VLOOKUP

 
உங்களுக்குத் தெரிந்த தகவல் உங்கள் விரிதாளில் இருந்தால் அதனுடன் தொடர்புடைய தகவலை வரிசை அடிப்படையில் தேட, VLOOKUP செயல்பாட்டைப் பயன்படுத்தலாம். உதாரணமாக, நீங்கள் ஆரஞ்சுப் பழத்தை வாங்க விரும்பினால் VLOOKUP செயல்பாட்டைப் பயன்படுத்தி அதன் விலையைத் தேடலாம்.
VLOOKUP formula example
BigQueryக்கான VLOOKUP

வெர்டிக்கல் லுக்அப். தேடல் நெடுவரிசையில் பொருத்தமான மதிப்பு எங்கெங்கு உள்ளது என்று கண்டறிந்து அதற்குரிய தரவு நெடுவரிசையில் மதிப்புகளை வழங்கும்.

மாதிரிப் பயன்பாடு

=VLOOKUP("Apple",அட்டவணைப்_பெயர்!பழம்,அட்டவணைப்_பெயர்!விலை)

தொடரியல்

VLOOKUP(தேடல்_மதிப்பு, வரம்பு, இன்டெக்ஸ், வரிசை_நிலை)

  • தேடல்_மதிப்பு: தேடல் நெடுவரிசையில் தேட வேண்டிய மதிப்பு.
  • தேடல்_நெடுவரிசை: தேட வேண்டிய தரவு நெடுவரிசை.
  • முடிவு_நெடுவரிசை: முடிவிற்காகப் பயன்படுத்தப்படும் தரவு நெடுவரிசை.
  • வரிசை_நிலை: [விருப்பத்திற்குரியது] தேடல்_மதிப்பைத் தேடும்போது துல்லியமான பொருத்தம் தேவையா என்பதை முடிவு செய்யும்.
    • FALSE: துல்லியமான பொருத்தத்திற்கு இது பரிந்துரைக்கப்படுகிறது.
    • TRUE: தோராயமான பொருத்தத்திற்கு இது பரிந்துரைக்கப்படுகிறது. வரிசை_நிலை குறிப்பிடப்படவில்லை எனில் இதுவே இயல்பான மதிப்பாக இருக்கும்.
      உதவிக்குறிப்பு: தோராயமான பொருத்தத்தைப் பயன்படுத்துவதற்கு முன்பு தேடல் மதிப்பை ஏறுவரிசையில் வரிசைப்படுத்தவும். இல்லையெனில், வழங்கப்படும் மதிப்பு தவறாக இருக்க வாய்ப்புள்ளது. வழங்கப்படும் மதிப்பு ஏன் தவறாக இருக்கக்கூடும் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.

உதவிக்குறிப்பு: BigQueryயில் தரவுத்தள வினவல்களை விருப்பத்திற்கேற்றவாறு பயன்படுத்த, XLOOKUP செயல்பாட்டைப் பயன்படுத்தவும்.

தொடரியல்

=VLOOKUP(தேடல்_மதிப்பு, வரம்பு, இன்டெக்ஸ், [வரிசை_நிலை])

உள்ளீடுகள்

  1. தேடல்_மதிப்பு: வரம்பின் முதல் நெடுவரிசையில் தேட வேண்டிய மதிப்பு.
  2. வரம்பு: தேட வேண்டியவற்றுக்கான மேல் மற்றும் கீழ் வரம்புகள்.
  3. இன்டெக்ஸ்: வரம்பில் இருந்து வழங்கப்படும் மதிப்பு உள்ள நெடுவரிசையின் இன்டெக்ஸ். இன்டெக்ஸ் என்பது நேர்மறை முழு எண்ணாக இருக்க வேண்டும்.
  4. வரிசை_நிலை: விரும்பினால் வழங்கலாம். இவற்றில் ஒன்றைத் தேர்வுசெய்யவும்:
    • FALSE = துல்லியமான பொருத்தம். இது பரிந்துரைக்கப்படுகிறது.
    • TRUE = தோராயமான பொருத்தம். வரிசை_நிலை குறிப்பிடப்படவில்லை எனில் இதுவே இயல்பான மதிப்பாக இருக்கும்.
      கவனத்திற்கு: தோராயமான பொருத்தத்தைப் பயன்படுத்துவதற்கு முன்பு தேடல் மதிப்பை ஏறுவரிசையில் வரிசைப்படுத்தவும். இல்லையெனில், வழங்கப்படும் மதிப்பு தவறாக இருக்க வாய்ப்புள்ளது. வழங்கப்படும் மதிப்பு ஏன் தவறாக இருக்கக்கூடும் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.

வழங்கப்படும் மதிப்பு

தேர்ந்தெடுக்கப்பட்ட வரம்பில் பொருந்தும் முதல் மதிப்பு.
தொழில்நுட்ப விவரங்கள்:
உதாரணம்:
=VLOOKUP(G9, B4:D8, 3, FALSE)
=VLOOKUP("Apple", B4:D8, 3, TRUE)
உள்ளீடுகள் விவரம்
தேடல்_மதிப்பு
வரம்பின் முதல் நெடுவரிசையில் நீங்கள் தேடும் மதிப்பு இதுதான். பிழை இல்லாமல் மதிப்பு கிடைக்க வேண்டுமெனில் வரம்பின் முதல் நெடுவரிசையில் தேடல் மதிப்பு இருக்க வேண்டும். கலக் குறிப்பையும் பயன்படுத்தலாம்.
சரிபார்க்க எளிய வழி: B3 கலத்தில் உங்கள் தேடல்_மதிப்பு இருந்தால் உங்கள் வரம்பு B நெடுவரிசையில் இருந்து தொடங்க வேண்டும்.
வரம்பு
இந்த வரம்பில்:
  • குறிப்பிடப்பட்ட தேடல் மதிப்பை, செயல்பாடு அதன் முதல் நெடுவரிசையில் தேடும்.
  • இன்டெக்ஸ் குறிப்பிடும் நெடுவரிசையில் உள்ள மதிப்பை VLOOKUP வழங்கும். பெயரிடப்பட்ட வரம்பையும் பயன்படுத்தலாம்.
பிழை இல்லாத மதிப்பைப் பெற, வரம்பின் முதல் நெடுவரிசையில் உங்கள் தேடல் மதிப்பு இருக்க வேண்டும்.
சரிபார்க்க எளிய வழி: B3 கலத்தில் உங்கள் தேடல்_மதிப்பு இருந்தால் உங்கள் வரம்பு B நெடுவரிசையில் இருந்து தொடங்க வேண்டும்.
இன்டெக்ஸ்
இது “நெடுவரிசை எண்” எனவும் அழைக்கப்படுகிறது. வரம்பில் உள்ள நெடுவரிசைகளில், வழங்கப்படும் மதிப்பு உள்ள நெடுவரிசையின் இன்டெக்ஸ் இதுவே.
  • இன்டெக்ஸின் குறைந்தபட்ச மதிப்பு 1 ஆகும்.
  • இன்டெக்ஸின் அதிகபட்ச மதிப்பு அந்த வரம்பில் உள்ள நெடுவரிசைகளின் அதிகபட்ச எண்ணிக்கை ஆகும்.
வரம்பை அமைத்தபிறகு, இன்டெக்ஸ் = 1 என இருந்தால் மட்டுமே தேடல் மதிப்பு உள்ள நெடுவரிசையை VLOOKUP செயல்பாடு தேடும். இல்லாவிட்டால் வலதுபக்கம் உள்ள நெடுவரிசைகளைத் தேடும்.
உதவிக்குறிப்பு: VLOOKUP செயல்பாட்டைப் பயன்படுத்தும்போது, வரம்பின் நெடுவரிசைகள் இடமிருந்து வலம் எண்ணிடப்பட்டுள்ளதாகவும், 1ல் தொடங்குவதாகவும் கருத்தில் கொள்ளவும்.
வரிசை_நிலை
இதை நீங்கள் விரும்பினால் வழங்கலாம். இரண்டு விருப்பங்கள் உள்ளன: TRUE மற்றும் FALSE.
  • வரிசை_நிலை மதிப்பு TRUE என இருந்தால் தோராயமான பொருத்தத்தை VLOOKUP பயன்படுத்தும்.
    கவனத்திற்கு: தோராயமான பொருத்தத்தைப் பயன்படுத்துவதற்கு முன்பு தேடல் மதிப்பை ஏறுவரிசையில் வரிசைப்படுத்தவும். இல்லையெனில், எதிர்பாராத மதிப்பு முடிவாகக் கிடைக்கக்கூடும். வழங்கப்படும் மதிப்பு ஏன் தவறாக இருக்கக்கூடும் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.
  • வரிசை_நிலை மதிப்பு FALSE என இருந்தால் துல்லியமான பொருத்தத்தை VLOOKUP பயன்படுத்தும்.

  • வரிசை_நிலை குறிப்பிடப்படவில்லை எனில் TRUE என்பதே அதன் இயல்பான மதிப்பாக இருக்கும்.
இவற்றைப் பரிந்துரைக்கிறோம்:
  • வரிசை_நிலை மதிப்பாக, FALSE என்பதைப் பயன்படுத்தவும். தேடல் மதிப்பு உள்ள நெடுவரிசை, வரிசைப்படுத்தப்பட்டு இருந்தாலும் இல்லாவிட்டாலும் இந்த மதிப்பைப் பயன்படுத்தும்போது ஒரே மாதிரியான முடிவுகள் கிடைக்கும் என்பதாலேயே இதைப் பரிந்துரைக்கிறோம்.
  • இதை வழங்குவது கட்டாயமில்லை என்றாலும்கூட, தெளிவான முடிவுகள் கிடைக்க வரிசை_நிலை மதிப்பை எப்போதும் குறிப்பிடவும்.

 

முடிவுகள் விவரம்
வழங்கப்படும் மதிப்பு
இது உங்கள் உள்ளீடுகளின் அடிப்படையில் VLOOKUP வழங்கக்கூடிய மதிப்பு. ஒவ்வொரு VLOOKUP செயல்பாட்டில் இருந்தும் ஒரே ஒரு மதிப்பு மட்டுமே கிடைக்கும்.
  • ஒன்றுக்கும் மேற்பட்ட தேடல் மதிப்புகள் பொருந்தினால், வழங்கப்படும் மதிப்பு உள்ள நெடுவரிசையில் கிடைத்த முதல் பொருத்தத்துடன் தொடர்புடைய தேடல் மதிப்பு முடிவாக வழங்கப்படும்.
  • வழங்கப்படும் மதிப்பு #N/A என இருந்தால் தேடிய மதிப்பு கிடைக்கவில்லை என அர்த்தம்.
எதிர்பாராத மதிப்பு கிடைத்தாலோ #N/A அல்லது #VALUE! போன்ற பிழை ஏற்பட்டாலோ பிழையறிந்து திருத்தவும். #N/A என்பதற்குப் பதிலாக வேறொரு மதிப்பு வேண்டுமென்றால் VLOOKUP() செயல்பாட்டில் IFNA() செயல்பாட்டைப் பயன்படுத்துவது குறித்து மேலும் தெரிந்துகொள்ளுங்கள்.

VLOOKUP செயல்பாட்டுக்கான அடிப்படை உதாரணங்கள்:

வெவ்வேறு தேடல் மதிப்புகளில் VLOOKUP

ஆரஞ்சு, ஆப்பிள் ஆகியவற்றின் விலையைக் கண்டறிய VLOOKUP செயல்பாட்டைப் பயன்படுத்துதல்.

VLOOKUP on different search keys example
விளக்கம்:

VLOOKUP செயல்பாட்டைப் பயன்படுத்தும்போது "Apple", "Orange" போன்ற வெவ்வேறு தேடல் மதிப்புகளைப் பயன்படுத்தலாம்.

பிழை இல்லாத மதிப்பைப் பெற, வரம்பின் முதல் நெடுவரிசையில் இந்தத் தேடல் மதிப்புகள் இருக்க வேண்டும். தேடல் மதிப்பைக் குறிப்பிட விரும்பவில்லை எனில் கலக் குறிப்பையும் நீங்கள் பயன்படுத்தலாம். எ.கா: "G9."
தேடல்_மதிப்பு: "Orange"
=VLOOKUP("Orange", B4:D8, 3, FALSE)
வழங்கப்படும் மதிப்பு = $1.01
தேடல்_மதிப்பு: "Apple"
=VLOOKUP("Apple", B4:D8, 3, FALSE)
வழங்கப்படும் மதிப்பு = $1.50
தேடல்_மதிப்பு: G9 கலத்தில் உள்ள "Apple" என்பதற்கான கலக் குறியீடு
=VLOOKUP(G9, B4:D8, 3, FALSE)
வழங்கப்படும் மதிப்பு = $1.50

வெவ்வேறு நெடுவரிசை இன்டெக்ஸ்களில் VLOOKUP செயல்பாடு

இரண்டாவது இன்டெக்ஸ் நெடுவரிசையில் உள்ள ஆரஞ்சுகளின் எண்ணிக்கையைக் கண்டறிய VLOOKUP செயல்பாட்டைப் பயன்படுத்துதல்.
VLOOKUP on different column indexes example
விளக்கம்:
VLOOKUP செயல்பாட்டைப் பயன்படுத்தும்போது, வரம்பின் நெடுவரிசைகள் இடமிருந்து வலம் எண்ணிடப்பட்டுள்ளதாகவும், 1ல் தொடங்குவதாகவும் கருத்தில் கொள்ளவும். இலக்குத் தகவலைக் கண்டறிய அதன் நெடுவரிசை இன்டெக்ஸைக் குறிப்பிட வேண்டும். எ.கா: எண்ணிக்கையைக் கண்டறிய 2வது நெடுவரிசையைக் குறிப்பிட வேண்டும்.
இன்டெக்ஸ் = 2
வரம்பின் இரண்டாவது நெடுவரிசையில் உள்ள ஆரஞ்சுகளின் எண்ணிக்கையைக் கண்டறிதல்.
=VLOOKUP(G3, B4:D8, 2, FALSE)
வழங்கப்படும் மதிப்பு = 5

VLOOKUP துல்லியமான பொருத்தம் அல்லது தோராயமான பொருத்தம்

  • துல்லியமான IDயைக் கண்டறிய, VLOOKUP உடன் துல்லியமான பொருத்தத்தைப் பயன்படுத்தவும்.
  • தோராயமான IDயைக் கண்டறிய, VLOOKUP உடன் தோராயமான பொருத்தத்தைப் பயன்படுத்தவும்.
VLOOKUP exact match or approximate match example
விளக்கம்:
சிறந்த பொருத்தத்தை (ஆனால் துல்லியமான பொருத்தம் கிடையாது) தேட, தோராயமான பொருத்தம் அல்லது வரிசை_நிலை = TRUE என்பதைப் பயன்படுத்தவும்.
அட்டவணையில் இல்லாத ID = 102 என்பதைத் தேடும்போது, ID = 101 என்பதை முடிவாக வழங்க, தோராயமான பொருத்தம் தானாகவே மதிப்பைக் குறைக்கும். தேடல் மதிப்பு நெடுவரிசையில் உள்ள 101 என்பது நெருக்கமான மதிப்பாக இருப்பதுடன் 102 என்பதைவிடக் குறைவானது என்பதே இதற்குக் காரணம்.
தோராயமான பொருத்தம், உங்கள் தேடல் மதிப்பைவிடப் பெரிய மதிப்பைக் கண்டறியும் வரை தேடல் மதிப்பு நெடுவரிசையில் தேடும். பெரிய மதிப்பிற்கு முந்தைய வரிசையில் தேடலை நிறுத்தி, அந்த வரிசைக்கான வழங்கப்படும் மதிப்பு நெடுவரிசையில் உள்ள மதிப்பை வழங்கும். அதாவது உங்கள் தேடல் மதிப்பு நெடுவரிசை, ஏறுவரிசையில் வரிசைப்படுத்தப்படவில்லை எனில் உங்களுக்குத் தவறான மதிப்பு கிடைக்க அதிக வாய்ப்புள்ளது.
கவனத்திற்கு: தோராயமான பொருத்தத்தைப் பயன்படுத்துவதற்கு முன்பு, சரியான மதிப்பைப் பெற தேடல் மதிப்பை ஏறுவரிசையில் வரிசைப்படுத்தவும். இல்லையெனில், எதிர்பாராத மதிப்பு முடிவாகக் கிடைக்கக்கூடும்.
வரிசை_நிலை = FALSE போன்ற துல்லியமான பொருத்தத்தைத் தேடும்போது அது துல்லியமான பொருத்தத்தை வழங்கும். உதாரணமாக, ID = 103 என்பதற்கான பழத்தின் பெயர் "Banana". இதற்குத் துல்லியமான பொருத்தம் இல்லையெனில் #N/A பிழை ஏற்படும். துல்லியமான பொருத்தத்தைப் பயன்படுத்தும்போது கணிக்கக்கூடிய முடிவுகள் கிடைக்கும் என்பதாலேயே இதைப் பரிந்துரைக்கிறோம்.
துல்லியமான பொருத்தம்
=VLOOKUP(G6, A4:D8, 2, FALSE)
வழங்கப்படும் மதிப்பு = "Apple"
தோராயமான பொருத்தம்
=VLOOKUP(G3, A4:D8, 2, TRUE)
அல்லது
=VLOOKUP(G3, A4:D8, 2)
வழங்கப்படும் மதிப்பு = "Banana"

பொதுவான VLOOKUP பயன்பாடுகள்

VLOOKUP செயல்பாட்டில் பிழை மதிப்பை மாற்றுதல்

உங்கள் தேடல் மதிப்பு கிடைக்காதபோது VLOOKUP வழங்கிய பிழை மதிப்பை நீங்கள் மாற்றலாம். இந்தச் சூழலில், #N/A வேண்டாம் என விரும்பினால் #N/A என்பதை மாற்ற IFNA() செயல்பாடுகளைப் பயன்படுத்தலாம். IFNA() குறித்து மேலும் அறிக.
Replace error value from VLOOKUP example
“Fruit” நெடுவரிசையில் “Pencil” எனும் தேடல் மதிப்பு இல்லாததால் VLOOKUP செயல்பாடு #N/A என்பதை வழங்குகிறது.
செயல்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ள இரண்டாவது உள்ளீட்டை வழங்குவதன் மூலம் #N/A பிழையை IFNA() செயல்பாடு மாற்றுகிறது. இந்த உதாரணத்தில் அது “கிடைக்கவில்லை” என்பதாகும்.
=IFNA(VLOOKUP(G3, B4:D8, 3, FALSE),"கிடைக்கவில்லை")
வழங்கப்படும் மதிப்பு = “கிடைக்கவில்லை”

உதவிக்குறிப்பு: #REF! போன்ற பிற பிழைகளை மாற்ற விரும்பினால் IFERROR() செயல்பாடு குறித்து மேலும் தெரிந்துகொள்ளுங்கள்.

பல நிபந்தனைகளுடன் VLOOKUP செயல்பாடு

ஒன்றுக்கும் மேற்பட்ட நிபந்தனைகள் இருந்தால் VLOOKUP செயல்பாட்டை நேரடியாகப் பயன்படுத்த முடியாது. அதற்குப் பதிலாக, ஏற்கெனவே உள்ள பல்வேறு நெடுவரிசைகளை ஒன்றிணைத்து ஒரு புதிய உதவி நெடுவரிசையை உருவாக்கி அதன் மூலம் ஒன்றுக்கும் மேற்பட்ட நிபந்தனைகளில் VLOOKUP செயல்பாட்டை நேரடியாகப் பயன்படுத்தலாம்.
VLOOKUP with multiple criteria example
1. முதல் பெயரையும் பெயரின் பிற்பகுதியையும் ஒன்றிணைக்க "&" என்பதைப் பயன்படுத்தி உதவி நெடுவரிசையை நீங்கள் உருவாக்கலாம். =C4&D4 என டைப் செய்து, அதை B4 முதல் B8 வரை இழுத்தால் உதவி நெடுவரிசை கிடைக்கும்.
2. B7 கலக் குறிப்பில் உள்ள JohnLee என்பதை தேடல் மதிப்பாகப் பயன்படுத்தவும்.
=VLOOKUP(B7, B4:E8, 4, FALSE)
வழங்கப்படும் மதிப்பு = "Support"

வைல்டுகார்டு அல்லது பகுதிப் பொருத்தங்களுடன் VLOOKUP செயல்பாடு

வைல்டுகார்டுகள், பகுதிப் பொருத்தங்கள் போன்றவற்றைக்கூட VLOOKUP செயல்பாட்டில் பயன்படுத்தலாம். இந்த வைல்டுகார்டு எழுத்துகளைப் பயன்படுத்தலாம்:
  • அனைத்து ஒற்றை எழுத்துகளுக்கும் கேள்விக்குறி ("?") பொருந்தும்.
  • அனைத்து எழுத்துத் தொடர்களுக்கும் நட்சத்திரக்குறி ("*") பொருந்தும்.
VLOOKUP செயல்பாட்டில் வைல்டுகார்டுகளைப் பயன்படுத்த, துல்லியமான பொருத்தத்தைப் பயன்படுத்த வேண்டும்: "வரிசை_நிலை = FALSE".
VLOOKUP with wildcard example
"St*" என்பது "St" எனத் தொடங்கும் எல்லாவற்றுடனும் பொருந்தும். எழுத்துகளின் எண்ணிக்கை கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது. உதாரணம்: "Steve", "St1", "Stock", "Steeeeeeve" போன்றவை.
=VLOOKUP("St*", B4:D8, 3, FALSE)
வழங்கப்படும் மதிப்பு = "Marketing"

பிழையறிந்து திருத்துதலும் சிறந்த நடைமுறைகளும்:

வழங்கப்படும் மதிப்பு தவறானது
  • எதிர்பாராத மதிப்பை வழங்கியுள்ளது: வரிசை_நிலை என்பதை TRUE என அமைத்த பின்னரும், வரம்பின் முதல் நெடுவரிசையை எண் அல்லது எழுத்து அடிப்படையில் வரிசைப்படுத்தவில்லை எனில் வரிசை_நிலை என்பதை FALSE என மாற்றவும்.

  • VLOOKUP செயல்பாடு முதல் பொருத்தத்தை வழங்கியுள்ளது: VLOOKUP செயல்பாடு முதல் பொருத்தத்தை மட்டுமே வழங்கும். ஒன்றுக்கும் மேற்பட்ட தேடல் மதிப்புகள் பொருந்தும்போது, வழங்கப்படும் மதிப்பு எதிர்பார்த்த மதிப்பாக இல்லாமல் இருக்கலாம்.
  • ஒழுங்கற்ற தரவு: சில சமயங்களில், தொடக்கத்திலோ முடிவிலோ காலி இடங்கள் உள்ள மதிப்புகள் ஒன்று போல் தெரிந்தாலும் VLOOKUP செயல்பாடு அவற்றை வெவ்வேறாகவே கையாளும். உதாரணமாக, VLOOKUP செயல்பாட்டிற்கு இவை வெவ்வேறானவை:
    • " Apple"
    • "Apple "
    • "Apple"
நீங்கள் எதிர்பார்க்கும் முடிவுகளைப் பெற, VLOOKUP செயல்பாட்டைப் பயன்படுத்துவதற்கு முன்பு காலி இடங்களை அகற்றவும்.
#N/A
  • தோராயமான பொருத்தம் அல்லது வரிசை_நிலை = TRUE என்பதைப் பயன்படுத்தும்போது, முதல் நெடுவரிசையில் உள்ள மிகச் சிறிய மதிப்பைவிடவும் VLOOKUP செயல்பாட்டில் உள்ள தேடல் மதிப்பு சிறியதாக இருந்தால் #N/A என்பதை VLOOKUP வழங்கும்.
  • துல்லியமான பொருத்தம் அல்லது வரிசை_நிலை = FALSE என்பதைப் பயன்படுத்தும்போது, VLOOKUP செயல்பாட்டில் உள்ள தேடல் மதிப்பின் துல்லியமான பொருத்தம் முதல் நெடுவரிசையில் கிடைக்காது. முதல் நெடுவரிசையில் தேடல் மதிப்பு கிடைக்காதபோது #N/A மதிப்பை நீங்கள் பெற விரும்பவில்லை எனில் IFNA() செயல்பாட்டைப் பயன்படுத்தலாம்.
#REF!
வரம்பில் உள்ள நெடுவரிசைகளின் அதிகபட்ச எண்ணிக்கையைவிட அதிக மதிப்புள்ள வரம்பை நீங்கள் தவறுதலாகக் குறிப்பிடக்கூடும். இதைத் தவிர்க்க:
  • தேர்ந்தெடுத்த வரம்பில் இருக்கும் நெடுவரிசைகளை மட்டும் எண்ணிக்கைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும், மொத்த அட்டவணையில் உள்ளவற்றை அல்ல.
  • 0 என்பதற்குப் பதில் 1ல் இருந்து எண்ணிக்கையைத் தொடங்கவும்.
#VALUE!
#VALUE! பிழை ஏற்பட இவை காரணமாக இருக்கலாம்:
  • சுட்டெண் மதிப்பாக, வார்த்தையோ நெடுவரிசையின் பெயரோ தவறுதலாக டைப் செய்யப்பட்டுள்ளது.
  • சுட்டெண் மதிப்பாக 1ஐ விடச் சிறிய எண் உள்ளிடப்பட்டுள்ளது. சுட்டெண் மதிப்பு குறைந்தபட்சம் 1க்குச் சமமாகவும் வரம்பில் உள்ள நெடுவரிசைகளின் அதிகபட்ச எண்ணிக்கையைவிட சிறியதாகவும் இருக்க வேண்டும். சுட்டெண் = 1 என இருந்தால் மட்டுமே தேடல் மதிப்பு உள்ள நெடுவரிசையை VLOOKUP செயல்பாடு தேடும். இல்லாவிட்டால் வலதுபக்கம் உள்ள நெடுவரிசைகளைத் தேடும்.

கவனத்திற்கு: சுட்டெண் மதிப்பாக எண்களை மட்டுமே உள்ளிடலாம்.

#NAME?
  • தேடல்_மதிப்பு, வார்த்தைத் தரவாக இருக்கும்போது தேடல் மதிப்பில் மேற்கோள் குறியை நீங்கள் சேர்க்காமல் விட்டிருக்கலாம்.
சிறந்த நடைமுறைகள்

 

செய்ய வேண்டியவை காரணம்
வரம்பிற்கு மிகச் சரியான குறிப்புகளைப் பயன்படுத்துதல்
இவற்றைப் பயன்படுத்த வேண்டும்:
  • VLOOKUP வரம்பிற்கு மிகச் சரியான குறிப்புகள்
  • VLOOKUP(G3, $B$3:$D$7, 3, FALSE)
இவற்றைப் பயன்படுத்தக் கூடாது:
  • VLOOKUP(G3, B3:D7, 3, FALSE)
வரம்பை நகலெடுக்கும்போதோ இழுக்கும்போதோ அதில் கணிக்க முடியாத மாற்றங்கள் ஏற்படுவதை இது தடுக்கிறது.
வரிசை_நிலை = TRUE என்பது போன்ற தோராயமான பொருத்தத்தைப் பயன்படுத்தும்போது முதல் நெடுவரிசையை ஏறுவரிசையில் வரிசைப்படுத்துதல். தோராயமான மதிப்பு அல்லது வரிசை_நிலை = TRUE என்பதைப் பயன்படுத்தினால் முதல் நெடுவரிசையை ஏறுவரிசையில் வரிசைப்படுத்த வேண்டும். இல்லையெனில், வழங்கப்படும் மதிப்பு தவறாக இருக்க அதிக வாய்ப்புள்ளது. வரிசைப்படுத்துவது எப்படி என்பது குறித்து மேலும் அறிக.
VLOOKUP செயல்பாட்டைப் பயன்படுத்தும் முன் உங்கள் தரவை ஒழுங்குபடுத்துதல்
VLOOKUP செயல்பாட்டைப் பயன்படுத்தும் முன் உங்கள் தரவை ஒழுங்குபடுத்துவதை நினைவில்கொள்ளவும். கணிக்க முடியாத மதிப்பை VLOOKUP செயல்பாடு வழங்க ஒழுங்கற்ற தரவு காரணமாகலாம். ஒழுங்கற்ற தரவால் ஏற்படும் சில பொதுவான விளைவுகள்:
  • தொடக்கத்தில் உள்ள காலி இடங்கள்: " apple"
  • முடிவில் உள்ள காலி இடங்கள்: "apple "
  • வெற்றிடங்கள் அல்லது காலி இடங்கள்: "" என்பதும் " " என்பதும் ஒன்றல்ல
தொடக்கத்திலும் முடிவிலும் உள்ள காலி இடங்களை அகற்ற, தரவு அதன் பிறகு தரவை அழி அதன் பிறகு இடைவெளியை நீக்கு என்பதைப் பயன்படுத்தலாம்.
எண், தேதி போன்ற மதிப்புகளை வார்த்தையாகச் சேமிக்க வேண்டாம்
தேடல் மதிப்பு நெடுவரிசை போன்ற, உங்கள் VLOOKUP வரம்பின் முதல் நெடுவரிசையில் உள்ள தேதி, எண்கள் போன்றவை வார்த்தை மதிப்புகளாகச் சேமிக்கப்படவில்லை என்பதை உறுதிசெய்துகொள்ளவும். அப்படிச் சேமித்தால் எதிர்பாராத மதிப்பு வழங்கப்படலாம்.
  1. Sheetsஸின் மேற்பகுதியில் உள்ள உங்கள் தேடல் மதிப்பு நெடுவரிசையைத் தேர்ந்தெடுக்கவும்.
  2. வடிவமைப்பு மெனு அதன் பிறகு எண் என்பதைத் தட்டவும்.
  3. உங்களுக்கு விருப்பமான தரவு வகையின் அடிப்படையில் விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்:
    • தேதி
    • எண்
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
16040249039264238007
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
35
false
false