தலைப்புகள், அடிக்குறிப்புகள் & பக்க எண்களைப் பயன்படுத்துதல்

உங்கள் Google ஆவணத்தில் மேற்கோள்களைச் சேர்க்க அடிக்குறிப்புகளைப் பயன்படுத்தலாம். பக்கவரிசை உள்ள வடிவமைப்பில் இருக்கும் ஆவணங்களில் பக்க எண்களைச் சேர்ப்பதோடு ஆவணத்தில் உள்ள ஒவ்வொரு பக்கத்திற்கும் உள்ளடக்கத்தைச் சேர்க்க மேற்குறிப்புகளையும் அடிக்குறிப்புகளையும் சேர்க்கலாம்.

கவனத்திற்கு: ஆவணம் “அச்சிடல் தளவமைப்புப்” பயன்முறையில் இருக்கும்போது மட்டுமே உங்களால் பக்க எண்கள், மேற்குறிப்புகள், அடிக்குறிப்புகள் ஆகியவற்றைப் பார்க்கவும் திருத்தவும் முடியும்.

மேற்குறிப்பு/அடிக்குறிப்பைச் சேர்த்தல்

முக்கியம்: பக்கவரிசையற்ற வடிவமைப்பில் உள்ள ஆவணங்களில் இந்த அம்சத்தைப் பயன்படுத்த முடியாது. ஏற்கெனவே தலைப்புகளும் அடிக்குறிப்புகளும் உள்ள ஆவணத்தைப் பக்கவரிசையற்ற வடிவமைப்பிற்கு மாற்றினால் தலைப்புகளும் அடிக்குறிப்புகளும் ஆவணத்தில் காட்டப்படாது. தலைப்புகள், அடிக்குறிப்புகள் ஆகியவற்றைப் பயன்படுத்தவும் பார்க்கவும் பக்கங்கள் உள்ள வடிவமைப்பில் ஆவணம் அமைக்கப்பட்டிருப்பதை உறுதிசெய்துகொள்ளவும்.

  1. Google Docs ஆப்ஸில் ஆவணத்தைத் திறக்கவும்.
  2. திருத்து திருத்து என்பதைத் தட்டவும்.
  3. மேல் வலதுபுறத்தில் மேலும் மேலும் என்பதைத் தட்டவும்.
  4. "அச்சிடல் தளவமைப்புப்" பயன்முறையை இயக்கவும்.
  5. மேற்குறிப்பையோ அடிக்குறிப்பையோ தட்டவும்.
  6. மேற்குறிப்பிலோ அடிக்குறிப்பிலோ நீங்கள் விரும்பும் வார்த்தைகளை டைப் செய்யவும்.

பக்க எண்களைச் சேர்த்தல்

முக்கியம்: பக்கவரிசையற்ற வடிவமைப்பில் உள்ள ஆவணங்களில் இந்த அம்சத்தைப் பயன்படுத்த முடியாது. இதைப் பயன்படுத்த, பக்கங்கள் உள்ள வடிவமைப்பில் ஆவணம் அமைக்கப்பட்டிருப்பதை உறுதிசெய்துகொள்ளவும். 

  1. Google Docs ஆப்ஸில் ஆவணத்தைத் திறக்கவும்.
  2. திருத்து திருத்து என்பதைத் தட்டவும்.
  3. செருகு Insert என்பதைத் தட்டவும்.
  4. பக்க எண் பக்க எண்ணைச் செருகு என்பதைத் தட்டவும்.
  5. பக்க எண்கள் எங்கு இடம்பெற வேண்டும் என்பதையும் முதல் பக்கத்தில் எண் இடம்பெற வேண்டுமா என்பதையும் தேர்வுசெய்யவும்.

அடிக்குறிப்பைச் சேர்த்தல் அல்லது பார்த்தல்

அடிக்குறிப்பைச் சேர்த்தல்

  1. உங்கள் Android மொபைல் அல்லது டேப்லெட்டில் Google Docs ஆப்ஸில் ஆவணத்தைத் திறக்கவும்.
  2. திருத்து திருத்து என்பதைத் தட்டவும்.
  3. அடிக்குறிப்பைச் சேர்க்க விரும்பும் இடத்தைத் தட்டவும்.
  4. மேலேயுள்ள மெனுவில் செருகு Insert அதன் பிறகு அடிக்குறிப்பு என்பதைத் தட்டவும்.
  5. அடிக்குறிப்பை டைப் செய்யவும்.

அடிக்குறிப்பைப் பார்த்தல்

உதவிக்குறிப்பு: உங்கள் ஆவணம் பக்கவரிசையற்ற வடிவமைப்பில் இருந்தால் அடிக்குறிப்புகள் அனைத்தும் ஆவணத்தின் இறுதியில் மொத்தமாகக் காட்டப்படும்.

  1. உங்கள் Android மொபைல் அல்லது டேப்லெட்டில் Google Docs ஆப்ஸில் ஆவணத்தைத் திறக்கவும்.
  2. மேல் வலதுபுறத்தில் மேலும் மேலும் என்பதைத் தட்டவும்.
  3. "அச்சிடல் தளவமைப்புப்" பயன்முறையை இயக்கவும்.

தொடர்புடைய இணைப்புகள்

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
13034410034816262798
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
35
false
false