Google Driveவில் கோப்புகளை நீக்குதல் அல்லது மீட்டெடுத்தல்

உங்கள் Google Drive கோப்புகளை நீக்க, அவற்றை ’நீக்கியவை’க்கு நகர்த்தவும். ’நீக்கியவை’யில் உள்ள கோப்புகள் 30 நாட்களுக்குப் பிறகு தானாக நீக்கப்படும். ’நீக்கியவை’யிலிருந்து 30 நாட்களுக்குள் அந்தக் கோப்புகளை மீட்டெடுக்கலாம். ’நீக்கியவை’யைக் காலியாக்க, அவற்றை நிரந்தரமாகவும் நீக்கலாம். ஒரே நேரத்தில் பல கோப்புகள்/கோப்புறைகளை நீக்கினாலோ மீட்டெடுத்தாலோ நிரந்தரமாக நீக்கினாலோ மாற்றங்களைப் பார்ப்பதற்குச் சிறிது நேரம் ஆகலாம். 

கோப்பை நீக்கியவைக்கு நகர்த்துதல்

Driveவிலிருந்து கோப்பினை அகற்ற, அதை ’நீக்கியவை’க்கு நகர்த்தவும். கோப்பு 30 நாட்களுக்கு ’நீக்கியவை’யில் இருக்கும், பிறகு தானாக நீக்கப்படும். கோப்பினை ’நீக்கியவை’க்கு நகர்த்தும்போது:

  • நீங்கள் கோப்பின் உரிமையாளராக இருப்பின் அதை யாருடன் பகிர்ந்துள்ளீர்களோ அவர்களால் நகலெடுக்க முடியும். கோப்பை நிரந்தரமாக நீக்குவது எவ்வாறு என்பதை அறிக.
  • நீங்கள் கோப்பின் உரிமையாளர் இல்லையெனில் உங்கள் Driveவிலிருந்து கோப்பை அகற்றினால் அது உங்களுக்கு மட்டுமே அகற்றப்படும்.
இணையத்தில்
  1. கம்ப்யூட்டரில் drive.google.comமிற்குச் செல்லவும்.
  2. கோப்பைக் கிளிக் செய்யவும்.
  3. அகற்று அகற்றுவதற்கான ஐகான் என்பதைக் கிளிக் செய்யவும்.
Mac & Windowsஸுக்கான காப்புப்பிரதி & ஒத்திசைவு

கோப்புகளை ஒத்திசைக்கும்போது:

  • Google Driveவிற்கும் உங்கள் கம்ப்யூட்டருக்கும் இடையே எந்தவொரு இடத்தில் கோப்பை நீக்கினாலும் அது எல்லா இடங்களிலும் நீக்கப்படும்.
  • உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள கோப்புறைகளில் கோப்புகள் எவ்வாறு நீக்கப்பட வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுக்க முடியும்.

காப்புப்பிரதி & ஒத்திசைவின் மூலம் கோப்புகள் எவ்வாறு நீக்கப்பட வேண்டும் என்பதை மாற்றுவதற்கு அமைப்புகளை எவ்வாறு மாற்றுவது என்பதை அறிக.

கோப்புகளை நீக்கியவைக்கு நகர்த்துதல்

  1. கம்ப்யூட்டரில் நீக்க விரும்பும் கோப்பைக் கண்டறியவும்.
  2. கம்ப்யூட்டரில் கோப்பை இழுத்து நீக்கியவைக்கு நகர்த்தவும்.
  3. கோப்பு எல்லா இடங்களிலும் நீக்கப்படும். எல்லா இடங்களிலும் கோப்பு நீக்கப்படுவதற்கு சிறிது நேரம் ஆகக்கூடும்.

Drive நேரடி ஒத்திசைவு

Drive நேரடி ஒத்திசைவைப் பயன்படுத்துவதற்கு பணி அல்லது பள்ளி மூலமாக Google கணக்கில் உள்நுழைய வேண்டும். தற்போது நீங்கள் Google கணக்கில் உள்நுழையவில்லை. உங்கள் Google கணக்கில் உள்நுழைய இங்கே கிளிக் செய்க.

நீக்கியவையைக் காலியாக்குதல்

தனிப்பட்ட கோப்பை மட்டும் நிரந்தரமாக நீக்கலாம் அல்லது நீக்கியவையை முழுவதுமாகக் காலியாக்கலாம்.

  • கோப்பை நிரந்தரமாக நீக்கிய பிறகு அதை யாருடன் பகிர்ந்தீர்களோ அவர் அதற்கான அணுகலை இழப்பார்.
  • மற்றவர்களும் கோப்பைப் பார்க்க வேண்டுமென விரும்பினால் அதற்கான உரிமையை பிறருக்குப் பகிர முடியும்.

இணையத்தில்

நீக்கியவையை ஒட்டுமொத்தமாகக் காலியாக்குதல்

  1. கம்ப்யூட்டரில் drive.google.comமிற்குச் செல்லவும்.
  2. இடதுபுறத்தில் நீக்கியவை என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. நீங்கள் வைத்திருக்க விரும்பும் கோப்புகள் எதுவும் அதில் இல்லை என்பதை உறுதிசெய்து கொள்ளவும்.
  4. மேல் வலதுபுறத்தில் நீக்கியவையைக் காலியாக்கு என்பதைக் கிளிக் செய்யவும். 

உதவிக்குறிப்பு: "நீக்கியவையைக் காலியாக்கு" என்பது இல்லாவிட்டால் மேலே 'நீக்கியவை' என்பதற்கு அடுத்துள்ள கீழ்நோக்கிய அம்புக்குறி கீழே அதன் பிறகு நீக்கியவையைக் காலியாக்கு என்பதைக் கிளிக் செய்யவும். 

தனிப்பட்ட கோப்பினை நிரந்தரமாக நீக்குதல்

  1. கம்ப்யூட்டரில் drive.google.comமிற்குச் செல்லவும்.
  2. இடதுபுறத்தில் நீக்கியவை என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. கோப்பைக் கிளிக் செய்யவும்.
  4. மேலே ’நிரந்தரமாக நீக்கு’ அகற்றுவதற்கான ஐகான் என்பதைக் கிளிக் செய்யவும்.
Mac & Windowsஸுக்கான காப்புப்பிரதி & ஒத்திசைவு

Google Driveவிற்கும் உங்கள் கம்ப்யூட்டருக்கும் இடையே கோப்புகளை ஒத்திசைப்பதற்காகக் காப்புப்பிரதி & ஒத்திசைவைப் பயன்படுத்தும்போது கோப்புகளை ஒரு இடத்தில் நீக்கினால் அவை எல்லா இடங்களிலும் நீக்கப்படுமா என்பதை நீங்கள் தேர்வு செய்ய முடியும்.

நீக்கியவையைக் காலியாக்குதல்

கோப்புகளை நிரந்தரமாக நீக்க உங்கள் கம்ப்யூட்டரில் நீக்கியவையைக் காலியாக்கவும்.

Drive நேரடி ஒத்திசைவு

Drive நேரடி ஒத்திசைவைப் பயன்படுத்துவதற்கு பணி அல்லது பள்ளி மூலமாக Google கணக்கில் உள்நுழைய வேண்டும். தற்போது நீங்கள் Google கணக்கில் உள்நுழையவில்லை. உங்கள் Google கணக்கில் உள்நுழைய இங்கே கிளிக் செய்க.

நீக்கியவையிலிருந்து கோப்பை மீட்டெடுத்தல்

நீங்கள் வைத்திருக்க விரும்பும் கோப்பு நீக்கியவையில் இருப்பின் அதை மீண்டும் "My Drive"வில் சேர்க்கவும். நீங்கள் கோப்பின் உரிமையாளராக இல்லாமலிருந்து அதைப் பயன்படுத்த விரும்பினால்:

  • கோப்பை நகலெடுக்கவும்.
  • உரிமையாளரைத் தொடர்புகொண்டு அதை மீட்டெடுக்குமாறு கூறவும்.
இணையத்தில்
  1. கம்ப்யூட்டரில் drive.google.comமிற்குச் செல்லவும்.
  2. இடதுபுறத்தில் நீக்கியவை என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. மீட்டெடுக்க விரும்பும் கோப்பைக் கிளிக் செய்யவும்.
  4. மேலே 'மீட்டெடு' Restore from trash என்பதைக் கிளிக் செய்யவும்.
    • உதவிக்குறிப்பு: முன்பு/சமீபத்தில் நீக்கப்பட்ட கோப்புகள் எவை எனக் கண்டறிய, கோப்புகளை ’நீக்கியவை’க்கு நகர்த்திய தேதியின்படி வரிசைப்படுத்தலாம். 
Mac & Windowsஸுக்கான காப்புப்பிரதி & ஒத்திசைவு
  1. கம்ப்யூட்டரில் நீக்கியவையைத் திறக்கவும்.
  2. நீக்கியவையிலிருந்து கோப்பை இழுத்து டெஸ்க்டாப்பிலோ வேறொரு கோப்புறையிலோ சேமிக்கவும்.

Driveவுடன் ஒத்திசைப்பதற்காக நீங்கள் தேர்ந்தெடுத்த கோப்புறையில் Driveவுடன் ஒத்திசைக்க வேண்டிய கோப்பைச் சேர்க்கவும். உங்கள் கம்ப்யூட்டரில் Google Driveவுடன் எந்தெந்தக் கோப்புறைகள் ஒத்திசைக்கப்படுகின்றன என்பது குறித்து மேலும் அறிக.

Drive நேரடி ஒத்திசைவு

Drive நேரடி ஒத்திசைவைப் பயன்படுத்துவதற்கு பணி அல்லது பள்ளி மூலமாக Google கணக்கில் உள்நுழைய வேண்டும். தற்போது நீங்கள் Google கணக்கில் உள்நுழையவில்லை. உங்கள் Google கணக்கில் உள்நுழைய இங்கே கிளிக் செய்க.

நீங்கள் கோப்பின் உரிமையாளர் இல்லையெனில் உரிமையாளரைத் தொடர்புகொண்டு அதை மீட்டெடுக்குமாறு கூறவும்.

உதவிக்குறிப்பு: கோப்பில் முக்கியமான தகவல் இருந்தால் அதை நகலெடுத்துக்கொள்ள முடியும். கோப்பைத் திறந்து கோப்பு அதன் பிறகு நகலெடு என்பதைக் கிளிக் செய்யவும்.

நீக்கிய கோப்பை மீட்டெடுக்க முடியவில்லை என்றால்

கோப்பை நீக்கியிருந்து அதை மீண்டும் பெற வேண்டியிருந்தால் Drive வல்லுநரைத் தொடர்பு கொள்ளவும். கோப்பைக் கண்டறிவதற்கு அழைப்பின் மூலமாகவோ அரட்டையின் மூலமாகவோ எங்களைத் தொடர்பு கொள்ளவும்.

நீங்கள் நீக்கிய கோப்புகளை மீட்டெடுத்தல்

Google Drive அல்லது Google Drive டெஸ்க்டாப் ஆப்ஸைப் பயன்படுத்தி சமீபத்தில் ஏதேனும் கோப்பினை நீக்கியிருந்தால் நீங்களே அதை மீட்டெடுக்கலாம்.

நீக்கியவற்றிலிருந்து மீட்டெடுத்தல்

  1. கம்ப்யூட்டரில் drive.google.com/drive/trash தளத்திற்குச் செல்லவும்.
    • உதவிக்குறிப்பு: நீக்கிய தேதியின்படி கோப்புகளை வரிசைப்படுத்துவதன் மூலம் முன்பு/சமீபத்தில் நீக்கிய கோப்புகளைக் கண்டறியலாம்.
  2. மீட்டெடுக்க விரும்பும் கோப்பினை வலது கிளிக் செய்யவும்.
  3. மீட்டெடு என்பதைக் கிளிக் செய்யவும்.
நீங்கள் நீக்கவில்லை எனக் கருதும் கோப்பினைக் கண்டறிதல்

இந்தப் படிகளைப் பின்பற்றுங்கள்

செயல்பாட்டு பேனலில் பார்க்கவும்

  1. கம்ப்யூட்டரில் drive.google.com தளத்திற்குச் செல்லவும்.
  2. இடதுபுறத்தில் உள்ள எனது இயக்ககம் என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. மேல் வலதுபுறத்தில் தகவல் தகவல் ஐகானைக் கிளிக் செய்யவும்.
  4. கீழே ஸ்க்ரோல் செய்து உங்கள் கோப்பைத் தேடவும்.

மேம்பட்ட தேடலைப் பயன்படுத்துதல்

  1. கம்ப்யூட்டரில் drive.google.com தளத்திற்குச் செல்லவும்.
  2. மேலே தேடல் பட்டியில் உள்ள கீழ்நோக்கிய அம்புக்குறியை கீழ்நோக்கிய அம்புக்குறி கிளிக் செய்யவும்.
  3. உங்கள் கோப்பினைக் கண்டறிய மேம்பட்ட தேடல் விருப்பங்களைப் பயன்படுத்தவும். எடுத்துக்காட்டாக, விரிதாள்களைப் பார்க்க 'வகை' என்பதற்கு அடுத்துள்ள கீழ்நோக்கிய அம்புக்குறியைக் கிளிக் செய்து 'விரிதாள்கள்' என்பதைக் கிளிக் செய்யவும்.

கோப்புகள் கிடைக்காமல் போவதற்கான காரணத்தை அறிந்துகொள்ளுதல்

நீங்கள் கோப்பை உருவாக்கியிருந்தால்

Driveவில் நீங்கள் உருவாக்கிய கோப்பினைக் கண்டறிய முடியவில்லை எனில் அதனுடைய கோப்புறையைக் கோப்பு இழந்திருக்கக்கூடும். இருப்பினும் கோப்பு Driveவிலேயே இருக்கும். ஆனால் அதைக் கண்டறிவது கடினமாக இருக்கும்.

கோப்புகள் அவற்றின் கோப்புறையை எப்படி இழக்கின்றன?

  • கோப்பினை வேறொருவரின் கோப்புறையில் உருவாக்குகிறீர்கள். அவர் அந்தக் கோப்புறையை நீக்குகிறார். கோப்பு நீக்கப்படவில்லை. அது தானாக 'எனது இயக்ககத்திற்கு' நகர்த்தப்படும்.
    முக்கியம்: உங்கள் கோப்புகளை நீங்கள் மட்டுமே நீக்க முடியும்.
  • வேறொருவருடன் கோப்புறையைப் பகிர்கிறீர்கள், அவர் அதில் இருந்து உங்கள் கோப்பினை அகற்றுகிறார். கோப்பு நீக்கப்படாது, அது தானாக 'எனது இயக்ககத்திற்கு' நகர்த்தப்படும்.

ஒழுங்கமைக்கப்படாத கோப்புகளைக் கண்டறிதல்

  1. கம்ப்யூட்டரில் drive.google.com தளத்திற்குச் செல்லவும்.
  2. தேடல் பட்டியில், is:unorganized owner:me என்பதை உள்ளிடவும்
  3. கோப்பினைக் கண்டறிந்ததும் அதை எனது இயக்ககத்தில் உள்ள கோப்புறைக்கு நகர்த்தவும். இதன் மூலம் அடுத்த முறை அதை எளிதாகக் கண்டறியலாம்.

இப்போது தேடு

வேறொருவர் கோப்பை உருவாக்கியிருந்தால்

வேறொருவர் கோப்பை உருவாக்கியிருந்தால் அதை அவர்கள் நீக்கலாம், மறுபெயரிடலாம், மீட்டெடுக்கலாம். கோப்பை உருவாக்கியவரைத் தொடர்புகொண்டு அதை மீட்டெடுக்கவோ உங்களுடன் மீண்டும் பகிரவோ கூறலாம்.

வேறொருவர் உருவாக்கிய கோப்புறையில் இருந்தால்

வேறொருவர் கோப்புறையை நீக்கிவிட்டால் உங்கள் Driveவில் அந்தக் கோப்புறையைப் பார்க்க முடியாது.

நீங்கள் உருவாக்கிய கோப்புகளை நீக்கப்பட்ட கோப்புறைகளில் கண்டறிதல்

நீக்கப்பட்ட கோப்புறைகளில் உள்ள அனைத்துக் கோப்புகளையும் கண்டறிதல்

எதிர்காலத்தில் அந்தக் கோப்பினை எளிதாகக் கண்டறியும் வகையில் "எனது இயக்ககம்" என்பதில் உள்ள கோப்புறைக்கு அதை நகர்த்தவும்.

கோப்புகளைக் கண்டறியும் முறை பற்றிய கூடுதல் தகவல்கள்

மேம்பட்ட தேடலைப் பயன்படுத்துங்கள்

Driveவில் உங்கள் தேடலை வடிகட்ட, பின்வரும் விருப்பங்களுள் ஒன்றின் மூலம் கம்ப்யூட்டரில் தேடல் சொற்றொடரைப் பயன்படுத்தவும்:

தேடல் எடுத்துக்காட்டு
சரியான சொற்றொடர்

"சரியான சொற்றொடரை மேற்கோள் குறிகளுக்குள் வழங்கவும்"

ஒரு வார்த்தையை விலக்குதல்

ஏரிகள் அல்ல நீர்நிலை:

நீர்நிலை -ஏரிகள்

கோப்பு உரிமையாளர்

அப்பா உரிமையாளராக உள்ள கோப்புகள்:

உரிமையாளர்:dad@gmail.com

பிறர் பகிர்ந்த கோப்புகள்

அம்மா உங்களுடன் பகிர்ந்த கோப்புகள்:

from:mom@gmail.com

நீங்கள் பகிர்ந்துள்ள கோப்புகள்

அம்மாவுடன் நீங்கள் பகிர்ந்த கோப்புகள்:

to:mom@gmail.com

நட்சத்திரமிட்டவை

is:starred

நீக்கப்பட்டவை

is:trashed

கோப்பு வகை

விரிதாள் கோப்பு வகை:

type:spreadsheet

கால வரையறை

ஜனவரி 18, 2015க்கு முன்னர்/பின்னர்.

before:2015-01-18

after:2015-01-18

தலைப்பு

title:"தலைப்பை இங்கே வழங்க வேண்டும்"

ஆப்ஸ்

Google Driveவில் திறக்கப்பட்ட கோப்புகள்:

app:"Drive"

மீட்டெடுக்கக்கூடிய கோப்பு வகைகள்

தனிப்பட்ட கணக்குகளுக்கு: நீங்கள் நுகர்வோர் கணக்கின் (உங்கள் பணி, பள்ளி அல்லது பிற குழு தொடர்பான கணக்காக இருக்கக்கூடாது) மூலம் Google Driveவைப் பயன்படுத்துவதோடு பின்வருபவற்றில் ஒன்றும் உண்மையாக இருந்தால் சமீபத்தில் நீக்கப்பட்ட கோப்புகளைக் குறிப்பிட்ட காலத்திற்கு மீட்டெடுக்க உதவுவோம்:

  • நீங்கள் கோப்பினை உருவாக்கியுள்ளீர்கள்.
  • Google Driveவிற்குக் கோப்பை நீங்கள் பதிவேற்றியுள்ளீர்கள்.
  • வேறொருவரிடமிருந்து கோப்பிற்கான உரிமையை நீங்கள் ஏற்றுக்கொண்டுள்ளீர்கள்.

உங்கள் Google கணக்கு நீக்கப்பட்டிருந்தால் கோப்புகளை மீட்டெடுக்க முடியாமல் போகக்கூடும்.

உங்கள் கோப்பினை இப்போதும் கண்டறிய முடியவில்லையெனில்

உங்கள் கோப்பினை மீட்டெடுப்பதற்குத் தேவையானவற்றை அறிக.

Gmailலில் இருந்து மின்னஞ்சல்களை மீட்டெடுக்க வேண்டுமெனில்

Gmailலில் இருந்து மின்னஞ்சல்களை மீட்டெடுப்பது எப்படி என அறிக.

எங்களைத் தொடர்புகொள்க

  1. Chrome போன்ற உலாவியில், Google Drive உதவி மையத்திற்குச் செல்லவும்.
  2. மேல் இடதுபுறத்தில், மெனு அதன் பிறகு எங்களைத் தொடர்புகொள்க என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. உங்கள் சிக்கலையும் எங்களை எப்படித் தொடர்புகொள்ள விரும்புகிறீர்கள் என்பதையும் தேர்வுசெய்யவும்.

எங்களைத் தொடர்புகொள்ள, உங்கள் Google கணக்கில் உள்நுழையவும்.

Drive ஆதரவு அனைத்து மொழிகளிலும் கிடைப்பதில்லை. ஆங்கிலத்தில் பேசுவீர்கள் எனில் மொழியை மாற்றி Driveவிற்கான வல்லுநரைத் தொடர்புகொள்ள முடியும்.

  1. கம்ப்யூட்டரில் Google Drive உதவி மையத்திற்குச் செல்லவும்.
  2. பக்கத்தின் கீழே உங்கள் மொழியின் மீது கிளிக் செய்யவும்.
  3. ஆங்கிலம் என்பதைத் தேர்வுசெய்யவும்.
  4. மேல் இடதுபுறத்தில், மெனு அதன் பிறகு எங்களைத் தொடர்புகொள்க என்பதைக் கிளிக் செய்யவும்.
  5. உங்கள் சிக்கலையும் எங்களை எப்படித் தொடர்புகொள்ள விரும்புகிறீர்கள் என்பதையும் தேர்வுசெய்யவும்.

கவனத்திற்கு: இதை முடித்தவுடன் உங்களுக்குப் பிடித்தமான மொழிக்கு மீண்டும் மாற்றிக்கொள்ளலாம்.

 

 

இது பயனுள்ளதாக இருந்ததா?
இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?