ஸ்கிரீன் ரீடரைக் கொண்டு ஆவணங்களைத் திருத்துதல்

ChromeVox, NVDA, JAWS, VoiceOver போன்ற 'எழுத்திலிருந்து பேச்சு உரையாடலுக்கான' ஸ்கிரீன் ரீடரைப் பயன்படுத்தி உங்கள் கம்ப்யூட்டரில் ஆவணங்களைத் திருத்தலாம்.

முதலில், நீங்கள் Docs ஸ்கிரீன் ரீடர் உதவி இயக்கப்பட்டுள்ளதை உறுதிசெய்து கொள்ளுங்கள்.

நீங்கள் தொடு பயன்முறையைக் கொண்ட விண்டோஸ் கம்ப்யூட்டர் அல்லது Chromebook பயன்படுத்துகிறீர்கள் எனில் ஸ்கிரீன் ரீடரில் தொடு பயன்முறையைப் பயன்படுத்துவதற்கான உதவிக்குறிப்புகளைப் பின்பற்றவும்.

உங்கள் ஆவணம் முழுவதும் செல்லுதல்

நீங்கள் ஆவணத்தைத் திறக்கும்போது, உங்கள் கவனம் முதன்மை திருத்தும் பகுதியின் ஆரம்பத்தில் மையப்படுத்தி இருக்கும். நீங்கள் ஆவணத்தில் டைப் செய்யும்போதும் வெவ்வேறு பகுதிகளுக்குச் செல்லும்போதும் அதுபற்றி வார்த்தை விளக்கம் கேட்கும்.

கீபோர்ட் ஷார்ட்கட்களைப் பயன்படுத்துதல்

Docs வழக்கமான இணையதளத்தில் இருந்து மாறுபட்டது, அதனால் சில வழக்கமான ஸ்கிரீன் ரீடர் ஷார்ட்கட்கள் பொருந்தாது. இன்னும் சிறந்த அனுபவத்திற்கு, உங்கள் ஆவணத்தைத் திருத்தும்போது Docs ஷார்ட்கட்களைப் பயன்படுத்தவும்.

எடுத்துக்காட்டாக, விரைவாகச் செல்ல, ஆவணங்களில் "அடுத்து" மற்றும் "முந்தையது" ஷார்ட்கட்டுகளைப் பயன்படுத்தலாம்:

  • "அடுத்து" ஷார்ட்கட்டுகள்: இவை கவனப் பகுதியை முன்னோக்கி நகர்த்தும். Ctrl + Alt + n (Windows, Chrome OS) அல்லது Ctrl + ⌘ + n (Mac)ஐத் தொடர்ந்து தலைப்புகளுக்கு h அல்லது இணைப்புகளுக்கு l போன்று மற்றொரு பட்டனை அழுத்தவும். எடுத்துக்காட்டாக, அடுத்த தலைப்புக்குச் செல்ல, Ctrl + Altஐ பிடித்துக் கொண்டு n பிறகு hஐ அழுத்தவும்.
  • "முந்தையது" ஷார்ட்கட்டுகள்: இவை கவனப் பகுதியை பின்னோக்கி நகர்த்தும். Ctrl + Alt + p (Windows, Chrome OS) அல்லது Ctrl + ⌘ + p (Mac)ஐத் தொடர்ந்து மற்றொரு பட்டனை அழுத்தவும். எடுத்துக்காட்டாக, முந்தைய தலைப்புக்குச் செல்ல, Ctrl + Altஐ பிடித்துக் கொண்டு p பிறகு hஐ அழுத்தவும்.

உங்கள் ஆவணங்களில் ஷார்ட்கட்களின் பட்டியலைத் திறக்க, Ctrl + / (Windows, Chrome OS) அல்லது ⌘ + / (Mac) ஐ அழுத்தவும். செருகு அல்லது அடுத்து போன்ற செயல்பாடுகளைத் தேடலாம். உங்கள் ஆவணத்திற்குத் திரும்ப, Escape என்பதை அழுத்தவும்.

மெனுக்களைத் தேடுவதன் மூலம் விரைவாகச் செயல்படுதல்

  1. Alt + / (Windows, Chrome OS) அல்லது Option + / (Mac) என்பதை அழுத்தவும்.
  2. பெயர் மாற்று, செருகு போன்ற கட்டளையை டைப் செய்யவும். 
  3. தேடல் முடிவுகளைக் கேட்க, கீழ்நோக்கிய அம்புக்குறியை அழுத்தவும். உதாரணமாக, செருகு என நீங்கள் டைப் செய்யும்போது அதற்கான விருப்பங்களில் படத்தைச் சேர்த்தல், கருத்து தெரிவித்தல் ஆகியவையும் பிற விருப்பத்தேர்வுகளும் அடங்கும். 
  4. ஒரு செயலைத் தேர்வுசெய்ய, Enter பட்டனை அழுத்தவும்.

மெனுக்கள், முதல்-நிலை பட்டன்கள், கருவிப்பட்டி ஆகியவற்றைப் பயன்படுத்துதல்

கவனத்திற்கு: மேலே பட்டன்களும் மெனுக்களும் இல்லையெனில் Ctrl + Shift + f (Windows, Chrome OS அல்லது Mac) அழுத்தவும்.

மெனுக்களை உலாவ:

  1. உங்கள் உலாவிக்கான ஷார்ட்கட் பட்டனைப் பயன்படுத்தி ஃபைல் மெனுவைத் திறக்கவும்:
    • Windows உடன் கூடிய Chrome உலாவி: Alt + f
    • Windowsஸில் பிற உலாவிகளில்: Alt + Shift + f
    • Chrome OS: Alt + f
    • Mac: Ctrl + Option + Tab பட்டன்களை அழுத்திவிட்டு Ctrl + Option + f பட்டன்களை அழுத்தவும்
  2. திருத்து, காட்டு, செருகு, வடிவமை, கருவிகள், அட்டவணை, செருகு நிரல்கள், உதவி, அணுகலம்சங்கள் உள்ளிட்ட பிற மெனுக்களைப் பார்க்க வலது அம்புக்குறியை அழுத்தவும்.

உதவிக்குறிப்பு: உதவி பெற, உதவி மெனுவைத் திறந்து உதவி என்பதைத் தேர்ந்தெடுக்கவும். தேடல் பெட்டிக்குச் செல்ல Tab பட்டனை அழுத்தி, பிறகு படங்கள் போன்ற தேடல் வார்த்தையை டைப் செய்து Enter பட்டனை அழுத்தவும். நீங்கள் வாசிக்கவோ பிற தலைப்புகளுக்குச் செல்லவோ கூடிய ஒரு பெட்டியில் உதவி திறக்கும். ஆவணத்திற்குத் திரும்ப, எஸ்கேப் என்பதை அழுத்தவும்.

மெனுக்களில் இருந்து, கட்டுப்பாடுகளின் இரண்டு பிற அமைப்புகளுக்கும் நீங்கள் நகரலாம்:

  • முதல்-நிலை பட்டன்கள்: பெயர் மாற்றுதல், நட்சத்திரமிடுதல், பகிர்தல், ஆவணத்தை வேறு ஃபோல்டருக்கு நகர்த்துதல் போன்ற ஆவணம் சார்ந்த செயல்களுக்கு இந்த பட்டன்கள் பயன்படுகின்றன. மெனுக்களில் இருந்து Shift + Tab என்பதை அழுத்தவும்.
  • கருவிப்பட்டி: கருவிப்பட்டியானது தலைப்பு நடைகள், பட்டியல்கள், ஓரஇடம் போன்ற திருத்திமைத்தல் மற்றும் வடிவமைத்தல் விருப்பங்களைக் கொண்டிருக்கும். மெனுக்களில் இருந்து Tab பட்டனை அழுத்தவும்.

அணுகல்தன்மை மெனுவைப் பயன்படுத்தி உங்கள் ஆவணத்தை வாசித்தல் அல்லது நகர்த்துதல்

  1. உங்கள் உலாவிக்கான ஷார்ட்கட் பட்டனைப் பயன்படுத்தி அணுகல்தன்மை மெனுவைத் திறக்கவும்:
    • Windows உடன் கூடிய Chrome உலாவி: Alt + a
    • Windowsஸில் பிற உலாவிகளில்: Alt + Shift + a
    • Chrome OS: Alt + a
    • Mac: Ctrl + Option + Tab பட்டன்களை அழுத்திவிட்டு Ctrl + Option + a பட்டன்களை அழுத்தவும்
  2. பேசுதல், கருத்துகள் மற்றும் பல விருப்பங்களைக் கேட்க, கீழ்நோக்கிய அம்புக்குறியை அழுத்தவும்.
  3. வலது அம்புக்குறியை அழுத்தி துணை மெனுவைத் திறந்து அதிலுள்ள விருப்பங்களைப் பார்க்க கீழ்நோக்கிய அம்புக்குறியை அழுத்தவும்.
  4. ஒரு விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க Enter பட்டனை அழுத்தவும்.

திருத்தல் மற்றும் வடிவமைத்தல் அடிப்படைகள்

உங்கள் ஆவணத்தில், நீங்கள் வார்த்தை மற்றும் படங்களைச் சேர்க்க, திருத்த மற்றும் நீக்க முடியும்.

படம், அட்டவணை, அடிக்குறிப்பைச் சேர்த்தல்

  1. படம், அட்டவணை அல்லது அடிக்குறிப்பைச் சேர்க்க விரும்பும் இடத்தில் கர்சரை நிறுத்தவும்.
  2. மெனுக்களைத் தேட Alt + / (Windows, Chrome OS) அல்லது Option + / (Mac) என்பதை அழுத்தவும்.
  3. நீங்கள் சேர்க்கக்கூடிய ஆவணங்களின் பட்டியலைப் பெற, செருகு என டைப் செய்யவும்.
  4. பட்டியலில் உள்ளவற்றைப் பார்க்க அம்புக்குறி பட்டன்களைப் பயன்படுத்தவும்.
  5. தேர்வுசெய்ய Enter பட்டனை அழுத்தவும்.

வடிவமைத்தலைத் தெரிவித்தல் அல்லது மாற்றுதல்

உங்கள் கர்சரின் தற்போதைய இடத்தின் வார்த்தை அல்லது பத்தி வடிவமைப்பைத் தெரிவிக்க Ctrl + Alt + a அழுத்தி, பிறகு f (Windows, Chrome OS) அழுத்தவும் அல்லது Ctrl + ⌘ + a அழுத்தி, பிறகு f (Mac) அழுத்தவும். 

நீங்கள் பயன்படுத்தக் கூடிய வடிவமைப்பு ஸ்டைல்களைப் பார்க்க மெனு பட்டியில் உள்ள வடிவமை மெனுவைத் திறக்கவும்:

  1. உங்கள் உலாவிக்கான ஷார்ட்கட் பட்டனைப் பயன்படுத்தி ‘வடிவமை’ மெனுவைத் திறக்கவும்:
    • Windowsஸில் Chrome உலாவியில்: Alt + o
    • Windowsஸில் பிற உலாவிகளில்: Alt + Shift + o 
    • Chrome OS: Alt + o
    • Mac: Ctrl + Option + Tab பட்டன்களை அழுத்திவிட்டு Ctrl + Option + o பட்டன்களை அழுத்தவும்
  2. கீழ்நோக்கிய அம்புக்குறியை அழுத்தி விருப்பங்களைக் கேட்டுவிட்டு, தேர்ந்தெடுக்க Enter அழுத்தவும்.

எவ்வாறு ஆவணங்களை உருவாக்குவது, திருத்துவது மற்றும் வடிவமைப்பது என்பது பற்றி மேலும் அறிக.

வார்த்தையைக் கண்டுபிடித்து மாற்றுதல்

உங்கள் ஆவணத்தில் விரைவாகத் தேடுதல்

  1. Ctrl + f (Windows) அல்லது ⌘ + f (Mac)ஐ அழுத்தவும். நீங்கள் டைப் செய்யும்போதே உடனடியாக முடிவுகள் கண்டுபிடிக்கப்படும்.
  2. தொடர்ந்து ஆவணத்தில் தேட உள்ளிடு என்பதை அழுத்தவும்.

வார்த்தையைக் கண்டுபிடித்து மாற்றுதல்

  1. Ctrl + h (Windows, Chrome OS) அல்லது ⌘ + Shift + h (Mac)ஐ அழுத்தவும்.
  2. "கண்டுபிடி" புலத்தில் நீங்கள் இடமறிய விரும்பும் வார்த்தையை உள்ளிடவும்.
  3. நீங்கள் மாற்ற விரும்பும் வார்த்தையை "மாற்றியமை" புலத்தில் உள்ளிடவும்.
  4. வார்த்தையைக் கண்டுபிடித்து மாற்ற மாற்று, அனைத்தையும் மாற்று, முந்தையது மற்றும் அடுத்து பட்டன்களைப் பயன்படுத்தவும்.
  5. உரையாடலில் இருந்து வெளியேற, Escape அழுத்தவும்.
  6. உங்கள் தேடலைத் தொடர, Ctrl + h (Windows, Chrome OS) அல்லது ⌘ + Shift + h (Mac)ஐ அழுத்தவும்.

ஆவணத்தை எழுத்துப் பிழை சரிபார்த்தல்

உங்கள் ஆவணத்தில் Docs தானாகவே எழுத்துப் பிழைகளைக் கண்டறியும்.

  1. அடுத்த எழுத்துப் பிழைக்குச் செல்ல, Ctrl + தனி மேற்கோள் குறி (Windows, Chrome OS) அல்லது⌘ + தனி மேற்கோள் குறி (Mac)ஐ அழுத்தவும்.
  2. முந்தைய எழுத்துப் பிழைக்குச் செல்ல Ctrl + அரைப்புள்ளி (Windows, Chrome OS) அல்லது ⌘ + அரைப்புள்ளி (Mac)ஐ அழுத்தவும்.
  3. எழுத்துப் பிழையைத் திருத்த Ctrl + Shift + x (Windows, Chrome OS) அல்லது ⌘ + Shift + x (Mac) அழுத்தியபடி சூழல் மெனுவைத் திறக்கவும். சூழல் மெனுவில் இருந்து சரியாக உச்சரிக்கப்பட்ட பரிந்துரையைத் தேர்ந்தெடுத்து Enter பட்டனை அழுத்தவும்.

எழுத்துப் பிழை சரிபார்த்தல் மற்றும் தானியங்கு திருத்தல் பற்றி மேலும் அறிக.

படம் அல்லது வரைபடத்தில் மாற்று வார்த்தைகளைச் சேர்த்தல்

  1. படம் அல்லது வரைபடத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
  2. Ctrl + Alt + y (Windows, Chrome OS) அல்லது ⌘ + Option + y (Mac) அழுத்தவும்.
  3. மாற்று வார்த்தைகள் உரையாடலில் படத்திற்கான விளக்கத்தை உள்ளிட்டுவிட்டு Enter பட்டனைத் தேர்ந்தெடுக்கவும்.

உங்கள் ஆவணத்தில் பரிந்துரைக்கப்பட்ட உள்ளடக்கத்தைக் காணுதல்

  1. உங்கள் ஆவணத்தில் ஆய்வுப் பகுதியைத் திறந்து Ctrl + Alt + Shift + i (Windows, Chrome OS) அல்லது ⌘ + Option + Shift + i (Mac)ஐ அழுத்தவும்.
  2. உங்கள் ஆவணத்தில் பயன்படுத்தக்கூடிய படங்கள் அல்லது தகவல்களைக் கண்டறிய உங்கள் ஸ்கிரீன் ரீடர் பட்டன்களைப் பயன்படுத்தி, கண்டறிவதற்கான பகுதிக்குச் செல்லவும்.
    • உதவிக்குறிப்பு: பரிந்துரைகள் எதுவும் இல்லையெனில் உங்கள் ஆவணத்தில் கூடுதல் உள்ளடக்கத்தைச் சேர்க்கவும்.
  3. உங்கள் ஆவணங்களிலும் இணையத்திலும் தேட, தேடல் பட்டியில் தேடல் வார்த்தையை டைப் செய்துவிட்டு Enter பட்டனை அழுத்தவும்.

Calendar, Keep & Tasksஸைப் பார்த்தல்

Docs, Sheets, Slides ஆகியவற்றைப் பயன்படுத்தும்போது பக்கவாட்டுப் பேனலில் Google Calendar, Keep, Tasks ஆகியவற்றைப் பயன்படுத்தலாம். இயல்புநிலையாக, பக்கவாட்டு பேனலில் இருக்கும் கருவிகள் சுருக்கப்பட்டிருக்கும். பக்கவாட்டுப் பேனலுக்குச் சென்று கருவிகளில் ஒன்றை விரிவாக்க இந்த வழிமுறைகளைப் பின்பற்றவும்:

  1. பக்கவாட்டுப் பேனலுக்குச் செல்ல இந்த ஷார்ட்கட்களைப் பயன்படுத்தவும்:
    • Windows: Ctrl + Alt + . (முற்றுப்புள்ளி) அல்லது Ctrl + Alt + , (காற்புள்ளி)
    • Chromebook: Alt + Shift + . (முற்றுப்புள்ளி) அல்லது Alt + Shift + , (காற்புள்ளி)
    • Mac: ⌘ + Option + . (முற்றுப்புள்ளி) அல்லது ⌘ + Option + , (காற்புள்ளி)
  2. பக்கவாட்டுப் பேனலில் Calendar, Keep, Tasks ஆகிய கருவிகளின் பட்டியலைப் பார்க்க மேல் அல்லது கீழ்நோக்கிய அம்புக்குறியை அழுத்தவும்.
  3. நீங்கள் பயன்படுத்த விரும்பும் கருவியை விரிவாக்க Enter அழுத்தவும்.
  4. பக்கவாட்டு பேனலில், உங்கள் ஆவணத்தில் இருந்து வெளியேறாமலேயே இப்போது பின்வரும் நடவடிக்கைகளைச் செய்யலாம்:
    • Calendar: உங்கள் தினசரி திட்ட அட்டவணையைப் பார்க்கலாம், நிகழ்வுகளைக் கிளிக் செய்து அவற்றைத் திருத்தலாம், புதிய நிகழ்வுகளை உருவாக்கலாம், வரவிருக்கும் நிகழ்வுகளுக்குச் செல்லலாம்.
    • Keep: சரிபார்ப்புப் பட்டியலை உருவாக்கி குறிப்புகள் எடுக்கலாம்.
    • Tasks: செய்ய வேண்டியவற்றையும் காலக்கெடுகளையும் சேர்க்கலாம்.
  5. பக்கவாட்டுப் பேனல் திறந்திருக்கும்போதே உங்கள் ஆவணத்திற்குச் செல்ல, இந்த ஷார்ட்கட்களைப் பயன்படுத்தவும்:
    • Windows: Ctrl + Alt + . (முற்றுப்புள்ளி) அல்லது Ctrl + Alt + , (காற்புள்ளி)
    • Chromebook: Alt + Shift + . (முற்றுப்புள்ளி) அல்லது Alt + Shift + , (காற்புள்ளி)
    • Mac: ⌘ + Option + . (முற்றுப்புள்ளி) அல்லது ⌘ + Option + , (காற்புள்ளி)
  6. பக்கவாட்டுப் பேனலை மூட, மூடுக என்பது காட்டப்படும் வரை Shift + Tab அழுத்தி, பிறகு Enter பட்டனை அழுத்தவும்.

Docs, Sheets, Slides ஆகியவற்றுடன் Calendar, Keep & Tasksஸை எப்படிப் பயன்படுத்துவது என்பது குறித்து மேலும் அறிக.

 

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
4516181751337996338
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
35
false
false