Google Docsஸை எப்படிப் பயன்படுத்துவது?


               

உங்கள் பிசினஸிற்கு மேம்பட்ட Google Workspace அம்சங்கள் தேவையா?

இன்றே Google Workspaceஸைப் பயன்படுத்திப் பாருங்கள்!

 

 

Google Docs என்பது ஆன்லைன் சொற்செயலியாகும், இதன்மூலம் ஆவணங்களை உருவாக்கலாம் வடிவமைக்கலாம் மேலும் பிறருடன் சேர்ந்து அவற்றில் பணிபுரியலாம். Google Docsஸுக்கான ஐந்து சிறந்த உதவிக்குறிப்புகள்.

படி 1: ஆவணத்தை உருவாக்குதல்

புதிய ஆவணத்தை உருவாக்க:
  1. கம்ப்யூட்டரில் docs.google.com தளத்தில் Docsஸின் முகப்புத் திரையைத் திறக்கவும்.
  2. மேல் இடதுபுறத்தில் “புதிய ஆவணத்தைத் தொடங்கவும்” என்பதன் கீழ் உள்ள வெற்று புதியவை என்பதைக் கிளிக் செய்யவும்.
docs.google.com/create URLலைப் பயன்படுத்தியும் புதிய ஆவணங்களை உருவாக்கலாம்.

படி 2: திருத்துதல் & வடிவமைத்தல்

ஆவணத்தைத் திருத்த:

  1. கம்ப்யூட்டரில் Google Docsஸில் ஆவணத்தைத் திறக்கவும்.

  2. ஒரு வார்த்தையைத் தேர்ந்தெடுக்க, அதை இரு கிளிக் செய்யலாம் அல்லது நீங்கள் மாற்ற விரும்பும் உரையை கர்சரைக் கொண்டு தேர்ந்தெடுக்கலாம்.
  3. திருத்துவதைத் தொடங்கவும்.
  4. மேலே உள்ள 'செயல்தவிர்' செயல்தவிர் அல்லது 'மீண்டும்செய்' மீண்டும்செய் என்பதைத் தட்டி ஒரு செயலைச் செயல்தவிர்க்கலாம்/மீண்டும் செய்யலாம்.

கவனத்திற்கு: Pixel Book போன்றதொரு டச்ஸ்கிரீன் சாதனத்தில் ஓர் ஆவணத்தைத் திருத்த, ஆவணத்தின் மீது இருமுறை தட்டி உள்ளிடத் தொடங்கவும்.

உரை, பத்திகள், இடைவெளி ஆகியவற்றை ஆவணத்தில் சேர்க்கலாம் திருத்தலாம் மேலும் பலவற்றைச் செய்யலாம்.

 படி 3: பிறருடன் பகிர்தல் & பணிபுரிதல்

பிறருடன் கோப்புகளையும் கோப்புறைகளையும் பகிரலாம், அத்துடன் அவர்கள் அவற்றைப் பார்ப்பது, திருத்துவது, கருத்து தெரிவிப்பது ஆகியவற்றைச் செய்ய முடியுமா என்பதையும் நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.

தொடர்புடைய கட்டுரைகள்

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
17841655267442420065
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
35
false
false