரி" என்பதைக் கிளிக் செய்தபிறகு அணுகல் வழங்க வேண்டுமெனில் நீங்கள் செய்த மாற்றங்களைச் செயல்படுத்த கம்ப்யூட்டரை மீண்டும் தொடங்க வேண்டியிருக்கலாம்.

இந்த அனுமதிகளை நீங்கள் சிஸ்டம் விருப்பத்தேர்வுகள் Chevron பாதுகாப்பு & தனியுரிமை Chevron தனியுரிமை என்பதில் நிர்வகிக்கலாம்.

அகற்றக்கூடிய சாதனங்களை இணைத்தல்

அகற்றக்கூடிய சாதனங்களில் (எ.கா. வெளிப்புற இயக்ககங்கள், நெட்வொர்க்கில் இணைக்கப்பட்ட சேமிப்பகம், மேலும் பல) சேமிக்கப்பட்டுள்ள ஃபோல்டர்களை ஒத்திசைக்கிறீர்கள் எனில் Drive for desktop ஆப்ஸிற்கு அவற்றை நகர்த்தும்போது இந்தச் சாதனங்களை இணைக்க வேண்டும்.

கணக்கை நகர்த்தும்போது சாதனம் இணைக்கப்பட்டிருக்கவில்லை எனில் அந்தச் சாதனங்களில் இருக்கும் ஃபோல்டர்கள் ஒத்திசைக்கப்படாது, அத்துடன் அவை Drive for desktop ஆப்ஸிற்கு நகர்த்தப்படாது. Drive for desktop ஆப்ஸில் USB சாதனங்கள் மீண்டும் அமைக்கப்பட வேண்டும்.

முக்கியம்: உங்களது கணக்குகளை நகர்த்தும்போது சாதனங்களை இணைத்தே வைத்திருக்கவும்.

 

ஒத்திசைக்க வேண்டிய ஃபைல்களுக்கான ஃபோல்டர்களைச் சரிபார்த்தல்

அமைவின்போது கம்ப்யூட்டரிலும் கிளவுடிலும் ஒத்திசைக்க வேண்டிய ஃபைல்கள் உள்ளதா என்று Drive for desktop ஆப்ஸ் பார்க்கும். ஒத்திசைப்பது என்பது கிளவுடிலிருந்து ஃபைல்களைப் பதிவிறக்குவதும் கம்ப்யூட்டர் ஹார்டு டிரைவில் இருந்து அவற்றைப் பதிவேற்றுவதுமாகும். இதன்மூலம் கம்ப்யூட்டரிலும் கிளவுடிலும் ஒரே உள்ளடக்கம் இருக்கும்.

‘காப்புப்பிரதி & ஒத்திசைவு’ அம்சத்தில் பின்வரும் சில அமைப்புகளின் காரணமாகக் கம்ப்யூட்டருக்கும் கிளவுடிற்கும் இடையே ஃபோல்டர்கள் ஒத்திசைக்கப்படாமல் இருக்கலாம்:

 • Drive அல்லது Photosஸில் சில ஃபைல் வகைகள் பதிவேற்றப்படுவதைத் தவிர்த்தல்
 • ஓர் இடத்தில் அகற்றப்படும் ஃபைல்கள் மற்றொரு இடத்தில் அகற்றப்படாமல் இருக்க, நீக்கியவற்றை Driveவில் ஒத்திசைக்காமல் இருக்குமாறு தேர்வுசெய்திருத்தல்
 • Driveவில் படங்கள் & வீடியோக்களை மட்டும் பதிவேற்றுதல்
 • Driveவில் படங்கள் & வீடியோக்களை உயர்தரம் (HQ) அல்லது ஸ்டோரேஜ் சேவர் தரத்தில் பதிவேற்றுதல்

Drive for desktop ஆப்ஸைப் பயன்படுத்த, Driveவில் இருக்கும் ஃபோல்டர்கள் முழுமையாக ஒத்திசைக்கப்பட வேண்டும்.

ஃபைல்களை ஒத்திசைக்கத் தேவையான சேமிப்பகம்

ஃபைல்களைப் பதிவேற்றும்போது கூடுதல் Google கணக்குச் சேமிப்பகத்தையும் பதிவிறக்கும்போது கம்ப்யூட்டரில் உள்ள சேமிப்பகத்தையும் ஒத்திசைவு பயன்படுத்தும். சேமிப்பகம் தீர்ந்துவிட்டால் உங்கள் கணக்குகள் தொடர்ந்து Drive for desktop ஆப்ஸிற்கு நகர்த்தப்படும் என்றாலும், போதுமான சேமிப்பிடம் கிடைக்கும் வரை ஒத்திசைவு இடைநிறுத்தப்படும். Google கணக்குச் சேமிப்பகத்தை நிர்வகித்தல் குறித்து மேலும் அறிக

ஃபைல்களைப் பதிவேற்றத் தேவைப்படும் Google கணக்குச் சேமிப்பகத்தின் தேவையைக் குறைக்க நீங்கள்:

 • Google Driveவிற்கு ஒத்திசைக்காத அல்லது Google Photosஸில் காப்புப் பிரதி எடுக்காத ஃபைல்களைத் தேர்ந்தெடுத்து உங்கள் கம்ப்யூட்டரில் ஒத்திசைக்க வேண்டிய ஃபோல்டருக்கு நகர்த்தலாம்
 • பெரும்பாலும் படங்களும் வீடியோக்களும் இருக்கும் ஃபோல்டரை Google Photosஸில் மட்டும் காப்புப் பிரதி எடுக்குமாறு தேர்வுசெய்யலாம்

ஃபைல்களைப் பதிவிறக்கத் தேவைப்படும் கம்ப்யூட்டர் சேமிப்பகத்தின் தேவையைக் குறைக்க நீங்கள்:

 • கம்ப்யூட்டருடன் ஒத்திசைக்காத ஃபைல்களைத் தேர்ந்தெடுத்து Driveவில் ஒத்திசைக்க வேண்டிய ஃபோல்டருக்கு நகர்த்தலாம்
 • எனது இயக்ககத்தை ஸ்ட்ரீம் செய் என்பதற்கு மாறலாம்

ஒத்திசைக்க வேண்டிய ஃபைல்களைப் பதிவேற்றவோ பதிவிறக்கவோ வேண்டாம் எனில் ஃபோல்டரின் இணைப்பை நீக்கலாம். கம்ப்யூட்டரிலும் கிளவுடிலும் ஏற்கெனவே உள்ள ஃபைல்கள் அப்படியே இருக்கும்.

எனது இயக்ககத்திற்கான அமைப்புகளைத் தேர்வுசெய்தல்

‘எனது இயக்ககம்’ என்பதில் உள்ளவற்றை "ஸ்ட்ரீம்/மிரர்" செய்யலாம். ஸ்ட்ரீமிங், மிரரிங் ஆகிய இரண்டு அம்சங்களின் மூலமும் கம்ப்யூட்டரில் இருந்து உங்கள் Google Drive ஃபைல்களை நேரடியாக அணுகலாம்.  எனினும், ஃபைல்கள் இருக்குமிடம், ஃபைல்களை எப்போது அணுகலாம், எவ்வளவு சேமிப்பகம் பயன்படுத்தப்படும், ஃபைல்கள் ஆஃப்லைனில் கிடைக்கும் நிலை போன்றவை மாறுபடும்.

  ஸ்ட்ரீம் செய்தல் மிரர் செய்தல்
ஃபைல்கள் எங்கே இருக்கும்? ஃபைல்கள் கம்ப்யூட்டரில் ஒரு விர்ச்சுவல் இயக்ககத்தில்* இருக்கும் ஃபைல்கள் கம்ப்யூட்டரில் ஒரு ஃபோல்டரில் இருக்கும்
ஃபைல்களை எப்போது அணுகலாம்? Drive for desktop ஆப்ஸ் இயக்கத்தில் இருக்கும்போது மட்டுமே ஃபைல்களை அணுக முடியும் ஃபைல்களை எப்போது வேண்டுமானாலும் அணுகலாம், அதாவது Drive for desktop ஆப்ஸ் இயக்கத்தில் இல்லாதபோதும் கூட அணுகலாம்
எவ்வளவு சேமிப்பகம் பயன்படுத்தப்படும்? நீங்கள் திறக்கின்ற அல்லது ஆஃப்லைனில் கிடைக்கும்படிச் செய்கின்ற ஃபைல்களுக்குச் சேமிப்பகம் பயன்படுத்தப்படும் கம்ப்யூட்டரில் சேமிக்கப்படும் ‘எனது இயக்ககம்’ ஃபைல்கள் அனைத்திற்கும் சேமிப்பகம் பயன்படுத்தப்படும்
ஆஃப்லைனில் கிடைக்கும் நிலை ஃபைல்கள் அல்லது ஃபோல்டர்களை வலது கிளிக் செய்து "ஆஃப்லைனில் கிடைக்கும்படிச் செய்" என்பதைத் தேர்ந்தெடுத்து அவற்றை ஆஃப்லைனில் கிடைக்குமாறு செய்யலாம் ‘எனது இயக்ககம்’ ஃபைல்கள் அனைத்தும் இயல்பாகவே ஆஃப்லைனில் கிடைக்கும்

* விர்ச்சுவல் இயக்ககம் என்பது கம்ப்யூட்டரில் காட்டப்படும் ஒரு ஃபைல் அமைப்பாகும். USB சாதனங்கள், வெளிப்புற ஹார்டு டிரைவ்கள் ஆகியவற்றைப் பயன்படுத்துவது போன்றே விர்ச்சுவல் டிரைவையும் பயன்படுத்தலாம். Windowsஸில் Explorer என்பதன்கீழ் டிரைவ் எழுத்து (எ.கா. G:\) மூலமாகவும் macOSஸில் Finder என்பதன் கீழ் Locations என்பதிலும் அணுகலாம். 

இந்த விர்ச்சுவல் டிரைவ் உங்கள் Google Driveவில் உள்ள ஃபைல்களை அவற்றின் வடிவமைப்புடனும் பெயர்களுடனும் காட்டும்.

உதவிக்குறிப்பு: கம்ப்யூட்டரில் சேமிப்பகத்தைச் சேமிக்க, ஸ்ட்ரீம் செய்வதைத் தேர்வுசெய்யவும். நீங்கள் பயன்படுத்தும் ஃபைல்களுக்கும் ஆஃப்லைனில் கிடைக்கச்செய்யும் ஃபைல்களுக்கும் மட்டுமே சேமிப்பகம் பயன்படுத்தப்படும்.

‘காப்புப்பிரதி & ஒத்திசைவு’ அம்சத்தில் இருந்து செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் என்ன?

‘காப்புப்பிரதி & ஒத்திசைவு’ அம்சத்தில் எனது இயக்ககத்தில் இருந்து கம்ப்யூட்டருக்கு ஒத்திசைக்கக் குறிப்பிட்ட ஃபோல்டர்களைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் ஹார்டு டிரைவில் இடத்தைச் சேமிக்கலாம். Drive for desktop ஆப்ஸில் ‘எனது இயக்ககம்’ ஃபைல்களை ஸ்ட்ரீம் செய்யலாம் என்பதால் நீங்கள் பயன்படுத்தும் ஃபைல்களுக்கு மட்டுமே சேமிப்பகம் பயன்படுத்தப்படும்.

கம்ப்யூட்டரில் ஃபோல்டர்களுக்கான அமைப்புகளைத் தேர்வுசெய்தல்

Drive for desktop ஆப்ஸ் மூலம் ஃபோல்டர்களை Google Driveவில் ஒத்திசைக்கலாம் Google Photosஸிற்குக் காப்புப் பிரதி எடுக்கலாம் அல்லது இரண்டையும் தேர்வுசெய்யலாம். 

Google Driveவில் ஃபோல்டரை ஒத்திசைத்தல்

Google Driveவில் ஃபோல்டரை ஒத்திசைக்கும்போது ஃபைல் வகைகள் உட்பட அதில் உள்ள அனைத்தும் பதிவேற்றப்படும். ஃபோல்டரில் ஃபைல்களைச் சேர்த்தாலோ, மாற்றங்களைச் செய்தாலோ, நகர்த்தினாலோ, நீக்கினாலோ அந்த மாற்றங்கள் கம்ப்யூட்டரிலும் Google Driveவிலும் பிரதிபலிக்கும். இதன் மூலம் உங்கள் ஃபைல்களில் சமீபத்திய மாற்றங்கள் அனைத்தும் செய்யப்பட்டிருக்கும். 

drive.google.com தளம் அல்லது Google Drive ஆப்ஸ் மூலம் நீங்கள் எந்தச் சாதனத்தில் இருந்தும் ஃபைல்களை அணுக முடியும்.

Google Driveவில் ஒத்திசைப்பது தொடர்பாகச் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள்

 • Google Driveவில் படங்களையும் வீடியோக்களையும் அசல் தரத்தில் மட்டுமே பதிவேற்ற முடியும்

உதவிக்குறிப்பு: படங்களையும் வீடியோக்களையும் ஸ்டோரேஜ் சேவர் தரத்தில் காப்புப் பிரதி எடுக்க, ஃபோல்டரை Google Photosஸிற்குக் காப்புப் பிரதி எடுக்கும் விருப்பத்தைத் தேர்வுசெய்யவும்.

 • ஒரு ஃபைலை நீக்கினால் அது கம்ப்யூட்டரில் இருந்தும் Google Driveவில் இருந்தும் நீக்கப்படும். 

உதவிக்குறிப்பு: ‘காப்புப்பிரதி & ஒத்திசைவு’ அம்சத்தில் உங்கள் கம்ப்யூட்டர் மற்றும் Google Drive இடையே நீக்கப்பட்ட ஃபைல்களை ஒத்திசைக்க வேண்டாம் என்பதைத் தேர்வுசெய்யலாம் (அதாவது “இரண்டு நகல்களையும் ஒருபோதும் அகற்றாதே”). Drive for desktop ஆப்ஸில் இதைச் செய்ய, எனது இயக்ககத்தை ஸ்ட்ரீம் செய் என்பதைத் தேர்வுசெய்தபின் ஃபைல்களை விர்ச்சுவல் டிரைவில் இழுத்து விடவும் (அல்லது நகலெடுத்து ஒட்டவும்). இவ்வாறு செய்தால் உங்கள் விர்ச்சுவல் டிரைவில் உள்ள நகலுக்கும் கம்ப்யூட்டரில் உள்ள நகலுக்கும் தொடர்பிருக்காது. அதாவது, இரண்டிற்கும் இடையே மாற்றங்கள் ஒத்திசைக்கப்படாது. 

Google Photosஸிற்கு ஃபோல்டரைக் காப்புப் பிரதி எடுத்தல்

Google Photosஸிற்கு ஃபோல்டரைக் காப்புப் பிரதி எடுத்தால் அதிலுள்ள படங்களும் வீடியோக்களும் மட்டுமே பதிவேற்றப்படும். பதிவேற்றிய பின்பு கம்ப்யூட்டரில் உள்ள ஃபைலில் ஏதேனும் மாற்றங்களைச் செய்தால் அது Google Photosஸிற்கு மீண்டும் புதிய ஃபைலாகப் பதிவேற்றப்படும்.

Google Photosஸில் உள்ள ஃபைல்களில் செய்யும் மாற்றங்கள் கம்ப்யூட்டரில் பிரதிபலிக்காது. கம்ப்யூட்டரில் ஃபைல்களை நீக்கினால் அவை Google Photosஸில் நீக்கப்படாது. மேலும், கிளவுடில் நீக்கப்படும் ஃபைல்கள் மீண்டும் பதிவேற்றப்படாது.

photos.google.com தளம் அல்லது Google Photos ஆப்ஸ் மூலம் படங்களையும் வீடியோக்களையும் நீங்கள் எந்தச் சாதனத்தில் இருந்தும் பார்க்க முடியும்.

Google Photosஸிற்குக் காப்புப்பிரதி எடுப்பது தொடர்பாகச் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள்

உதவிக்குறிப்பு: ஸ்கிரீன்ஷாட்டுகள் மற்றும்/அல்லது RAW படங்களை Google Photosஸிற்குப் பதிவேற்ற விரும்பவில்லை எனில் Drive for desktop ஆப்ஸில் உங்கள் விருப்பத்தேர்வுகளை மாற்றிக்கொள்ளலாம்.

 • ஃபோல்டர்களை Google Photosஸிற்கு நேரடியாகக் காப்புப் பிரதி எடுக்கலாம்

உதவிக்குறிப்பு: ‘காப்புப்பிரதி & ஒத்திசைவு’ அம்சத்தில் ஒரு ஃபோல்டரைக் காப்புப் பிரதி எடுக்க வேண்டுமெனில் அதை நீங்கள் Google Driveவிலும் காப்புப் பிரதி எடுத்திருக்க வேண்டும். Drive for desktop ஆப்ஸில் Google Photosஸிற்கு மட்டும் ஃபோல்டர்களைக் காப்புப் பிரதி எடுக்கலாம். 

Google Driveவில் ஒத்திசைத்தல் மற்றும் Google Photosஸிற்குக் காப்புப் பிரதி எடுத்தல்

ஒரு ஃபோல்டரை Google Driveவில் ஒத்திசைக்கவும் Google Photosஸில் காப்புப் பிரதி எடுக்கவும் நீங்கள் தேர்வுசெய்தால் அந்த ஃபோல்டரில் உள்ள அனைத்து ஃபைல்களும் Google Driveவிலும் அதிலுள்ள படங்களும் வீடியோக்களும் Google Photosஸிலும் பதிவேற்றப்படும். அதாவது படங்களும் வீடியோக்களும் Google Drive, Google Photos ஆகிய இரண்டிலும் பதிவேற்றப்படும். இதனால் Google கணக்குச் சேமிப்பகமும் நெட்வொர்க் இணைய வேகமும் அதிகம் பயன்படுத்தப்படும்.

படங்களையும் வீடியோக்களையும் ஸ்டோரேஜ் சேவர் தரம் அல்லது அசல் தரத்தில் Google Photosஸில் பதிவேற்றலாம். ஆனால் Google Driveவில் அவை எப்போதும் அசல் தரத்திலேயே பதிவேற்றப்படும்.

உதவிக்குறிப்பு: ஃபோல்டரில் பெரும்பாலும் படங்களும் வீடியோக்களும் இருப்பின் Google Photosஸில் மட்டும் காப்புப்பிரதி எடுத்து Google கணக்குச் சேமிப்பகத்தைச் சேமிக்கலாம்.

 

ஃபோல்டரின் இணைப்பை நீக்குதல்

Drive for desktop ஆப்ஸிற்குக் கணக்கை நகர்த்தும்போது ஃபோல்டரின் இணைப்பை நீக்க, Google Drive, Google Photos ஆகியவற்றைத் தேர்வுநீக்கவும். கணக்கை நகர்த்தியபிறகு ஒரு ஃபோல்டரின் இணைப்பை நீக்க வேண்டுமெனில் ‘விருப்பத்தேர்வுகள்’ என்பதற்குச் சென்று இணைப்பு நீக்க விரும்பும் ஃபோல்டரைக் கிளிக் செய்து Google Drive, Google Photos ஆகியவற்றைத் தேர்வுநீக்கவும், பின்னர் சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.  ஏற்கெனவே ஒத்திசைக்கப்பட்ட/காப்புப் பிரதி எடுக்கப்பட்ட ஃபைல்கள் கிளவுடிலும் கம்ப்யூட்டரிலும் அப்படியே இருக்கும். ஆனால் இவற்றில் செய்யும் புதிய மாற்றங்கள் ஒத்திசைக்கப்படாது.

உதவிக்குறிப்பு: ஒரு ஃபோல்டரின் இணைப்பை நீக்குவது கம்ப்யூட்டரில் அல்லது உங்கள் Google கணக்கில் பயன்படுத்தப்படும் சேமிப்பக அளவைக் குறைக்காது. சேமிப்பிடத்தைக் காலியாக்க, சேமிப்பகத்தை நிர்வகித்தல் என்பதைப் பார்க்கவும்.

 

தேடல்
தேடலை அழிக்கும்
தேடலை மூடும்
Google ஆப்ஸ்
முதன்மை மெனு
உதவி மையத்தில் தேடுக
true
99950
false