செருகு நிரல்களையும் ஆப்ஸ் ஸ்கிரிப்ட்டையும் பயன்படுத்துதல்


               

உங்கள் பிசினஸிற்கு மேம்பட்ட Google Workspace அம்சங்கள் தேவையா?

இன்றே Google Workspaceஸைப் பயன்படுத்திப் பாருங்கள்!

 

 

முக்கியம்: வலை உலாவியில் மூன்றாம் தரப்புக் குக்கீகளை அனுமதிக்கவில்லை என்றால் சில செருகு நிரல்கள் சரியாகச் செயல்படாமல் போகக்கூடும். மூன்றாம் தரப்புக் குக்கீகளைத் தற்காலிகமாக அனுமதிப்பது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

செருகு நிரல்களை நிறுவுதலும் பயன்படுத்துதலும் (ஆங்கிலத்தில் மட்டும்)

செருகு நிரல்களைப் பயன்படுத்தி Google Docs, Sheets, Slides, Forms ஆகியவற்றில் மேலும் பலவற்றைச் செய்யலாம். கிடைக்கக்கூடியவற்றைக் கண்டறிய Docs, Sheets, Slides மற்றும் Forms செருகு நிரல் ஸ்டோர்களுக்குச் செல்லவும்.

முக்கியம்: Google Editor செருகு நிரல்கள் Web Storeரில் இருந்து Google Workspace Marketplaceஸிற்கு நகர்த்தப்படுகின்றன. இவற்றைக் கவனத்தில் கொள்ளவும்:

செருகு நிரலை நிறுவுதல்

Google Docs, Sheets, Slides

  1. கம்ப்யூட்டரில் ஆவணம், விரிதாள் அல்லது விளக்கக்காட்சியைத் திறக்கவும்.
  2. நீட்டிப்புகள் அதன் பிறகு செருகு நிரல்கள் அதன் பிறகு செருகு நிரல்களைப் பெறு என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. சுருக்கமான விளக்கத்தைக் கண்டறிய, செருகு நிரலின் மீது கர்சரை வைக்கவும். முழுமையான விளக்கத்தைப் பார்க்க, செருகு நிரலைக் கிளிக் செய்யவும்.
  4. செருகு நிரலை நிறுவ, நிறுவு அதன் பிறகு தொடர்க என்பதைக் கிளிக் செய்யவும்.
  5. பெரும்பாலான செருகு நிரல்களுக்கு, செருகு நிரல் செயல்படத் தேவையான தரவிற்கான அணுகலைக் கேட்கும் மெசேஜ் காட்டப்படும். செய்தியைப் படித்து, அனுமதி என்பதைக் கிளிக் செய்யவும்.
  6. செருகு நிரலை நிறுவியபிறகு முடிந்தது என்பதைக் கிளிக் செய்யவும்.

உதவிக்குறிப்பு: "செருகு நிரல்கள்" காட்டப்படவில்லை என்றால் நீங்கள் Microsoft Office எடிட்டிங் அம்சத்தைப் பயன்படுத்திக் கொண்டிருக்கலாம். செருகு நிரலைப் பயன்படுத்த உங்கள் ஃபைலை Google Docs, Sheets, Slides ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றுக்கு மாற்றவும். Microsoft Office எடிட்டிங் பற்றியும் Microsoft Office ஃபைல்களை மாற்றுவது எப்படி என்பது பற்றியும் தெரிந்துகொள்ளுங்கள்.

Google Forms

  1. கம்ப்யூட்டரில் ஒரு படிவத்தைத் திறக்கவும்.
  2. மேல் வலதுபுறத்தில் உள்ள மூன்று புள்ளி மெனுவை மேலும் கிளிக் செய்யவும்.
  3. செருகு நிரல்கள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. முழுமையான விளக்கத்தைப் பார்க்க, செருகு நிரலைக் கிளிக் செய்யவும்.
  5. செருகு நிரலை நிறுவ, நிறுவு அதன் பிறகு தொடர்க என்பதைக் கிளிக் செய்யவும்.
  6. பெரும்பாலான செருகு நிரல்களுக்கு, செருகு நிரல் செயல்படத் தேவையான தரவிற்கான அணுகலைக் கேட்கும் மெசேஜ் காட்டப்படும். செய்தியைப் படித்து, அனுமதி என்பதைக் கிளிக் செய்யவும்.
  7. செருகு நிரலை நிறுவியபிறகு முடிந்தது என்பதைக் கிளிக் செய்யவும்.

உதவிக்குறிப்பு: நிறுவிய செருகு நிரல்கள் அனைத்தையும் கண்டறிய மேலே உள்ள செருகு நிரல்கள் ஐகானை Forms add-on கிளிக் செய்யவும்.

செருகு நிரல்களை இயக்குதல் மற்றும் முடக்குதல்

எப்போது வேண்டுமானாலும் செருகு நிரல்களை இயக்கலாம் அல்லது முடக்கலாம். உங்கள் ஃபைல்கள் அனைத்திலும் இருந்து செருகு நிரலை அகற்ற, அதை நிறுவல் நீக்கவும்.

Google Docs, Sheets, Slides

  1. கம்ப்யூட்டரில் ஆவணம், விரிதாள் அல்லது விளக்கக்காட்சியைத் திறக்கவும்.
  2. நீட்டிப்புகள் அதன் பிறகு செருகு நிரல்கள் அதன் பிறகு செருகு நிரல்களை நிர்வகி என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. செருகு நிரலை இயக்க அல்லது முடக்க, செருகு நிரலுக்கு அடுத்துள்ள மூன்று புள்ளி மெனுவை மேலும் கிளிக் செய்து அதன் பிறகு இந்த ஆவணத்தில் பயன்படுத்து என்பதைக் கிளிக் செய்யவும்.

Google Forms

  1. படிவத்தைத் திறக்கவும்.
  2. மேல் வலதுபுறத்தில் உள்ள மூன்று புள்ளி மெனுவை மேலும் கிளிக் செய்யவும்.
  3. செருகு நிரல்கள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. மேல் வலதுபுறத்தில் உள்ள அமைப்புகள் ஐகானை கிளிக் செய்து அதன் பிறகு ஆப்ஸை நிர்வகியுங்கள் என்பதைக் கிளிக் செய்யவும்.

  5. செருகு நிரலை இயக்க அல்லது முடக்க, செருகு நிரலுக்கு அடுத்துள்ள மூன்று புள்ளி மெனுவை மேலும் கிளிக் செய்து அதன் பிறகு இந்த ஆவணத்தில் பயன்படுத்து என்பதைக் கிளிக் செய்யவும்.

செருகு நிரலை நிறுவல் நீக்குதல்

Google Docs, Sheets, Slides

  1. கம்ப்யூட்டரில் ஆவணம், விரிதாள் அல்லது விளக்கக்காட்சியைத் திறக்கவும்.
  2. நீட்டிப்புகள் அதன் பிறகு செருகு நிரல்கள் அதன் பிறகு செருகு நிரல்களை நிர்வகி என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. செருகு நிரலுக்கு அடுத்துள்ள மூன்று புள்ளி மெனுவை மேலும் கிளிக் செய்து அதன் பிறகு நிறுவல் நீக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.

செருகு நிரல் குறித்த சிக்கலைப் புகாரளிக்க சிக்கலைப் புகாரளி என்பதைக் கிளிக் செய்யவும்.

Google Forms

  1. படிவத்தைத் திறக்கவும்.
  2. மேல் வலதுபுறத்திலுள்ள மூன்று புள்ளி ஐகானை மேலும் கிளிக் செய்யவும்.
  3. செருகு நிரல்கள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. மேல் வலதுபுறத்தில் உள்ள அமைப்புகள் ஐகானை கிளிக் செய்து அதன் பிறகு ஆப்ஸை நிர்வகியுங்கள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  5. செருகு நிரலுக்கு அடுத்துள்ள மூன்று புள்ளி மெனுவை மேலும் கிளிக் செய்து அதன் பிறகு நிறுவல் நீக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.

Google Docs, Sheets, Slides, Forms ஆகியவற்றில் ஆப்ஸ் ஸ்கிரிப்ட்டைப் பயன்படுத்துதல்

Google ஆப்ஸ் ஸ்க்ரிப்ட் மூலம் Google Docs, Sheets, Slides, Forms ஆகியவற்றுக்குப் பிரத்தியேக மெனுக்கள், உரையாடல்கள், பக்கப்பட்டிகள் ஆகியவற்றைச் சேர்க்கலாம். தொடங்க, Google ஆப்ஸ் ஸ்க்ரிப்ட்டுக்குச் செல்லவும்.

AppSheetடைப் பயன்படுத்தி இணைய மற்றும் மொபைல் ஆப்ஸை உருவாக்குதல்

Google Sheets, Excel, Cloud SQL, Salesforce போன்ற தரவு மூலங்களில் இருந்து மொபைல் மற்றும் இணைய ஆப்ஸை உருவாக்க AppSheetடைப் பயன்படுத்தலாம். AppSheet என்பது கோடிங் இல்லாத ஒரு டெவெலப்மெண்ட் பிளாட்ஃபார்ம், அதனால் கோடிங்கில் அனுபவம் தேவையில்லை. App Sheetடைப் பயன்படுத்துவது குறித்து மேலும் தெரிந்துகொள்ளுங்கள்.

true
Visit the Learning Center

Using Google products, like Google Docs, at work or school? Try powerful tips, tutorials, and templates. Learn to work on Office files without installing Office, create dynamic project plans and team calendars, auto-organize your inbox, and more.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
7660297088123679224
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
35
false
false