Google Docs, Sheets, Slides, Drawings ஆகியவற்றுக்கான அணுகலம்சங்கள்

Google Docs, Sheets, Slides, Drawings ஆகியவை ஸ்கிரீன் ரீடர்கள், பிரெய்ல் சாதனங்கள், திரையைப் பெரிதாக்கல் போன்ற பலவற்றைப் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

ஸ்கிரீன் ரீடரைப் பயன்படுத்துதல்

உங்கள் கம்ப்யூட்டரில் ஏற்கெனவே ChromeVox, NVDA, JAWS, VoiceOver போன்ற ஸ்கிரீன் ரீடர் மென்பொருளைப் பயன்படுத்தினால் தொடங்குவதற்கு இந்தப் படிகளைப் பின்பற்றவும்.

படி 1: ஸ்கிரீன் ரீடர் வசதியை இயக்கவும்

Google Docs, Sheets, Slides ஆகியவற்றில் முதல்முறையாக ஸ்கிரீன் ரீடரைப் பயன்படுத்தும்போது ஸ்கிரீன் ரீடர் வசதியை இயக்க வேண்டும்:

  1. Google Docs, Sheets அல்லது Slidesஸுக்குச் சென்று ஒரு ஃபைலைத் திறக்கவும்.
  2. கருவிகள் மெனுவில் அணுகல்தன்மை அமைப்புகள் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. ஸ்கிரீன் ரீடர் வசதியை இயக்கு என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

படி 2: ஸ்கிரீன் ரீடர் அமைப்புகளைச் சரிபார்க்கவும்

Google Docs, Sheets, Slides, Drawings ஆகியவற்றைப் பயன்படுத்தும்போது சில ஸ்கிரீன் ரீடர்களுக்கான அமைப்புகளைச் சரிசெய்ய வேண்டியிருக்கலாம். ஸ்கிரீன் ரீடருக்கான வழிமுறைகளைக் கீழே பார்க்கவும்.

ChromeVox

நீங்கள் Chrome OSஸில் ChromeVoxஸைப் பயன்படுத்தினால் கூடுதலாக எதையும் அமைக்க வேண்டாம்.

NVDA

Windowsஸில் சிறந்த அனுபவத்தைப் பெற, Chromeமின் சமீபத்திய பதிப்பில் NVDAவின் சமீபத்திய பதிப்பைப் பயன்படுத்தவும்.

Docs, Slides மற்றும் Drawings

  1. Google Docs, Slides அல்லது Drawingsஸிற்குச் சென்று ஒரு ஃபைலைத் திறக்கவும்.
  2. "ஸ்கிரீன் ரீடர் வசதி இயக்கப்பட்டது" எனச் சொல்லப்படுகிறதா என்று கவனிக்கவும். எதுவும் கேட்கவில்லை எனில் கருவிகள் மெனுவில் அணுகல்தன்மை அமைப்புகள் என்பதற்குச் சென்று ஸ்கிரீன் ரீடர் வசதியை இயக்கு என்பதைத் தேர்ந்தெடுக்கவும். "ஸ்கிரீன் ரீடர் வசதி இயக்கப்பட்டது" என்று குரல் அறிவிப்பு கேட்கும்.
  3. NVDA + Ctrl + k அழுத்திவிட்டு, டைப் செய்த எழுத்துகளைப் படி என்பதையும் டைப் செய்த வார்த்தைகளைப் படி என்பதையும் முடக்கவும்.
  4. விருப்பத்திற்குரியது: உங்கள் NVDA தொடக்கக் கீபோர்டு ஷார்ட்கட்டை மாற்றினால் இதற்கும் Docs, Slides, Drawings ஆகியவற்றுக்கும் எந்த முரண்பாடும் இருக்காது. Docs, Slides, Drawings ஆகியவற்றில் Ctrl + Alt + n என்ற இயல்பு NVDA கீபோர்டு ஷார்ட்கட் பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறது (உதாரணமாக, ஆவணத்தில் அடுத்த படத்திற்குச் செல்ல Ctrl + Alt + n அழுத்திவிட்டு g அழுத்துவது). NVDA கீபோர்டு ஷார்ட்கட்டை மாற்ற NVDA ஷார்ட்கட் மூலம் பண்புகள் என்பதைத் திறக்கவும். ஷார்ட்கட் பிரிவில் உள்ள ஷார்ட்கட் பட்டனை மாற்றினால் இதற்கும் Docs, Slides, Drawings ஆகியவற்றுக்கும் எந்த முரண்பாடும் இருக்காது (உதாரணமாக, Ctrl + Alt + \).

Sheets

Sheetsஸில் பயன்படுத்தத் தொடங்க மேலே படி 1ல் விளக்கப்பட்டுள்ளபடி ஸ்கிரீன் ரீடர் வசதியை இயக்கவும்.

உதவிக்குறிப்பு: பொதுவாகவே உலாவிப் பயன்முறையைவிட மையப்படுத்தல் பயன்முறை இன்னும் சிறப்பான அனுபவத்தை வழங்கும். மையப்படுத்தல் மற்றும் உலாவிப் பயன்முறைகளுக்கு இடையே மாற NVDA + Spacebar அழுத்தவும்.

JAWS

Windowsஸில் சிறந்த அனுபவத்தைப் பெற, Chromeமின் சமீபத்திய பதிப்பில் JAWSஸின் சமீபத்திய பதிப்பைப் பயன்படுத்தவும்.

Docs, Slides மற்றும் Drawings

Docs, Slides, Drawings ஆகியவற்றுக்கான JAWS அமைப்புகளைச் சரிசெய்ய இந்தப் படிகளைப் பின்பற்றவும்:

  1. Google Docs, Slides அல்லது Drawingsஸிற்குச் சென்று ஒரு ஃபைலைத் திறக்கவும்.
  2. "ஸ்கிரீன் ரீடர் வசதி இயக்கப்பட்டது" எனச் சொல்லப்படுகிறதா என்று கவனிக்கவும். எதுவும் கேட்கவில்லை எனில் கருவிகள் மெனுவில் அணுகல்தன்மை அமைப்புகள் என்பதற்குச் சென்று ஸ்கிரீன் ரீடர் வசதியை இயக்கு என்பதைத் தேர்ந்தெடுக்கவும். "ஸ்கிரீன் ரீடர் வசதி இயக்கப்பட்டது" என்று குரல் அறிவிப்பு கேட்கும்.

Sheets

Sheetsஸில் பயன்படுத்தத் தொடங்க மேலே படி 1ல் விளக்கப்பட்டுள்ளபடி ஸ்கிரீன் ரீடர் வசதியை இயக்கவும்.

உதவிக்குறிப்பு: பொதுவாகவே விர்ச்சுவல் பயன்முறையைவிட Forms பயன்முறை இன்னும் சிறப்பான அனுபவத்தை வழங்கும்.

VoiceOver

Google Docs, Sheets, Slides, Drawings ஆகியவை macOSஸின் சமீபத்திய பதிப்பிலுள்ள VoiceOver மென்பொருளுடன் இணக்கமாகச் செயல்படும். Google Chrome உலாவியைப் பயன்படுத்துமாறு பரிந்துரைக்கிறோம்.

சிறந்த அனுபவத்தைப் பெற, ஒரே நேரத்தில் இடது மற்றும் வலது அம்புக்குறிகளை அழுத்தி VoiceOverரின் Quick Nav அம்சத்தை முடக்கவும்.

Docs, Slides மற்றும் Drawings

  1. Google Docsஸிற்குச் சென்று ஆவணத்தைத் திறக்கவும்.
  2. "ஸ்கிரீன் ரீடர் வசதி இயக்கப்பட்டது" எனச் சொல்லப்படுகிறதா என்று கவனிக்கவும். எதுவும் கேட்கவில்லை எனில் கருவிகள் மெனுவில் அணுகல்தன்மை அமைப்புகள் என்பதற்குச் சென்று ஸ்கிரீன் ரீடர் வசதியை இயக்கு என்பதைத் தேர்ந்தெடுக்கவும். "ஸ்கிரீன் ரீடர் வசதி இயக்கப்பட்டது" என்று குரல் அறிவிப்பு கேட்கும்.
  3. VoiceOverரில் "தானாகவே இணையப்பக்கத்தைப் படி” என்பதை இயக்கினால் ஸ்கிரீன் ரீடரைக் கேட்பீர்கள். திருத்துமிடத்திற்கு மையப்படுத்துதலை நகர்த்த Escape பட்டனை அழுத்தவும்.
  4. திருத்தக்கூடிய வார்த்தைக்குச் செல்ல VoiceOver + Shift + கீழ்நோக்கிய அம்புக்குறி பட்டன்களை அழுத்தவும்.

Sheets

Sheetsஸில் பயன்படுத்தத் தொடங்க மேலே படி 1ல் விளக்கப்பட்டுள்ளபடி ஸ்கிரீன் ரீடர் வசதியை இயக்கவும்.

கீபோர்டு ஷார்ட்கட்கள் & VoiceOver

VoiceOver ஷார்ட்கட்களும் Google Docs, Sheets, Slides, Drawings ஆகியவற்றுக்கான மெனு ஷார்ட்கட்களும் முரண்படுகின்றன. மெனுக்களைத் திறக்க, முதலில் VoiceOver பட்டன்களான Ctrl + Option + Tab அழுத்தவும். அதன்பிறகு, ‘ஃபைல்’ மெனுவை அணுக Ctrl + Option + f போன்ற மெனு ஷார்ட்கட்டைப் பயன்படுத்தவும். Option + / அழுத்திவிட்டு ஃபைல் போன்ற வார்த்தைகளை டைப் செய்தும் மெனுக்களை உடனடியாகத் தேடலாம்.

VoiceOver தானாகவே பக்கத்தின் சரியான பகுதியை மையப்படுத்தவில்லை எனில் (உதாரணமாக உரையாடல் சாளரம் தோன்றினால்) திருத்துமிடத்தை மையப்படுத்த Escape பட்டனை அழுத்தவும். அதன்பிறகு, திருத்துமிடத்திற்குச் செல்ல VoiceOver + Shift + கீழ்நோக்கிய அம்புக்குறி அழுத்தவும்.

பரிந்துரைக்கப்படும் உலாவியும் ஸ்கிரீன் ரீடர்களும்

Chrome உலாவியையும் இவற்றையும் டாக்ஸ் எடிட்டர் பரிந்துரைக்கிறது:

  • Windowsஸில் NVDA அல்லது JAWS
  • ChromeOSஸில் ChromeVox
  • MacOSஸில் VoiceOver

படி 3: திருத்தவும்

Google Docs, Sheets, Slides, Drawings ஆகியவற்றில் ஸ்கிரீன் ரீடரைப் பயன்படுத்துவதைப் பற்றி இந்த உதவிப் பக்கங்களிலும் வீடியோக்களிலும் மேலும் அறிந்துகொள்ளலாம்.

உதவிக்குறிப்பு: Docs, Sheets, Slides ஆகியவற்றில், ஃபைலில் பிறர் நுழைவது, திருத்துவது, வெளியேறுவது போன்றவை பற்றிய ஸ்கிரீன் ரீடர் அறிவிப்புகளை முடக்கலாம். கூட்டுப்பணியாளர் அறிவிப்புகளை முடக்குவது குறித்து அறிக.

வீடியோ பயிற்சிகள்

Docs, Sheets, Slides ஆகியவற்றுக்கான ஸ்கிரீன் ரீடர் வீடியோக்கள்

Get started with Google Docs (18.9 minutes)

In this video, you’ll learn how to get started with Google Docs, using NVDA with Firefox.

Firefoxஸில் Google Docs உடன் NVDAவை எப்படிப் பயன்படுத்தத் தொடங்குவது என்று இந்த வீடியோ விளக்குகிறது.

Get started with Google Sheets (26.3 minutes)

In this video, you’ll learn how to get started with Google Sheets, using NVDA with Firefox.

Firefoxஸில் Google Sheets உடன் NVDAவை எப்படிப் பயன்படுத்தத் தொடங்குவது என்று இந்த வீடியோ விளக்குகிறது.

Get started with Google Slides (16 minutes)

In this video, you’ll learn how to get started with Google Slides, using NVDA with Firefox.

Firefoxஸில் Google Slides உடன் NVDAவை எப்படிப் பயன்படுத்தத் தொடங்குவது என்று இந்த வீடியோ விளக்குகிறது.

பிரெய்ல் டிஸ்ப்ளேவைப் பயன்படுத்துதல்

ஆவணங்கள், விரிதாள்கள், விளக்கக்காட்சிகள், வரைபடங்கள் ஆகியவற்றைப் படிக்கவும் திருத்தவும் பிரெய்ல் டிஸ்ப்ளேவைப் பயன்படுத்தலாம்.

அதிக ஒளி மாறுபாட்டுப் பயன்முறையில் ஃபைல்களைப் பார்த்தல்

ஆவணங்கள், விரிதாள்கள், விளக்கக்காட்சிகள் ஆகியவற்றை அதிக ஒளி மாறுபாட்டுப் பயன்முறையில் பார்க்கலாம்:

  • ChromeOSஸில் அதிக ஒளி மாறுபாட்டுப் பயன்முறையைப் பயன்படுத்தலாம்
  • Windowsஸில் Chrome, Firefox, Edge ஆகிய உலாவிகளில் Windows ஒளி மாறுபாட்டுத் தீம்களைப் பயன்படுத்தலாம்

Use Google Docs with a screen magnifier

You can use a screen magnifier to zoom in as you move on a screen.
Important: Screen magnifiers are available in Chrome.

Mac:

  1. In the Chrome browser, open Google Docs.
  2. Under “Tools,” select Accessibility settings அதன் பிறகு Turn on screen magnifier support.

If the magnifier doesn’t follow where you are onscreen, you might need to adjust your computer settings. To turn on the magnifier on your computer:

  1. In “System preferences,” select Accessibility அதன் பிறகு Zoom அதன் பிறகு Advanced.
  2. Turn on Zoom follows the keyboard focus.

For more information, visit the Apple support article How to zoom in or out on Mac.

Chrome OS:

  1. In the Chrome browser, open Google Docs.
  2. Under “Tools,” select Accessibility settings அதன் பிறகு Turn on screen magnifier support.

To turn on the magnifier on your computer:

  1. In “Settings,” select Advanced அதன் பிறகு Accessibility அதன் பிறகு Manage accessibility features.
  2. Turn on Enable fullscreen magnifier or Enable docked magnifier. Learn more about Chromebook magnification.

Windows: To find out how to use the screen magnifier, visit the Microsoft support article Setting up and using Magnifier.

குரல் மூலம் டைப் செய்தல்

ஆவணங்களிலோ விளக்கக்காட்சி பேச்சாளர் குறிப்புகளிலோ உங்கள் குரல் மூலம் உள்ளிடலாம். (இந்த அம்சம் Chrome உலாவிகளில் மட்டுமே உள்ளது.)

கீபோர்டு ஷார்ட்கட்களைப் பயன்படுத்துதல்

Google Docs, Sheets, Slides ஆகியவற்றில் வழிசெலுத்தலுக்கும் திருத்துவதற்குமான கீபோர்டு ஷார்ட்கட்கள் உள்ளன.

ஃபைலைத் திருத்தும்போது கீபோர்டு ஷார்ட்கட்களின் பட்டியலைத் திறக்க Ctrl + / (Windows, Chrome OS) அல்லது ⌘ + / (Mac) அழுத்தவும்.

கூடுதல் கீபோர்ட் ஷார்ட்கட்கள்:

ஸ்கிரீன் ரீடர் மூலம் தொடு பயன்முறையைப் பயன்படுத்துதல்

சில கம்ப்யூட்டர்களிலும் ஸ்கிரீன் ரீடர்களிலும் கம்ப்யூட்டர் திரையைத் தொட்டு, கர்சரை நகர்த்தி வார்த்தைகளை டைப் செய்யலாம்.

இந்த ஸ்கிரீன் ரீடர்களையும் உலாவிகளையும் பயன்படுத்தும் Docs, Sheets, Slides ஆகியவற்றில் தொடு பயன்முறையைப் பயன்படுத்தலாம்:

  • Chromebookகுகளில் Chrome 67 அல்லது அதற்குப் பிந்தைய பதிப்பில் ChromeVox ஸ்கிரீன் ரீடரைப் பயன்படுத்தலாம்.
  • Windowsஸில் Firefoxஸிலோ Chromeமின் சமீபத்திய பதிப்பிலோ JAWS ஸ்கிரீன் ரீடரைப் பயன்படுத்தலாம்.

ChromeVoxஸில் தொடு பயன்முறையைப் பயன்படுத்துதல்

Chromebookகில் ChromeVox உடன் தொடு பயன்முறையைப் பயன்படுத்த:

  1. Chromebook அணுகல்தன்மை அம்சங்களில் பின்வரும் அமைப்புகள் உள்ளனவா எனப் பார்க்கவும்:
    • பேசும் திரையை இயக்கு என்பதை முடக்கவும்.
    • ஸ்கிரீன் கீபோர்டை இயக்கு என்பதை இயக்கவும்.
  2. ஆவணம், விரிதாள் அல்லது விளக்கக்காட்சியைத் திறக்கவும்.
  3. கருவிகள் மெனுவில் அணுகல்தன்மை அமைப்புகள் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  4. பிரெய்ல்வசதியை இயக்கு என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  5. திருத்துமிடத்தில் ஸ்கிரீன் கீபோர்டைப் பயன்படுத்தவும்.
  6. திருத்தும் இடத்திற்கு வெளியே வழக்கமாகச் செய்வது போல திரையை ஸ்வைப் செய்யலாம், தொடலாம். Chromebook தொடு திரை அணுகல்தன்மையைப் பயன்படுத்துவது குறித்து அறிக.

JAWS மூலம் தொடு பயன்முறையைப் பயன்படுத்துதல்

Windowsஸில் Firefoxஸிலோ Chromeமின் சமீபத்திய பதிப்பிலோ JAWS மூலம் தொடு பயன்முறையைப் பயன்படுத்த:

  1. ஆவணம், விரிதாள் அல்லது விளக்கக்காட்சியைத் திறக்கவும்.
  2. கருவிகள் மெனுவில் அணுகல்தன்மை அமைப்புகள் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. பிரெய்ல்வசதியை இயக்கு என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  4. திருத்துமிடத்தில் JAWS வாா்த்தை வாசிப்புப் பயன்முறையைப் பயன்படுத்தவும்.
    • தொடுதல் பயன்முறைகளுக்கும் வாா்த்தைகளைப் படிக்கும் பயன்முறைக்கும் இடையே மாற, இருவிரல் சுழற்சி சைகையைப் பயன்படுத்தவும். JAWS தொடுதல் வசதி குறித்து அறிக.
  5. மையப்படுத்துதலை ஆப்ஸ் மெனுவிற்கு நகர்த்த, திரையின் மேற்பகுதியில் இருமுறை தட்டவும். வெவ்வேறு பகுதிகளுக்குச் செல்ல, மூன்று விரல்களால் ஸ்வைப் செய்யவும் அல்லது தொட்டுக் கண்டறிதலைப் பயன்படுத்தவும்.

தொடர்புடைய கட்டுரைகள்

 

 

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
18247079923018935184
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
35
false
false