அறிவிப்புகளை நிர்வகித்தல்

Google Docs, Drawings, Sheets, Slides போன்றவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகளுக்கான மின்னஞ்சல் அறிவிப்புகளை எவ்வளவு கால இடைவெளிகளில் பெற விரும்புகிறீர்கள் என்பதை மாற்றலாம். Google Docs, Sheets ஆகியவற்றில் செய்யப்படும் திருத்தங்களுக்கான அறிவிப்பு அமைப்புகளையும் மாற்றலாம். அறிவிப்புகளை மின்னஞ்சலில் பெற விரும்புகிறீர்களா உலாவியில் பெற விரும்புகிறீர்களா என்பதை நீங்கள் தேர்வுசெய்யலாம்.

கவனத்திற்கு: அறிவிப்பு அமைப்புகளில் செய்யும் மாற்றங்கள் நீங்கள் திறந்திருக்கும் ஃபைலுக்கு மட்டுமே பொருந்தும்.

கருத்துகளுக்கான அறிவிப்புகளை நிர்வகித்தல்

  1. கம்ப்யூட்டரில் ஆவணம், வரைபடம், விரிதாள் அல்லது விளக்கக்காட்சியைத் திறக்கவும்.
  2. இவற்றில் ஒன்றைச் செய்யலாம்:
    • கருவிகள் அதன் பிறகு அறிவிப்பு அமைப்புகள் என்பதற்குச் செல்லவும்.
    • ஃபைலின் மேல் வலது மூலையில் உள்ள 'இதுவரையிலான கருத்துகளைக் காட்டு' கருத்து தெரிவி என்பதைக் கிளிக் செய்து அதன் பிறகு அறிவிப்பு அமைப்புகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. “கருத்துகள்” என்பதற்குக் கீழ், அறிவிப்புகளை எப்போது பெற விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:
    • எல்லாக் கருத்துகளும்: அனைத்து புதிய கருத்துகளுக்கும் அறிவிப்புகளைப் பெறுவீர்கள்.
    • உங்களுக்கான கருத்துகள்: @ மூலம் உங்களைக் குறிப்பிடும் மெசேஜ்களுக்கும் நீங்கள் சேர்ந்துள்ள மெசேஜ் தொடர்களுக்கும் அறிவிப்புகளைப் பெறுவீர்கள்.
    • எதுவுமில்லை: அந்த ஃபைலுக்கான கருத்துகள் குறித்து மின்னஞ்சல்களைப் பெறமாட்டீர்கள்.

உதவிக்குறிப்பு: நேரடியாக மின்னஞ்சல் அறிவிப்புகளில் இருந்தும் உங்கள் அறிவிப்பு அமைப்புகளை மாற்றலாம். கருத்துகளுக்கான மின்னஞ்சல் அறிவிப்பைப் பெறும்போது மின்னஞ்சலில் உள்ள அறிவிப்பு அமைப்புகள் என்பதைக் கிளிக் செய்யவும். "கருத்துகள்" என்பதற்கு அடுத்து அந்த ஃபைலுக்கான விருப்பத்தேர்வுகளை மாற்றலாம்.

திருத்தங்களுக்கான அறிவிப்புகளை நிர்வகித்தல் 

Google Docs, Sheets ஃபைல்களில் பிறர் திருத்தங்களைச் செய்யும்போது அதுகுறித்த அறிவிப்புகளைப் பெற அமைப்புகளை மாற்றலாம்.

Google Docsஸில்

உங்கள் ஆவணத்தில் நீங்கள் திருத்தங்களைச் செய்யும்போது அறிவிப்புகளைப் பெறமாட்டீர்கள். ஆனால் வேறு யாரேனும் அதில் உள்ளடக்கத்தைச் சேர்த்தாலோ அகற்றினாலோ அதுகுறித்த அறிவிப்புகளைப் பெறுவீர்கள்.

  1. கம்ப்யூட்டரில் Google ஆவணத்தைத் திறக்கவும்.
  2. இவற்றில் ஒன்றைச் செய்யலாம்:
    • கருவிகள் அதன் பிறகு அறிவிப்பு அமைப்புகள் என்பதற்குச் செல்லவும்.
    • ஃபைலின் மேல் வலது மூலையில் உள்ள 'இதுவரையிலான கருத்துகளைக் காட்டு' கருத்து தெரிவி என்பதைக் கிளிக் செய்து அதன் பிறகு அறிவிப்பு அமைப்புகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. “திருத்தங்கள்” என்பதற்குக் கீழ், அறிவிப்புகளை எப்போது பெற விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:
    • உள்ளடக்கம் சேர்க்கப்பட்டால்/அகற்றப்பட்டால் அறிவிப்பை அனுப்பு: ஃபைலில் யாரேனும் உள்ளடக்கத்தைச் சேர்த்தாலோ அகற்றினாலோ அறிவிப்புகளைப் பெறுவீர்கள்.
    • எதுவுமில்லை: அந்த ஃபைலில் செய்யப்படும் திருத்தங்கள் குறித்து மின்னஞ்சல்களைப் பெறமாட்டீர்கள்.

உதவிக்குறிப்புகள்:

  • நேரடியாக மின்னஞ்சல் அறிவிப்புகளில் இருந்தும் உங்கள் அறிவிப்பு அமைப்புகளை மாற்றலாம். கருத்துகளுக்கோ திருத்தங்களுக்கோ மின்னஞ்சல் அறிவிப்பைப் பெறும்போது மின்னஞ்சலில் உள்ள அறிவிப்பு அமைப்புகள் என்பதைக் கிளிக் செய்யவும். "திருத்தங்கள்" என்பதற்கு அடுத்து ஃபைலுக்கான விருப்பத்தேர்வுகளை மாற்றலாம்.
  • திருத்தங்கள் அதிகமாக இருந்தாலோ ஆவணம் பெரிதாக இருந்தாலோ அனைத்துத் திருத்தங்களும் மின்னஞ்சல் அறிவிப்புகளில் காட்டப்படாமல் போகலாம். அனைத்துத் திருத்தங்களையும் பார்க்க ஆவணத்தைத் திறக்கவும்.

Google Sheetsஸில்

உங்களுக்கான அறிவிப்புகளை மட்டுமே அமைக்க முடியும். உங்கள் விரிதாளில் நீங்கள் திருத்தங்களைச் செய்யும்போது அறிவிப்புகளைப் பெறமாட்டீர்கள். ஆனால் வேறு யாரேனும் திருத்தங்களைச் செய்தால் அதுகுறித்த அறிவிப்புகளைப் பெறுவீர்கள்.

  1.  கம்ப்யூட்டரில் Google Sheetsஸில் ஒரு விரிதாளைத் திறக்கவும்.
  2. மேலே உள்ள கருவிகள் அதன் பிறகு அறிவிப்பு அமைப்புகள் அதன் பிறகு அறிவிப்புகளைத் திருத்து என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. அதன்பின் தோன்றும் சாளரத்தில் அறிவிப்புகளை "எப்போது" பெற வேண்டும் என்பதைத் தேர்வுசெய்யவும். இந்த சமயத்தில் எனக்குத் தெரிவி:
    • ஏதேனும் மாற்றங்கள் மேற்கொள்ளப்படும்போது: விரிதாளில் யாரேனும் மாற்றங்களை மேற்கொள்ளும்போது அதற்கான அறிவிப்புகளைப் பெறும் வகையில் அமைக்கலாம்.
    • பயனர் ஒருவர் படிவத்தைச் சமர்ப்பிக்கும்போது: யாரேனும் படிவத்தை நிரப்பும்போது அதுகுறித்த அறிவிப்புகளைப் பெறும்படி அமைக்கலாம்.
  4. அதன்பின் தோன்றும் சாளரத்தில் அறிவிப்புகளைப் பெற விரும்பும் 'கால இடைவெளியைத்' தேர்ந்தெடுக்கவும். இதன் மூலம் எனக்குத் தெரிவி:
    • மின்னஞ்சல் - தினசரி ஈமெயில் அறிக்கை: எல்லா மாற்றங்கள் குறித்த சுருக்க விவரத்தையும் தினமும் பெறலாம்.
    • மின்னஞ்சல் - உடனடியாக: ஏதேனும் மாற்றம் செய்யப்பட்டால் உடனே அதுகுறித்த அறிவிப்பைப் பெறலாம்.
  5. சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.

Google Sheetsஸில் யார் திருத்தங்களைச் செய்கிறார்கள் என்பதைப் பார்த்தல்

விரிதாளில் உங்களுக்குள்ள அணுகலின் நிலையைப் பொறுத்து அதில் யார் மாற்றங்களை மேற்கொள்கிறார்கள் என்பதைப் பார்க்க முடியும்.

  • நீங்கள் திருத்தக்கூடியவர் எனில்: திருத்தங்களைச் செய்வோரின் பயனர்பெயர்களைப் பார்க்க முடியும்.
  • நீங்கள் பார்வையாளர் எனில்: அறிவிப்புகளை அமைக்க முடியும். ஆனால் பயனர்பெயர்களைப் பார்க்க முடியாது.

உதாரணமாக யாரேனும் கலங்களின் குறிப்பிட்ட வரம்பை மாற்றும்போது அறிவிப்பைப் பெறுவது போன்ற மேலும் குறிப்பிட்ட அறிவிப்பு விதிகளை அமைக்க விரும்பினால் ஆப்ஸ் ஸ்கிரிப்ட்டைப் பயன்படுத்தவும்.

தொடர்புடைய கட்டுரைகள்

 

true
Visit the Learning Center

Using Google products, like Google Docs, at work or school? Try powerful tips, tutorials, and templates. Learn to work on Office files without installing Office, create dynamic project plans and team calendars, auto-organize your inbox, and more.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
14812085316526177260
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
35
false
false