ஸ்க்ரீன் ரீடர் மூலம் விரிதாள்களைத் திருத்து

ஸ்க்ரீன் ரீடரைப் பயன்படுத்தி உங்கள் கம்ப்யூட்டரில் விரிதாள்களைத் திருத்தலாம்.

முதலில், நீங்கள் Docs ஸ்க்ரீன் ரீடர் உதவி இயக்கப்பட்டுள்ளதை உறுதிசெய்க.

நீங்கள் விண்டோஸ் கம்ப்யூட்டரை அல்லது தொடு உள்ளீடு கொண்ட Chromebook பயன்படுத்துகிறீர்கள் எனில், ஸ்க்ரீன் ரீடரில் தொடு உள்ளீடு பயன்படுத்துவதற்கான உதவிக்குறிப்பைப் பின்தொடரவும்.

உங்கள் விரிதாள் முழுவதிலும் அசைவுகள் மேற்கொள்ளவும்

நீங்கள் விரிதாளைத் திறக்கையில், உங்கள் கவனம் முதல் கலத்தில் தான் மையப்படுத்தி இருக்கும். விரிதாளில் அசைகையில், ஸ்க்ரீன் ரீடர் ஒவ்வொரு கலத்தின் முகவரி மற்றும் உள்ளடக்கங்களை விரிவுபடுத்தும். எடுத்துக்காட்டாக, கலம் C4 ஆனது "நியூ யார்க் நகரம்" என்பதைக் கொண்டிருந்தால், ஸ்க்ரீன் ரீடர் அதனை "நியூ யார்க் நகரம் C4" என வாசிக்கும்.

கீபோர்ட் ஷார்ட்கட் பயன்படுத்துக

தாள்கள் வழக்கமான இணையதளத்தில் இருந்து மாறுபட்டது, அதனால் சில நிலையான ஸ்க்ரீன் ரீடர் ஷார்ட்கட் பொருந்தாது. இன்னும் சிறந்த அனுபவத்திற்கு, உங்கள் விரிதாள்களைத் திருத்துகையில் Sheets ஷார்ட்கட் இணைப்பைப் பயன்படுத்தவும்.

உங்கள் விரிதாள்களில் ஷார்ட்கட் பட்டியலைத் திறக்க, Ctrl + / (Windows, Chrome OS) அல்லது ⌘ + / (Mac) ஐ அழுத்தவும். move அல்லது columns போன்ற செயல்பாடுகளைத் தேடலாம். உங்கள் விரிதாளுக்குத் திரும்ப, Escape என்பதை அழுத்தவும்.

மெனுக்களைத் தேடுவதன் மூலம் விரைவாகச் செயல்படுங்கள்

  1. Alt + / (Windows, Chrome OS) அல்லது Option + / (Mac) என்பதை அழுத்தவும்.
  2. Rename அல்லது Insert போன்ற கட்டளைகளைத் தட்டச்சு செய்யவும். 
  3. தேடல் முடிவுகளைக் கேட்க கீழ்நோக்கிய அம்புக்குறியை அழுத்தவும். எடுத்துக்காட்டாக, நீங்கள் Insert என்பதை தட்டச்சு செய்கையில், விருப்பங்களில் வரிசைகளைச் சேர்த்தல், கருத்துக்கள் மற்றும் பிற விருப்பத்தேர்வுகளும் அடங்கும். 
  4. ஒரு நடவடிக்கையைத் தேர்ந்தெடுக்க, Enter என்பதை அழுத்தவும்.

மெனுக்கள், முதல்-நிலை பட்டன்கள் மற்றும் கருவிப்பட்டியைப் பயன்படுத்தவும்

குறிப்பு: மேலே பட்டன்கள் மற்றும் மெனுக்கள் இல்லையெனில், Ctrl + Shift + f (Windows, Chrome OS, அல்லது Mac) என்பதை அழுத்தவும்.

மெனுக்களை உலாவ:

  1. உங்கள் உலாவிக்கான ஷார்ட்கட் விசையைப் பயன்படுத்தி கோப்பு மெனுவைத் திறக்கவும்:
    • Windows உடன் கூடிய Chrome உலாவி: Alt + f
    • Windows உடன் பிற உலாவிகள்: Alt + Shift + f
    • Chrome OS: Alt + f
    • Mac: முதலில் Ctrl + Option + Tab ஆகிய விசைகளை அழுத்தி, பிறகு Ctrl + Option + f என்பதை அழுத்தவும்
  2. திருத்து, மாற்று, செருகு, வடிவமை, தரவு, கருவிகள், செருகு நிரல், உதவி மற்றும் அணுகலம்சங்கள் உள்ளிட்ட பிற மெனுக்களை ஆராய வலது அம்புக்குறியை அழுத்தவும்.

உதவிக்குறிப்பு: உதவிப் பெற, உதவி மெனுவைத் திறந்து Sheets உதவி என்பதைத் தேர்ந்தெடுக்கவும். தேடல் பெட்டிக்குச் செல்ல தாவல் என்பதை அழுத்தி, பிறகுசூத்திரங்கள் போன்றவற்றை தேடலில் தட்டச்சு செய்து, பின் Enter என்பதை அழுத்தவும். நீங்கள் வாசிக்கவோ அல்லது பிற தலைப்புகளுக்குச் செல்லவோ கூடிய ஒரு பெட்டியில் உதவி திறக்கும். விரிதாளுக்குத் திரும்ப, Escape என்பதை அழுத்தவும்.

மெனுக்களில் இருந்து, கட்டுப்பாடுகளின் இரண்டு பிற அமைப்புகளுக்கும் நீங்கள் நகரலாம்:

  • முதல்-நிலை பட்டன்கள்: இந்த பட்டன்கள் பெயர் மாற்றுதல், நட்சத்திரமிடல், பகிர்தல், அல்லது விரிதாளை வேறு கோப்புறைக்கு நகர்த்தல் போன்ற விரிதாள்-நிலை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக ஆகும். மெனுக்களில் இருந்து Shift + Tab என்பதை அழுத்தவும்.
  • கருவிப்பட்டி: கருவிப்பட்டியானது எழுத்துரு மற்றும் சீரமைத்தல் போன்ற திருத்திமைத்தல் மற்றும் வடிவமைத்தல் விருப்பங்களைக் கொண்டிருக்கும். மெனுக்களில் இருந்து Tab என்பதை அழுத்தவும்.

அணுகலம்சங்கள் மெனுவைப் பயன்படுத்தி உங்கள் விரித்தாளை வாசியுங்கள் அல்லது நகர்த்துங்கள்

  1. உங்கள் உலாவிக்கான ஷார்ட்கட் விசையைப் பயன்படுத்தி அணுகலம்சங்கள் மெனுவைத் திறக்கவும்:
    • Windows உடன் கூடிய Chrome உலாவி: Alt + a
    • Windows உடன் பிற உலாவிகள்: Alt + Shift + a
    • Chrome OS: Alt + a
    • Mac: முதலில் Ctrl + Option + Tab ஆகிய விசைகளை அழுத்தி, பிறகு Ctrl + Option + a என்பதை அழுத்தவும்
  2. பேசு, வரிம்பிற்குச் செல், மற்றும் பல தேடல் விருப்பங்களைக் கேட்க கீழ்நோக்கிய அம்புக்குறியை அழுத்தவும்.
  3. கீழ்நோக்கிய அம்புக்குறியைப் பயன்படுத்தி துணை-மெனுவைத் திறந்து, துணை-மெனுவில் இருக்கும் விருப்பங்களை ஆராய கீழ்நோக்கிய அம்புக்குறியை அழுத்தவும்.
  4. விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க Enter என்பதை அழுத்தவும்.

திருத்தல் மற்றும் வடிவமைத்தல் அடிப்படைகள்

ஒரு கலத்தின் உள்ளடக்கங்களைத் திருத்த, மையப்படுத்தப்பட்ட கலத்தின் மீது Enterஐ அழுத்தவும். உங்கள் மாற்றங்களைத் தட்டச்சு செய்து, பின் மாற்ற Enterஐ அழுத்தவும் அல்லது ரத்துசெய்ய Escapeஐ அழுத்தவும்.

கல வடிவமைத்தல் மற்றும் உள்ளடக்கங்களைக் கேட்க

விரிதாளில் அசைகையில், கலங்களின் உள்ளடக்கங்கள் பற்றிய தொடர்புடைய அறிவுப்புகளைக் கேட்பீர்கள். எடுத்துக்காட்டாக, ஒரு கலமானது இணைப்புகள், குறிப்புகள், தரவு சரிபார்ப்பு, அல்லது வடிப்பான்களைக் கொண்டிருந்தால் ஸ்க்ரீன் ரீடர் அதை உங்களுக்குச் சொல்லும்.

  • இணைப்புகள்: இணைப்பைத் தொடர, Alt + Enter (Windows) அல்லது Option + Enter (Mac) என்பதை அழுத்தவும்.
  • குறிப்புகள்: மையப்படுத்தப்பட்ட கலத்தில் குறிப்பைச் சேர்க்க அல்லது திருத்த, Shift + F2 (Windows, Mac) அல்லது Shift + Search + 2 (Chrome OS) என்பதை அழுத்தவும். அதன்பிறகு தோன்றும் சாளரத்தில், உங்கள் குறிப்பைத் தட்டச்சு செய்து, பிறகு Escape என்பதை அழுத்தவும். குறைப்பை நீக்க, குறிப்பில் உள்ள மொத்த உரையையும் நீக்கவும்.
  • தரவு சரிபார்ப்பு: தரவு சரிப்பார்ப்பு முடிவில் தவறான உள்ளடக்கங்களைக் கலம் கொண்டிருந்தால் அதை நீங்கள் கேட்பீர்கள்.
  • வடிகட்டல்: வடிகட்டப்படாத கலங்களின் வரம்புகளில் இருந்து வடிகட்டப்பட்ட வரம்பிற்கு நகர்கையில், நீங்கள் வடிகட்டப்பட்ட பகுதிக்கு வந்ததைக் கேட்பீர்கள்.

பேசு மெனுவைப் பயன்படுத்த

நீங்கள் தேர்ந்தெடுத்த கலத்தின் வடிவமைப்புப் பற்றிய தகவலைப் பெறவோ அல்லது வரிசை அல்லது நெடுவரிசையின் உள்ளடக்கங்களைக் கேட்க நீங்கள் பேசு மெனுவைப் பயன்படுத்தலாம். உங்கள் விரித்தாளை எப்போது பேசு வடிவமைப்பிலும் நீங்கள் அமைக்கலாம்.

  1. உங்கள் உலாவிக்கான ஷார்ட்கட் விசையைப் பயன்படுத்தி அணுகலம்சங்கள் மெனுவைத் திறக்கவும்:
    • Windows உடன் கூடிய Chrome உலாவி: Alt + a
    • Windows உடன் பிற உலாவிகள்: Alt + Shift + a 
    • Chrome OS: Alt + a
    • Mac: முதலில் Ctrl + Option + Tab ஆகிய விசைகளை அழுத்தி, பிறகு Ctrl + Option + a என்பதை அழுத்தவும்
  2. பேசு என்பதைத் தேர்ந்தெடுங்கள்.
  3. கீழ்நோக்கிய அம்புக்குறி விசையைப் பயன்படுத்தி மெனுவிற்குச் சென்று Enter விசையை அழுத்தி விருப்பத்தைத் தேர்ந்தெடுங்கள்.

கல வடிவமைப்பை மாற்ற

ஒரு முழு கலத்தின் வடிவமைப்பையோ அல்லது கலத்தின் குறிப்பிட்ட பகுதிகளின் வடிவமைப்பையோ நீங்கள் மாற்றலாம்.

  • ஒரு முழு கலத்தின் வடிவமைப்பை மாற்ற, கலத்தைத் தேர்ந்தெடுங்கள். 
  • ஒரு குறிப்பிட்ட பகுதியை மாற்ற (எடுத்துக்காட்டாக, ஓர் ஒற்றை வார்த்தையை தடிமனாக்க) Enter ஐ அழுத்தி, பிறகு Shiftஐ அழுத்திப் பிடித்து நீங்கள் மாற்ற விரும்பும் பகுதியை அம்புக்குறி விசைகளைப் பயன்படுத்தித் தேர்ந்தெடுங்கள். 

வடிவமைப்புப் பாணிகளை ஆராய

  1. உங்கள் உலாவிக்கான ஷார்ட்கட் விசையைப் பயன்படுத்தி வடிவமை மெனுவைத் திறக்கவும்:
    • Windows உடன் கூடிய Chrome உலாவி: Alt + o
    • Windows உடன் பிற உலாவிகள்: Alt + Shift + o  
    • Chrome OS: Alt + o
    • Mac: முதலில் Ctrl + Option + Tab ஆகிய விசைகளை அழுத்தி, பிறகு Ctrl + Option + a என்பதை அழுத்தவும் 
  2. கீழ்நோக்கிய அம்புக்குறியைப் பயன்படுத்தி விருப்பங்களைக் கேட்டு, பிறகு தேர்ந்தெடுக்க Enter என்பதை அழுத்தவும்.
  3. தேர்ந்தெடுக்கப்பட்ட கலத்தின் வடிவமைப்பை நீக்க Ctrl + \ (Windows) அல்லது ⌘ + \ (Mac) என்பதை அழுத்தவும்.

கலங்களைத் திருத்தல் மற்றும் வடிவமைத்தல் பற்றி மேலும் அறிக.

தாளை நகல், நகலெடு அல்லது பெயர் மாற்று

தாள் மெனு மூலம் நகல், நகலெடுத்தல் அல்லது பெயர் மாற்றல் போன்ற பல்வேறுபட்ட நடவடிக்கைகளை செயல்பாட்டு தாளில் செயல்படுத்தலாம். 
  1. Alt + Shift + s (Windows) அல்லது Option + Shift + s (Mac)ஐ அழுத்தவும்.
  2. கீழ்நோக்கிய அம்புக்குறியைப் பயன்படுத்தி விருப்பங்களில் சென்று, பிறகு தேர்ந்தெடுக்க Enter என்பதை அழுத்தவும்.

விரித்தாளில் பல தாள்களில் பணி செய்ய

  1. Alt + Shift + k (Windows, Chrome OS) அல்லது Option + Shift + k (Mac)ஐ அழுத்தவும்.
  2. பட்டியல் முழுவதையும் காண மேல் மற்றும் கீழ் அம்புக்குறிகளைப் பயன்படுத்தவும்.
  3. ஒரு தாளிற்குச் செல்ல, Enterஐ அழுத்தவும். 

கலங்களைத் தேர்ந்தெடுத்து அதன் வரம்பிற்குள் பணிபுரியுங்கள்

  1. வரம்பில் சேர்க்க விரும்பும் முதல் கலத்திற்குச் செல்க.
  2. Shiftஐ அழுத்திப் பிடித்து கலங்களின் வரம்பைத் தேர்ந்தெடுக்க அம்புக்குறி விசைகளைப் பயன்படுத்தவும்.

வரம்பைத் தேர்ந்தெடுத்தப் பிறகு, வரம்பிற்குள் உங்கள் மையப்படுத்தலை செலுத்த பின்வரும் ஷார்ட்கட்டுகளைப் பயன்படுத்தவும்:

  • Enter: மேலிருந்து கீழ் செல்ல.
  • Shift + Enter: கீழிருந்து மேலே செல்ல.
  • Tab: இடமிருந்து வலம் செல்ல.
  • Shift + Tab: வலமிருந்து இடம் செல்ல.

உங்கள் வரம்பின் தேர்வு நீக்காமலேயே கலத்தைத் திருத்த, F2 (Windows, Mac) அல்லது Search + 2 (Chrome OS)ஐ அழுத்தவும்.

நெடுவரிசைகள் மற்றும் வரிசைகளைச் சேர்க்க, நீக்க அல்லது நகர்த்த

வரிசைகள் அல்லது நெடுவரிசைகளைத் தேர்ந்தெடுங்கள்

  1. வரிசை அல்லது நெடுவரிசையில் நீங்கள் தேர்தெடுக்க விரும்பும் கலத்திற்கு செல்க.
  2. ஒரு வரிசையைத் தேர்ந்தெடுக்க, Shift + Spaceஐ அழுத்தவும். ஒரு நெடுவரிசையைத் தேர்ந்தெடுக்க, Ctrl + Spaceஐ அழுத்தவும்.
  3. கூடுதல் வரிசைகள் அல்லது நெடுவரிசைகளைத் தேர்ந்தெடுக்க, Shift மற்றும் அம்புக்குறி விசைகளைத் தேர்ந்தெடுக்கவும்.

வரிசைகள் அல்லது நெடுவரிசைகள் சேர்க்க

  1. புதிய வரிசை அல்லது நெடுவரிசை சேர்க்க விரும்பும் கலத்தைத் தேர்ந்தெடுங்கள்.
    • உதவிக்குறிப்பு: ஒரே நேரத்தில் பல வரிசைகள் அல்லது நெடுவரிசைகளைச் சேர்க்க, நீங்கள் சேர்க்க விரும்பும் வரிசைகள் அல்லது நெடுவரிசைகளின் அதே எண்ணிக்கையிலான கலங்களைத் தேர்ந்தெடுக்கவும். எடுத்துக்காட்டாக, மேலே இரண்டு வரிசைகளைச் செருக, வரிசைகள் 1 மற்றும் 2 இரண்டிலும் ஒரு கலத்தை முதலில் தேர்ந்தெடுக்கவும்.
  2. உங்கள் உலாவிக்கான ஷார்ட்கட் விசையைப் பயன்படுத்தி செருகு மெனுவைத் திறக்கவும்:
    • Windows உடன் கூடிய Chrome உலாவி: Alt + i
    • Windows உடன் பிற உலாவிகள்: Alt + Shift + i
    • Chrome OS: Alt + i
    • Mac: முதலில் Ctrl + Option + Tab ஆகிய விசைகளை அழுத்தி, பிறகு Ctrl + Option + i என்பதை அழுத்தவும்
  3. வரிசைகள் அல்லது நெடுவரிசைகளைச் செருக ஒரு விருப்பத்தைத் தேர்வு செய்யவும்.
  4. படி 1இல் பல கலங்களைத் தேர்ந்தெடுத்திருந்தால், பல வரிசைகள் அல்லது நெடுவரிசைகளைச் செருக செருகு மெனிவில் விருப்பங்கள் உள்ளது.

வரிகளையோ நெடுவரிசைகளையோ நீக்குதல்

  1. நீங்கள் நீக்க விரும்பும் வரிசைகள் அல்லது நெடுவரிசைகளில் இருந்து ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கலங்களைத் தேர்ந்தெடுக்கவும். நீங்கள் பல கலங்களைத் தேர்ந்தெடுத்தால், பல வரிசைகள் அல்லது நெடுவரிசைகளை ஒரே நேரத்தில் நீக்கலாம்.
  2. உங்கள் உலாவிக்கான ஷார்ட்கட் விசையைப் பயன்படுத்தி திருத்து மெனுவைத் திறக்கவும்:
    1. Windows உடன் கூடிய Chrome உலாவி: Alt + e
    2. Windows உடன் பிற உலாவிகள்: Alt + Shift + e 
    3. Chrome OS: Alt + e
    4. Mac: முதலில் Ctrl + Option + Tab ஆகிய விசைகளை அழுத்தி, பிறகு Ctrl + Option + e என்பதை அழுத்தவும்
  3. வரிசைகள் அல்லது நெடுவரிசைகளை நீக்க ஒரு விருப்பத்தைத் தேர்வு செய்யவும்.

வரிசைகளையோ நெடுவரிசைகளையோ நகர்த்தவும்

  1. நீங்கள் நகர்த்த விரும்பும் வரிசை அல்லது நெடுவரிசையில் இருந்து ஒரு கலத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
  2. நீங்கள் நகர்த்த விரும்பும் நெடுவரிசை (Ctrl + Space) அல்லது வரிசையைத் (Shift + Space) தேர்ந்தெடுக்கவும். பல வரிசைகள் அல்லது நெடுவரிசைகளைத் தேர்ந்தெடுக்க, Shift மற்றும் அம்புக்குறி விசைகளைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. உங்கள் உலாவிக்கான ஷார்ட்கட் விசையைப் பயன்படுத்தி திருத்து மெனுவைத் திறக்கவும்:
    1. Windows உடன் கூடிய Chrome உலாவி: Alt + e
    2. Windows உடன் பிற உலாவிகள்: Alt + Shift + e 
    3. Chrome OS: Alt + e
    4. Mac: முதலில் Ctrl + Option + Tab ஆகிய விசைகளை அழுத்தி, பிறகு Ctrl + Option + e என்பதை அழுத்தவும்
  4. நெடுவரிசைகள் அல்லது வரிசைகளை நகர்த்த விருப்பங்களில் ஒன்றைத் தேர்வு செய்யவும்.

நெடுவரிசைகள் மற்றும் வரிசைகளை மறை, காட்டு அல்லது நிலையாக்கு

வரிசைகள் அல்லது நெடுவரிசைகளை மறை

  1. நீங்கள் மறைக்க விரும்பும் வரிசை அல்லது நெடுவரிசையில் இருந்து ஒரு கலத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
  2. நீங்கள் மறைக்க விரும்பும் நெடுவரிசை (Ctrl + Space) அல்லது வரிசையைத் (Shift + Space) தேர்ந்தெடுக்கவும். பல வரிசைகள் அல்லது நெடுவரிசைகளைத் தேர்ந்தெடுக்க, Shift மற்றும் அம்புக்குறி விசைகளைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. Ctrl + Shift + \ஐ அழுத்துவதன் மூலம் சூழல் மெனுவைத் திறக்கவும்.
  4. நெடுவரிசையை மறை அல்லது வரிசையை மறை என்பதை அடையும் வரை கீழ் அம்புக்குறியை அழுத்தவும், பிறகு Enterஐ அழுத்தவும்.

வரிசைகள் அல்லது நெடுவரிசைகளை காட்டு

  1. மறைந்தவற்றைச் சுற்றியிருக்கும் நெடுவரிசைகள் அல்லது வரிசைகளைத் தேர்ந்தெடுக்கவும்.
  2. Ctrl + Shift + \ஐ அழுத்துவதன் மூலம் சூழல் மெனுவைத் திறக்கவும்.
  3. நெடுவரிசைகளைக் காட்டு அல்லது வரிசைகளைக் காட்டுஐத் தேர்ந்தெடுக்கவும்.

வரிசைகள் அல்லது நெடுவரிசைகளை நிலையாக்கு

எந்தவொரு தாளிலும் பத்து வரிசைகள் அல்லது நெடுவரிசைகள் வரையில் நிலையாக்க முடியும். வரிசைகள் மற்றும் நெடுவரிசைகளை நிலையாக்குதல் மீதமுள்ள வரித்தாள்களை நீங்கள் உருட்டும் வரையில் உங்களுடைய சில தரவை மேலே அல்லது முடிந்தவரையில் இடதுபக்கம் வைத்திருக்க உதவும்.

  1. உங்கள் உலாவிக்கான ஷார்ட்கட் விசையைப் பயன்படுத்தி பார்வை மெனுவைத் திறக்கவும்:
    • Windows உடன் கூடிய Chrome உலாவி: Alt + v
    • Windows உடன் பிற உலாவிகள்: Alt + Shift + v  
    • Chrome OS: Alt + v
    • Mac: முதலில் Ctrl + Option + Tab ஆகிய விசைகளை அழுத்தி, பிறகு Ctrl + Option + v என்பதை அழுத்தவும்
  2. வரிசைகளை நிலையாக்கு அல்லது நெடுவரிசைகளை நிலையாக்குஐத் தேர்ந்தெடுக்கவும். 
  3. கீழ் அம்புக்குறியை அழுத்தி பூஜ்ஜியம் முதல் 10 வரையிலான விருப்பங்களைக் கேட்டு, பிறகு தேர்ந்தெடுக்க Enterஐ அழுத்தவும்.

நிலையாக்கப்பட்ட பகுதிக்குள் மையப்படுத்தினால், நீங்கள் நிலையாக்கப்பட்ட வரிசைகள் அல்லது நெடுவரிசைகளுக்குள் இருப்பதை ஸ்க்ரீன் ரீடர் தெரிவிக்கும்.

சூத்திரங்கள், விளக்கப்படங்கள் அல்லது படங்களுடன் வேலை செய்தல்

சூத்திரத்தைச் சேர் அல்லது திருத்து

ஒரு கலத்திற்கு சூத்திரத்தைச் சேர்க்க, செயல்பாட்டின் பெயரைத் தொடர்ந்து சம குறியை (=) தட்டச்சு செய்யவும். தட்டச்சு செய்யும்போதே சூத்திரம் உரக்கக் கூறப்படுவதை கேட்பீர்கள். செயல்பாடுகள் மற்றும் சூத்திரங்கள் பற்றி மேலும் அறிக.

ஒரு சூத்திரத்தை மாற்ற அல்லது நீக்க, கலத்தைத் திருத்த Enterஐ அழுத்தி, பிறகு உங்கள் மாற்றங்களைத் தட்டச்சு செய்யவும். உங்கள் சூத்திரத்தில் பிழை இருந்தால், கல உள்ளடக்கங்களோடு சேர்த்து பிழையின் விளக்கத்தையும் கேட்பீர்கள்.

சூத்திரங்களை வாசி

கலத்தில் சூத்திரம் இருந்தால், சூத்திரத்தின் மதிப்பையும் கேட்பீர்கள். சூத்திரங்களை வாசிக்க வேறு சில வழிகளும் உள்ளன:

  • விருப்பம் 1: கலத்தைத் திருத்தி அதன் உள்ளடக்கங்களை வாசிக்க Enterஐ அழுத்தவும்.
  • விருப்பம் 2: ஏதெனும் ஒரு மெனுவைத் திறந்து சூத்திரப் பட்டிக்குச் சென்று, பிறகு சூத்திரப் பட்டியைத் தட்டவும். சூத்திரப் பட்டி மறைக்கப்பட்டிருந்தால், பார்வை மெனுவைத் திறந்து பிறகு சூத்திரப் பட்டிஐத் தேர்ந்தெடுக்கவும்.
  • விருப்பம் 3: எப்போதும் அனைத்து சூத்திரங்களையும் காண தாளை அமைக்கவும். Ctrl + back quote (`)ஐ அழுத்தவும், அல்லது பார்வை மெனுவிற்குச் சென்று சூத்திரங்களைக் காட்டுஐத் தேர்ந்தெடுக்கவும்.

விளக்கப்படங்கள், படங்கள் அல்லது வரைபடங்களைக் காணவும்

உட்பொதிக்கப்பட்ட விளக்கப்படங்கள், வரைபடங்கள் அல்லது படங்கள் போன்ற தரவு கிரிட்டின் பகுதி அல்லாத தகவல்களையும் உங்கள் விரித்தாள்கள் கொண்டிருக்கும்.

உட்பொதிக்கப்பட்ட விளக்கப்படம், படம் அல்லது வரைபடத்தால் கவரப்பட்ட கலத்திற்குச் செல்கையில், அந்தக் கலம் கவரப்பட்டதை ஸ்க்ரீன் ரீடர் தெரியப்படுத்தும்.

உங்கள் விரித்தாளில் ஒரு விளக்கப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டவுடன், விளக்கப்படத்தின் தலைப்பு, மாற்று உரையை ஸ்க்ரீன் ரீடர் தெரியப்படுத்தி விளக்கப்படத்தின் சுருக்கத்தை வாசிக்க விருப்பத்தையும் வழங்கும்.

விளக்கப்படங்கள், படங்கள் அல்லது வரைபடங்களைத் திருத்த

  1. உங்கள் உலாவிக்கான ஷார்ட்கட் விசையைப் பயன்படுத்தி அணுகலம்சங்கள் மெனுவைத் திறக்கவும்:
    • Windows உடன் கூடிய Chrome உலாவி: Alt + a
    • Windows உடன் பிற உலாவிகள்: Alt + Shift + a  
    • Chrome OS: Alt + a
    • Mac: முதலில் Ctrl + Option + Tab ஆகிய விசைகளை அழுத்தி, பிறகு Ctrl + Option + a என்பதை அழுத்தவும்
  2. தேர்ந்தெடு என்பதைத் தெர்வுசெய்ய eஐ அழுத்தி, பிறகு விளக்கப்படங்கள், வரைபடங்கள் அல்லது படங்கள் போன்ற நீங்கள் தேர்ந்தெடுக்கக்கூடிய பொருட்களை உலாவ கீழ் அம்புக்குறியை அழுத்தவும். ஒரு பொருளைத் தேர்ந்தெடுக்க Enterஐ அழுத்தவும்.
  3. இப்போது உட்பொதிக்கப்பட்ட பொருள் தேர்ந்தெடுக்கப்பட்டது. இதிலிருந்து ஒரு விருப்பத்தைத் தேர்வு செய்யவும்:
    • பொருளை நகர்த்த அம்புக்குறி விசைகளை அழுத்தவும்.
    • விருப்பங்கள் பட்டனுக்குச் செல்ல Tabஅழுத்தி, பிறகு விருப்பங்கள் மெனுவைத் திறக்க Enterஐ அழுத்தவும். கீழ் அம்புக்குறியை அழுத்தி பொருளுக்குப் பொருத்தக்கூடிய பிற நடவடிக்கைகளில் உலாவி, பிறகு தேர்ந்தெடுக்க Enterஐ அழுத்தவும்.

விளக்கப்படங்கள் அல்லது வரைபடங்கள்ஐச் சேர்த்தல் பற்றி மேலும் அறிக.

உங்கள் விரித்தாள் தரவு பற்றிய கேள்விகளுக்கான பதில்களைக் காண

உங்கள் விரித்தாளில் உள்ள தரவு பற்றி கேள்விகள் கேட்கலாம். சூத்திரம், வடிவமைத்தல் அல்லது உங்கள் தரவின் அடிப்படையில் விளக்கப்பட பரிந்துரைகளைக் காணலாம்.

  1. Alt + Shift + x (Windows, Chrome OS) அல்லது Option + Shift + x (Mac)ஐ அழுத்தி உங்கள் விரித்தாளில் ஆய்வு பகுதியைத் திறக்கவும்.
  2. உங்கள் ஸ்க்ரீன் ரீடர் விசைஎழுத்துக்குறியைப் பயன்படுத்தி, ஆராய் பகுதிக்குச் சென்று பதில்கள், வடிவமைத்தல் மற்றும் மதிப்பாய்வுகள் போன்ற தலைப்புகளைக் கேட்கவும்.
  3. பதில்கள் பிரிவில், உங்கள் தரவு பற்றிய கேள்வியை உள்ளிட்டு, பிறகு Enterஐ அழுத்தவும். கீழே உதாரணக் கேள்விகளைக் காணலாம். (குறிப்பு: பதில்கள் அம்சம் ஆங்கிலத்தில் மட்டுமே கிடைக்கிறது.)
    • பதிலை உரக்கக் கேட்க, உங்கள் ஸ்க்ரீன் ரீடர் விசைஎழுத்துக்குறியைப் பயன்படுத்தி பதில் அட்டைச் செல்லவும்.
    • உங்கள் பதிலை வழங்க எந்த சூத்திரம் பயன்படுத்தப்பட்டது என்பதைக் கண்டறிய, சூத்திரத்தைப் பார்ஐத் தேர்ந்தெடுக்கவும். சூத்திரத்தை கிளிப்போர்டுக்கு நகலெடுக்க, Enterஐ அழுத்தவும். பின்னர் உங்கள் விரித்தாளில் சுத்திரத்தை செருகலாம்.

எடுத்துக்காட்டுக் கேள்விகள்

  • "எந்த நபர் அதிக மதிப்பெண் பெற்றுள்ளார்?" (இதில் "நபர்" மற்றும் "மதிப்பெண்" உங்கள் விரித்தாளில் உள்ளது)
  • "செப்டம்பர் 2016 இன் மொத்த விற்பனை" (இதில் "விற்பனை" மற்றும் "தேதி" நெடுவரிசை உங்கள் விரித்தாளில் உள்ளது)

வேலை செய்யாத எடுத்துகாட்டுக் கேள்விகள்:

  • "இந்தக் கலத்தை எவ்வாறு தடிமன் ஆக்குவது?" போன்ற உதவிக் கேள்விகள்
  • "வானிலை என்ன?" போன்ற வலைத் தேடல் கேள்விகள்

பரிந்துரைக்கப்பட்ட விளக்கப்படங்கள் மற்றும் பகுப்பாய்வுகள்ஐப் பயன்படுத்துவது பற்றி மேலும் அறிக.

கேலெண்டர் காண்க, Keep & Tasks

ஆவணங்கள் ,தாள்கள் மற்றும் ஸ்லைடுகளைப் பயன்படுத்துகையில் பக்கவாட்டு பேனலில் Google Calendar, Keep மற்றும் Tasks ஐப் பயன்படுத்தலாம். இயல்புநிலையாக, பக்கவாட்டு பேனலில் இருக்கும் கருவிகள் சுருக்கப்பட்டிருக்கும். பக்கவாட்டு பேனலுக்குச் சென்று கருவிகளில் ஒன்றை விரிக்க, இந்தப் படிகளைப் பின்பற்றவும்:

  1. பக்கவாட்டு பேனலுக்குச் சென்று, இந்த ஷார்ட்கட்டுகளைப் பயன்படுத்தவும்:
    • Windows: Ctrl + Alt + . (முற்றுப்புள்ளி) அல்லது Ctrl + Alt + , (காற்புள்ளி)
    • Chromebook: Alt + Shift + . (முற்றுப்புள்ளி) அல்லது Alt + Shift + , (காற்புள்ளி)
    • Mac: ⌘ + Option + . (முற்றுப்புள்ளி) அல்லது ⌘ + விருப்பம் + , (காற்புள்ளி)
  2. பக்கவாட்டு பேனலில், மேல் அல்லது கீழ் அம்புக்குறிஐ அழுத்தி கருவிகளின் பட்டியலில் செல்லலாம்: Calendar, Keep மற்றும் Tasks.
  3. நீங்கள் பயன்படுத்த விரும்பும் கருவியை விரிக்க,Enterஐ அழுத்தவும்.
  4. பக்கவாட்டு பேனலில், உங்கள் விரித்தாளில் இருந்து வெளியேறாமலேயே இப்போது பின்வரும் நடவடிக்கைகளைச் செய்யலாம்:
    • Calendar: உங்கள் தினசரி திட்ட அட்டவணையை காண, நிகழ்வுகளைக்க் கிளிக் செய்துஅவற்றைத் திருத்த, புதிய நிகழ்வுகளை உருவாக்க, மற்றும் வரவிருக்கும் நிகழ்வுகளுக்குத் தாவலாம்.
    • Keep: சரிபார்ப்புப் பட்டியலை உருவாக்கி குறிப்புகள் எடுக்கலாம்.
    • Tasks: செய்ய வேண்டியவற்றையும் காலக்கெடுகளையும் சேர்க்கலாம்.
  5. பக்கவாட்டு பேனல் திறந்திருக்கும் போதே உங்கள் விரித்தாள்களுக்குத் திரும்பிச் செல்ல, இந்த ஷார்ட்கட்டுகளைப் பயன்படுத்தவும்:
    • Windows: Ctrl + Alt + . (முற்றுப்புள்ளி) அல்லது Ctrl + Alt + , (காற்புள்ளி)
    • Chromebook: Alt + Shift + . (முற்றுப்புள்ளி) அல்லது Alt + Shift + , (காற்புள்ளி)
    • Mac: ⌘ + Option + . (முற்றுப்புள்ளி) அல்லது ⌘ + விருப்பம் + , (காற்புள்ளி)
  6. பக்கவாட்டு பேனலை மூட, Closeஐ அடையும் வரை Shift + Tabஐ அழுத்தி, பின் Enterஐ அழுத்தவும்.

ஆவணங்கள், தாள்கள் மற்றும் ஸ்லைடுகளுடன் Calendar, Keep, மற்றும் Tasks ஐ எவ்வாறு பயன்படுத்துவது என்பது பற்றி மேலும் அறிக.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
16288706994624182980
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
35
false
false