பிரத்தியேக பில்டிங் பிளாக்குகளைச் செருகுதல்

தகுதிபெறும் பணி அல்லது பள்ளிக் கணக்குகளில் மட்டுமே பிரத்தியேக பில்டிங் பிளாக்குகளைப் பயன்படுத்த முடியும். இப்போது நீங்கள் உள்நுழைந்திருக்கவில்லை. பணி மற்றும் பள்ளிக் கணக்குகள் குறித்து மேலும் அறிக.

பணிக் கணக்கில் உள்நுழைக

தகுதிபெறும் பணி அல்லது பள்ளிக் கணக்கில் Google Docஸை நீங்கள் பயன்படுத்தினால், உங்கள் ஆவணத்தில் உள்ள உள்ளடக்கத்தைப் பிரத்தியேக பில்டிங் பிளாக்காக மாற்றலாம். இதன் மூலம் எதிர்காலத்தில் அதை மீண்டும் விரைவாகப் பயன்படுத்தலாம்.

முக்கியம்: உள்ளடக்கத்தை நகலெடுக்கக்கூடிய ஆவணத்தில் மட்டுமே பிரத்தியேக பில்டிங் பிளாக்குகளை உருவாக்க முடியும். ஆவணத்தின் உள்ளடக்கத்தை நகலெடுக்க முடியாதெனில் அதன் உரிமையாளரைத் தொடர்புகொண்டு ஆவணத்தை நகலெடுப்பதற்கான அணுகலை உங்களுக்கு வழங்குமாறு கேட்கவும்.

  1. கம்ப்யூட்டரில் Google Docsஸில் ஆவணத்தைத் திறக்கவும்.
  2. பில்டிங் பிளாக்காக மாற்ற விரும்பும் உள்ளடக்கத்தைத் தனிப்படுத்திக் கொள்ளவும்.
  3. தனிப்படுத்திய உள்ளடக்கத்தின் மீது வலது கிளிக் செய்யவும்.
  4. பிரத்தியேக பில்டிங் பிளாக்காகச் சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
  5. பெயரைச் சேர்க்கவும். நீங்கள் விரும்பினால் விளக்கத்தையும் சேர்க்கலாம்.
  6. உருவாக்கு அதன் பிறகு சரி என்பதைக் கிளிக் செய்யவும்.

“@” மெனு மூலம் பிரத்தியேக பில்டிங் பிளாக்கை உருவாக்குதல்

  1. கம்ப்யூட்டரில் Google Docsஸில் ஆவணத்தைத் திறக்கவும்.
  2. "@பிரத்தியேக பில்டிங் பிளாக்" என டைப் செய்துவிட்டு புதிய பிரத்தியேக பில்டிங் பிளாக் புதியவை என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. பில்டிங் பிளாக்காக மாற்ற விரும்பும் உள்ளடக்கத்தைத் தனிப்படுத்திக் கொள்ளவும்.
  4. மேலே உள்ள பாப்-அவுட்டில் சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
  5. பெயரைச் சேர்க்கவும். நீங்கள் விரும்பினால் விளக்கத்தையும் சேர்க்கலாம்.
  6. உருவாக்கு அதன் பிறகு சரி என்பதைக் கிளிக் செய்யவும்.

பிரத்தியேக பில்டிங் பிளாக்குகளைப் பார்த்தல், திருத்துதல் மற்றும் பயன்படுத்துதல்

நீங்கள் உருவாக்கிய பிரத்தியேக பில்டிங் பிளாக்குகளைப் பார்ப்பதற்கும் திருத்துவதற்கும் இவற்றைச் செய்யவும்:

  1. கம்ப்யூட்டரில் Google Docsஸில் ஆவணத்தைத் திறக்கவும்.
  2. இவற்றில் ஒன்றைச் செய்யலாம்:
    1. "@” என டைப் செய்து "பில்டிங் பிளாக்குகள்” என்பதற்கு அருகில் உள்ள விரி அதன் பிறகு என்பதைக் கிளிக் செய்யவும்.
    2. மேலே உள்ள செருகு அதன் பிறகு பில்டிங் பிளாக்குகள் அதன் பிறகு பிரத்தியேக பில்டிங் பிளாக் என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. பிரத்தியேக பிளாக்குகளை நிர்வகி என்பதைக் கிளிக் செய்யவும். இது Google Driveவில் உள்ள உங்கள் பில்டிங் பிளாக்குகளின் பட்டியலைத் திறக்கும்.
    1. உதவிக்குறிப்பு: பிரத்தியேக பில்டிங் பிளாக்கை அகற்ற உங்கள் Google Driveவில் இருந்து ஃபைலை நீக்கிவிடலாம்.

பிரத்தியேக பில்டிங் பிளாக்கைச் செருகுதல்

  1. கம்ப்யூட்டரில் Google Docsஸில் ஆவணத்தைத் திறக்கவும்.
  2. இவற்றில் ஒன்றைச் செய்யலாம்:
    1. “@" என டைப் செய்து பிரத்தியேக பில்டிங் பிளாக்கின் பெயரை உள்ளிடவும்.
    2. மேலே உள்ள செருகு அதன் பிறகு பில்டிங் பிளாக்குகள் அதன் பிறகு பிரத்தியேக பில்டிங் பிளாக்  என்பதைக் கிளிக் செய்து ஒரு பில்டிங் பிளாக்கைத் தேர்ந்தெடுக்கவும்.
true
Visit the Learning Center

Using Google products, like Google Docs, at work or school? Try powerful tips, tutorials, and templates. Learn to work on Office files without installing Office, create dynamic project plans and team calendars, auto-organize your inbox, and more.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
600623379110193362
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
35
false
false