கோப்பில் என்ன மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதைக் கண்டறிதல்

Google Docs, Sheets அல்லது Slidesஸில் உள்ள ஆவணத்தில் என்னென்ன மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பதைப் பார்க்க முடியும்.

  1. கம்ப்யூட்டரில் ஆவணம், விரிதாள் அல்லது விளக்கக்காட்சியைத் திறக்கவும்.
  2.  ஃபைலைக் கடைசியாகத் திருத்தியது யார், அவர் கடைசியாக எப்போது மாற்றங்களைச் செய்தார் என்பதைப் பார்க்க, மேல் வலதுபுறத்தில் உள்ள,  'கடைசியாகத் திருத்தியது' ஐகான் Version history மீது கர்சரைக் கொண்டு செல்லவும்.
உதவிக்குறிப்பு: 'கடைசியாகத் திருத்தியது' ஐகான் Version history மீது நீலப்புள்ளி காட்டப்பட்டால், நீங்கள் கடைசியாகப் பார்த்தபிறகு ஃபைலை யாரோ திருத்தியுள்ளார் என்று அர்த்தமாகும்.

ஃபைலின் முந்தைய பதிப்புகளைப் பயன்படுத்துதல்

முக்கியம்: ஃபைலின் முந்தைய பதிப்புகளைப் பார்க்க, அந்த ஃபைலைத் திருத்துவதற்கான அனுமதி உங்களிடம் இருக்க வேண்டும்.

முந்தைய பதிப்பைப் பார்த்தல்

  1. கம்ப்யூட்டரில் ஆவணம், விரிதாள் அல்லது விளக்கக்காட்சியைத் திறக்கவும்.
  2. ஒரு விருப்பத்தைத் தேர்வுசெய்யவும்:
    • மேலே உள்ள ஃபைல் அதன் பிறகு முந்தைய பதிப்புகள் அதன் பிறகுஇதுவரையான பதிப்புகளைக் காட்டு என்பதைக் கிளிக் செய்யவும்.
    • மேல் வலதுபுறத்தில் உள்ள, 'கடைசியாகத் திருத்தியது' ஐகானை Version history கிளிக் செய்யவும்.
  3. சமீபத்திய பதிப்பைத் தேர்வுசெய்யவும். ஃபைலைத் திருத்தியவரின் பெயரையும் அவர் செய்த மாற்றங்களையும் பார்க்கலாம்.
  4. (விருப்பத்திற்குரியது) இவற்றைச் செய்ய விரும்பினால்:
    • குழுவாக்கப்பட்ட பதிப்புகளைக் கண்டறிய: வலதுபுறப் பேனலில் உள்ள விரிவாக்கும் ஐகானை கீழ்நோக்கிய அம்புக்குறி கிளிக் செய்யவும்.
    • தற்போதைய அசல் பதிப்பிற்குத் திரும்ப: மேல் இடதுபுறத்தில் உள்ள, பின்செல்லும் ஐகானை  கிளிக் செய்யவும்.

முந்தைய பதிப்பிற்கு மீட்டெடுத்தல்

  1. கம்ப்யூட்டரில் ஆவணம், விரிதாள் அல்லது விளக்கக்காட்சியைத் திறக்கவும்.
  2.  ஒரு விருப்பத்தைத் தேர்வுசெய்யவும்:
    • மேலே உள்ள ஃபைல் அதன் பிறகு முந்தைய பதிப்புகள் அதன் பிறகு இதுவரையான பதிப்புகளைக் காட்டு என்பதைக் கிளிக் செய்யவும்.
    • மேல் வலதுபுறத்தில் உள்ள, 'கடைசியாகத் திருத்தியது' ஐகானை Version history கிளிக் செய்யவும்.
  3. வலதுபுற பேனலில் ஒரு முந்தைய பதிப்பைத் தேர்வு செய்யவும்.
  4. மேலே இந்தப் பதிப்பை மீட்டெடு அதன் பிறகுமீட்டெடு என்பதைக் கிளிக் செய்யவும்.

முந்தைய பதிப்பை நகலெடுத்தல்

கோப்பின் முந்தைய பதிப்புகளை நகலெடுத்துத் திருத்தமுடியும்.

  1. கம்ப்யூட்டரில் ஆவணம், விரிதாள் அல்லது விளக்கக்காட்சியைத் திறக்கவும்.
  2. ஒரு விருப்பத்தைத் தேர்வுசெய்யவும்:
    • மேலே உள்ள ஃபைல் அதன் பிறகு முந்தைய பதிப்புகள் அதன் பிறகு இதுவரையான பதிப்புகளைக் காட்டு என்பதைக் கிளிக் செய்யவும்.
    • மேல் வலதுபுறத்தில் உள்ள, 'கடைசியாகத் திருத்தியது' ஐகானை Version history கிளிக் செய்யவும்.
  3. வலதுபுற பேனலில் இருக்கும், நகலெடுக்க விரும்பும் பதிப்பிற்கு அடுத்துள்ள மூன்று புள்ளி ஐகானை மேலும் கிளிக் செய்து அதன் பிறகுநகலெடு என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. நகலுக்கு பெயரை உள்ளிடவும்.
  5. கோப்பை எங்கு சேமிக்க வேண்டும் என்பதைத் தேர்வு செய்யவும்.
    • அதே பயனர்களுடன் கோப்பைப் பகிர அதே பயனர்களுடன் இதைப் பகிர் என்பதைக் கிளிக் செய்யவும்.
  6. சரி என்பதைக் கிளிக் செய்யவும்.

பெயரிடப்பட்ட பதிப்பை உருவாக்குதல்

இதுவரையான பதிப்புகளைக் கண்காணிக்கவும் நீங்கள் உருவாக்கிய பதிப்புகள் ஒன்றிணைக்கப்படவில்லை என்பதை உறுதிசெய்துகொள்ளவும் பெயரிடப்பட்ட பதிப்பை நீங்கள் உருவாக்கலாம். 
  1. கம்ப்யூட்டரில் ஆவணம், விரிதாள் அல்லது விளக்கக்காட்சியைத் திறக்கவும்.
  2.  ஒரு விருப்பத்தைத் தேர்வுசெய்யவும்:
    • மேலே உள்ள ஃபைல் அதன் பிறகு முந்தைய பதிப்புகள் அதன் பிறகு இதுவரையான பதிப்புகளைக் காட்டு என்பதைக் கிளிக் செய்யவும்.
    • மேல் வலதுபுறத்தில் உள்ள, 'கடைசியாகத் திருத்தியது' ஐகானை Version history கிளிக் செய்யவும்.
  3. ஒரு முந்தைய பதிப்பைத் தேர்ந்தெடுக்கவும். ஃபைலைத் திருத்தியவரின் பெயரையும் அவர் செய்த மாற்றங்களையும் பார்க்கலாம்.
  4. மேலும்  அதன் பிறகு இந்தப் பதிப்பிற்குப் பெயரிடு என்பதைக் கிளிக் செய்யவும்.
    • ஓர் ஆவணத்திற்கு அதிகபட்சம் பெயரிடப்பட்ட 40 பதிப்புகளைச் சேர்க்க முடியும். 
    • ஒரு விரிதாளுக்கு அதிகபட்சம் பெயரிடப்பட்ட 15 பதிப்புகளைச் சேர்க்க முடியும். 
    • பெயரிடப்பட்ட பதிப்புகளை மட்டும் காட்ட, 'பெயரிட்ட பதிப்புகளை மட்டும் காட்டு' Toggle on என்பதை இயக்கவும்.
Google Docsஸில் ஆவணத்தின் ஒரு பகுதியைத் திருத்தியவர் யார் என்று பார்த்தல்

முக்கியம்: Google Workspace Business Standard, Business Plus, Enterprise Standard, Enterprise Plus, Education Plus ஆகிய பதிப்புகளைப் பயன்படுத்துபவர்களுக்கு மட்டுமே இந்த அம்சம் கிடைக்கும்.

  1. கம்ப்யூட்டரில் docs.google.com தளத்திற்குச் சென்று ஓர் ஆவணத்தைத் திறக்கவும்.
  2. ஆவணத்தின் ஒரு பகுதியைத் தேர்ந்தெடுத்து வலது கிளிக் செய்தபின் அதன் பிறகு திருத்தக்கூடியவர்களைக் காட்டு என்பதைக் கிளிக் செய்யவும்.
Google Sheetsஸில் யார் குறிப்பிட்ட கலத்தை மாற்றினார் என்பதைப் பார்த்தல் 
  1. உங்கள் கம்ப்யூட்டரில் sheets.google.comமில் ஒரு விரிதாளைத் திறக்கவும். 
  2. கலத்தின் மீது வலது கிளிக் செய்து அதன் பிறகு திருத்த வரலாற்றைக் காட்டு என்பதைக் கிளிக் செய்யவும். 

கவனத்திற்கு: சில மாற்றங்கள் திருத்த வரலாற்றில் காட்டப்படாமல் போகக்கூடும். சில உதாரணங்கள் பின்வருமாறு: 

  • வரிசைகளையோ நெடுவரிசைகளையோ சேர்த்தது அல்லது நீக்கியது 
  • கலத்தின் வடிவமைப்பில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் 
  • சூத்திரங்களால் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள்

உங்கள் ஃபைலின் முந்தைய பதிப்பைப் பார்க்க முடியவில்லையா?

சேமிப்பகத்தை மிச்சப்படுத்துவதற்காக அவ்வப்போது உங்கள் ஃபைலுக்கான மீள்திருத்தங்கள் ஒன்றிணைக்கப்படக்கூடும்.

முக்கியம்: ஃபைலைத் திருத்த அனுமதி இல்லை என்றால் இதுவரையான பதிப்புகளைப் பார்க்க முடியாது.

தொடர்புடைய கட்டுரைகள்

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
9853409539676994848
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
35
false
false