Google Docs, Sheets, Slides & Formsஸைப் பொதுவானதாக மாற்றுதல்


               

உங்கள் பிசினஸிற்கு மேம்பட்ட Google Workspace அம்சங்கள் தேவையா?

இன்றே Google Workspaceஸைப் பயன்படுத்திப் பாருங்கள்!

 

 

ஆவணம், விரிதாள் அல்லது விளக்கக்காட்சிகளைப் பல பார்வையாளர்கள் பார்க்கும்படி செய்வதற்கு ஃபைலை வெளியிடவும். உங்கள் ஃபைலை வெளியிட்டபிறகு யாருக்கு வேண்டுமானாலும் புதிய URLலை அனுப்பலாம் அல்லது உங்கள் இணையதளத்தில் உட்பொதிக்கலாம்.

முக்கியம்: உங்கள் கணக்கின் அமைப்புகளைப் பொறுத்து, ஃபைலை வெளியிட்டபிறகு அதை இணையத்தில் உள்ள அனைவரும், உங்கள் நிறுவனத்தில் உள்ள அனைவரும் அல்லது உங்கள் நிறுவனத்தில் உள்ள ஒரு குழுவினர் பார்க்க முடியும். தனிப்பட்ட அல்லது பாதுகாக்கவேண்டிய தகவலை வெளியிடும்போது கவனமாக இருக்கவும். 

ஃபைலை வெளியிடுதல்

முக்கியம்:

  • இணையத்தில் விளக்கப்படத்தை வெளியிடும்போது அதை உருவாக்கப் பயன்படுத்தப்படும் தரவைப் பிறரால் பார்க்க முடியும். தனிப்பட்ட அல்லது பாதுகாக்கவேண்டிய தகவலைக் கொண்ட விளக்கப்படத்தை வெளியிடும்போது கவனமாக இருக்கவும்.
  • அசல் ஆவணத்தில் மேற்கொள்ளப்படும் அனைத்து மாற்றங்களும் வெளியிடப்பட்ட பதிப்பிலும் புதுப்பிக்கப்படும். தானாகப் புதுப்பிக்கப்பட சில நிமிடங்கள் ஆகலாம்.
  • ஃபைலை இணையத்திலிருந்து அகற்ற, அதை வெளியிடுவதை நிறுத்தவும். ஃபைலை வெளியிடுவதை எப்படி நிறுத்துவது என அறிக.
  • மாற்றும் அனுமதி கொண்டவர்களுடன் ஃபைலைப் பகிர்வதை நிறுத்த, பகிர்தல் அனுமதிகளை மாற்றுவது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.
  1. Google Docs, Sheets அல்லது Slidesஸில் ஃபைலைத் திறக்கவும்.
  2. மேலே உள்ள ஃபைல் அதன் பிறகு பகிர் அதன் பிறகு இணையத்தில் வெளியிடு என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. எதில் வெளியிட விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:
    • விரிதாள்கள்: விரிதாளை ஒட்டுமொத்தமாகவோ தனித்தனித் தாள்களாகவோ வெளியிடலாம். வெளியிடுவதற்கான வடிவமைப்பையும் தேர்வு செய்ய முடியும்.
    • விளக்கக்காட்சி: ஸ்லைடுகள் எந்த வேகத்தில் மாற்றப்பட வேண்டும் என்பதைத் தேர்வுசெய்யவும்.
  4. வெளியிடு என்பதைக் கிளிக் செய்யவும்.
  5. URLலை நகலெடுத்து கோப்பைக் காட்ட விரும்பும் நபருக்கு அதை அனுப்பவும். அல்லது அதை உங்கள் இணையதளத்தில் உட்பொதிக்கவும்.

பகிர்ந்த இயக்ககத்தில் இருந்து ஃபைலை வெளியிடுதல்

முக்கியம்: பணி/பள்ளிக்கான கணக்கைப் பயன்படுத்துகிறீர்கள் எனில் ஃபைலை வெளியிடுவதற்கான அம்சத்தை உங்கள் நிர்வாகி முடக்கியிருக்கலாம். ஃபைலை வெளியிட முடியவில்லை எனில் உங்கள் நிர்வாகியைத் தொடர்புகொள்ளுங்கள்.

  1. கம்ப்யூட்டரில் drive.google.com தளத்திற்குச் செல்லவும்.
  2. இடதுபுறத்தில், பகிர்ந்த இயக்ககங்கள் என்பதைக் கிளிக் செய்து அதன் பிறகு உங்கள் பகிர்ந்த இயக்ககங்களில் ஒன்றை இரு-கிளிக் செய்யவும்.
  3. மேலே உங்கள் பகிர்ந்த இயக்ககத்தின் பெயருக்கு அடுத்துள்ள கீழ்நோக்கிய அம்புக்குறி கீழ்நோக்கிய அம்புக்குறிஅதன் பிறகுபகிர்ந்த இயக்கக அமைப்புகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. “உறுப்பினர்களாக இல்லாதவர்களுடன் பகிர்தல்" என்பதற்கு அடுத்துள்ள மாற்று என்பதைக் கிளிக் செய்யவும்.
  5. "ஃபைல்களை அணுக பகிர்ந்த இயக்ககத்தின் உறுப்பினர்கள் அல்லாதவர்களையும் அனுமதி" என்பதைக் கிளிக் செய்யவும்.
  6. பயன்படுத்து என்பதை கிளிக் செய்யவும்.
  7. ஃபைலை வெளியிடுவதற்கான படிகளைப் பின்பற்றவும்.
தானியங்குப் புதுப்பிப்பை முடக்குதல்
  1. ஏற்கெனவே இணையத்தில் வெளியிட்ட ஃபைலை Google Docs அல்லது Sheetsஸில் திறக்கவும்.
  2. ஃபைல் அதன் பிறகு  பகிர் அதன் பிறகு இணையத்தில் வெளியிடு என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. வெளியிடப்பட்ட உள்ளடக்கம் & அமைப்புகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. "மாற்றங்கள் மேற்கொள்ளப்படும்போது தானாகவே மீண்டும் வெளியிடு" என்பதற்கு அடுத்துள்ள பெட்டியைத் தேர்வுநீக்கம் செய்யவும்.
    • தானியங்கு வெளியீட்டை மீண்டும் இயக்க பெட்டியைத் தேர்வுசெய்யவும்.

உதவிக்குறிப்பு: Google Slidesஸில் தானியங்குப் புதுப்பிப்புகளை முடக்க முடியாது.

ஃபைல் வெளியிடுவதை நிறுத்துதல்
  1. Google Docs, Sheets அல்லது Slidesஸில் ஃபைலைத் திறக்கவும்.
  2. மேற்புறத்தில் உள்ள ஃபைல் அதன் பிறகு பகிர் அதன் பிறகு இணையத்தில் வெளியிடு என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. வெளியிடப்பட்ட உள்ளடக்கம் & அமைப்புகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. வெளியிடுவதை நிறுத்து என்பதைக் கிளிக் செய்யவும்.
வெளியிட்ட ஃபைல்களைப் பகிரும்போது அவை எவ்வாறு இருக்கும்

வெளியிட்ட ஃபைலை URLலை யாருக்காவது அனுப்பினால் திருத்த முடியாத பதிப்பாக அதை அவர்கள் பார்ப்பதோடு வேறு விதமாகவும் அது காட்சியளிக்கும். பிறர் என்ன பார்ப்பார்கள் என்பது பின்வருமாறு:

  • ஆவணங்கள்: கருவிப்பட்டி இல்லாத பதிப்பு.
  • விரிதாள்கள்: கருவிப்பட்டி இல்லாத பதிப்பு. "பார்க்கும்" அனுமதிகளைக் கொண்டவர்களால் விளக்கப்படங்களையும் கல வடிவமைப்பையும் கலங்களின் மதிப்புகளையும் பார்க்க முடியும். ஆனால் சூத்திரங்களைப் பார்க்கவோ திருத்தவோ முடியாது.
  • விளக்கக்காட்சிகள்: பார்க்க மட்டுமே அனுமதியுள்ள பதிப்பு அல்லது முழுத்திரை ஸ்லைடுகளைக் கொண்ட விளக்கக்காட்சிப் பயன்முறையில் உள்ள பதிப்பு.
ஃபைலை யார் வெளியிடலாம் என்பதைக் கட்டுப்படுத்துதல்

ஃபைலின் உரிமையாளர்களும் எடிட்டர்களும் ஃபைல்களை வெளியிட முடியும். நீங்கள் உரிமையாளராக இருந்து ஃபைலை வேறொருவர் வெளியிட வேண்டுமென விரும்பினால் அவர்களுக்கு "திருத்தும்" அணுகலை வழங்கவும்.

நீங்கள் உரிமையாளராக இருக்கும் ஃபைலைப் பிறர் வெளியிடுவதை விரும்பவில்லை என்றால்:

  1. Google Docs, Sheets அல்லது Slidesஸில் ஃபைலைத் திறக்கவும்.
  2. மேல் வலதுபுறத்தில், பகிர் என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. அமைப்புகள் அமைப்புகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. திருத்தக்கூடியவர்கள் அனுமதிகளை மாற்றி, பகிரலாம் என்பதைத் தேர்வுநீக்கவும்.
  5. முடிந்தது என்பதைக் கிளிக் செய்யவும்.

ஃபைல்களை உட்பொதித்தல்

ஆவணம், விரிதாள், விளக்கக்காட்சி அல்லது படிவத்தை உங்கள் தளத்திலோ வலைப்பதிவிலோ உட்பொதிப்பதன் மூலம் ஏற்கெனவே உள்ள இணையதளத்தில் அவற்றைப் பார்ப்பதற்குக் கிடைக்கும்படிச் செய்யலாம்.

ஆவணம், விரிதாள் அல்லது விளக்கக்காட்சியை உட்பொதித்தல்
  1. Google Docs, Sheets அல்லது Slidesஸில் ஃபைலைத் திறக்கவும்.
  2. மேற்புறத்தில் உள்ள ஃபைல் அதன் பிறகு பகிர் அதன் பிறகு இணையத்தில் வெளியிடு என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. அதன்பிறகு காட்டப்படும் சாளரத்தில் உட்பொதி என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. வெளியிடுவதற்கான விருப்பத்தைத் தேர்வு செய்யவும்:
  • விரிதாள்: விரிதாளை ஒட்டுமொத்தமாகவோ தனித்தனித் தாள்களாகவோ வெளியிடும்படி தேர்வுசெய்யலாம்.
  • விளக்கக்காட்சி: விளக்கக்காட்சியின் அளவையும் ஸ்லைடுகளை எந்த அளவிற்கு வேகமாக மாற்ற வேண்டும் என்பதையும் தேர்வு செய்யலாம்.
  1. வெளியிடு என்பதைக் கிளிக் செய்யவும்.
  2. வாக்கியப் பெட்டியிலுள்ள HTML குறியீட்டை நகலெடுத்து அதை உங்கள் தளத்திலோ வலைப்பதிவிலோ ஒட்டவும்.
உட்பொதிக்கப்பட்ட விரிதாள்களைத் திருத்துதல்

விரிதாளை உட்பொதிக்கிறீர்கள் எனில் அதை இணையத்தில் வெளியிட்டபிறகு அதன் ஒரு பகுதியை காட்டவோ மறைக்கவோ முடியும்.

  1. Google Sheetsஸில் ஃபைலைத் திறக்கவும்.
  2. மேற்புறத்தில் உள்ள ஃபைல் அதன் பிறகு பகிர் அதன் பிறகு இணையத்தில் வெளியிடு என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. அதன்பிறகு காட்டப்படும் சாளரத்தில் உட்பொதி என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. வெளியிடு என்பதைக் கிளிக் செய்யவும்.
  5. வாக்கியப் பெட்டியிலுள்ள குறியீட்டை நகலெடுத்து அதை உங்கள் தளத்திலோ வலைப்பதிவிலோ ஒட்டவும்.
  6. விரிதாளின் ஒரு பகுதியைக் காட்டவோ மறைக்கவோ உங்கள் தளம் அல்லது வலைப்பதிவில் உள்ள HTML குறியீட்டைத் திருத்தவும்.
  • gid=: தாளின் ஐடி.
  • range=: இணையத்தில் வெளியிடப்படும் வரிசைகளும் நெடுவரிசைகளும். உதாரணமாக A1:B14.
  • widget=: True அல்லது false. True என்றால் தாளின் பக்கம் கீழ்ப்பகுதியில் காட்டப்படும்.
  • headers=: True அல்லது false. true எனில் வரிசை எண்களும் நெடுவரிசை எழுத்துகளும் காட்டப்படும்.
  • chrome=: True அல்லது false. true எனில் தலைப்பும் அடிக்குறிப்பும் காட்டப்படும்.
படிவத்தை உட்பொதித்தல்
  1. Google Formஸில் படிவத்தைத் திறக்கவும்.
  2. மேல் வலதுபுறத்தில் அனுப்பு என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. சாளரத்தின் மேலே உட்பொதி என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. அதன்பிறகு தோன்றும் HTMLலை நகலெடுக்க நகலெடு என்பதைக் கிளிக் செய்யவும்.
  5. HTML குறியீட்டை உங்கள் தளத்திலோ வலைப்பதிவிலோ ஒட்டவும்.

உதவிக்குறிப்பு: Google Driveவில் மூன்றாம் தரப்புக் குக்கீக்கான தேவைகளில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து மேலும் தெரிந்துகொள்ளுங்கள்.

தொடர்புடைய கட்டுரை:

 

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
7811791116824931732
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
35
false
false