Google Sheets இலிருந்து அச்சிடுதல்

ஓரங்கள், பக்க முறிப்புகள், மேற்குறிப்புகள், அடிக்குறிப்புகள் போன்ற பல விருப்பங்களுடன் உள்ள விரிதாளை எப்படி அச்சிடுவது என்பதைத் தனிப்பயனாக்கலாம்.

விரிதாள், தனித்த தாள்கள் அல்லது கலங்களை அச்சிடுதல்

  1. உங்கள் கம்ப்யூட்டரில், sheets.google.com என்பதில் விரிதாளைத் திறக்கவும்.
  2. விரிதாளின் பகுதியை அச்சிட விரும்பினால், கலங்களை அல்லது தாளைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. மேலே, கோப்பு அதன் பிறகு அச்சிடு என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. தற்போதைய தாள் என்பதைக் கிளிக் செய்யவும்.
    • விரிதாள் முழுவதையும் அச்சிட, பணிப்புத்தகம் என்பதைக் கிளிக் செய்யவும்.
    • இரண்டாவது படியில் தேர்வுசெய்த கலங்களை அச்சிட, தேர்ந்தெடுக்கப்பட்ட கலங்கள் என்பதைக் கிளிக் செய்யவும்.
    • இரண்டாவது படியில் தேர்வுசெய்த தாளை அச்சிட, தற்போதைய தாள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  5. அடுத்து என்பதைக் கிளிக் செய்யவும்.
    • Chrome உலாவியைப் பயன்படுத்தினால், தோன்றும் சாளரத்தில், அச்சிடு என்பதைக் கிளிக் செய்யவும்.
    • Firefox அல்லது Safari உலாவியைப் பயன்படுத்தினால், PDF கோப்பு தானாகப் பதிவிறக்கப்படும். PDF வியூவரில் கோப்பு அதன் பிறகு அச்சிடு என்பதற்குச் செல்லவும்.

பக்க முறிப்புகளைச் செருகுதல்

  1. உங்கள் கம்ப்யூட்டரில், sheets.google.com என்பதில் விரிதாளைத் திறக்கவும்.
  2. மேலே, கோப்பு அதன் பிறகு அச்சிடு என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. தனிப்பயன் பக்க முறிப்புகளை அமை என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. பக்கம் முறிக்க வேண்டிய இடத்திற்கு, கோடுகளை இழுக்கவும். ஒவ்வொரு செவ்வகமும் அதன் தனிப் பக்கத்தை அச்சிடும்.
    • பக்க முறிப்பை அகற்ற, கோட்டைக் குறிப்பிட்டு, அகற்று என்பதைக் அகற்று கிளிக் செய்யவும்.
  5. முடித்தபிறகு, பக்க முறிப்புகளை உறுதிப்படுத்து என்பதைக் கிளிக் செய்யவும்.

ஓரங்கள், மேற்குறிப்புகள், அடிக்குறிப்புகள், பக்க அமைப்புகள் ஆகியவற்றை வடிவமைத்தல்

ஓரங்களை மாற்றுதல்

  1. உங்கள் கம்ப்யூட்டரில், sheets.google.com என்பதில் விரிதாளைத் திறக்கவும்.
  2. மேலே, கோப்பு அதன் பிறகு அச்சிடு என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. "ஓரங்கள்" என்பதன் கீழ், இயல்பானது என்பதைக் கிளிக் செய்யவும். ஓர வகையைத் தேர்வுசெய்யவும்.
  4. ஓரங்களைத் தனிப்பயனாக்க, தனிப்பயன் எண்கள் என்பதைக் கிளிக் செய்யவும். புதிய ஓர எண்களை உள்ளிடவும்.

மேற்குறிப்புகள் அல்லது அடிக்குறிப்புகளைத் தனிப்பயனாக்குதல்

  1. உங்கள் கம்ப்யூட்டரில் sheets.google.com என்பதில் விரிதாளைத் திறக்கவும்.
  2. மேலே, கோப்பு அதன் பிறகு அச்சிடு என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. மேற்குறிப்புகளும் அடிக்குறிப்புகளும் என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. சேர்க்க விரும்பும் தகவலைத் தேர்வுசெய்யவும்.
  5. மேற்குறிப்பு அல்லது அடிக்குறிப்பின் வடிவமைப்பு அல்லது தகவலை மாற்ற, தனிப்பயன் புலங்களைத் திருத்து என்பதைக் கிளிக் செய்யவும். உங்கள் மாற்றங்களைச் செய்து, உறுதிப்படுத்து​என்பதைக் கிளிக் செய்யவும்.

பக்கங்களுக்கிடையே வரிசைகள் அல்லது நெடுவரிசைகளை மீண்டும் செய்தல்

அச்சிடப்பட்ட விரிதாளின் பக்கங்களுக்கிடையே, தொடர்ந்து வரிசைகளையும் நெடுவரிசைகளையும் நிலையாக்கலாம்.

  1. உங்கள் கம்ப்யூட்டரில் sheets.google.com என்பதில் விரிதாளைத் திறக்கவும்.
  2. ஏற்கனவே செய்யாவிட்டால், வரிசை அல்லது நெடுவரிசையை நிலையாக்கவும்.
  3. மேலே, கோப்பு அதன் பிறகு அச்சிடு என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. மேற்குறிப்புகளும் அடிக்குறிப்புகளும் என்பதைக் கிளிக் செய்யவும்.
  5. தொடர்ந்து வரிசைகளை நிலையாக்கு அல்லது தொடர்ந்து நெடுவரிசைகளை நிலையாக்கு என்பதைத் தேர்வுசெய்யவும்.

பக்கத் திசையமைப்பை அல்லது காகித அளவை மாற்றுதல்

  1. உங்கள் கம்ப்யூட்டரில் sheets.google.com என்பதில் விரிதாளைத் திறக்கவும்.
  2. மேலே, கோப்பு அதன் பிறகு அச்சிடு என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. “திசையமைப்பு” என்பதன் கீழ், லேண்ட்ஸ்கேப் அல்லது உருவப்படம் என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. “காகித அளவு” என்பதன் கீழ், அச்சிட விரும்பும் காகிதத்தின் அளவைத் தேர்வுசெய்யவும். தனிப்பயன் காகித அளவைச் சேர்க்க, தனிப்பயன் அளவு என்பதைத் தேர்வுசெய்து, உயரத்தையும் அகலத்தையும் உள்ளிடவும். 

தொடர்புடைய கட்டுரைகள்

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
18372246166082549074
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
35
false
false