Google Drive ஒத்திசைவுக் கிளையண்ட்டுகளில் வரவிருக்கும் மாற்றங்கள்

இப்போது நீங்கள் Drive for Desktop ஆப்ஸைப் பதிவிறக்கலாம். Drive for desktop ஆப்ஸிற்கு மாறுவது எப்படி என மேலும் அறிய, 'காப்புப்பிரதி & ஒத்திசைவு' அம்சத்திலிருந்து Google Drive for desktopபிற்கு மாறுதல் என்பதற்குச் செல்லவும்.

உங்கள் தரவிலும் நீங்கள் பயன்படுத்தும் அம்சங்களிலும் இது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும்?

'காப்புப்பிரதி & ஒத்திசைவு' அம்சத்தைப் போன்றே, Drive for desktop மூலமும் உங்கள் அனைத்துச் சாதனங்களிலும் கிளவுடிலும் உள்ளடக்கத்தை எளிதாக ஒத்திசைக்கலாம். இருப்பினும் அவற்றுக்கு இடையே சில அம்சங்கள் வேறுபடலாம். 'காப்புப்பிரதி & ஒத்திசைவு' அம்சத்தில் இருந்து Drive for desktop எவ்வாறு வேறுபடுகிறது என்பது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு, கீழே பார்க்கவும்:
அம்சங்களின் முழுமையான பட்டியல்
  காப்புப்பிரதி & ஒத்திசைவு  Drive for desktop
எனது இயக்ககத்தில் உள்ள ஃபைல்களைப் பயன்படுத்துதல் ஆம் ஆம்
பகிர்ந்த இயக்ககங்களில் கோப்புகளைப் பயன்படுத்துதல் இல்லை ஆம். உங்கள் திட்டத்தில் பகிர்ந்த இயக்ககங்கள் சேர்க்கப்பட்டிருந்தாலோ பகிர்ந்த இயக்ககத்தைப் பயன்படுத்த நீங்கள் அழைக்கப்பட்டிருந்தாலோ இதைப் பயன்படுத்தலாம்
எனது இயக்ககத்தில் உள்ள சில ஃபோல்டர்களைத் தேர்ந்தெடுத்து கம்ப்யூட்டரில் ஒத்திசைத்தல் ஆம் இல்லை. ஹார்டு டிரைவ் சேமிப்பிடத்தை மிச்சப்படுத்த, ஃபைல்களை ஸ்ட்ரீம் செய்யலாம். ஃபோல்டர்களைத் தேர்ந்தெடுத்து ஆஃப்லைனில் கிடைக்கும்படி செய்யலாம். மேலும் விவரங்களுக்கு, கீழே உள்ள FAQ பிரிவிற்குச் செல்லவும்.
Driveவில் உள்ள குறிப்பிட்ட ஃபைல்களைத் தேர்ந்தெடுத்து ஆஃப்லைனில் கிடைக்கும்படி செய்தல் இல்லை ஆம்
Microsoft Office, Photoshop போன்ற Google அல்லாத பிறவற்றின் ஃபைல்களைத் திறத்தல் & சேமித்தல் ஆம் ஆம்
Microsoft Officeஸில் உள்ள ஆவணத்தை நிகழ்நேரத்தில் யார் திருத்துகிறார் என அறிதல் இல்லை ஆம்
Documents, Desktop போன்ற லோக்கல் ஃபோல்டர்களை Google Drive உடன் ஒத்திசைத்தல் ஆம் ஆம்
Google Photosஸில் படங்களையும் வீடியோக்களையும் காப்புப் பிரதி எடுத்தல் ஆம் ஆம்
படங்களையும் வீடியோக்களையும் மட்டும் Google Driveவில் காப்புப் பிரதி எடுத்தல் ஆம் முடியாது, ஆனால் ஃபோல்டர்களை நேரடியாக Google Photosஸில் காப்புப் பிரதி எடுக்கலாம்
ஒரே நேரத்தில் பல கணக்குகளைப் பயன்படுத்துதல் ஆம் ஆம்
Apple Photos லைப்ரரியைப் பதிவேற்றுதல் ஆம் ஆம்
USBயில் இருந்து பதிவேற்றுதல் ஆம் ஆம்
டார்க் பயன்முறை இல்லை ஆம்
குறிப்பிட்ட ஃபைல் நீட்டிப்புகளை Drive அல்லது Photosஸில் பதிவேற்றுவதைத் தவிர்த்தல் ஆம் இல்லை
கம்ப்யூட்டருக்கும் Driveவிற்கும் இடையிலான ஒத்திசைவின்போது ஃபோல்டர்கள் நீக்கப்படுவதைத் தவிர்த்தல் ஆம் இல்லை

காப்புப்பிரதி & ஒத்திசைவைப் பயன்படுத்துபவர்கள் Drive for desktop ஆப்ஸை எவ்வாறு பயன்படுத்தத் தொடங்கலாம்?

'காப்புப்பிரதி & ஒத்திசைவு' அம்சத்தில் இருந்து Google Drive for desktop ஆப்ஸிற்கு உங்கள் கணக்குகளையும் அமைப்புகளையும் நகர்த்திக் கொள்ளலாம். இந்தச் செயல்பாட்டின்போது, 'காப்புப்பிரதி & ஒத்திசைவு' அம்சத்தின் மூலம் உங்கள் கம்ப்யூட்டரில் இருந்து கிளவுடுக்குக் காப்புப் பிரதி எடுத்து ஒத்திசைக்கின்ற ஃபோல்டர்களின் அமைப்புகளைச் சரிபார்த்து உறுதிப்படுத்த வேண்டும். உங்கள் கணக்குகளை Drive for desktop ஆப்ஸிற்கு நகர்த்திய பின் 'காப்புப்பிரதி & ஒத்திசைவு' அம்சம் தானாகவே நிறுவல் நீக்கப்படும்.

Google Drive for desktop ஆப்ஸைப் பயன்படுத்துவது குறித்து மேலும் அறிக.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

இந்த மாற்றம் எதற்காகக் கொண்டுவரப்படுகிறது?
இயக்கக நேரடி ஒத்திசைவு, காப்புப்பிரதி & ஒத்திசைவு ஆகிய இரண்டிலும் உள்ள மிகச்சிறந்த மற்றும் அதிகம் பயன்படுத்தப்படும் அம்சங்களை ஒன்றிணைத்து Google Drive for desktop வழங்கும். பிசினஸ் அல்லது தனிப்பட்ட நோக்கங்களுக்காக Driveவைப் பயன்படுத்தும் அனைவருக்கும் ஏற்ற வகையிலான ஆற்றல்மிக்க மற்றும் ஒருங்கிணைந்த ஒத்திசைவுக் கிளையண்ட்டை இது உருவாக்குகிறது.
Drive for desktop வெளியீட்டினால் எனது ஃபைல்கள் பாதிக்கப்படுமா?
இல்லை, உங்கள் ஃபைல்கள் பாதிக்கப்படாது. இது 'காப்புப்பிரதி & ஒத்திசைவு' அம்சத்திற்கான புதுப்பிப்பு மட்டுமே, சேமிக்கப்பட்ட ஃபைல்களில் மாற்றங்கள் ஏற்படாது.
நான் இயக்கக நேரடி ஒத்திசைவைப் பயன்படுத்துகிறேன். இந்த மாற்றம் என்னை எப்படிப் பாதிக்கும்?
இயக்கக நேரடி ஒத்திசைவைப் பயன்படுத்தும் உங்களைப் போன்ற பயனர்களுக்குக் குறிப்பிடத்தக்க மாற்றம் எதுவும் இருக்காது. சமீபத்திய வெளியீட்டில் இந்தக் கருவியின் பெயர் “Drive for desktop” என மாற்றப்பட்டிருக்கும், அவ்வளவுதான்! இந்த ஆண்டின் பிற்பகுதியில் வெளியிடவிருக்கும் பதிப்பில் 'காப்புப்பிரதி & ஒத்திசைவின்' புதிய அம்சங்களும் கிடைக்கும்.
நான் ஒரு Workspace நிர்வாகி. எனது நிறுவனம் இயக்கக நேரடி ஒத்திசைவைப் பயன்படுத்துகிறது. இந்தப் புதிய அம்சங்களால் ஏதேனும் சிக்கல் வருமோ என்று தோன்றுகிறது. நான் என்ன செய்யலாம்?
ரெஜிஸ்ட்ரி கீ மூலம் இந்தப் புதிய அம்சங்களைக் கட்டுப்படுத்தும் அனுமதி நிர்வாகிகளுக்கு வழங்கப்படும். புதிய அம்சங்கள் எப்போது கிடைக்கும் என்பதை வெளியீட்டுக் குறிப்புகளைப் பார்த்து நீங்கள் தெரிந்துகொள்ள முடியும். இந்த அம்சங்களைக் கட்டுப்படுத்துவது குறித்து மேலும் அறிய, இந்த இணைப்பிற்குச் செல்லவும்: இயக்கக நேரடி ஒத்திசைவை எப்படி உள்ளமைப்பது என அறிக.
'காப்புப்பிரதி & ஒத்திசைவு' அம்சத்தில் குறிப்பிட்ட சில ஃபோல்டர்களைத் தேர்ந்தெடுத்து Driveவில் இருந்து கம்ப்யூட்டருக்கு ஒத்திசைக்க முடியும். அதை Drive for desktop ஆப்ஸில் எப்படிச் செய்வது? 

ஹார்டு டிரைவ் சேமிப்பிடத்தை மிச்சப்படுத்த, 'காப்புப்பிரதி & ஒத்திசைவு' அம்சத்தின் மூலம் 'எனது இயக்ககத்தில்' இருந்து குறிப்பிட்ட சில ஃபோல்டர்களைக் கம்ப்யூட்டரில் ஒத்திசைத்தீர்கள். Drive for desktop ஆப்ஸ் மூலம், எனது இயக்ககத்தில் உள்ள ஃபைல்களை ஸ்ட்ரீம் செய்யலாம், நீங்கள் தேர்ந்தெடுத்த ஃபைல்களுக்கு மட்டுமே கம்ப்யூட்டரில் சேமிப்பகம் பயன்படுத்தப்படும்.

ஸ்ட்ரீமிங்கின்போது ஆஃப்லைனில் குறிப்பிட்ட ஃபைல்களையும் ஃபோல்டர்களையும் கிடைக்கும்படி செய்ய:

  1. ஃபைல் அல்லது ஃபோல்டரை வலது கிளிக் செய்யவும்.
  2. ஆஃப்லைன் அணுகல் அதன் பிறகு ஆஃப்லைனில் கிடைக்கும்படி செய் என்பதைக் கிளிக் செய்யவும்.
ஸ்ட்ரீமிங், மிரரிங் ஆகியவற்றுக்கு இடையே உள்ள வேறுபாடுகளைப் பற்றி மேலும் அறிய, 'காப்புப்பிரதி & ஒத்திசைவு' அம்சத்திலிருந்து Google Drive for desktopபிற்கு மாறுதல் என்பதற்குச் செல்லவும்.
நான் ஒரு Workspace நிர்வாகி, எங்கள் நிறுவனத்தில் Drive for desktop ஆப்ஸைப் பயன்படுத்துகிறோம். காப்புப்பிரதி & ஒத்திசைவில் உள்ள புதிய அம்சங்களை எனது குழுவினர் அணுகுவதைக் கட்டுப்படுத்துவது எப்படி?
நிர்வாகிகள் புதிய Drive for desktop அம்சங்களை முடக்கலாம், இவை ஏற்கெனவே 'காப்புப்பிரதி மற்றும் ஒத்திசைவு' அம்சத்தில் இருந்தவை. இந்த அம்சங்களில் கீழே கொடுக்கப்பட்டுள்ளவை அடங்கும்:
  • Drive, Photos ஆகியவற்றில் கம்ப்யூட்டர் ஃபோல்டர்களை மிரரிங் செய்தல்
  • வெளிப்புற டிரைவ்கள், சாதனங்கள் ஆகியவற்றில் இருந்து ஃபைல்களைக் காப்புப் பிரதி எடுத்தல்
இனிவரவிருக்கும் 'நிர்வாகிக் கன்சோலின்' Drive for desktop பிரிவில் இந்த அம்சங்களை நேரடியாக நிர்வகிக்க முடியும். அதுவரை, நிர்வாகிக் கன்சோலில் 'காப்புப்பிரதி & ஒத்திசைவு' அம்சத்தை முடக்குவது அதே விளைவுகளையே ஏற்படுத்தும்.
தேடல்
தேடலை அழிக்கும்
தேடலை மூடும்
Google ஆப்ஸ்
முதன்மை மெனு
உதவி மையத்தில் தேடுக
true
99950
false