Google Docs, Sheets, Slides ஆகியவற்றை ஆஃப்லைனில் பயன்படுத்துதல்


               

உங்கள் பிசினஸிற்கு மேம்பட்ட Google Workspace அம்சங்கள் தேவையா?

இன்றே Google Workspaceஸைப் பயன்படுத்திப் பாருங்கள்!

 

 

இணைய இணைப்பு இல்லாவிட்டாலும் பின்வருவனவற்றில் கோப்புகளை உருவாக்கலாம் பார்க்கலாம் திருத்தலாம்:

  • Google Docs
  • Google Sheets
  • Google Slides

Google Docs, Sheets, மற்றும் Slidesகளை ஆஃப்லைனில் பயன்படுத்துதல்

உங்கள் கம்ப்யூட்டரில் மிகச் சமீபத்தில் திறந்த ஆவணங்களைச் சேமிக்க முடியும்.

ஆஃப்லைன் அணுகலை இயக்குவதற்கு முன் இவற்றைச் செய்யவும்

  • நீங்கள் இணையத்துடன் இணைக்கப்பட வேண்டும்.
  • நீங்கள் Google Chrome அல்லது Microsoft Edge உலாவியைப் பயன்படுத்த வேண்டும்.
  • மறைநிலைப் பயன்முறையில் பயன்படுத்த வேண்டாம்.
  •  Google Docs ஆஃப்லைன் Chrome நீட்டிப்பை நிறுவி இயக்கவும்.
  • ஃபைல்களைச் சேமிக்க உங்கள் சாதனத்தில் போதுமான இடம் இருப்பதை உறுதிசெய்துகொள்ளவும்.

ஆஃப்லைன் அணுகலை இயக்குவதற்கான வழிமுறை

  1. Google Driveவைத் திறக்கவும்.
  2. மேல் வலதுபுறத்தில் அமைப்புகள் அமைப்புகள் அதன் பிறகு அமைப்புகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. ஆஃப்லைன் அமைப்பை இயக்கவும். 
    1. Microsoft Edgeஜைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால், Google Docs ஆஃப்லைன் நீட்டிப்பு என்பதைப் பதிவிறக்க, Chrome ஆன்லைன் ஸ்டோருக்கு திசைதிருப்பி விடப்படுவீர்கள்.
  4. ஆஃப்லைனில் பணிபுரிய, Google Docs, Sheets, Slides ஆகியவற்றுள் ஒன்றைத் திறக்கவும். 

உதவிக்குறிப்பு:

  • Docs, Sheets, Slides ஆகியவற்றின் அமைப்புகளுக்குச் சென்று ஆஃப்லைன் அணுகலை இயக்க முடியும். Docs, Sheets, Slides, Drive ஆகிய ஏதேனும் ஒன்றில் ஆஃப்லைன் அணுகலை இயக்கியிருந்தால் மற்றவையும் ஆஃப்லைனில் கிடைக்கும்.
  • மாறாக, ஆஃப்லைன் அணுகலை இயக்க ஏதேனும் Google ஆவணம், விரிதாள் அல்லது விளக்கக்காட்சியைத் திறக்கவும். மேற்புறத்தில், ஃபைல் தலைப்பிற்கு அடுத்துள்ள, ஆவண நிலையைக் காட்டு Cloud done அதன் பிறகு இயக்கு அதன் பிறகு இயக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.
  • மற்றொரு Google கணக்கில் ஆஃப்லைன் அணுகலைப் பயன்படுத்த விரும்பினால் சரியான Chrome அல்லது Edge சுயவிவரத்தில் உள்நுழைந்திருப்பதை உறுதிசெய்து கொள்ளவும். Chrome சுயவிவரங்களை மாற்றுவது எப்படி என அறிக.

ஆஃப்லைன் அணுகலை முடக்குதல்

  1. Google Docs, Sheets அல்லது Slidesஸின் முகப்புத் திரையைத் திறக்கவும்.
  2. மெனு மெனுஅதன் பிறகு அமைப்புகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. வலதுபுறத்தில் உள்ள ஆஃப்லைன் என்பதை முடக்கவும்.
    • உதவிக்குறிப்பு: Docs, Sheets, Slides ஆகிய ஏதேனும் ஒன்றில் ஆஃப்லைன் அணுகலை முடக்கியிருந்தால், மற்றவற்றிற்கும் ஆஃப்லைன் அணுகல் முடக்கப்படும்.

குறிப்பிட்ட ஃபைல்களை ஆஃப்லைனில் கிடைக்கும்படிச் செய்தல்

போதுமான அளவிற்குச் சேமிப்பகம் இருந்தால் உங்களது மிகவும் சமீபத்திய சில கோப்புகள் தானாகவே ஆஃப்லைனில் சேமிக்கப்படும். ஆஃப்லைனில் சேமிக்க கோப்புகளை நேரடியாகத் தேர்ந்தெடுப்பதற்கு:

  1. Google Driveவில் ஆஃப்லைன் அணுகலை இயக்க மேலே உள்ள படிகளைப் பின்பற்றவும்.
  2. Google Docs, Sheets அல்லது Slidesஸின் முகப்புத் திரையைத் திறக்கவும்.
  3. ஆஃப்லைனில் பயன்படுத்த விரும்பும் கோப்பில் மேலும் மேலும் என்பதைக் க்ளிக் செய்யவும்.
  4. ஆஃப்லைனில் கிடைக்கும்படிச் செய் என்பதைக் கிளிக் செய்யவும். கோப்பு ஆஃப்லைனில் கிடைக்கும் என்பதைக் காட்டுவதற்கு கீழ் இடதுபுற மூலையில் தேர்வுக்குறி தோன்றும்.

உதவிக்குறிப்பு: Google ஆவணம், விரிதாள், விளக்கக்காட்சி ஆகியவற்றைத் திறந்து ஃபைல் அதன் பிறகு ஆஃப்லைனில் கிடைக்கும்படிச் செய் என்பதைக் கிளிக் செய்வதன் மூலமாகவும் ஃபைலை ஆஃப்லைனில் கிடைக்கும்படிச் செய்யலாம்.

ஆஃப்லைனில் பயன்படுத்துவதற்கு ஆவணம் தயாராக உள்ளதா என்று பார்க்கவும்

  1. கம்ப்யூட்டரில் Docs, Sheets அல்லது Slidesஸில் ஃபைலைத் திறக்கவும்.
  2. மேற்புறத்தில் ஃபைல் தலைப்பிற்கு அடுத்துள்ள ஆவண நிலையைக் காட்டு Cloud done என்பதைக் கிளிக் செய்யவும்.

உதவிக்குறிப்பு: ஆஃப்லைனில் திருத்துவதற்கு உங்கள் ஆவணம் தயாராக இல்லை எனில் ஒரு விளக்கம் தோன்றும்.

கோப்புகளை ஆஃப்லைனில் பயன்படுத்துவதன் மூலம் சிக்கல்களைச் சரிசெய்தல்

Google Docs, Sheets, Slides போன்றவற்றை ஆஃப்லைனில் பயன்படுத்துவதில் சிக்கலை எதிர்கொண்டால் இந்தப் படிகளைப் பின்பற்றவும்.

உலாவியைச் சரிபார்த்தல்

  • Google Chrome, Microsoft Edge போன்ற உலாவிகளில் ஃபைல்களை ஆஃப்லைனில் பயன்படுத்தலாம்.
  • தனிப்பட்ட/மறைநிலை உலாவலைப் பயன்படுத்த வேண்டாம். 
  • Google Docs ஆஃப்லைன் Chrome நீட்டிப்பு நிறுவப்பட்டு இயக்கத்தில் உள்ளதை உறுதிப்படுத்தவும்.
  • உங்கள் உலாவி சமீபத்திய பதிப்பிற்குப் புதுப்பிக்கப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தவும்.

பிழைச் செய்தி: "ஆஃப்லைன் ஒத்திசைவு நிலையைச் சரிபார்க்கிறது. காத்திருக்கவும்."

  • பக்கத்தை ரெஃப்ரெஷ் செய்து மீண்டும் முயலவும். 
  • தளத் தரவை அழிக்கவும்:
    1.  chrome://settings/cookies/detail?site=docs.google.com என்பதைத் திறக்கவும்.
      1. Microsoft Edge உலாவியைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால், edge://settings/cookies/detail?site=docs.google.com என்பதைத் திறக்கவும்.
    2. அனைத்தையும் அகற்று என்பதைக் கிளிக் செய்யவும்.

பிழைச் செய்தி: "ஆஃப்லைன் ஒத்திசைவு உங்கள் நிர்வாகியால் முடக்கப்பட்டுள்ளது."

இந்தக் கணக்கின் மூலம் ஆஃப்லைன் அம்சத்தைப் பயன்படுத்த முடியாது. உங்கள் நிர்வாகியைத் எவ்வாறு தொடர்புகொள்வது என்பதை அறிக.

பிழைச் செய்தி: "ஏற்கெனவே மற்றொரு பயனர் இந்தக் கம்ப்யூட்டரில் ஆஃப்லைன் அணுகலை இயக்கியுள்ளார்."

ஒவ்வொரு உலாவி சுயவிவரத்திலும் ஒரே ஒரு கணக்கிற்கு மட்டுமே ஆஃப்லைன் அணுகலை இயக்க முடியும். பல்வேறு கணக்குகளுக்கு ஆஃப்லைன் அணுகலை இயக்க விரும்பினால், வெவ்வேறு உலாவிச் சுயவிவரங்களில் அவற்றை உருவாக்கவும். புதிய சுயவிவரத்தை எப்படிச் சேர்ப்பது என்பதைத் தெரிந்துகொள்ளவும், பின்னர் ஒவ்வொரு சுயவிவரத்திலும் ஒரு கணக்கிற்கு ஆஃப்லைன் அணுகலை இயக்கவும். 

ஆஃப்லைன் பயன்முறையை அமைக்க முடியவில்லை

ஆஃப்லைனை முடக்குதல் மற்றும் மீண்டும் இயக்குதல் 

தளத் தரவை அழித்தல் 

  1.  chrome://settings/cookies/detail?site=docs.google.com என்பதைத் திறக்கவும்.
    1. Microsoft Edge உலாவியைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால், edge://settings/cookies/detail?site=docs.google.com என்பதைத் திறக்கவும்
  2. அனைத்தையும் அகற்று என்பதைக் கிளிக் செய்யவும். 

ஆஃப்லைன் ஏற்கெனவே இயக்கத்தில் உள்ளது

நீங்கள் ChromeOS பயனராக இருந்தால், Chrome சுயவிவரத்தை உருவாக்கும்போது Docs, Drive ஆகியவற்றை ஒத்திசைக்கத் தேர்வுசெய்தால் அல்லது உங்கள் சாதனத்தில் Drive for desktop ஆப்ஸை நிறுவியிருந்தால் ஆஃப்லைன் தானாகவே இயக்கப்படும்.

ஆஃப்லைனை எப்படி முடக்குவது எனத் தெரிந்துகொள்ளுங்கள்.

பிழைச் செய்தி: ஆவணத்தை ஒத்திசைக்க முடியவில்லை அல்லது ஒத்திசைப்பதில் சிக்கல்

படி 1: உங்கள் நெட்வொர்க் இணைப்பைச் சரிபார்க்கவும்

உங்கள் நெட்வொர்க் இணைப்பில் சிக்கல் இருக்கக்கூடும். முதலில் நெட்வொர்க் இணைப்பைச் சரிபார்க்கவும். பிறகு ஆஃப்லைன் அணுகலை முடக்கி மீண்டும் இயக்கவும்.

  1. கம்ப்யூட்டரில் Google ஆவணம், தாள் அல்லது ஸ்லைடைத் திறக்கவும்.
  2. மேலே கோப்பு அதன் பிறகு ஆஃப்லைனில் கிடைக்கும்படிச் செய் என்பதைக் கிளிக் செய்யவும். தேர்வுக்குறி மறைந்துவிடும்.
  3. மேலே கோப்பு அதன் பிறகு ஆஃப்லைனில் கிடைக்கும்படிச் செய் என்பதைக் கிளிக் செய்யவும். 

பிழைத் தொடர்ந்து காட்டப்பட்டால் உங்கள் கோப்பு பெரிதாக உள்ளது என அர்த்தம். 

படி 2: கோப்பைச் சிறிதாக்குதல்

  1. கோப்பின் அளவைச் சிறிதாக்கவும்.
    • உதவிக்குறிப்பு: அசல் ஆவணத்தில் உள்ள சிறிய பிரிவுகளைப் புதிய ஆவணத்திற்கு நகலெடுக்கவும்.
  2. புதிய சிறிய ஆவணத்தின் மேலே கோப்பு அதன் பிறகு ஆஃப்லைனில் கிடைக்கும்படிச் செய் என்பதைக் கிளிக் செய்யவும்.

ஆஃப்லைன் அணுகலை மேம்படுத்த எங்களுக்கு உதவவும்

Google Docs, Sheets, Slides ஆகிவற்றுடனான உங்களது ஆஃப்லைன் அனுபவத்தை நாங்கள் புரிந்துகொள்ள உதவுவதற்கு இந்தக் கருத்துக்கணிப்பில் பங்கேற்கவும். 

true
Visit the Learning Center

Using Google products, like Google Docs, at work or school? Try powerful tips, tutorials, and templates. Learn to work on Office files without installing Office, create dynamic project plans and team calendars, auto-organize your inbox, and more.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
13876571342872733369
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
35
false
false