Google Docsஸில் புதியவை என்ன என்பதைப் பற்றி அறிந்துகொள்ளுதல்

Google Docs குறித்த சமீபத்திய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்:

ஜூன் 2023

மாற்று வார்த்தைகள்

படங்கள், வரைபடங்கள் மற்றும் பிற கிராஃபிக்ஸிற்கான மாற்று வார்த்தைகளின் மூலம், ஸ்கிரீன் ரீடர்களைப் பயன்படுத்தும் பயனர்கள் திரையில் என்னென்ன இருக்கின்றன என்பதற்கான ஆடியோ விளக்கத்தைப் பெறலாம்.

இல்லையென்றால், படம் குறித்த காட்சி விவரங்களைத் தவறவிட்டு “படம்” என்ற வார்த்தையை மட்டுமே பயனர்கள் கேட்பார்கள். மாற்று வார்த்தைகள் குறித்து மேலும் தெரிந்துகொள்ளுங்கள்.

Google Docsஸில் வரி எண்களைப் பயன்படுத்துதல்
Google Docsஸில் உள்ள வரி எண்கள் அம்சம், ஆவணத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிக்கான வரியின் நிலையைத் தானாகவே கணக்கிட்டுக் காட்டும். வரி எண்கள் குறித்து மேலும் தெரிந்துகொள்ளுங்கள்.

ஏப்ரல் 2023

கருத்துகளில் ஈமோஜிகளைப் பயன்படுத்தி உணர்வை வெளிப்படுத்துதல்
Google Docsஸில் கருத்துகளிலோ ஹைலைட் செய்யப்பட்ட உள்ளடக்கத்திலோ உணர்வை வெளிப்படுத்தும் ஈமோஜிகளைச் சேர்க்கலாம். கருத்துகள், பணிகள், ஈமோஜி உணர்வு வெளிப்பாடுகள் ஆகியவற்றை எப்படிப் பயன்படுத்துவது என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.
மூன்றாம் தரப்பு ஸ்மார்ட் சிப்களைச் சேர்த்தல்
கூடுதல் தகவல்களைக் காட்டும் ஸ்மார்ட் சிப்களாக, தேர்ந்தெடுக்கப்பட்ட ஆப்ஸில் உள்ள URLகளை மாற்றலாம். பிற ஆப்ஸில் இருந்து மூன்றாம் தரப்பு ஸ்மார்ட் சிப்களை எப்படிச் சேர்ப்பது என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.

மார்ச் 2023

பொருளடக்க அட்டவணையை மாற்றுதல்
பொருளடக்க அட்டவணையின் உள்ளடக்கத்தைப் புதுப்பிக்கலாம் அதன் வடிவமைப்பை மாற்றலாம். ஆவணத்தில் தலைப்பு, துணைத் தலைப்பு, பொருளடக்க அட்டவணை ஆகியவற்றைச் சேர்த்தல்.
தேடல் குறிப்புகளின்படி கருத்துகளைத் தேடுதல்
தேடல் குறிப்புகள் அல்லது மின்னஞ்சல் முகவரிகளின் மூலம் கருத்தையும் அதன் இருப்பிடத்தையும் கண்டறியலாம். கருத்துகள், பணிகள், ஈமோஜி உணர்வு வெளிப்பாடுகள் ஆகியவற்றை எப்படிப் பயன்படுத்துவது என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.

ஜனவரி 2023

அச்சிட முடியாத எழுத்துகளைக் காட்டுதல் அல்லது மறைத்தல்
உங்கள் ஆவணம் எப்படி வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதைப் பார்க்க அச்சிட முடியாத எழுத்துகளைப் பயன்படுத்தவும். அச்சிட முடியாத எழுத்துகள் நீல நிறத்தில் காட்டப்படும். அதன் மூலம் உங்கள் ஆவணத்தில் முறிப்புகள், பிரிவுகள், இடைவெளிகள் ஆகியவை எங்கு உள்ளன என்பதைக் கண்டறியலாம். ஆவணத்தின் மேலோட்டங்கள், சுருக்க விவரங்கள், ரூலர்கள், அச்சிட முடியாத எழுத்துகள் ஆகியவற்றை எப்படிப் பார்ப்பது என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
12322320316961110333
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
35
false
false