கோப்பைத் திருத்த முடியவில்லை

கோப்பைத் திருத்த முடியவில்லை எனில் சில விஷயங்கள் தவறாக இருக்கலாம்:

  • கோப்பின் உரிமையாளர் கோப்பைப் பார்க்க உங்களுக்கு அனுமதி வழங்கவில்லை.
  • வேறு Google கணக்கில் உள்நுழைந்துள்ளீர்கள்.
  • திருத்துவதற்கான அணுகலை உடைய ஒருவர் திருத்துவதற்கான உங்கள் அனுமதியை நீக்கியுள்ளார்.

கோப்பைத் திருத்த அனுமதி கோருதல்

Google மூலம் அணுகலைக் கோருதல்

அணுகலைக் கோர ஆன்லைனில் நீங்கள் இருக்க வேண்டும்.

"பார்க்க மட்டும்" முடியும் எனில்

  1. கோப்பினைத் திறக்கவும்.
  2. திருத்துவதற்கான அணுகல் கோரிக்கை என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. தேவையெனில் கோப்பின் உரிமையாளருக்கு ஒரு குறிப்பைச் சேர்க்கவும்.
  4. கோரிக்கையை அனுப்பு என்பதைக் கிளிக் செய்யவும்.

மின்னஞ்சல் அறிவிப்பை உரிமையாளர் பெறுவார், திருத்துவதற்கான அணுகலை உங்களுக்கு வழங்கும் வகையில் அந்தக் கோப்பை அவரால் திறக்க முடியும்.

"கருத்துத் தெரிவிக்க" அல்லது "பரிந்துரைக்க" மட்டும் முடியுமெனில்

  1. கோப்பினைத் திறக்கவும். 
  2. மேல் வலதுபுறத்தில் உள்ள பகிர் என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிட்டு கோரிக்கையை அனுப்பு என்பதைக் கிளிக் செய்யவும்.

மின்னஞ்சல் அறிவிப்பை உரிமையாளர் பெறுவார், திருத்துவதற்கான அணுகலை உங்களுக்கு வழங்கும் வகையில் அந்தக் கோப்பை அவரால் திறக்க முடியும்.

உரிமையாளரை நேரடியாகத் தொடர்புகொள்ளுதல்

உடனடியாக அணுகல் வேண்டுமெனில் கோப்பின் உரிமையாளரைத் தொடர்புகொண்டு உங்களுக்கு அணுகல் வழங்குமாறு கேட்கலாம்.

Google கணக்கில் உள்நுழைதல்

பெரும்பாலான சூழல்களில் கோப்பைத் திருத்த நீங்கள் Google கணக்கில் உள்நுழைய வேண்டும். ஒன்றுக்கும் மேற்பட்ட Google கணக்கு இருப்பின் தவறான கணக்கில் நீங்கள் உள்நுழைந்திருக்கலாம்.

மற்றொரு கணக்கிற்கு மாறுவதற்கு:

  1. கோப்புக்கான இணைப்பைத் திறக்கவும்.
  2. மேல் வலதுபுறத்தில் உள்ள உங்கள் கணக்கின் சுயவிவரப் படத்தைக் கிளிக் செய்யவும்.
  3. வெளியேறு என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. வேறு Google கணக்கில் உள்நுழைந்து கோப்புக்கான இணைப்பை மீண்டும் திறக்கவும்.

கோப்பை இன்னமும் திருத்த முடியவில்லை எனில் அந்தக் கோப்புக்கான அணுகலை நீங்கள் கோர வேண்டும்.

இன்னமும் கோப்பைத் திருத்த முடியவில்லை எனில்

கூடுதல் உதவி பெறுதல்

இந்த விருப்பங்கள் உதவவில்லை எனில் Google Drive மாற்றத்தில் உள்ள பதில்கள் சிலவற்றைப் பார்க்கவும்.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
3292497106927260416
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
35
false
false