ஸ்லைடுகளைத் தொகுத்து வழங்குதல்


               

உங்கள் பிசினஸிற்கு மேம்பட்ட Google Workspace அம்சங்கள் தேவையா?

இன்றே Google Workspaceஸைப் பயன்படுத்திப் பாருங்கள்!

 

 

முழுத்திரையில் தோன்றும் வகையில் நீங்கள் Google Slidesஸை வழங்கலாம்.

கம்ப்யூட்டரிலும் மொபைல் சாதனத்திலும் Chromecast/AirPlay மூலமாக டிவியிலும் முழுத்திரையில் விளக்கக்காட்சிகளைக் காட்சிப்படுத்தலாம். அதுமட்டுமின்றி வழங்கும்போது பார்வையாளர்களின் கேள்விகளை ஏற்று அவற்றுக்குப் பதிலளிக்கவும் நேரம் ஒதுக்கலாம்

விளக்கக்காட்சியைக் காட்டுதல்

  1. உங்கள் iPhoneனிலோ iPadடிலோ Google Slides ஆப்ஸில் விளக்கக்காட்சியைத் திறக்கவும்.
  2. மேலே உள்ள ஸ்கிரீனைப் பகிர் இயக்கு அதன் பிறகு இந்தச் சாதனத்தில் ஸ்கிரீனைப் பகிர் என்பதைத் தட்டவும்.
  3. ஸ்லைடுகளை மாற்ற இடப்புறம் அல்லது வலப்புறம் ஸ்வைப் செய்யவும்.
  4. வெளியேற திரையை இருமுறை தட்டவும். மூடுக மூடு என்பதைத் தட்டவும்.

Chromecast, Meet, Airplay மூலம் ஸ்கிரீனைப் பகிர்தல்

Google Chromecast மூலம் டிவியிலோ Google Meet மூலம் வீடியோ அழைப்பிலோ AirPlayயிலோ ஸ்லைடுகளைப் பகிரலாம்.

Chromecast
  1. உங்கள் iPhoneனிலோ iPadலோ Chromecast இணைந்துள்ள அதே வைஃபை நெட்வொர்க்கில் இணையவும்.
  2. Google Slides ஆப்ஸில் விளக்கக்காட்சியைத் திறக்கவும்.
  3. அலைபரப்பு மாற்று என்பதைத் தட்டவும்.
  4. ஸ்லைடுகளை மாற்ற வலதுபுறமாகவோ இடதுபுறமாகவோ ஸ்வைப் செய்யவும்.
    • உங்கள் சாதனத்தின் ஒலியளவு பட்டன்களைப் பயன்படுத்தி ஒலியைக் கட்டுப்படுத்தலாம்.
    • பேச்சாளர் குறிப்புகளைக் காட்டவோ மறைக்கவோ பேச்சாளர் குறிப்புகள் என்பதைத் தட்டவும்.
  5. அலைபரப்புவதை நிறுத்த மூடுக மூடு என்பதைத் தட்டவும்.

உதவிக்குறிப்பு: Chromecast கெஸ்ட் பயன்முறையில் Google Slides ஸ்கிரீனைப் பகிர முடியாது. Chromecastடைக் கண்டறிய முடியவில்லை எனில் லோக்கல் நெட்வொர்க் அணுகல் இயக்கப்பட்டுள்ளதை உறுதிசெய்து கொள்ளவும்.

iPhone/iPadல் லோக்கல் நெட்வொர்க் அணுகலை இயக்க:

  1. அமைப்புகள் ஆப்ஸுக்குச் செல்லவும்.
  2. Slides ஆப்ஸைக் கண்டறியவும்.
  3. லோக்கல் நெட்வொர்க்கை இயக்கவும்.

Chromecastடை இன்னமும் கண்டறிய முடியவில்லை எனில் இந்தக் கூடுதல் பிழையறிந்து திருத்துதல் படிகளை முயலவும்.

Google Meet
  1. உங்கள் iPhoneனிலோ iPadடிலோ Google Slides ஆப்ஸில் விளக்கக்காட்சியைத் திறக்கவும்.
  2. ஸ்கிரீனைப் பகிர் இயக்கு என்பதைத் தட்டவும். ஸ்கிரீனைப் பகிர விரும்பும் இடத்தைத் தேர்வுசெய்யவும்.
  3. ஸ்கிரீனைப் பகிர் என்பதைத் தட்டவும்.
  4. வெளியேற மேலேயுள்ள மூடுக மூடு என்பதைத் தட்டவும்.
AirPlay
  1. உங்கள் iPhoneனிலோ iPadடிலோ Google Slides ஆப்ஸில் விளக்கக்காட்சியைத் திறக்கவும்.
  2. உங்களுக்கு அருகில் Apple டிவியோ AirPlay ரிஸீவரோ இருந்தால் திரையின் கீழிருந்து மேல்நோக்கி ஸ்வைப் செய்யவும்.
    1. AirPlay மிரர் செய்தல் என்பதைத் தட்டவும்.
    2. நீங்கள் பயன்படுத்த விரும்பும் ரிஸீவரைத் தட்டவும்.
    3. "மிரர் செய்தல்" என்பதற்கு அடுத்துள்ள ஸ்விட்சைத் தட்டவும்.
  3. ஸ்கிரீனைப் பகிர் இயக்கு என்பதைத் தட்டவும்.
    • ஸ்லைடுகளை மாற்ற வலதுபுறமாகவோ இடதுபுறமாகவோ ஸ்வைப் செய்யவும்.
    • உங்கள் சாதனத்தின் ஒலியளவு பட்டன்களைப் பயன்படுத்தி ஒலியைக் கட்டுப்படுத்தலாம்.
    • பேச்சாளர் குறிப்புகளைக் காட்டவோ மறைக்கவோ பேச்சாளர் குறிப்புகள் என்பதைத் தட்டவும்.
  4. வெளியேற மேலேயுள்ள மூடுக மூடு என்பதைத் தட்டவும்.

நீங்கள் ஸ்கிரீனைப் பகிரும்போது முக்கியமானவற்றை ஹைலைட் செய்தல்

  1. உங்கள் iPhoneனிலோ iPadடிலோ Google Slides ஆப்ஸில் விளக்கக்காட்சியைத் திறக்கவும்.
  2. மேலேயுள்ள ஸ்கிரீனைப் பகிர் இயக்கு என்பதைத் தட்டவும். ஸ்கிரீனைப் பகிர விரும்பும் இடத்தைத் தேர்வுசெய்யவும்.
  3. மேலேயுள்ள வரை மாற்று என்பதைத் தட்டவும்.
  4. பகிரப்படும் ஸ்லைடில் விரலைப் பயன்படுத்தி வரையவும்.
    • வரைபடங்களை அகற்ற கீழே வரைபடங்களை அழி என்பதைத் தட்டவும் அல்லது ஸ்லைடுகளை மாற்றவும்.
    • ஸ்லைடுகளை மாற்ற பேச்சாளர் குறிப்புகள் பிரிவில் இடதுபுறமாகவோ வலதுபுறமாகவோ ஸ்வைப் செய்யவும்.
  5. வரைபடப் பயன்முறையில் இருந்து வெளியேற, வரை மாற்று என்பதைத் தட்டவும்.
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
7120513023619417865
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
35
false
false