ஸ்கிரீன் ரீடரைக் கொண்டு விளக்கக்காட்சிகளைத் திருத்துதல்

ChromeVox, NVDA, JAWS, VoiceOver போன்ற 'எழுத்திலிருந்து பேச்சு உரையாடலுக்கான' ஸ்கிரீன் ரீடரைப் பயன்படுத்தி உங்கள் கம்ப்யூட்டரில் விளக்கக்காட்சிகளைத் திருத்தலாம்.

முதலில், Docs ஸ்கிரீன் ரீடர் உதவி இயக்கப்பட்டுள்ளதை உறுதிசெய்து கொள்ளுங்கள்.

நீங்கள் தொடு பயன்முறை வசதியுள்ள Windows கம்ப்யூட்டர் அல்லது Chromebook பயன்படுத்தினால் ஸ்கிரீன் ரீடரில் தொடு பயன்முறையைப் பயன்படுத்துவதற்கான உதவிக்குறிப்புகளைப் பின்பற்றவும்.

பரிந்துரைக்கப்படும் உலாவியும் ஸ்கிரீன் ரீடர்களும்

Chrome உலாவியையும் இவற்றையும் டாக்ஸ் எடிட்டர் பரிந்துரைக்கிறது:

  • Windowsஸில் NVDA அல்லது JAWS
  • ChromeOSஸில் ChromeVox
  • MacOSஸில் VoiceOver

உங்கள் விளக்கக்காட்சி முழுவதும் செல்லுதல்

Google Slidesஸில் விளக்கக்காட்சியைத் திறக்கையில், உங்கள் விளக்கக்காட்சியின் முதல் ஸ்லைடு மையப்படுத்தப்பட்டிருக்கும்.

கீபோர்டு ஷார்ட்கட்களைப் பயன்படுத்துதல்

Slides வழக்கமான இணையதளத்தில் இருந்து மாறுபட்டது, அதனால் சில வழக்கமான ஸ்க்ரீன் ரீடர் ஷார்ட்கட்கள் பொருந்தாது. இன்னும் சிறந்த அனுபவத்திற்கு, உங்கள் விளக்கக்காட்சிகளைத் திருத்தும்போது Slides ஷார்ட்கட்களைப் பயன்படுத்தவும்.

எடுத்துக்காட்டாக, கீழே உள்ள ஷார்ட்கட்டுகள் விளக்கக்காட்சி எடிட்டருக்குள் நகர உதவுகின்றன:

  • ஸ்லைடு Canvas: வேறு பகுதியில் இருந்து ஸ்லைடு Canvasஸிற்குச் செல்ல, Ctrl + Alt + Shift + c (Windows, Chrome OS) அல்லது ⌘ + Option + Shift + c (Mac)ஐ அழுத்தவும்.
  • படத்துண்டு: விளக்கக்காட்சியின் அனைத்து ஸ்லைடுகளும் பட்டியலிடப்பட்ட படத்துண்டு ஒன்று விளக்கக்காட்சி எடிட்டரில் உள்ளது. மையப்படுத்தலைப் படத்துண்டிற்குச் செலுத்த Ctrl + Alt + Shift + f (Windows, Chrome OS) அல்லது ⌘ + Option + Shift + f (Mac)ஐ அழுத்தவும். படத்துண்டை அடைந்தவுடன், மேல் மற்றும் கீழ் அம்புக்குறிகளைப் பயன்படுத்தி ஸ்லைடுகளுக்கிடையே மாறலாம்.
  • அனிமேஷன்கள் பெட்டி: ஸ்லைடில் அனிமேஷன்களைச் சேர்க்க Windows, Chrome OS ஆகியவற்றில் Ctrl + Alt + Shift + b பட்டன்களையும், Macகில் ⌘ + Option + Shift + b பட்டன்களையும் அழுத்தி அனிமேஷன்கள் பெட்டியைத் திறக்கவும். வடிவங்கள் மற்றும் ஆப்ஜெக்ட்டுகளுக்கு அனிமேஷன்களைச் சேர்ப்பதற்கான அல்லது ஸ்லைடுகளுக்கு நிலைமாற்றங்களைச் சேர்ப்பதற்கான விருப்பங்களை ஸ்கிரீன் ரீடர் தெரிவிக்கும்.
  • பேச்சாளர் குறிப்புகள்: பேச்சாளர் குறிப்புகளுக்குச் செல்ல, Ctrl + Alt + Shift + s (Windows, Chrome OS) அல்லது Ctrl + ⌘ + Shift + s (Mac)ஐ அழுத்தவும். பேச்சாளர் குறிப்புகளை நீங்கள் டைப் செய்யும்போதே ஸ்கிரீன் ரீடர் கருத்தைக் கேட்பீர்கள்.

விளக்கக்காட்சியில் ஷார்ட்கட்களின் பட்டியலைத் திறக்க Windows, Chrome OS ஆகியவற்றில் Ctrl + / பட்டன்களை அழுத்தவும். Macகில் ⌘ + / பட்டன்களை அழுத்தவும். செருகு அல்லது ஸ்லைடு போன்ற செயல்பாடுகளைத் தேடலாம். உங்கள் விளக்கக்காட்சிக்குத் திரும்ப, Escape அழுத்தவும்.

மெனுக்களைத் தேடுவதன் மூலம் செயல்பாடுகளை விரைவாகச் செய்தல்

  1. Alt + / (Windows, Chrome OS) அல்லது Option + / (Mac) என்பதை அழுத்தவும்.
  2. பெயர் மாற்று, செருகு போன்ற கட்டளையை டைப் செய்யவும். 
  3. தேடல் முடிவுகளைக் கேட்க, கீழ்நோக்கிய அம்புக்குறியை அழுத்தவும். உதாரணமாக, செருகு என நீங்கள் டைப் செய்யும்போது அதற்கான விருப்பங்களில் படத்தைச் சேர்த்தல், கருத்து தெரிவித்தல் ஆகியவையும் பிற விருப்பத்தேர்வுகளும் இருக்கும். 
  4. ஒரு செயலைத் தேர்ந்தெடுக்க, Enter பட்டனை அழுத்தவும்.

ஸ்லைடுகள் ஸ்கிரீனைப் பகிர்தல்

ஸ்லைடுகள் ஸ்கிரீனைப் பகிரவும் வாசிக்கவும் பின்வரும் உலாவிகள் மற்றும் ஸ்கிரீன் ரீடர்கள் சிறப்பாக வேலை செய்யும்: 

  • Chrome OSஸில், Chrome உடன் ChromeVox பயன்படுத்தவும்.
  • Windowsஸில், Chrome உடன் NVDA அல்லது JAWS பயன்படுத்தவும்.
  • Macகில், Chrome உடன் VoiceOver பயன்படுத்தவும்.

ஸ்லைடுகள் ஸ்கிரீனைப் பகிர:

  1. ஸ்கிரீனைப் பகிரத் துவங்க, உங்கள் உலாவிக்கான ஷார்ட்கட் பட்டனைப் பயன்படுத்தவும்: 
    • Chrome OS: Ctrl + Search + 5 
    • Windows: Ctrl + F5 
    • Mac: ⌘ + Shift + Enter 
  2. ஸ்லைடுகளின் உள்ளடக்கத்திற்குச் செல்ல, ஸ்லைடு உள்ளடக்கம் மையப்படுத்தப்படும் வரை Tab பட்டனை அழுத்தவும்.
  3. அடுத்து அல்லது முந்தைய ஸ்லைடுக்குச் செல்ல, கீழ் அல்லது மேல் அம்புக்குறியை அழுத்தவும்.
  4. விளக்கக்காட்சிப் பயன்முறையில் இருந்து வெளியேற, Escape பட்டனை அழுத்தவும்.
உதவிக்குறிப்பு: சாதாரண இணையப் பக்கத்தில் நகருவது போலவே உங்கள் விளக்கக்காட்சியையும், நகர்த்திப் பார்க்கக்கூடிய ஒரே பக்கமாகக் காட்சிப்படுத்தலாம். HTML பார்வைக்குத் திரும்ப, Ctrl + Alt + Shift + p (Windows அல்லது Chrome OS), அல்லது ⌘ + Option + Shift + p (Mac)ஐ அழுத்தவும்.

மெனுக்கள், முதல்-நிலை பட்டன்கள் மற்றும் கருவிப்பட்டியைப் பயன்படுத்துதல்

கவனத்திற்கு: மேலே பட்டன்களும் மெனுக்களும் இல்லையெனில் Ctrl + Shift + f (Windows, Chrome OS அல்லது Mac) அழுத்தவும்.

மெனுக்களை உலாவ:

  1. உங்கள் உலாவிக்கான ஷார்ட்கட் பட்டனைப் பயன்படுத்தி ‘ஃபைல்’ மெனுவைத் திறக்கவும்:
    • Windows உடன் கூடிய Chrome உலாவி: Alt + f
    • Windowsஸில் பிற உலாவிகளில்: Alt + Shift + f
    • Chrome OS: Alt + f
    • Mac: Ctrl + Option + Tab பட்டன்களை அழுத்திவிட்டு Ctrl + Option + f பட்டன்களை அழுத்தவும்
  2. திருத்து, காட்டு, செருகு, ஸ்லைடு, வடிவமை, வரிசைப்படுத்து, கருவிகள், அட்டவணை, உதவி, அணுகலம்சங்கள் ஆகியவை உள்ளிட்ட பிற மெனுக்களைப் பார்க்க வலது அம்புக்குறியை அழுத்தவும்.

உதவிக்குறிப்பு: உதவி பெற, உதவி மெனுவைத் திறந்து Slides உதவி என்பதைத் தேர்ந்தெடுக்கவும். தேடல் பெட்டிக்குச் செல்ல Tab பட்டனை அழுத்தி, பிறகு படங்கள் போன்ற தேடல் வார்த்தையை டைப் செய்து Enter பட்டனை அழுத்தவும். நீங்கள் வாசிக்கவோ பிற தலைப்புகளுக்குச் செல்லவோ கூடிய ஒரு பெட்டியில் உதவி திறக்கும். விளக்கக்காட்சிக்குத் திரும்ப, Escape அழுத்தவும்.

மெனுக்களில் இருந்து, கட்டுப்பாடுகளின் இரண்டு பிற அமைப்புகளுக்கும் நீங்கள் நகரலாம்:

  • முதல்-நிலை பட்டன்கள்: பெயர் மாற்றுதல், நட்சத்திரமிடுதல், பகிர்தல், விளக்கக்காட்சியை வேறு ஃபோல்டருக்கு நகர்த்துதல் போன்ற விளக்கக்காட்சி சார்ந்த செயல்களுக்கு இந்த பட்டன்கள் பயன்படுகின்றன. மெனுக்களில் இருந்து Shift + Tab என்பதை அழுத்தவும்.
  • கருவிப்பட்டி: வண்ணங்கள், பார்டர்கள் போன்ற திருத்துதல் மற்றும் வடிவமைத்தலுக்கான விருப்பங்களைக் கருவிப்பட்டி கொண்டிருக்கும். மெனுக்களில் இருந்து Tab என்பதை அழுத்தவும்.

அணுகல்தன்மை மெனுவைப் பயன்படுத்தி விளக்கக்காட்சியைப் படித்தல் அல்லது நகர்த்துதல்

  1. உங்கள் உலாவிக்கான ஷார்ட்கட் பட்டனைப் பயன்படுத்தி அணுகலம்சங்கள் மெனுவைத் திறக்கவும்:
    • Windows உடன் கூடிய Chrome உலாவி: Alt + a
    • Windowsஸில் பிற உலாவிகளில்: Alt + Shift + a
    • Chrome OS: Alt + a
    • Mac: Ctrl + Option + Tab பட்டன்களை அழுத்திவிட்டு Ctrl + Option + a பட்டன்களை அழுத்தவும்
  2. ‘ஸ்கிரீன் ரீடரில் படி’, ‘கருத்துகளைப் படி’ போன்ற கேட்பதற்கான இன்னும் பல விருப்பங்களுக்கு, கீழ்நோக்கிய அம்புக்குறியை அழுத்தவும்.
  3. வலது அம்புக்குறியை அழுத்தி துணை மெனுவைத் திறந்து அதிலுள்ள விருப்பங்களைப் பார்க்க கீழ்நோக்கிய அம்புக்குறியை அழுத்தவும்.
  4. ஒரு விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க Enter பட்டனை அழுத்தவும்.

திருத்தல் மற்றும் வடிவமைத்தல் அடிப்படைகள்

உங்கள் விளக்கக்காட்சியில், உள்ளடக்கம் மற்றும் வடிவமைத்தலைச் சேர்க்கவோ மாற்றவோ செய்யலாம்.

வாக்கியப் பெட்டி, படம் அல்லது அட்டவணையைச் சேர்த்தல்

  1. வார்த்தைப் பெட்டி, படம் அல்லது அட்டவணையைச் சேர்க்க விரும்பும் ஸ்லைடுக்குச் செல்க.
  2. மெனுக்களைத் தேட Alt + / (Windows, Chrome OS) அல்லது Option + / (Mac) என்பதை அழுத்தவும்.
  3. நீங்கள் சேர்க்கக்கூடிய ஆவணங்களின் பட்டியலைப் பெற, செருகு என டைப் செய்யவும்.
  4. பட்டியலில் உள்ளவற்றைப் பார்க்க அம்புக்குறி பட்டன்களைப் பயன்படுத்தவும்.
  5. தேர்வுசெய்ய Enter பட்டனை அழுத்தவும்.

வடிவமைத்தலைத் தெரிவித்தல் அல்லது மாற்றுதல்

உங்கள் கர்சரின் தற்போதைய இடத்தின் வார்த்தை அல்லது பத்தி வடிவமைப்பைத் தெரிவிக்க Ctrl + Alt + a அழுத்தி, பிறகு f (Windows, Chrome OS) அழுத்தவும் அல்லது Ctrl + ⌘ + a அழுத்தி, பிறகு f (Mac) அழுத்தவும். 

நீங்கள் பயன்படுத்தக் கூடிய வடிவமைப்பு ஸ்டைல்களைப் பார்க்க மெனு பட்டியில் உள்ள வடிவமை மெனுவைத் திறக்கவும்:

  1. உங்கள் உலாவிக்கான ஷார்ட்கட் பட்டனைப் பயன்படுத்தி ‘வடிவமை’ மெனுவைத் திறக்கவும்:
    • Windowsஸில் Chrome உலாவியில்: Alt + o
    • Windowsஸில் பிற உலாவிகளில்: Alt + Shift + o 
    • Chrome OS: Alt + o
    • Mac: Ctrl + Option + Tab பட்டன்களை அழுத்திவிட்டு Ctrl + Option + o பட்டன்களை அழுத்தவும்
  2. கீழ்நோக்கிய அம்புக்குறியை அழுத்தி விருப்பங்களைக் கேட்கவும், பின்னர் அவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க Enter பட்டனை அழுத்தவும்.

எப்படி ஸ்லைடுகளை உருவாக்குவது, திருத்துவது, பிரத்தியேகமாக்குவது என்பதைப் பற்றி மேலும் அறிக.

ஸ்லைடின் தளவமைப்பை மாற்ற

ஸ்லைடு தளவமைப்புகள் என்பவை உங்கள் விளக்கக்காட்சியில் உள்ள "தலைப்பும் அங்கமும்" அல்லது "தலைப்பும் இரு நெடுவரிசைகளும்" போன்ற தனிப்பட்ட ஸ்லைடுகளுக்கான வடிவமைப்புகள் ஆகும். படத்துண்டைப் பார்க்கும்போது, விளக்கக்காட்சியில் உள்ள ஒவ்வொரு ஸ்லைடு குறித்த தளவமைப்புத் தகவல்களையும் கேட்பீர்கள். 

  1. படத்துண்டில், நீங்கள் தளவமைப்பை மாற்ற விரும்பும் ஸ்லைடைத் தேர்ந்தெடுக்கவும்.
  2. உங்கள் உலாவிக்கான ஷார்ட்கட் பட்டனைப் பயன்படுத்தி ஸ்லைடு மெனுவைத் திறக்கவும்:
    • Windowsஸில் Chrome உலாவியில்: Alt + s
    • Windows உடன் பிற உலாவிகள்: Alt + Shift + s 
    • Chrome OS: Alt + s
    • Mac: Ctrl + Option + Tab பட்டன்களை அழுத்திவிட்டு Ctrl + Option + s பட்டன்களை அழுத்தவும்
  3. தளவமைப்பைப் பயன்படுத்து என்பதைத் தேர்ந்தெடுத்து பிறகு தளவமைப்பு விருப்பங்களைக் கேட்க, வலது அம்புக்குறியை அழுத்தவும். தற்போதைய ஸ்லைடின் தளவமைப்பிற்கு "தேர்ந்தெடுக்கப்பட்டது" என்றும் பிற தளவமைப்பு விருப்பங்களுக்கு "தேர்தெடுக்கப்படவில்லை" என்றும் கேட்பீர்கள்.
  4. தற்போதைய ஸ்லைடுக்கு வேறு தளவமைப்பு விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க, Enterஐ அழுத்தவும்.

ஸ்லைடுகளின் வரிசையை மாற்ற

  1. படத்துண்டிற்குச் செல்ல Ctrl + Alt + Shift + f (Windows, Chrome OS) அல்லது ⌘ + Option + Shift + f (Mac)ஐ அழுத்தவும்.
  2. நீங்கள் நகர்த்த விரும்பும் ஸ்லைடைக் கண்டறிய, மேல் மற்றும் கீழ் அம்புக்குறியை அழுத்தவும். ஒன்றுக்கு மேற்பட்ட ஸ்லைடுகளை நகர்த்துவதற்குத் தேர்ந்தெடுக்க, Shift பட்டனை அழுத்தியபடி அம்புக்குறி பட்டன்களை அழுத்தவும்.
  3. தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்லைடுகளை மேலே அல்லது கீழே நகர்த்த Windows, Chrome OS ஆகியவற்றில் Ctrl பட்டனையும் Macகில் பட்டனையும் அழுத்தியபடி மேல் அல்லது கீழ்நோக்கிய அம்புக்குறியை அழுத்தவும்.

விளக்கக்காட்சியை எழுத்துப் பிழை சரிபார்த்தல்

விளக்கக்காட்சியில் உள்ள எழுத்துப்பிழைகளை Slides தானாகவே கண்டறியும்.

  1. அடுத்த எழுத்துப் பிழைக்குச் செல்ல, Ctrl + தனி மேற்கோள் குறி (Windows, Chrome OS) அல்லது⌘ + தனி மேற்கோள் குறி (Mac)ஐ அழுத்தவும்.
  2. முந்தைய எழுத்துப் பிழைக்குச் செல்ல Ctrl + அரைப்புள்ளி (Windows, Chrome OS) அல்லது ⌘ + அரைப்புள்ளி (Mac)ஐ அழுத்தவும்.
  3. எழுத்துப் பிழையைத் திருத்த Ctrl + Shift + x (Windows, Chrome OS) அல்லது ⌘ + Shift + x (Mac) அழுத்தியபடி சூழல் மெனுவைத் திறக்கவும். சூழல் மெனுவில் இருந்து சரியாக உச்சரிக்கப்பட்ட பரிந்துரையைத் தேர்ந்தெடுத்து Enter பட்டனை அழுத்தவும்.

எழுத்துப் பிழை சரிபார்த்தல் மற்றும் தானியங்கு திருத்தல் பற்றி மேலும் அறிக.

படம் அல்லது வரைபடத்தில் மாற்று வார்த்தைகளைச் சேர்த்தல்

  1. படம் அல்லது வரைபடத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
  2. Ctrl + Alt + y (Windows, Chrome OS) அல்லது ⌘ + Option + y (Mac)ஐ அழுத்தவும்.
  3. மாற்று வார்த்தைகள் உரையாடலில், படத்திற்கான விளத்தை உள்ளிட்டு, பிறகு Enterஐத் தேர்ந்தெடுக்கவும்.

உங்கள் விளக்கக்காட்சியில் பரிந்துரைக்கப்பட்ட உள்ளடக்கத்தைக் கண்டறிதல்

  1. உங்கள் விளக்கக்காட்சியில் ஆய்வுப் பகுதியைத் திறந்து Ctrl + Alt + Shift + i (Windows, Chrome OS) அல்லது ⌘ + Option + Shift + i (Mac)ஐ அழுத்தவும்.
  2. பரிந்துரைக்கப்பட்ட தளவமைப்புகளைக் கண்டறிய, உங்கள் ஸ்கிரீன் ரீடர் பட்டன்களைப் பயன்படுத்தி ஆய்வுப் பகுதிக்குச் செல்லவும் .
  3. உங்கள் ஆவணங்கள் மற்றும் இணையத்தில் தேட, தேடல் பட்டியில் தேடலை உள்ளிட்டு பிறகு Enterஐ அழுத்தவும்.

Calendar, Keep & Tasksஸைப் பார்த்தல்

Docs, Sheets, Slides ஆகியவற்றைப் பயன்படுத்தும்போது பக்கவாட்டுப் பேனலில் Google Calendar, Keep, Tasks ஆகியவற்றைப் பயன்படுத்தலாம். இயல்புநிலையாக, பக்கவாட்டு பேனலில் இருக்கும் கருவிகள் சுருக்கப்பட்டிருக்கும். பக்கவாட்டுப் பேனலுக்குச் சென்று கருவிகளில் ஒன்றை விரிவாக்க இந்த வழிமுறைகளைப் பின்பற்றவும்:

  1. பக்கவாட்டுப் பேனலுக்குச் செல்ல இந்த ஷார்ட்கட்களைப் பயன்படுத்தவும்:
    • Windows: Ctrl + Alt + . (முற்றுப்புள்ளி) அல்லது Ctrl + Alt + , (காற்புள்ளி)
    • Chromebook: Alt + Shift + . (முற்றுப்புள்ளி) அல்லது Alt + Shift + , (காற்புள்ளி)
    • Mac: ⌘ + Option + . (முற்றுப்புள்ளி) அல்லது ⌘ + Option + , (காற்புள்ளி)
  2. பக்கவாட்டுப் பேனலில் Calendar, Keep, Tasks ஆகிய கருவிகளின் பட்டியலைப் பார்க்க மேல் அல்லது கீழ்நோக்கிய அம்புக்குறியை அழுத்தவும்.
  3. நீங்கள் பயன்படுத்த விரும்பும் கருவியை விரிக்க,Enterஐ அழுத்தவும்.
  4. பக்கவாட்டு பேனலில், உங்கள் விளக்கக்காட்சியில் இருந்து வெளியேறாமலேயே இப்போது பின்வரும் நடவடிக்கைகளைச் செய்யலாம்:
    • Calendar: உங்கள் தினசரி திட்ட அட்டவணையைப் பார்க்கலாம், நிகழ்வுகளைக் கிளிக் செய்து அவற்றைத் திருத்தலாம், புதிய நிகழ்வுகளை உருவாக்கலாம், வரவிருக்கும் நிகழ்வுகளுக்குச் செல்லலாம்.
    • Keep: சரிபார்ப்புப் பட்டியலை உருவாக்கி குறிப்புகள் எடுக்கலாம்.
    • Tasks: செய்ய வேண்டியவற்றையும் காலக்கெடுகளையும் சேர்க்கலாம்.
  5. பக்கவாட்டுப் பேனல் திறந்திருக்கும்போதே உங்கள் விளக்கக்காட்சிக்குச் செல்ல, இந்த ஷார்ட்கட்களைப் பயன்படுத்தவும்:
    • Windows: Ctrl + Alt + . (முற்றுப்புள்ளி) அல்லது Ctrl + Alt + , (காற்புள்ளி)
    • Chromebook: Alt + Shift + . (முற்றுப்புள்ளி) அல்லது Alt + Shift + , (காற்புள்ளி)
    • Mac: ⌘ + Option + . (முற்றுப்புள்ளி) அல்லது ⌘ + Option + , (காற்புள்ளி)
  6. பக்கவாட்டுப் பேனலை மூட, மூடுக என்பது காட்டப்படும் வரை Shift + Tab அழுத்தி, பிறகு Enter பட்டனை அழுத்தவும்.

Docs, Sheets, Slides ஆகியவற்றுடன் Calendar, Keep & Tasksஸை எப்படிப் பயன்படுத்துவது என்பது குறித்து மேலும் அறிக.

 

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
3804129447356244233
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
35
false
false